-
அண்ணல் நபி (ஸல்) அழகிய வரலாறு
Author: MOULANA ABU SALIM ABDUL HAI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அபூபக்கர் (ரலி)
தமிழ் கூறும் நல் உலகில் முதன்முறையாக ஆதாரப்பூர்வமான தகவல்களுடன் அபூபக்கர் (ரலி) குறித்த முழுமையான நூல்.
இப்படி ஒரு மனிதரா..? படிக்கப் படிக்க உற்சாகம்! பக்கத்துக்கு பக்கம் உத்வேகம்!
அபூபக்கர் (ரலி) குறித்து இனியொரு நூல் தமிழில் தேவையில்லை என்று சொல்லும் அளவுக்கு முழுமையான நூல்.
இந்த புத்தகத்தை ஒருமுறை வாசித்து பாருங்கள்.
நம் வாழ்க்கையை புரட்டிப் போடக்கூடிய பக்கங்கள் இதில் இருக்கின்றன.Author: Dr Ali Muhammad al-Sallabi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அலங்கரிப்போம் ரமளானை
மறுமையில் நம்மை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல காரணமாக இருப்பவை எவை? இறை நெருக்கத்தைப் பெற்றுக் கொள்ளும் எண்ணத்துடன் இறையில்லத்தில் தங்கும் இஃதிகாஃபின் நன்மைகள் என்ன? பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் மாதமாக ரமளான் திகழ்வதால் கிடைக்கும் நேரத்தை வீணடிக்காமல் பயன்படுத்திக் கொள்வது எப்படி? என்பவைகளை சிறப்பாக நூலாசிரியர் மௌலவி நூஹ் மஹ்ழரி எடுத்து வைத்துள்ளார்.
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அல்குர்ஆன் கூறும் அழகிய சரிதைகள்
வாழும் தேசத்திற்கு என்ன பங்களிப்பைச் செய்திருக்கிறாய்? என்று ஒரு சரிதை உங்களிடம் கேட்கும். நாட்டில் நீதி தேவையா, வீட்டிலிருந்து துவங்கு என்று மற்றொரு சரிதை கூறும். மூன்றாவது சரிதையோ ஒழுக்க விழுமங்களைக் கடைப்பிடிக்கின்றாயா? என்று நம்மை உலுக்கிக் கேட்கும். நான்காவது நிகழ்வோ சூழல்களுக்கு அடிபணிந்து வீழ்ச்சியடையாதே என்று வீரவரலாறு கூறும்.
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
இறைத்தூதர்கள் பற்றி இறைமறை
இறைத்தூதர்கள் யார், அவர்களின் இயல்புகள், தகுதிகள், பணிகள் என்ன? இறுதிவேதமான திருக்குர்ஆனே 25 இறைத்தூதர்கள் பற்றிய விளக்கத்தை அளிக்கிறது. இந்நூல் இத்துறையில் ஒரு முன்னோடியாக விளங்குகிறது.
Author: DR. QURSHID AHMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாமிய வரலாறு (அபீசினியா ஹிஜ்ரத் முதல் உஹத் வரை)
அபீசினியா ஹிஜ்ரத், விண்ணுலகப் பயணம், யத்ரிப்பை நோக்கி, மதீனாவில் இஸ்லாம், நபிகளாரின் ஹிஜ்ரத், மாநபியின் மதீனா வருகை, மதீனாவில் இஸ்லாமிய அரசு, உயர்ந்தெழுந்த மஸ்ஜிதுந் நபவி, சகோதரத்துவ உறவு ஒப்பந்தம், போர்களும் காரணங்களும், போர்களின் நோக்கமும் நபிகளாரின் வியூகமும், கிப்லா மாற்றம், வணிகக் குழு, பத்ரு களம், பத்ரு போரும் கைதிகளும், போருக்குப் பின், தடைகளைத் தாண்டிய பயணம், உஹத் போர், யுத்தம் தந்த படிப்பினைகள் என இஸ்லாமிய வரலாறு கடந்து வந்த பாதையை பல வழிகளில் நம் கண் முன்னால் படம்பிடித்துக் காட்டுகிறது இந்நூல்.
Author: Afzalul Ulama, Moulavi M.I. Muhammed Siddiq Umari, Madani M.A., M.Com.,
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்)
அண்ணலார் (ஸல்) அவர்களுக்குப் பின் வந்த கலீஃபாக்களில் பனூஉமய்யா குலத்தின் கலீஃபாவுடைய நேர்மையான – அழகிய வரலாற்று நூல்.
Author: MAAYIL KHAIRABADHI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
-
காலடிச் சுவடுகள்
காலடிச் சுவடுகள் வரலாறு படைத்த மனிதர்களின் வரலாற்றிலிருந்து பளிச்சென மின்னுகின்ற காட்சிகளை விவரிக்கின்ற நூல் இது. சின்னச்சின்ன நிகழ்வுகள்தான். ஆனால் எல்லாமே வாழ்க்கைக்கு ஒளியூட்டுகின்ற உதய தாரகைகள். அன்பு, பண்பு, துணிவு, கனிவு, பணிவு, வாய்மை, நேர்மை, தூய்மை, வாக்குத் தவறாமை, எளிமை என அனைத்து நற்குணங்களின் நறுமணத்தை பக்கங்கள் தோறும் நுகர முடியும்.Author: T. AZEEZ LUTHFULLAH
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
சேர சோழ பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் முஸ்லிம்கள்
தமிழகத்தில் இஸ்லாம் பரவிய வரலாறு குறித்தும் அது தொடர்பான சில செய்திகளையும் முன்னிலைப்படுத்தி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளாக தமிழக முஸ்லிம்கள் குறித்து எழுதப்பட்டுவரும் செய்திகள் ஆசிரியரின் முனைப்பில் சில கூடுதல் தகவல்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன.
Author: P. Sirajudeen
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
நபித்தோழர்கள் சீரிய வரலாறு
அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் இருந்த தோழர்களில் பன்னிருவரின் தியாக வரலாற்றை இரத்தினச் சுருக்கமாக விளக்கும் நூல்!
Author: M.S. SYED MOAHMED ANWARI FAZIL BAQAVI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
நாகரிகத்தின் தந்தை உமர் (ரலி)
உமரே! நீர் சத்தியத்தை ஏற்றபோது
சர்தார் நபியின் வதனம் மலர்ந்தது.உமரே! எத்தனையோ முறை
உமது வாக்கே வஹியாக இறங்கின!உமரே! எத்தனையோ முறை
உமது கூற்றே உண்மையாக இருந்தது!உமரே! உமது வரலாறு எங்கள்முன் பிரகாசமாக இருக்கிறது.
இல்லையேல், கற்பனை கதாபாத்திரம் என்றே
உம்மை நாங்கள் கருதியிருப்போம்.Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம்
Author: KARAIKANDAM K. NEDUNCHEZHIAN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மூஸா நபி வரலாறு
பிறந்த போதே திடுக்கிடும் சூழலைக் கடந்த மூஸா நபி அவர்கள் கொடுங்கோலன் ஃபிர்அவ்ன் இல்லத்தில் வளரும் சூழல், திருமணம், அவர்களுக்கு வழங்கப்பெற்ற தூதுத்துவம், அற்புதங்கள், மீண்டும் எகிப்து திரும்புதல், தூதுத்துவத்தை நாடாளும் மன்னரிடமும் மக்களிடமும் சேர்ப்பித்தல் ஆகியவற்றை வரிசையாக இந்த நூல் முன்வைக்கிறது. கொடுங்கோலன் ஃபிர்அவ்னின் அழிவைப் பற்றியும் இறுதியில் சத்தியம் வென்றதையும் தெளிவுபடுத்துகிறது. அநீதியை எதிர்த்து மூஸா நபி போராடி வென்றதை இந்த நூல் அருமையாக விவரிக்கிறது. மூஸா நபியின் துணிவு, வீரம், வேகம், விவேகம், சமூக நீதிக்கான போராட்டம், ஒடுக்கப்பட்டோருக்கு உதவிக்கரம் நீட்டுவது உள்ளிட்ட சிறப்புப்பண்புகளை இதில் காணலாம்.
Author: E.A. Fazlur Rahman Umari
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மௌலவி நூஹ் மஹ்ழரி 3 + டாக்டர் யூசுஃப் அல்கர்ளாவி 1 (4 Books Package)
- செசெல்வந்தர் நபிகள் நாயகம் (ஸல்)
2. நாகரிகத்தின் தந்தை உமர் (ரலி)
3. அல்குர்ஆன் கூறும் அழகிய சரிதைகள்
4. அல்குர்ஆனை அணுகும் முறை
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹1150 - செசெல்வந்தர் நபிகள் நாயகம் (ஸல்)
-
ரஜப் தய்யிப் எர்டோகன்
நவீன உலகின் ஆற்றல்மிகு ஆட்சியாளர்களில் ஒருவர்தான் துருக்கி அதிபர் ரஜப் தய்யிப் எர்டோகன். முஸ்லிம் உலகில் அவரைப் போல் மனவலிமையும் ராஜதந்திரமும் செயலாற்றல் உணர்வும் நிறைந்த மற்றொரு ஆட்சியாளரைக் காண்பது அரிது. தமது பண்பாட்டைக் கைவிடாமலேயே பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சொந்தக் காலில் நிற்கும் வகையில் நவீன துருக்கியைச் செதுக்கியவர் என்பதுதான் எர்டோகனின் பெரும் சாதனை ஆகும். மதச்சார்பற்றத் தன்மை என்னும் பெயரில் அடக்கு முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, துருக்கி மண்ணில் அதனுடைய பண்பாட்டையும் பாரம்பர்யத்தையும் அத்தாதுர்க் குழிதோண்டிப் புதைத்த இடத்திலிருந்து மிகவும் சாதுர்ய மாகவும் அறிவுபூர்வமாகவும் செயல்பட்ட எர்டோகன், துருக்கியின் உஸ்மானிய, இஸ்லாமியப் பாரம்பர்யப் பெருமையை மீட்டெடுத்தார். ஆகவே துருக்கியின், எர்டோகனின் வரலாறும் செய்திகளும் அரசியல் மாணவர்களைப் பொறுத்தவரை பெரும் ஆர்வத்தைத் தூண்டும் விஷயங்கள் என்பதில் ஐயமில்லை.