-
அகிலத்திற்கோர் அருட்கொடை முஹம்மத் (ஸல்) (PB)
நபி வரலாற்று நூல்களில் தனித்துவம் மிக்க நூல்!இப்படியும் ஒரு தியாக வாழ்வு இருக்குமா? என்று படிப்போரைச் சிலிர்க்க வைக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு…!படிப்பவர் தம் நெஞ்சங்களில் இறைவன் மீதும் இறைத்தூதர் மீதும் அன்பைப் பெருக்கும் அரிய நூல்உருது மொழியில் பல பதிப்புகள் கண்ட இந்நூல் இப்போது இனிய தமிழில்…! எளிய நடையில்…!Author: DR. INAYATHULLAH SUBHANI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அண்ணலாரின் ஆளுமைகள் – அழகிய குணநலன்கள் | தலைமைத்துவப் பண்புகள் | மனிதநேய மாண்புகள்
தலைமைத்துவப் பண்புகள், ஆளுமைப் பண்புகள், ஒழுக்க மாண்புகள் ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள விரும்புவோருக்கு இது ஓர் அரிய வழிகாட்டி நூல்.மனித உறவுகள் எப்படி இருக்கவேண்டும்? பிரச்னைகளை எப்படி அணுக வேண்டும்? நேரத்தை எப்படி திட்டமிட வேண்டும்? என்பதற்கு நபிகளாரின் வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.நபிகளாரின் வாழ்க்கை வரலாறு பல நுாறு ஆண்டுகளாக உலகின் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. தமிழிலும் நபிகளாரின் பல வரலாற்று நூல்கள் உண்டு. ஆனால், நபிகளாரின் ஆளுமைப் பற்றிய நூல்கள் மிகக் குறைவே. அந்தக் குறையை நிவர்த்தி செய்திருக்கிறார் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள்.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அண்ணலாரின் பலதார திருமணங்கள் – ஓர் அலசல்
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தார். எந்த வயதில் அப்பெண்களை மணந்தார்? எதற்காக மணந்தார்? அவற்றிற்கு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? அந்தப் பெண்கள் கண்ணியரா? வயது முதிர்ந்தவர்களா? விதவைகளா? என்பதை அறிய வேண்டும். அவர்கள் எந்தப் பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்த கேள்விகளுக்கு இந்த நூல் விடை தரும்.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அண்ணலார் (ஸல்) நபித்துவம் பகுப்பாய்வு
அண்ணலார் (ஸல்) அவர்களின் நபித்துவம் குறித்து எழுப்பப்படும் பல்வேறு சர்ச்சைகளுக்குப் பதிலளிக்கிறது இந்நூல்!
Author: DR. JAMAL A. BADAWI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அண்ணல் நபி
நபிகளாரின் வரலாற்றைச் சின்னச் சின்ன பாடங்களாக விவரிக்கும் நூல்! ஓவ்வொரு பாடத்தின் முடிவிலும் கேள்விகளும்உண்டு. குழந்தைகளுக்காக குழந்தை மனம் கொண்டவர் எழுதியது!
Author: MOULANA AFZAL HUSSAIN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அண்ணல் நபிகளாரின் அருமைத் தோழர்கள்
ஜுலைபிப் (ரலி), அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரலி), தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி), அப்துல்லாஹ் இப்னு ஹுஸாஃபா (ரலி), அபூதர்தா (ரலி), அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் (ரலி), ஸயீத் பின் ஜைத் (ரலி) ஆகிய நபித்தோழர்களைக் குறித்து இந்நூல்.Author: ABDUR RAHMAN RAFAT PASHA
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அண்ணல் நபிகளார் வாழ்வினிலே
அண்ணலார் (ஸல்) அவர்களின் நானூறுக்கும் மேற்பட்ட அருள்மொழிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு தலைப்புகளில் விளக்கத்துடன்!
Author: MOULANA JALEEL AHSAN NADVI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அன்பு நபியின் அமுத வாக்குகள்
அன்பு நபியின் (ஸல்) அமுத வாக்குகள்: அண்ணல் நபிகளா-ரின் அமுத வாக்குகளில் பளிச்சென மின்னுகின்ற ஒழுக்கவியல் போத-னைகள் மட்டும் தனியாகத் தொகுத்துத் தரப்பட்டிருப்பது-தான் இந்த நூலின் தனிச் சிறப்பு.
Author: MOULANA MUHAMMAD FAROOQ KHAN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
இவர்கள் பார்வையில் நபிகள் நாயகம் (ஸல்)
தொல் திருமாவளவன், பேராசிரியர் அ.மார்க்ஸ்,
கவிஞர் ஈரோடு தமிழன்பன், தமிழருவி மணியன்,
பீட்டர் அல்போன்ஸ், லேனா தமிழ்வாணன், திருச்சி சிவா, சிலம்பொலி செல்லப்பன், கம்பம் செல்வேந்திரன் ஆகிய ஒன்பது ஆளுமைகள் நபி(ஸல்) அவர்களைக் குறித்து விரிவாகப் பேசியிருக்கின்றார்கள். ஒருவரின் கருத்தை ஒருவர் சொல்லவில்லை. ஒரேசெய்தி எங்குமே மீண்டும் மீண்டும் வரவில்லை. நபி(ஸல்) என்ற ஞானப் பெருங்கடலிலிருந்து எவ்வளவு செய்திகளையும் அள்ளிக்கொணரலாம் என்பதை இந்நூல் உணர்த்துகிறது. அள்ள அள்ள புதிதாய் சுரந்துபொங்கும் ஊற்றுப்போல செய்திகள் பெருகுகின்றன.இந்த ஆளுமைகள் அண்ணலாரைப் பார்த்த பார்வை பெருமானாரின் மீதான பெருமதிப்பை நம்முள் பெருக்கெடுக்கச் செய்கிறது. அண்ணல் நபி(ஸல்) அவர்களைச் சொல்லச் சொல்லச் சொல் இனிக்கும். கேட்கும் செவி குளிரும். இதயம் நனைய கண்கள் பனிக்கும்.
இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொரு வாசகரின் மனதிலும் நபி(ஸல்) அவர்களைக் குறித்த மதிப்பீடு கோடி மடங்கு உயரும். பேரன்பு பெருக்கெடுக்கும். எண்ணி எண்ணி வியக்கத் தோன்றும்.
ஏராளமான வாழ்வியல் உதாரணங்கள் அண்ணலாரின் வாழ்வு முழுவதும் கொட்டிக்கிடக்கிறது. அந்த வகையில் இது வாசிப்பதற்கான நூல் மட்டுமல்ல; வாழ்க்கைக்கான நூலும்கூட.
Author: V.S. MOHAMMED AMEEN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
இறுதி நபித்துவம்
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
எதிர்பார்க்கப்பட்ட அந்த நபி யார்?
விவிலியத்தில் கூறப்பட்டுள்ள நபியைப் பற்றியும் அந்த நபி யார் என்பது பற்றியும் ஆய்வு செய்து சரியான கோணத்தில்உண்மையை எடுத்து வைக்கும் நூல்!
Author: DR. ZAKI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
என்னைக் கவர்ந்த பெருமானார்(ஸல்)
ஒரு முஸ்லிமல்லாத பேராசிரியரை அண்ணலார் (ஸல்) அவர்கள் எப்படிக் கவர்ந்தார் என்பதை விளக்கும் அரிய நூல்!
Author: TAMILANBAN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
செல்வந்தர் நபிகள் நாயகம் (ஸல்)
மேலும், அவன் (இறைவன்) உம்மை (நபிகளாரை) ஏழையாய்க் கண்டான்; பிறகு செல்வராய் ஆக்கினான். (திருக்குர்ஆன் 93:8)
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
தர்ஜுமானுல் ஹதீஸ் (இரண்டாம் பாகம்)
1. இஸ்லாத்தில் குடும்ப அமைப்பு
2. குடும்பம் சீர்குலைய காரணங்கள்
3. சமூகச் சீர்திருத்தம்
ஆகிய தலைப்புகளின் கீழ் பல்வேறு துணைத் தலைப்புகளில் நபிமொழிகளும் அதற்கான விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன.Author: Sayyid Mahmood Hasan
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
தர்ஜுமானுல் ஹதீஸ் (முதல் பாகம்)
தனிப்பட்ட, சமூக வாழ்க்கையில் இஸ்லாத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது என்றும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு இஸ்லாம் தான் என்றும் கூறுகின்றோம். ஆனால், நம்முடைய வாழ்க்கையில் எந்த அம்சத்திலும் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்த நாம் தயாராக இல்லை. இஸ்லாம் வெறும் உதட்டளவில்தான் இருக்கின்றது. நடைமுறையில் நாம் இறைநிராகரிப்பு, நம்பிக்கையின்மை, சிலை வழிபாட்டைத்தான் பின்பற்றுகிறோம்.இந்தக் காரணங்களால்தான், அரசியல் மற்றும் சமூகத்தில் நமக்கு எந்தவிதச் செல்வாக்கும் மதிப்புமில்லை. உண்மை யாதெனில், ஒழுக்கக்கேடு என்னும் கரையான் ஏற்கனவே சரிந்திருக்கும் சுவர்களின் அடித்தளத்தை பலவீனமாக்கிவிட்டது.ஆனாலும், நம்பிக்கையற்ற இந்தக் காலத்தில் ஒரு நம்பிக்கை ஒளி காணப்படுகிறது. சில மார்க்கக் குழுக்கள், அல்லாஹ்வின் போதனைகளை நிலைநாட்ட முயற்சி மேற்கொண்டுள்ளார்கள். நேர்மையான, புத்திசாலித்தனமான இளைஞர்களின் கணிசமான ஒரு குழு பொய்யின் கண்ணுக்கு நேராகப் பார்த்து, சத்திய அறிவை உயர்த்த முயல்கிறது. இந்தப் புயல் வீசும் காலத்தில், முஸ்லிம் சமூகத்தின் சீர்திருத்தத்திற்காக, நபி (ஸல்) அவர்களின் நபிமொழிகளைத் தொகுத்து தர்ஜுமானுல் ஹதீஸ் முதல் பாகமாக உங்கள் கைகளில்…Author: Sayyid Mahmood Hasan
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
தினமும் ஒரு நபிமொழி
நாம் கவனத்தில் கொள்ளாத அன்றாடம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க முடியுமென்கிறநபிமொழிகளை அறிந்துகொண்டாலேபோதும், வாழ்வு சிறப்புறும்.
அதற்கேற்ற வகையில் தினமும் ஒரு நபிமொழியைக் கற்று வாழ்வில் கடைப்பிடிக்கும் விதமாக நூலாசிரியர் நபிமொழிகளைத் தேர்ந்தெடுத்து, எளிமையான, அருமையான விளக்கங்களை வழங்கியுள்ளார்கள்.
இவற்றைப் படித்து, புரிந்து வாழ்க்கையில்செயல்படுத்தினாலே ஒரு நிம்மதியானவாழ்க்கைக்கு அடித்தளமிட்டதாகஅமைந்துவிடும்.
Author: T. AZEEZ LUTHFULLAH
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
நபிகளார் (ஸல்) போதித்த வாழ்வியல்
பன்முகத்தன்மை கொண்ட இந்த நாட்டில் இஸ்லாமிய வாழ்வியல் நெறியை மக்கள் முன் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த உணர்வு தரும் தூண்டுதலே முஸ்லிம்களுக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் போதித்த வாழ்வியல் நெறிகளை கொண்டு செல்ல உதவுகிறது. இந்த வழிகாட்டுதல்களை நாம் கடைப்பிடித்தால் ஈருலக வாழ்விலும் மனஅமைதியையும் மகிழ்ச்சியையும் வெற்றியையும் பெற்றுவிட முடியும்.
அதற்கான முயற்சியாக மௌலானா ஜலீல் அஹ்ஸன் நத்வீ அவர்கள் வாழ்வியல் நெறிகளாகப் பயன்படும் பெருமானாரின் பொன்மொழிகளைத் தொகுத்துத் தந்துள்ளார்கள். இதன் தமிழ் மொழியாக்கத்தை இ.ஏ.ஃபஸ்லுர் ரஹ்மான் உமரீ அவர்கள் சிறப்பாகச் செய்துள்ளார்கள்.Author: MOULANA JALEEL AHSAN NADVI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
நபிகளார் வரைந்த கோடுகளில் மனித வாழ்வு
Author: USTHAZ RASHEED HAJJUL AKBAR
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
நபிமொழி நாற்பது
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றிய தேவ்பந்த், ஃபரங்கி மஹால், நத்வதுல் உலமா, அலிகர் ஆகிய கல்வி இயக்கங்கள் அனைத்துமே ஷாவலீயுல்லாஹ் அவர்களின் சிந்தனைகளால் எழுச்சி பெற்றவை. அத்தகைய தனிச்சிறப்புமிக்க, தன்னிகரற்ற மார்க்க மேதையால் தொகுக்கப்பட்ட நாற்பது நபி மொழிகள் தான் நபிமொழி நாற்பது.அகில உலகங்களுக்கெல்லாம் அருட்கொடையாக வந்த அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்களின் அமுதமொழிகளின் தொகுப்புதான் இந்நூல்…! அந்த அமுதமொழிகளுக்கு அழகான விளக்கங்களும் தரப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு…!Author: HAZRAT SHEIKH SHA WALIULLAH
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
நல்லாட்சி நாயகர் கலீஃபா உமர் (ரலி)
“வாளால் இஸ்லாம் பரப்பப்பட்டது என்ற தவறான கூற்றுக்குத் தக்க பதிலடியாக ஆசிரியரின் இந்த வரலாற்றுப் படப்பிடிப்பு அமைந்திருக்கிறது. வெற்றி கொள்ளப்பட்ட நாடுகள் முஸ்லிம் நாடுகளாக ஆகிவிட்டன என்ற ஒரு கற்பனையில் இவ்வளவு காலம் வரலாறு எழுதப்பட்டு வந்தது என்பதே உண்மை. இரு நூறு ஆண்டுகள் முஸ்லிம்கள் நடத்திய நல்லாட்சியைக் கண்டு சுவைத்து அனுபவித்து உள்ளத்தாலும் உயர்வாலும் அங்கீகரித்த பின்னரே அந்த நாட்டு மக்கள் தங்களை இஸ்லாமிய வாழ்வியலில் இணைந்து கொண்டனர் என்பதை இதுவரை யாரும் தெளிவுபடுத்தாத ஓர் உண்மை யாகும். நூலாசிரியருக்கு வரலாற்று அறிஞர் உலகம் பல பாராட்டுகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறது.”
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
பெருமானார் (ஸல்) தரும் பரிசு
மனிதகுலத்திற்கு ஓர் அருட்கொடையாக வந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மணிமொழிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிய மலர்ச்செண்டு இது!Author: KHURRAM MURAD
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
பெருமானார் கண்ட சமூக வாழ்வு
நீதிமிக்க சமுதாய அமைப்புக்கு அண்ணலார் (ஸல்) எப்படி வடிவம் தந்தார்கள் என்பதை விளக்கும் நூல்.
Author: MOULANA JALEEL AHSAN NADVI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
பெருமானார் போதித்த அழகிய நடைமுறை
தொழில், வேளாண்மை, கூலி, கடன் உள்ளிட்ட பல்வேறு பொதுப்பிரச்னைகள்குறித்து அண்ணலார் (ஸல்) அவர்கள் சொன்னவை – செய்தவை பற்றி சுருக்கமாகக் கூறும் நூல்.
Author: MOULANA JALEEL AHSAN NADVI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மணம் வீசும் மணிச்சொற்கள்
Author: ASHIEK KHALID MOHAMED MINHAJ ISLAHI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மறைகாட்டும் இறைத்தூதர்
இறுதி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடைய தகுதி, பணி, கடமை ஆகியவை பற்றியும் அவர்களுடைய சாதனைகள் பற்றியும் திருக்குர்ஆன் வசனங்களை மேற்கோள் காட்டி பேசும் நூல்!
ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மன்னர்களுக்கு மாநபியின் மடல்கள்
Author: MOULAVI K.J. MASTHAN ALI BAQAVI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மாநபி மணிமொழிகள்
அண்ணலார் (ஸல்) அவர்களின் அருள்மொழிகள் அடங்கிய தொகுப்பு. நபிமொழித் தொகுப்புகள் பிறந்த வரலாறு, அவற்றைத் தொகுத்தோர் பட்டியல், அவற்றின் காலம் போன்ற பல தகவல்கள் அடங்கிய அற்புதத் தொகுப்பு.மௌலானா அப்துல் கஃபார் ரஹ்மானிAuthor: MOULANA ABDUL GAFFAR HASAN (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
முஹம்மத் (ஸல்) அவர்களின் நற்பண்புகள் – நன்னடத்தைகள் (பாகம் – 1)
நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் நிறைந்திருக்கும் நற்பண்புகளும் நன்னடத்தைகளும் புதிய கோணத்தில் வெளிக்கொணர வேண்டுமென்ற குறிக்கோளுடன் டாக்டர் ஆதில் ஸலாஹி அவர்கள் எழுதிய Muhammad His Character and Conduct” என்ற நூலின் தமிழாக்கம்தான் “முஹம்மத் (ஸல்) அவர்களின் நற்பண்புகள் – நன்னடத்தைகள்” என்ற இந்நூலின் முதல் பாகம்.
Author: Dr. Adil Salahi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
முஹம்மத் (ஸல்) அவர்களின் நற்பண்புகள் – நன்னடத்தைகள் (பாகம் – 2)
நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் நிறைந்திருக்கும் நற்பண்புகளும் நன்னடத்தைகளும் புதிய கோணத்தில் வெளிக்கொணர வேண்டுமென்ற குறிக்கோளுடன் டாக்டர் ஆதில் ஸலாஹி அவர்கள் எழுதிய “Muhammad His Character and Conduct” என்ற நூலின் தமிழாக்கம்தான் “முஹம்மத் (ஸல்) அவர்களின் நற்பண்புகள் – நன்னடத்தைகள்” (பாகம் – 2).
இதன் முதல் பாகம் ஜூலை 2019 வெளியிடப்பட்டது.
முஹம்மத் (ஸல்) அவர்களின் நற்பண்புகள் – நன்னடத்தைகள்
Author: Dr. Adil Salahi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
முஹம்மத் நபிகளார் (ஸல்) முகம் சிவந்த தருணங்கள்
எப்போதும் புன்முறுவல் பூத்த முகத்துடன் இருந்த, இருக்கச் சொன்ன நபி (ஸல்) அவர்கள் சில வேளைகளில் கோபத்தால் முகம் சிவந்தவர்களாகத் தமது தோழர்களைக் கண்டித்துச் சீர்படுத்தினார்கள். அதிலிருந்து நமக்குக் கிடைக்கும் படிப்பினைகள் என்ன என்பதை வரலாற்று நிகழ்வுகளோடு எடுத்துரைக்கிறது இந்நூல்.
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வேதவரிகளும் தூதர் மொழிகளும் (பாகம் – 1)
Book Summary of வேதவரிகளும் தூதர் மொழிகளும் (Ordinary)
திருக்குர்ஆன் வசனங்களும் நபிமொழிகளும் எளிய நடையில் தொகுக்கப்பட்டுள்ளன. இறைவன், மனிதன், நற்பண்புகள், தீயகுணங்கள், கல்வி, அரசியல், பொருளியல், சமூகவியல், பெண்கள் என 24 தலைப்புகளில் தொகுக் கப்பட்டுள்ளன.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வேதவரிகளும் தூதர் மொழிகளும் (பாகம் – 2)
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வேதவரிகளும் தூதர்மொழிகளும் (பாகம் – 3)
Dr. K.V.S. ஹபீப் முஹம்மத்
திருக்குர்ஆன் ஒரு பொறியியல் வல்லுநரின் வரைபடத்திற்கு (Blue Print) ஒப்பானது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் வரைபடத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கட்டிடத்திற்கு ஒப்பானது. அடிப்படைகளைக் குர்ஆன் வழங்குகிறது. விரிவான விதிமுறைகளை நபி வழங்குவார். இந்தக் கோட்பாடுகள் நபிகள் நாயகம் காலத்திலேயே நிறைவேற்றப்பட்டு விட்டன. அறியாமையிலும் ஆதிக்க உணர்வுகளிலும் மனித உரிமை மீறல்களிலும் சமூக அரசியல் பொருளாதாரச் சுரண்டல்களிலும் மூழ்கியிருந்த சமூகத்தை 23 ஆண்டுகளுக்குள் இஸ்லாம் மாற்றி அமைத்தது. பின்னர் உலகெங்கும் பரவி அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது; ஏற்படுத்தி வருகிறது.
இறைவாக்கு ‘குர்ஆன்’ என்றும், நபிகளாரின் வாழ்வும் வாக்கும் ‘ஹதீஸ்’ என்றும் அழைக்கப்படும். சில ஆயிரம் பக்கங்களில் விரிந்து கிடக்கும் இஸ்லாமியக் கருத்துகள் எல்லாரும் அறிந்திடும் வண்ணம் சுருக்கமாக இந்த நூலில் தரப் பட்டுள்ளன. முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதார்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் தனித் தனித் தலைப்புகளின்கீழ் தொகுக்கப்பட்டுள்ளது. சொற்பொழிவு ஆற்றுவோருக்கும் கட்டுரைகள் எழுதுவோருக்கும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைக் குறித்து இஸ்லாத்தின் பார்வை என்ன என்பதை எளிதில் அறியும் வகையில் ஆக்கப்பட்டுள்ளது. இந்த நூலின் முதல் பகுதி 25 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டு மக்களின் பேராதரவைப் பெற்றது. பல பதிப்புகளைக் கண்டது.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST