-
அருள்மறையின் நான்கு ஆதாரச் சொற்கள்
₹140இந்த நான்கு அடிப்படைச் சொற்களையும்குர்ஆன் எந்தப் பொருளில் கையாளுகிறது?குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்கள்இவற்றை எப்படிப் புரிந்து கொண்டார்கள்?இந்தச் சொற்களின் இன்றைய நிலை என்ன?இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிந்தனையாளரான மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் தமக்கே உரிய பாணியில் விரிவாக அலசுகிறார்…!ஓரிறைக் கொள்கைக்கு வலு சேர்த்து இணைவைப்பைத் தகர்த்தெறியும் இடிமுழக்க நூல்…!Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அல்குர்ஆனை அணுகும் முறை
₹400அல்குர்ஆனை அணுகும் முறை எனும் இந்நூல் நான்கு முக்கியப் பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஒன்று: குர்ஆனின் தனிப்பெரும் சிறப்புகளும் அதன் இலக்குகளும்.
இரண்டு: மனப்பாடம், ஓதுதல், செவியுறுதல் ஆகியவை மூலம் அல்குர்ஆனை அணுகும் முறை.
மூன்று: புரிதல், விளக்கவுரை ஆகியவை மூலம் அல்குர்ஆனை அணுகும் முறை. விளக்கவுரையில் முன்மாதிரியாக இருக்க வேண்டிய வழிமுறைகள், ஆபத்தான சறுக்கல்கள் மற்றும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியவை குறித்த வழிகாட்டல்கள், அறிவியல் விளக்கவுரையை ஆமோதிப்பவர்கள், மறுப்பவர்கள் ஆகியோருக்கு இடையே இருக்க வேண்டிய நிலைப்பாடு.
நான்கு: பின்பற்றுதல், செயல்படுத்துதல், தீர்ப்பளித்தல், அழைத்தல் ஆகியவை மூலம் அல்குர்ஆனை அணுகும் முறை.
Author: DR. YUSUF AL QARDHAWI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இறைத்தூதர்கள் பற்றி இறைமறை
₹12இறைத்தூதர்கள் யார், அவர்களின் இயல்புகள், தகுதிகள், பணிகள் என்ன? இறுதிவேதமான திருக்குர்ஆனே 25 இறைத்தூதர்கள் பற்றிய விளக்கத்தை அளிக்கிறது. இந்நூல் இத்துறையில் ஒரு முன்னோடியாக விளங்குகிறது.
Author: DR. QURSHID AHMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இறைமறை பற்றி இறைமறை
₹7திருக்குர்ஆனைப் பற்றி திருக்குர்ஆனே கூறும் சுயஅறிமுக நூல். குர்ஆன் பற்றிக் கூறும் வசனங்களின் தொகுப்பு.
Author: DR. QURSHID AHMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இறைவனைப் பற்றி இறைமறை
₹15இறைவன் இருக்கின்றானா? அவன் எத்தகையவன்? அவனது பண்பு நலன்கள் என்ன? அவனுக்கும் மனிதனுக்கும்இடையே உள்ள உறவு எத்தகையது? அத் தனைக் கேள்விகளுக்கும் இறைவனே விடையளிக்கிறான்.
Author: DR. QURSHID AHMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
குர்ஆனாக வாழ்வோம்
₹40“என் இறைவனிடமிருந்து எனக்கு அனுப்பப்படுகின்ற வஹியை மட்டுமே நான் பின்பற்றுகின்றேன். இது உங்கள் இறைவனால் வழங்கப்பட்ட தெளிவான சான்றாகும். மேலும், (இதனை) நம்புகின்ற சமுதாயத்தாருக்கு இது நேர்வழி காட்டக்கூடியதாகவும், ஓர் அருளாகவும் இருக்கின்றது.” (திருக்குர்ஆன் 7:203)
Author: Moulana Sadruddin Islahi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
குர்ஆனை அணுகும் முறை
₹55திருக்குர்ஆன் எனும் இறைவேதத்தை எப்படி அணுக வேண்டும் என்பதைக் கூறும் இந்நூல் குர்ஆனை விளங்குவதற்கு ஒரு முன்னோடி நூல்!
ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
குர்ஆன் மொழிபெயர்ப்பைப் படிக்கத் தொடங்கும் முன்
₹110Author: G. ABDUR RAHIM
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆனியக் கலைகள்
₹110திருக்குர்ஆனின் இலக்குகள் என்ன? வசனங்களுக்கிடையேயான தொடர்புகள் என்ன? அத்தியாயங்களின் ஆய்வுப் பொருள் என்ன? என பல முக்கிய விதிகளை எளிய முறையில் இந்நூல் விளக்குவது இந்நூலின் சிறப்பம்சம்.
திருக்குர்ஆனை கற்க விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய அரிய நூல் இது.
Author: DR. J. MOHIDEEN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆனில் மறுமை
₹230தென்னகத்து இஸ்லாமியப் பேரறிஞர்களில் தலைசிறந்தவரான கேரளாவைச் சேர்ந்த K.C. அப்துல்லாஹ் மௌலவி அவர்கள் எழுதிய ‘பரலோகம் குர்ஆனில்’ எனும் மலையாள நூலின் தமிழாக்கம்தான் இந்நூல். மூதறிஞர் K.C. அப்துல்லாஹ் மௌலவி அவர்கள் சிறந்த சொற்பொழிவாளர், பன்னூலாசிரியர். இஸ்லாமிய இயக்கத்தின் குறிப்பிடத்தக்கத் தலைவர்களில் ஒருவர். ஏராளமான செயல் வீரர்களை உருவாக்கியவர். அவர் எழுதிய ‘அல்லாஹ் குர்ஆனில்’, ‘நபிமார்கள் குர்ஆனில்’ எனும் நூல்கள் மிகவும் புகழ்பெற்றவை. ‘பரலோகம் குர்ஆனில்’ எனும் நூலை அவர் ஒரு மாறுபட்ட கோணத்தில் எழுதியுள்ளார்.
இஸ்லாத்தின் மறுமைக் கோட்பாட்டை உறுதியாக நம்பும் முஸ்லிம்கள் அது பற்றிய செய்திகளைக் குர்ஆனிலிருந்தும் நபிமொழிகளிலிருந்தும் குறைந்த அளவே தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
எனினும், இந்த நூலில் மறுமை நிகழ்வுக் காட்சிகளை குர்ஆன்-ஹதீஸ் செய்திகளின் அடிப்படையில் நம் மனக் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் மௌலவி அவர்கள். ஒவ்வொரு செய்திக்கான வசனங்களையும் தந்துவிட்டு அதை, நாம் உரையாடும் பாணியில் வித்தியாசமாக விவரிக்கிறார். கூடவே, இறைத்தூதரின் சொற்களைச் சரியான முறையில் அங்கு பொருத்திவிடுகிறார்.
உலக அழிவு, மறுமை என்னும் நிகழ்வுகளைத் திருக்குர்ஆனில் சீரான வரிசைப்படி பார்க்க இயலாது. மௌலானா அந்த நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்தி, மறுமையை நோக்கிய ஒரு பயணத்திற்கு அழைத்துச் செல்கிறார். இதன் மூலம் மறுமையை நம்பியிருக்கும் உள்ளங்களுக்கு அது மேலும் உறுதியைத் தருகிறது. நம்பாதவர்களுக்கோ, நம்பிக்கைக்கான வாசலைத் திறந்து விடுகிறது.Author: K.C. ABDULLAH MOULAVI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆனின் உள்ளடக்கம் என்ன?
₹70உலகில் மிக அதிகமாகப் படிக்கப்படும் நூலாகிய திருக் குர்ஆன் எனும் மாபெரும் வேதத்தை பிற சமயத்தவர்க்கு எளிய நடையில் தமக்கேயுரிய பாணியில் அறிமுகப் படுத்துகிறார் அடியார்.
Author: ABDULLAH ADIYAR
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் கையடக்கம்
₹400நடுத்தர வர்க்கத்தினர் கூட வாங்கிப் படிக்கும் அளவில், பயணத்தின் போதும் எடுத்துச் செல்லும் வடிவில் கையடக்கப் பிரதியாக…திருவசனங்கள் ஒவ்வொன்றும் எடுத்தாளும் வகையில் தனித்தனி எண்களுடன்…Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் சொற்களஞ்சியம்
₹250திருக்குர்ஆனின் அத்தியாய வரிசைப்படி கடினமான சொற்களுக்கு பொருள் கூறும் எளிமையும் அழகும் மிக்க இந்நூல் தமிழ் மக்களுக்குப் பெரிதும் பயன்படும்
Author: MOULANA SHAIKH ABDUL KAREEM PAREKH
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் தமிழாக்கம் விளக்கவுரை
₹700Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUSமனித மனம் எப்படி அமைதல் வேண்டும்? மனித நடப்பு எப்படி இருத்தல் வேண்டும்? ஆனந்தம், அன்பு, சிரிப்பு, சினம், சாந்தி, சண்டை ஆகிய அனைத்துக்குமான ஒழுங் கும் தீர்வுகளும்! அறிவின் பசி தீர்த்து – தெளிவின் திசை காட்டும் இறைவேதம்! எளிய தமிழில்! இனிய நடையில்!!
விளக்கவுரை
ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
-
திருக்குர்ஆன் பாதையில்… வாழ்வியல் பயணம்!
₹160திருக்குர்ஆன் ஒரு வாழ்வியல் பொக்கிஷம். மனிதகுலம் முழுவதற்குமான சொத்து. அள்ளக்குறையாத அறிவுக் கருவூலம். இந்நூல் திருக்குர்ஆன் குறித்த நூல்களில் தனித்துவம் வாய்ந்தது. திருக்குர்ஆன் நபித்தோழர்களிடம் வானளவு மாற்றங்களை நிகழ்த்திக்காட்டியது. காரணம் அவர்கள் திருக்குர்ஆனை அணுகிய விதமும் முறையும்தான். அவர்கள் திருக்குர் ஆனை புத்தகமாகப் பார்க்கவில்லை. இறைவனின் குரலாகக் கேட்டார்கள். இறைக்கட்டளையாக உணர்ந்தார்கள். நபித்தோழர்கள் அணுகிய அதே விதத்தில் இன்று நாம் அணுகி-னாலும் அதே மாற்றத்தை நம்முள் விதைக்க திருக்குர்ஆன் தயாராக இருக்கிறது. நாம் தயாராக இருக்கின்றோமா என்பதுதான் கேள்வி. இந்தநூல் அதற்கான வழிகாட்டுதல்களையும் திட்டங்களை-யும் நுட்பமாகச் சொல்கிறது. அறிஞர் குர்ரம் முராத் குர்ஆனிய மனிதர். குர்ஆனை இவர் வெறுமனே வாசிக்காமல் சுவாசித்திருக்கின்றார். அவரின் உயிர் மூச்சே இந்தக்குர்ஆன்தான். இந்த நூலை ஒவ்வொருவரும் கண்டிப்பாக வாசிக்க-வேண்டும். அதனைப் பின்பற்றி திருக்குர்ஆனை ஓதவேண்டும். இதனை வாசிப்பதற்கு முன் நாம் குர்ஆனை ஓதியதற்கும், வாசித்தபிறகு திருக்குர்ஆனை ஓதுவதற்கும் மிகப்பெரிய வித்தியாசத்தைக் கண்டிப்பாக உணர முடியும்.Author: KHURRAM MURAD
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மாறியது நெஞ்சம் மாற்றியது குர்ஆன்
₹185குர்ஆன் வெறுமனே தத்துவார்த்தமான நூல் கிடையாது. வாழ்ந்து பார்க்க வேண்டிய நடைமுறை நூல் ஆகும். இதன்படி வாரம்தோறும் ஒரு வசனத்தின் அடிப்படையில் வாழ முயல்வது என்கிற திட்டத்தின்படிச் செயல்படத் தொடங்கினார்கள். இவ்வாறாக வகுப்புக்கு வருபவர்கள் தங்களின் சொந்தப் பிரச்னை ஒன்றைச் சொல்ல, அவர்களுக்கு சுமைய்யா ரமளான் அவர்கள் பொருத்தமான வசனத்தைப் பரிந்துரைப்பார்.
பணி சிறியதுதான். ஆனால் விளைவோ மிகச் சிறப்பாக வெளிப்பட்டது. பெரும்பாலான பிரச்னைகள் தீர்க்கப்பட்டன. பல்வேறு இன்னல்கள் முடிவுக்கு வந்தன. மன அமைதி, நிம்மதி எனும் மிகப்பெரிய செல்வம் கிட்டியது. குடும்பச் சண்டைகள் குறைந்தன. பிரிந்த குடும்பங்கள் இணைந்தன. கோபதாபங்கள் நீங்கி மகிழ்ச்சி கிடைத்தது. கணவர்கள் தங்களது மனைவியரில் ஏற்பட்ட மாற்றங்களைப் பாராட்டியதுடன் அதனை மகிழ்ச்சிகரமான புரட்சி என்றும் வர்ணித்தனர்.
குர்ஆன்படி வாழ விரும்புகின்ற ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய இனிய நூல்தான் “மாறியது நெஞ்சம் மாற்றியது குர்ஆன்”.
Author: DR. SUMAIYA RAMALAN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
யாஸீன் (மூலம் • தமிழாக்கம் • விளக்கவுரை)
₹70Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வான்மறைச் செல்வம்
₹15குர்ஆன் கூறுவது என்ன? தேர்ந்தெடுக்கப்பட்ட திருக்குர் ஆன் திருவசனங்களின் அழகிய சிறுதொகுப்பு!குர்ரம் முராத்Author: KHURRAM MURAD
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வேதவரிகளும் தூதர் மொழிகளும் (பாகம் – 1)
₹50Book Summary of வேதவரிகளும் தூதர் மொழிகளும் (Ordinary)
திருக்குர்ஆன் வசனங்களும் நபிமொழிகளும் எளிய நடையில் தொகுக்கப்பட்டுள்ளன. இறைவன், மனிதன், நற்பண்புகள், தீயகுணங்கள், கல்வி, அரசியல், பொருளியல், சமூகவியல், பெண்கள் என 24 தலைப்புகளில் தொகுக் கப்பட்டுள்ளன.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வேதவரிகளும் தூதர் மொழிகளும் (பாகம் – 2)
₹120Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST




















