-
அமைதி அடைந்த ஆன்மா… (உளத்தூய்மை வழிகாட்டி)
நண்பனைப் போல் நடித்து ஏமாற்றுவது, குடும்பச் சூழ்நிலை, வளாகச் சூழ்நிலை, தீய நண்பர்களின் பழக்கம், சமூகச் சூழ்நிலைகள் என்பவை மூலம் ஷைத்தான் தனது காரியத்தில் வெற்றிபெற முயற்சிக்கின்றான். அதிலிருந்து நாம் விடுபடுவது எப்படி என்பதையும் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் இந்நூலில் எடுத்துரைத்துள்ளார்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இவர்தான் முஸ்லிம்
முஸ்லிம் என்றால் யார் என்பது குறித்து நம்முடைய மனதுக்குள் ஒரு வரைவிலக்கணத்தைப் பதித்து வைத்திருக்கின்றோம். அது இரட்டைப் பரிமாணங்கள் கொண்டது. மௌலானா அவர்கள் மூன்றாவது பரிமாணத்தை முன்வைக்கிறார். மனதை ஒரு முகப்படுத்தும் அந்த மூன்றாவது பரிமாணத்தைப் படிக்க தெளிவு பிறக்கும்!
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இறைநம்பிக்கை வாழ்வின் அடிப்படை
இறைநம்பிக்கை எனும் நல்ல வித்து ஊன்றப்படுவதற்கான பூமியை (உள்ளத்தை) பண்படுத்தும் பணியைப் பக்குவமாய்ச் செய்கிறது, இந்நூல்!
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இறைவன் அழைக்கின்றான்
அழைப்புப் பணியின் போது கடைப்பிடிக்க வேண்டிய அவசிய குறிப்புகளை வழங்குவது இந்நூல்.
Author: MOULANA MUHAMMAD YUSUF ISLAHI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இறைவா உன் வாசலில்
இறைஞ்சுதல் தலைவிதியையும் மாற்றும் எனும் நபிமொழி துஆவின் வலிமைக்குச் சான்று. இதயம் உருக கண்களில்நீர்பெருக நாத்தழுதழுக்க இருகைகளையும் ஏந்தி இறைவனிடம் கேட்கும் பிரார்த்தனை இறைவனின் அரியணையைச் சென்றடைகிறது.
Author: MOULANA MUHAMMED FAROOK KHAN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாத்தில் இறைவழிபாடு
இறைவன் ஒருவனுக்கே மனிதன் வழிபட வேண்டும் எனும் கருத்தோட்டத்தை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும்வகையில் எளிமையான எடுத்துக்காட்டுகளுடன் விளக்கும் நூல்!
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாமிய திருமணச் சட்டங்கள் (Islamic Marriage Law)
கணவன் – மனைவி உரிமைகள் கடமைகள் (இஸ்லாமிய குடும்பச் சட்டங்கள்) குறித்து மௌலானா அவர்களின் புகழ்பெற்ற Huqooquz Zoujain நூலின் மொழியாக்கம் தான் இந்நூல்.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாம் வகுக்கும் வாழ்க்கை வழி
இறைவனுக்கு வழிபடுவதும் அவனது கட்டளைகளுக்குப் பணிவதும்தான் மனிதனின் கடமை என்ற இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைக் கோட்பாட்டையும் இன்னபிற விஷயங்களையும் திருமறைச் சான்றுகளுடன் தமக்கே உரிய பாணியில் விளக்குகிறார் ஆசிரியர்.
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
உனது பெயரால் உயிர் வாழ்கிறோம்
இறைவனின் 99 திருநாமங்களில் சில பெயர்களை முன்-வைத்து இந்த நூல் பேசும் அழகு தனி. நூலாசிரியர் வரலாற்றின் அடியாழங்களுக்குச் சென்று அரிய வரலாற்று நிகழ்வுகளை ஆங்காங்கே நூல் முழுவதும் சொல்லிச் செல்கின்றார். புத்தம் புதிய வரலாற்று நிகழ்வுகளும் நமக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. சிறந்த பேச்சாற்றல் கொண்டியங்கும் நூலாசிரியரின் சொற்சித்திரமாகவே இந்த நூல் விரிந்துகொண்டு செல்கிறது. அது தடையற்ற வாசிப்பிற்கு துணைபுரிகிறது. உணராமல் செய்யும் ஓராயிரம் வழிபாடுகளைவிட உணர்ந்து செய்யும் சில நூறு வழிபாடுகள் சிறந்ததல்லவா? இறைவனின் பண்புகளை நாம் அறிந்து, புரிந்து, உணர்ந்து கொண்டால்தான் நமது வழிபாடுகள் உரம்பெறும். நமது வாழ்வு உயிர்பெறும். இறைவனைக் குறித்த அறிதலுக்கான முயற்சியாகத்தான் இந்த நூலை நாம் வெளியிடுகின்றோம்
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
உன்னத ஒழுங்குகள்
உறக்கம், விழிப்பு, உண்ணுதல், பருகுதல், ஆடை அணிதல், பயணம் என அன்றாட வாழ்வில் எப்படி நடந்து கொள்வது போன்ற அழகிய நடைமுறைகளை அளிப்பது இந்நூல்.
Author: MOULANA MUHAMMAD YUSUF ISLAHI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
சமுதாய வாழ்வின் உயிர் ஜகாத்
இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கை எங்ஙனம் அமைதியும் செழிப்பும் தழைத்தோங்கும் சமுதாயத்தை அமைக்கிறது என்பதை பாமரர்களும் எளிதாய்ப் புரிந்து கொள்ளும் வகையில் குர்ஆனின் மேற்கோள்களுடன் அருமையாக விளக்குகிறார் ஆசிரியர்.
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
தொழுகை
வெறும் சடங்காக தொழுகையை நிறைவேற்றாமல் பொருள் புரிந்து தொழுவதற்கு பேருதவி புரியும் நூல்!
Author: MOULANA ABU SALIM ABDUL HAI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
தொழுகை இஸ்லாத்தின் முழுமையான வழிபாடு
தொழுகையைப் பலரும் பலவிதமாகப் பார்த்திருக்கிறார்கள்; ஆய்வு செய்திருக்கிறார்கள். ஆன்மிகக்கண்ணோட்டத்தில், சமத்துவப் பார்வையில், சமுதாயக் கூட்டமைப்பு நோக்கில் என தொழுகை மீதான பார்வைகள் விரியும்…! தொழுகை என்பது, மார்க்கத்தின் ஒருங்கிணைந்த நன்மைகள் அனைத்தையும் உள்ளடக்கிய உன்னத வழிபாடு ஆகும். தொழுகை யின் எல்லாப் பரிமாணங்களையும் மக்கள் மனங்களில் பதிக்கும் இது போன்ற ஒரு நூல் தமிழில் இல்லை…! அந்த வகையில் இதுவே முன்னோடி நூல்!
மௌலானா முஹம்மத் ஃபாரூக் கான் : குர்ஆனை இந்தி, உர்தூ ஆகிய இரு மொழிகளிலும் மொழிபெயர்த்தவர்; தத்துவ அறிஞர்; முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்; அரபி , உர்தூ ஆகிய மொழிகளில் வெளியான முக்கியமான நூல்கள் சிலவற்றை இந்தியில் மொழி பெயர்த்தவர்; கவிஞரும்கூட. எல்லாவற்றுக்கும் மேலாக இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடு, சமூகவியல், பொருளியல், அரசியல், ஒழுக்கவியல், அழைப்பியல் என பல்வேறு துறைகள் தொடர்பான நூற்றுக்கணக்கான நபிமொழிகளை கலாமே நுபுவ்வத் என்கிற பெயரில் ஆறு தொகுதிகளில் தொகுத்த அறிஞர்.
Author: MOULANA MUHAMMED FAROOK KHAN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
நபிமார்கள், நாதாக்கள் செய்த துஆக்கள்
திருக்குர்ஆனில் இறைவனால் கற்றுத்தரப்பட்ட துஆக்கள் – பிரார்த்தனைகளும் அண்ணலார் (ஸல்) அவர்கள் ஓதிய துஆக்களும் தொகுக்கப்பட்ட நூல், பொருள்களுடன்!
Author: MOULAVI KUTHBUDEEN AHMED BAQAVI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
நல்ல வாழ்க்கைக்கு வல்லவன் காட்டிய வழி
தன்னுடைய வாழ்க்கையில் இறைமறை வசனங்கள் எப்படி யெல்லாம் வழிகாட்டியுள்ளது எனும் அனுபவத்தை – பல் வேறு இதழ்களில் வெளியானவை – தொகுத்து நூல் வடிவில் தந்துள்ளார், ஆசிரியை!
Author: FATHIMUTHU SIDDIQ
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
நன்றி யாருக்கு?
தூய இஸ்லாத்தின் நெறி பிறழாது வாழ்ந்த அறவாணர்களின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பு!
Author: MOULAVI KUTHBUDEEN AHMED BAQAVI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
நாமும் சமூகமும்
பெற்றோருடன், மனைவி, மக்களுடன், நண்பர்களுடன், விருந்தினர்களுடன், சபையோருடன்,நோயாளிகளுடன், வணிகருடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு விடையளிப்பது இந்நூல்.
Author: MOULANA MUHAMMAD YUSUF ISLAHI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
நோன்புத் திங்கள்
ரமளான் மாதத்தின் முதல் நோன்பின் இரவிலிருந்து 27-ஆம் நோன்பின் இரவு வரையிலும் தராவீஹ் தொழுகையில் ஓதப்படும் திருக்குர்ஆன் வசனங்களில் வரும் கருத்துகளின் சாரமே இந்நூல். 27 அத்தியாயங்களில் இந்தக் கருத்துரை தொகுக்கப் பட்டிருக்கிறது.தொழுகைக்கு வீட்டில் ஆயத்தமாகும்போது இந்த வசனக் கருத்துகளை ஒரு கண்ணோட்டமிட்டுச் சென்றால், தொழும் போது ஓசையிலும், ஒலியிலும் ஒன்றித் திளைக்கலாம்.பள்ளியில் தொழுகைக்குப் பின்னர் அடியார்கள் சூழ வாசிக்கக் கேட்டு ஆனந்திக்கலாம்.நோன்புத் திங்களை முழுமையாக அனுபவிக்க இந்நூல் பெரிதும் உதவுகிறது.முஹிய்யித்தீன் அய்யூபிAuthor: MOULANA MUHIUDDIN AYUBI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -