-
Let us Know Hijab
Hijab is now hotly debated all over India. Different people have diverse views about it.
What is the reason? Is it because of sheer ignorance? Or is it because of malice and ulterior motives of degrading Islam and Muslims?
The list of doubts and questions is endless.
This prompted the IFT to release a booklet on this issue. And this booklet in your hands is the outcome of that prompt endeavour.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
Modesty A Gift to Humanity – For Peace, Happiness and more…
The author further elaborates that modesty is not only limited to the method of a person to choose to dress, but also mirrors one’s behaviour, way of living, and in fact, overall conduct. Moreover, it is to be understood that being modest applies to both the genders.
Author: Safiya Syed
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அண்ணலாரின் பலதார திருமணங்கள் – ஓர் அலசல்
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தார். எந்த வயதில் அப்பெண்களை மணந்தார்? எதற்காக மணந்தார்? அவற்றிற்கு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? அந்தப் பெண்கள் கண்ணியரா? வயது முதிர்ந்தவர்களா? விதவைகளா? என்பதை அறிய வேண்டும். அவர்கள் எந்தப் பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்த கேள்விகளுக்கு இந்த நூல் விடை தரும்.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அநாதைகள் விதவைகள் ? ஆதரவற்றவர்களை அரவணைப்போம்! (மனித உறவுகள் – 3)
இன்றைய நவநாகரீமான உலகில் இவர்களின் உரிமைகளும் நீதியும் மறுக்கப்பட்டு தெருவோரங்களில் சுற்றித் திரிபவர்களாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்த சூழலில் நமது கடமை என்ன? நமது செயற்பாடுகள் எப்படியிருக்க வேண்டுமென்பதை மனதில் உரைக்கும் வண்ணம் நூலாசிரியர் டாக்டர். கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் ‘அநாதைகள் – விதவைகள், ஆதரவற்றவர்களை அரவணைப்போம்’ என்ற இந்த நூலை எழுதியுள்ளார்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அவள் (பெண்ணியப் பார்வையில்)
பெண்ணியம், உண்மையில் பெண்களுக்கு முழுமையான விடுதலையைத் தரவில்லை என்பதை இன்றைக்குப் பெண்ணியவாதிகளே உணர்ந்து கொண்டார்கள். தாம் உருவாக்கிய கோட்பாட்டைத் தாமே விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது வேறொரு திசையில் பெண்ணியத்துக்கு விளக்கம் தேடும் முயற்சி நடந்துகொண்டிருக்கிறது.
இந்தப் பின்னணியில்தான் இஸ்லாம் கூறும் பெண்ணியம் தகத்தகாயப் பேரொளியுடன் வருகிறது. அமெரிக்காவில் முதல் பெண்ணியக் குரல் எழுந்தது 1848 இல்தான்! ஆனால் ஏழாம் நூற்றாண்டிலேயே பெண்ணியக் குரல் மண்ணில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டது. அந்த முழக்கத்தை எழுப்பியவர் பெண்ணோ ஆணோ அல்ல. மாறாக, அந்த மகத்தான முழக்கத்தை முன்வைத்தவன் இறைவன்! ஆம் பெண்ணியல் நோக்கில், பெண்ணியல்பு நோக்கில் அவளுக்குத் தேவையான அத்தனை உரிமைகளையும் இறைவன் வழங்கினான். அந்த உரிமைகளின் பட்டியல் மிக நீளமானது. போராடாமலே பெண் இனத்துக்குக் கிடைத்த பெரும் புதையல் அது!
நாடறிந்த நல்லிணக்கச் சிந்தனையாளர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் காலம் கருதி இந்த நூலை இயற்றித் தந்துள்ளார்.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அழகிய அண்டை வீடு (மனித உறவுகள் – 1)
அண்டைவீட்டார் என்றால் யார்? அவர்களோடு நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்னென்ன? அவர்களோடு நாம் எப்படி யெல்லாம் நடந்து கொள்ளக்கூடாது? என பல்வேறு கேள்வி களுக்கு விடைகளையும் பன்மை சமூகமாக வாழும் நாம் நம் தேசத்தில் ஜாதி மதம் மொழிகளை எல்லாம் தாண்டி தன் அண்டை வீட்டார்களோடு ஒற்றுமையோடும் மனிதநேயத்துடன் எப்படி வாழ்வது என்பதையும் இந்நூல் பேசுகிறது.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அறிவோம் ஹிஜாப்
ஹிஜாப் தனிப்பட்ட மனிதர்களின் நிலைப்பாட்டை தாண்டி ஒரு தேசப் பிரச்சினையாக உருவாவதைப் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் ஹிஜாப் பற்றிய விளக்கங்களையும் தெளிவுகளையும் நாட்டு மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. தவறான கருத்துக்களை அழித்து ஹிஜாப் பற்றிய உண்மை நிலையை மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் விதத்தில் “அறிவோம் ஹிஜாப்” என்ற இச்சிறு நூலை டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் எழுதியுள்ளார்கள்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அன்புள்ள அன்னைக்கு
தன்னைப் பெற்றெடுத்த அன்னைக்கு சத்தியத்தை அறிமுகப்படுத்தி ஒரு மகன் எழுதிய காவியம். இஸ்லாமியக் கொள்கை விளக்கம், பெற்றோர்களைப் பற்றிய இஸ்லாமியப் பார்வை இரண்டையும் ஒரே சமயத்தில் இந்நூல் விளக்குகிறது.
Author: NASEEM QAZI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இறைநம்பிக்கையாளர்களின் அன்னையர்
அன்னையரின் வாழ்வு குறித்து இத்தனைச் சுருக்கமான – ஆனால் நிறைவான விவரங்கள் கொண்ட நூல் இதற்கு முன்பு இது போல் வந்ததில்லை
Author: MOULANA ABDUL HAFEEZ RAHMANI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
உயிர்த் துடிப்புள்ள பெண் ஆளுமைகள்
இஸ்லாத்தைக் குறித்துப் புனையப்படும் கட்டுக்கதைகளில் மிக முக்கிய பங்குவகிப்பது பெண் அடிமைத்தனம் என்பது தான். ஆனால் உண்மை அப்படி இல்லை, இஸ்லாத்தைப் போல் பெண்களுக்கு முக்கியத்துவமும் கண்ணியமும் தரும் மார்க்கம் வேறில்லை என்பதே உண்மையாகும்.நபி(ஸல்) அவர்களின் அழைப்புப்பணியின் தொடக்கமே பெண் அடிமைத்தனத்திற்கு எதிராக இருந்தது. கணவன் இறந்துவிட்டால் செல்வங்களைப் பிரிப்பதைப் போல பெண் களைத்தான் பங்கிட்டார்கள் அன்றைய அறிவீனர்கள். அவர்களுக்கு சவுக்கடி கொடுப்பது போல் பெண் என்பவள் கண்ணியமானவள், அவளது காலடியில் சுவர்க்கம் உள்ளது, அவளுக்கு சொத்தில் பங்குள்ளது, அவள் எவ்விதத்திலும் குறைந்தவள் அல்ல என்பதை உலகிற்கு எடுத்துரைத்தது இஸ்லாம்தான்.இன்றும் இஸ்லாம் பெண்களுக்கு எவ்வளவு கண்ணியமும், உயர்வும் கொடுக்கின்றது என்பதற்கு சாட்சியாக உலக அளவில் ஏற்பட்டுவரும் சமூக மாற்றங்களும், மறுமலர்ச்சிகளும் உதாரணங்களாகும்.இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் தத்தம் துறைகளில் பெரும் புகழும் சாதனைகளும் படைத்த 18 பெண் ஆளுமைகளின் சுருக்கமான விவரங்கள் இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.Author: Rauff Zain
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
குடும்ப உறவுகளை குலைக்கலாமா? (மனித உறவுகள் – 2)
உறவைப் பேணுவதின் அவசியத்தையும், என்ன காரணங்களால் குடும்ப உறவு சீர்குலைகிறது என்பதையும், குடும்ப உறவுகள் குலையாமல் பாதுகாத்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதையும், குர்ஆன் மற்றும் சுன்னா ஒளியில் மிக அற்புதமாகத் தொகுத்து தந்திருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
சமூகக் கட்டமைப்பில் பெண்களின் பங்கு
பெண்ணியம் குறித்து அதிகம் பேசப்படும் இக்காலத்தில் இந்த நூல் இஸ்லாமியஅடிப்படையிலான பெண்ணியப் பார்வையை முன் வைக்கிறது. இந்த வகையில் தமிழில் இதனை முன்னோடி நூல் எனலாம்.
Author: MOULANA SYED JALALUDDIN UMARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
சொர்க்கத்தை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்
நாம் மறுமை நம்பிக்கை கொண்டவர்களாக, முஸ்லிம்களாக, அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடிபணிந்தவர்களாக இருக்கின்றோம்.
நரகத்தைப்பற்றி அதிகம் எச்சரிக்கப்படுகிறது. எந்த அளவிற்கு நரகம் பற்றி மக்களிடம் எச்சரிக்கப்படுகிறதோ அதுபோல சொர்க்கம் பற்றியும் மக்கள் மத்தியில் அதிகம் நினைவுகூரப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக எழுதப்பட்டதே இந்நூல்.
Author: Jarina Jamal
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருமணத்தில் அநீதி, அநாச்சாரம், விரயம்
திருமணம் என்பது இறைவன் செய்த ஏற்பாடாகும். இதனால்தான் பெருமானார் (ஸல்) அவர்கள், ‘‘திருமணம் எனது வழிமுறை. இதைப் புறக்கணிப்போர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்றார்கள். திருமணத்தை இஸ்லாம் ஒரு சடங்காக மட்டுமே பார்க்கவில்லை. அதை ஒரு வணக்கமாகவும், இறைநம்பிக்கையாகவும் வைத்து அழகு பார்க்கிறது.
இஸ்லாம் திருமணத்தை வெளிப்படையாகவும் எளிமையாகவும் நடத்த வேண்டும் என்று எடுத்துச் சொல்கின்றது.
‘செலவில் குறைந்த திருமணமே அபிவிருத்தியில் நிறைந்ததாக அமையும்’ என நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.
இவ்வளவு சிறப்புமிக்க திருமணத்தை இன்று முஸ்லிம்கள் இஸ்லாத்திற்கு மாற்றமான வழிகளில் நடத்தி தீமையின் பக்கம் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்தத் தீமையை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதுடன் அதற்குரிய தீர்வுகளையும் தர வேண்டுமென்ற நோக்கத்தில் நூலாசிரியர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் ‘திருமணத்தில் அநீதி, அநாச்சாரம், விரயம்’ என்ற தலைப்பில் இந்த நூலை எழுதியுள்ளார். -
நபித்தோழியர் வரலாறு
நபத்தோழியரின் சீரிய வரலாறு, அவர்தம் தியாகங்கள், மனிதகுலத்துக்கு வழிகாட்டக் கூடிய அவர்களின் வாழ்வியல் முறைகள் குறித்து விளக்குகிறது!
Author: MOULAVI K.J. MASTHAN ALI BAQAVI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
பதின்பருவ முஸ்லிம் பெண்களுக்கான கையேடு
இன்று பெற்றோர்களுக்கு இருந்து வரும் மிகப் பெரும் சவால் வளர்ந்து வரும் தங்கள் பதின்பருவப் பிள்ளைகள்தாம். ஆமாம்! நவீனயுகத்தின் விஞ்ஞான வளர்ச்சிகள் மிகப் பயங்கரமாக குடும்பங்களையும் சமுதாயங்களையும் எங்கேயோ இழுத்துக் கொண்டு செல்கின்றன. ஊடகங்கள் பதின்பருவத்தினரைத் தங்கள் ’அக்டோபஸ்’ கைகளுக்குள் ஈர்த்துக்கொண்டு அவர்களுக்குத் தவறான பலவழிகளைக் காண்பித்துக் கொண்டிருக்கின்றன. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஒவ்வொரு வினாடியும் கண்காணிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
அநேக பள்ளிக்கூடங்கள் பதின்பருவத்தினருக்கான ’பாலியல் கல்வியை’ வழங்குகிறது. ஆனாலும் அவை இறைநம்பிக்கை யாளர்களின் குழந்தை-களுக்கு ஏற்ற வகையில் சரிவர வடிவமைக்கப் படவில்லை.
இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே நூலாசிரியர் கே. கபீருதீன் தம் மகளுக்கு உதவும் விதமாக இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். பதின்பருவத்தினர் முழுமையாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் பல்வேறு தலைப்புகளில் விளக்கியுள்ளார். மனிதனின் அடையாளத்தை அறிந்துகொள்வதில் இருந்து பதின்பருவத்திற்கும் வாலிப வயதிற்குமுள்ள வேறுபாடுகள், பதின்பருவத்தில் ஏற்படும் சவால்கள், தவறான பழக்க வழக்கங்கள், தற்காப்புக்கான நடைமுறைகள், ஆரோக்கியத்தையும் சுகாதாரத்தையும் கடைப்பிடிப்பது எப்படி என்று இஸ்லாமியப் பார்வையில் விளக்கியுள்ளார்.
Author: Prof K. Kabir Uddin
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
பெண்களும் இஸ்லாமும்
இன்று பள்ளிவாசல்களில் பிரிக்கமுடியாத பகுதிகளாக இருப்பவை டெல்லி மேடைகளே. இவற்றுக்கு பின்புலமாக இருந்தவர் ஒரு பெண்மணியே,
இஸ்லாமிய வரலாற்றில் படைத்ததில் ஆண்களுக்கு இணையாக பெண்களின் பங்களிப்பும் பங்கேற்கும் இருந்தன என்பதற்கான அழகிய சான்றுகளாக இன்று உலகமெங்கும் பள்ளிவாசல்களில் இருக்கின்ற வெள்ளிமேடைகள் ஜொலிக்கின்றன.
இவற்றைப் போன்ற ஏராளமான சான்றுகளையும், இறைவணக்கம், கல்வி, அரசியல், சமூகம், பொருளாதாரம் என வாழ்வின் அனைத்து துறைகளிலும் முன்னோடி முஸ்லிம் பெண்கள் விட்டுச்சென்ற அழியாத சுவடுகளை படம்பிடித்துக் காட்டுகின்ற நூல்தான் இந்நூல். இஸ்லாம் பெண்களுக்கு அளித்துள்ள உரிமைகளையும் சலுகைகளையும் விரிவாக விவரிக்கின்ற நூல் இந்நூல்.
Author: MOULANA SYED JALALUDDIN UMARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
பேறு பெற்ற பெண்மணிகள் – 2
மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம், பெண்ணுரிமை ஆகியன அவர்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாகச் சுரண்டுகின்றன; மன அமைதியை அளிப்பதற்குப் பதிலாக நிம்மதியின்மையை ஏற்படுத்துகின்றன; வாழ்வைச் சரியான திசையில் வழி நடத்திச் செல்லாமல் நிர்க்கதியில் விட்டு விடுகின்றன என்பதை அவர்கள் அனுபவத்தால் உணர்ந்து வருகின்றனர். இதிலிருந்து எங்களை மீட்கும் மார்க்கம் வேறு ஏதாவது உள்ளதா? எனத் தேடி அலைகின்றனர். அந்தத் தேடலின் முடிவில் இஸ்லாத்தை விடுதலை மார்க்கமாகக் கண்டறிகின்றனர்.
அதிரை அஹ்மத்
Author: ADIRAI AHMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
முன்மாதிரி நபித்தோழியர்கள்
குழந்தைகளுக்கு இஸ்லாமியப் பயிற்சி அளிப்பதிலாகட்டும் மார்க்கத்தைப் பரப்புவதிலாகட்டும் நபித்தோழியர்கள் தங்களுக்குத் தாங்களே ஈடு இணையற்றவர்களாகத் திகழ்ந்தார்கள். அதேபோல் அல்லாஹ்வின் மீதும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்மீதும் நேசம் கொள்வதன் வாயிலாக நாளை மறுமையில் நல்ல பலன் கிடைக்குமென்பதை உணர்ந்து அதன்படி வாழ்ந்து காட்டினார்கள்.
அன்று இஸ்லாத்திற்கு உயிரூட்டிய நபித்தோழியர்களின் வரலாறுகளை இன்று நாம் படிக்கும் பொழுது அவர்களைப் போன்று நாமும் நம் வாழ்வை மாற்ற வேண்டும் என்ற உணர்ச்சியையும் எழுச்சியையும் ஏற்படுத்துகிறது.
Author: Maayil Kairabathi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST