-
அத்தியாயம் 3 : ஆலு இம்ரான் தஃப்ஹீமுல்குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
தஃப்ஹீமுல் குர்ஆன் அத்தியாயம் 17 (பனூஇஸ்ராயீல்)
இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றிய மாபெரும் இஸ்லாமிய ஆளுமை மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்). 20ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்காகக் களம் கண்ட புரட்சிகர சிந்தனையாளரான அவர், இஸ்லாத்தை இம்மண்ணில் மேலோங்கிடச் செய்யும் உயரிய லட்சியத்துக்காக அல்லும் பகலும் உழைத்தவர். பல இஸ்லாமியப் போராளிகளுக்கு ஆதர்ச நாயகராக விளங்கிய மௌதூதியைக் கற்பதற்கான ஆர்வமும் தேடலும் உலகம் முழுக்க இன்றும் உயிர்ப்புடன் இருந்துவருகிறது.
மௌலானா மௌதூதி (ரஹ்) 1903ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் நாள் ஔரங்காபாதில் சூஃபிப் பின்னணி கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்தார். அரபு, பாரசீகம், சட்டம், ஹதீஸ் ஆகியன அவருக்கு சிறுபிராயம் முதலே கற்பிக்கப்பட்டன. வீட்டிலேயே இவற்றைப் பயின்று வந்த அவர் தனது பதினோராம் வயதில் வீட்டுக்கு அருகிலிருந்த ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பப்பட்டார். அங்குதான் நவீனக் கல்வி அவருக்கு வாய்த்தது. இயற்கை அறிவியல், ஆங்கிலம், கணிதம் போன்றவற்றை அங்குதான் பயின்றார். பிறகு 1916ல் ஹைதராபாதில் பேரறிஞர் ஹமீதுத்தீன் ஃபராஹி தலைமையாசிரியராக இருந்த தாருல் உலூம் அரபிக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அவரது தந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு அவருக்குக் கல்வி தடைப்பட்டது. தந்தைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் பொருட்டு போபாலுக்குக் குடிபெயரும் நிலை ஏற்பட்டது. அங்கே சர்ச்சைக்குரிய உர்து இலக்கியவாதியாக அறியப்பட்ட நியாஸ் ஃபதெஹ்பூரிக்கு அறிமுகமானார் மௌதூதி. அவர்தான் மௌதூதியை எழுத்துப் பணியை மேற்கொள்ளுமாறு ஊக்கம் தந்தார். இளம் வயது தொட்டே தான் வாழ்ந்த காலத்தின் முக்கியச் சிந்தனையாளர்களாகக் கருதப்பட்ட பலருடனும் மௌலானா மௌதூதிக்குத் தொடர்பிருந்தது. பல்வேறு சிந்தனைப் போக்குகளை அவர் கடந்து வந்திருப்பதற்கு இது ஒரு காரணமாக விளங்குகிறது.
இளம் மௌதூதியின் அன்றாட வாழ்வே ஒரு போராட்டமாகிப் போனது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் உழன்றதால் முறையாகக் கல்வி கற்கும் சூழலை மௌதூதி இழந்தார். ஆரம்பத்திலிருந்தே உர்து மொழிவளமும், ஆய்வுநோக்கும் கொண்டவராக மௌதூதி திகழ்ந்ததால் பத்திரிகைத் துறை அவரை உள்ளீர்த்துக் கொண்டது. தனது 17ஆம் வயதில் ஜபல்பூர் காங்கிரஸ் கட்சியின் உர்து வாரப் பத்திரிகையான ‘தாஜ்’-ல் பணியாற்றத் தொடங்கினார். அங்கு வேலைப் பார்த்ததன் மூலம் அவரின் பொருளாதார நிலை சற்று முன்னகர்ந்தது. தடைப்பட்ட தன்னுடைய கல்வியை சுயமாகத் தொடர நினைத்தார்.
ஆங்கிலம், ஜெர்மன் ஆகிய மொழிகளைப் பயில்வது, சர் சையித் அஹ்மத் கான் போன்றோரின் படைப்புகளை வாசிப்பது போன்றவற்றில் நேரம் செலவிட்டார். இது தவிர, இந்தக் காலகட்டத்தில் மௌலானா மேற்கொண்ட முயற்சிகள் பற்றி இந்திய ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் முன்னோடியான அப்துல் ஹக் அன்சாரி கூறும்போது, அவர் “மேலைத் தத்துவச் சிந்தனைகளின் பக்கம் திரும்பி, முழுமையாக ஐந்து ஆண்டுகள் அர்ப்பணித்து, மேற்கத்திய தத்துவம் தொடர்பான முக்கிய ஆக்கங்கள், அரசியல் அறிவியல், வரலாறு, சமூகவியல் முதலானவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டார்” எனக் குறிப்பிடுகிறார். உலகின் மிகப் பெரும் சக்தியாக ஐரோப்பா எழுச்சிபெற்றதில் அங்கே உருவான அறிவுஜீவிகளான ஹெகல், ஆடம்ஸ்மித், ரூசோ, மால்தூஸ், வால்டேர், டார்வின், கோதே போன்றோரின் அறிவுசார் பங்களிப்பை மௌதூதி சுட்டிக்காட்டினார்.
ஜம்மியத் உலமா யே ஹிந்துடன் அவருக்கு ஏற்பட்ட தொடர்பு அவரது வாழ்வில் மற்றொரு திருப்பத்தை உண்டாக்கியது. அந்த அமைப்பின் ஏடான ‘முஸ்லிம்’ல் (பின்னர் அது ‘ஜம்மியத்’ என பெயர் மாற்றம் பெற்றது) பொறுப்பாசிரியரானார். சற்றேறக்குறைய மூன்றாண்டுகள் அதில் பணியாற்றிய அவருக்கு முக்கியமான அனுபவங்களெல்லாம் அங்கே கிடைத்தன. அந்த சமயத்தில் காந்தியால் வழிநடத்தப்பட்ட கிலாஃபத் இயக்கத்திலும், ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்குபெற்றார். இந்திய தேசிய காங்கிரஸுடன் முஸ்லிம்களை ஒன்றிணைப்பதற்காக வேலை செய்தார். அப்போது, காங்கிரஸின் தேசியவாதம் முஸ்லிம்களைத் தனிமைப்படுத்துவதற்கு இட்டுச்செல்வதை அவதானித்தார். மதக் கலவரங்கள் அதிகரிக்கத் தொடங்கிய அந்த நேரத்தில் காங்கிரஸின் முஸ்லிம் எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கண்டு அதிருப்தியடைந்தார். இஸ்லாம் வன்முறை சமயமாகத் தூற்றப்பட்டுக் கொண்டிருந்த இந்தக் காலப்பிரிவில்தான் அதற்குப் பதிலளிக்கும் நோக்கில் மௌதூதியின் ஆகச்சிறந்த படைப்புகளில் ஒன்றான ‘அல் ஜிஹாத் ஃபில் இஸ்லாம்’ நூல் வெளியானது. தேசியவாதம் இந்திய அரசியலில் தாக்கம் செலுத்தியது மட்டுமின்றி உஸ்மானிய பேரரசைக் கவிழ்ப்பதற்கு முதன்மைக் காரணியாக விளங்கியதையும் மௌதூதி கண்ணுற்றார். ஜம்மியத் உலமா – காங்கிரஸ் ஆதரவுநிலையைத் துறந்து முற்றிலுமாக அவர் விலகுவதற்கு மேற்சொன்ன விஷயங்களெல்லாம் வழிவகுத்தன.
பிறகு, டெல்லியிலிருந்து ஹைதராபாதுக்கு இடம்பெயர்ந்த அவர், இஸ்லாத்தை ஆய்ந்தறிவதில் தீவிரமாக ஈடுபட்டார். நிஜாமின் ஆட்சியில் ஏற்பட்ட சரிவும், மௌதூதியின் ஆழ்ந்த வாசிப்பும் ஓர் உண்மையை அவருக்குத் தூலமாகப் புலப்படுத்தியது. இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றாததே முஸ்லிம்களின் வீழ்ச்சிக்குக் காரணம் எனும் உண்மைதான் அது. குர்ஆனின் பக்கம் முஸ்லிம்களை மீளச்செய்ய வேண்டும் எனும் அவரின் வேட்கை 1932ல் ‘தர்ஜூமானுல் குர்ஆன்’ எனும் உர்து பத்திரிகையை ஆரம்பிக்க வழிகோலியது. இந்த இதழ் இஸ்லாமிய புனர்நிர்மாணத்துக்கு அவரது பெரும் பங்களிப்பாகக் கொள்ளப்படுகிறது.
1937ல் நடைபெற்ற பொதுத் தேர்தலும் அதையொட்டி காங்கிரஸ் அமைத்த மாகாண அமைச்சரவையும் மௌலானா மௌதூதியின் வாழ்வில் மிகப் பெரும் திருப்புமுனையாகின. “இந்து அரசாங்கம்” என இதைக் குற்றம் சாட்டிய மௌதூதி, முஸ்லிம்களை அரசியல் மட்டத்திலும், கலாச்சார ரீதியிலும் இது ஓரங்கட்டுவதோடு, கொஞ்சம் கொஞ்சமாக இந்துக்களாக அவர்களை மாற்றவே முனைகிறது எனக் கண்டித்தார். முஸ்லிம் லீகும் கடுமையான காங்கிரஸ் எதிர்ப்பை மேற்கொண்டது. எனினும் மௌதூதியின் கண்ணோட்டம் அதிலிருந்து வேறுபட்டு தனித்து நின்றது. காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகியவை மதச்சார்பற்ற தேசத்துக்காக உழைப்பதால் இவற்றுக்கு மத்தியில் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை என அவர் சாடினார். முஸ்லிம் லீக்கை “ஜமாஅத்தே ஜாஹிலிய்யா” என்றதோடு, ஷரிஆ அடிப்படையில் அது அரசை அமைக்க முயலாததால் எதிர்காலத்தில் பாகிஸ்தான் “முஸ்லிம்களின் இறைமறுப்பு அரசாக”த் திகழும் என்றார். ஜின்னா மேற்கத்திய அரசியல் கோட்பாடுகளிலும், சட்டங்களிலும் மட்டுமே அறிவு பெற்றிருப்பதால் இஸ்லாமிய ஆட்சி மலர்வதற்கு அவர் எதிரானவர் என்பது மௌலானாவின் கருத்தாக இருந்தது. மதச்சார்பின்மை, தேசியவாதம் போன்றவற்றை எதிர்த்துவந்த மௌதூதி இப்படியாக அபிப்ராயம் கொண்டிருந்தது வியப்புக்குரியதன்று.
இந்தக் கருத்தோட்டத்தின் நீட்சியாகவே, 1941ஆம் ஆண்டு ஆகஸ்டு 23ஆம் நாள் ஜமாஅத்தே இஸ்லாமி எனும் பேரியக்கத்தை 75 பேர்களுடன் சேர்ந்து மௌதூதி நிறுவினார். ‘ஹுக்குமத்தே இலாஹி’ (அல்லாஹ்வின் அரசாங்கம் அல்லது இஸ்லாமிய அரசு) என்பது அதன் குறிக்கோளாக இருந்தது. இறை ஆட்சியை நிர்மாணிப்பது முஸ்லிம்களின் கடமை என்றும், அடிப்படை நம்பிக்கையான ஏகத்துவத்தின் அங்கம் அது என்றும் கூறினார். ‘அருள்மறையின் நான்கு ஆதாரச் சொற்கள்’ என்கிற அவரது நூலில் இலாஹ் (இறைவன்), ரப் (அதிபதி), இபாதத் (வழிபாடு), தீன் (வாழ்கைநெறி) ஆகிய குர்ஆனிய சொற்பிரயோகத்தின் வழி இவற்றை நிறுவினார். இறைவனுக்கு அன்றி அதிகாரம் மனிதனின் கரங்களில் ஒப்படைக்கப்படுவதை ஜாஹிலிய்யா என்று எதிர்த்தார்.
இஸ்லாத்தை முழு வாழ்க்கைத் திட்டமாக முன்வைத்தார். மனித உடலின் எந்தவொரு பாகமும் பிரித்துப் பார்க்க முடியாதபடி ஒன்றோடு மற்றொன்று பின்னிப்பிணைந்து இருப்பதை இஸ்லாத்திற்கு உருவகப்படுத்திக் காட்டினார். இதன் மூலம் முழு வாழ்க்கைத் திட்டத்தின் உயிர்நாடியாக அரசு இருப்பதை விளக்கினார். ஜாஹிலிய்யாவுக்கும் இது பொருந்தும் எனச் சுட்டிக்காட்டி, இஸ்லாமும் ஜாஹிலிய்யாவும் ஒருபோதும் ஒன்றாகப் பயணிக்க முடியாதென அழுத்தமாகப் பதிவு செய்தார். மானுடத்தின் வரலாற்றை ‘ஹக்’-க்கும் (சத்தியம்/நீதி) ‘பாத்தில்’-க்கும் (அசத்தியம்) இடையிலான – இஸ்லாத்துக்கும் ஜாஹிலிய்யாவுக்குமான – தொடர் போராட்டமாக அணுகினார். இவையெல்லாம் இஸ்லாத்தைக் குறுக்கிப் புரிந்துகொள்ளும் பிற இஸ்லாமிய அறிஞர்களில் இருந்து மௌலானா மௌதூதியை வேறுபடுத்திக் காட்டும் அம்சங்களாகின.
தேசப் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் இஸ்லாமிய ஆட்சி ஏற்படவேண்டும் என்று ஆவல்கொண்டார் மௌதூதி. ஆனால் அவரது குரலுக்கு அந்நாட்டின் அதிகார வர்க்கம் செவிசாய்க்காததோடு, இஸ்லாமிய ஆட்சிக்கான எதிர்பார்ப்பை சுமந்திருந்த மக்களின் நம்பிக்கையையும் பாழ்படுத்தியது. மௌதூதி வாழ்ந்த காலமெல்லாம் தொடர்ந்து அரசியல் செயல்பாட்டில் ஈடுபட்டே வந்தார். சில சறுக்கல்களும் அதில் இருக்கவே செய்தன.
காதியானிகளுக்கு எதிராக அவர் எழுதியதற்காக 1953 மே மாதம் 11 அன்று மௌலானா மௌதூதிக்குத் தூக்கு தண்டனை வழங்கியது பாகிஸ்தான் நீதிமன்றம். அதற்கு எதிராக உலகம் முழுக்க முஸ்லிம்களின் கண்டக் குரல்களும் போராட்டங்களும் வெடித்தன. அரசுக்கு மௌதூதி கருணை மனு அளிக்கும்படி கோரப்பட்டது. ஆனால் அவர் அதைக் கடுமையாக மறுத்துவிட்டார். பின்னர் அவருக்குக் கொடுத்த தண்டனை தளர்த்தப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது; அதுவும் பிற்பாடு விலக்கப்பட்டு மௌதூதி விடுதலை செய்யப்பட்டார்.
ஜமாஅத்தே இஸ்லாமி பேரியக்கத்தை மௌதூதி மிகச் சிறப்பாக தலைமை தாங்கினார். தீனை மனித வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் நிலைநாட்டும் நோக்கில் பல்வேறு புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதிக்குவித்தார். அரபு, வங்காளி, ஹிந்தி, ஆங்கிலம் முதலான பல மொழிகளுக்கு அவரின் உர்து ஆக்கங்கள் மொழிபெயர்க்கப்பட்டன. முப்பது ஆண்டுகள் செலவழித்து அவர் எழுதிய ‘தஃப்ஹீமுல் குர்ஆன்’ தஃப்சீர் அவரது ஆகப்பெரும் பங்களிப்பாகத் திகழ்கிறது.
முதுமைக் காலத்தில் கடும் உடல் சுகவீனத்தால் அவதியுற்றார் மௌதூதி. 1972ல் ஜமாஅத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து விலக அனுமதிக்குமாறு ஜமாஅத் தலைமையை அவர் கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுகோள் ஷுறா உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மௌலானாவின் உடல்நிலை ரொம்பவும் மோசமாகியதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் மருத்துவராக இருந்த அவரது மகன் சிகிச்சைக்காக அங்கே மௌதூதியை அழைத்துச் சென்றார். அங்கே சிகிச்சை பலனின்றி 1979 செப்டம்பர் 22ஆம் நாள் பேரறிஞர் மௌதூதி (ரஹ்) இம்மண்ணை விட்டு அகன்றார். உலகின் பல இடங்களில் அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, அவரது உடல் லாஹூரிலுள்ள அவருடைய இல்லத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
தஃப்ஹீமுல் குர்ஆன் அத்தியாயம் 22 (அல் ஹஜ்)
திருக்குர்ஆனின் 22ஆவது அத்தியாயமான அல்-ஹஜ்ஜுக்கு விளக்கவுரை அளித்துள்ள மௌலானா மௌதூதி அவர்கள், அல்லாஹ் மூன்று குழுவினரை நோக்கி கருத்துரைகளை நிகழ்த்துவதாக தெரிவிக்கிறார்கள். அவர்கள்,
1) மக்கத்து இணைவைப்போர்,
2) இறைநம்பிக்கைக்கும் இறைமறுப்புக்குமிடையில் தடுமாறும் முஸ்லிம்கள்,
3) வாய்மைமிக்க இறைநம்பிக்கையாளர்கள்
என்று வகைப்படுத்தியுள்ளார்கள். மறுமைநாளின் பூகம்பம் மாபெரும் திகிலை ஏற்படுத்துவதாக இருக்கும், அந்தக் கோபத்தின் பிடியிலிருந்து மனிதர்களே உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்று தொடங்கும் இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்திற்கே மௌலானா அவர்கள் நீண்டதொரு விளக்கத்துடன் விரிவுரையை அளித்துள்ளார்கள்.
இது போன்றே பல வசனங்களுக்கு ஐயங்களுக்கிடமின்றி மிக தெளிவாகவும் குர்ஆன் எடுத்துரைக்கும் செய்தியை சரியான பார்வையுடனும் விளக்கும் விதம் மெளலானா அவர்களின் சிந்தனையாற்றலை பிரதிபலிக்கிறது.About The Author

தஃப்ஹீமுல் குர்ஆன்_(32 Books Package)
திருக்குர்ஆன் முன் வைக்கின்ற அழைப்பை விளக்கிச் சொல்வதற்காக காலம்தோறும் விரிவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன; இவை காலத்தை வென்று நிற்கின்றன. இந்த தொடரில் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் “மௌலானா சையத் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)” அவர்கள் எழுதிய குர்ஆனின் தலைசிறந்த விளக்க உரையாக “தஃப்ஹீமுல் குர்ஆன்” திகழ்கின்றது.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹4695 -
திருக்குர்ஆன் விளக்கவுரை – யூனுஸ், ஹுத்
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST
-
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தவ்பா
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயங்கள் 1-2 (அல்ஃபாத்திஹா – அல்பகறா)
குர்ஆனின் தொடக்கத்திலேயே அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை இடம்பெறச் செய்திருப்பதன் நோக்கம் இதுதான்: நீங்கள் உண்மையிலேயே இந்த வேதத்தின் மூலம் பயன்பெற விரும்புகிறீர்கள் எனில், முதலில் இறைவனிடம் இவ்வாறு பிரார்த்தனை செய்யுங்கள் என்று எடுத்துச் சொல்வதுதான் அந்த நோக்கம்.
இந்த (அல் பகறா) அத்தியாயத்தைப் புரிந்து கொள்வதற்கு, அருளப்பட்ட சூழ்நிலையையும் வரலாற்றுப் பின்னணியையும் தெளிவாக விளங்கிக் கொள்வது அவசியமாகும்.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயங்கள் 13-14 (அர்ரஃத் – இப்ராஹீம்)
அத்தியாயம் 13: ‘அர்ரஃது’
நபி (ஸல்) அவர்கள் முன்வைக்கின்ற போதனைகள் முற்றிலும் சத்தியமாகும். அவை மட்டுமே உண்மையாகும். அவற்றை ஏற்காமல் இருப்பது மக்கள் புரிகின்ற குற்றமாகும். இந்த அத்தியாயத்தில் இடம்-பெற்றுள்ள எல்லா உரைகளும், இந்த மையக் கருத்தைச் சுற்றியே சுழல்கின்றது.அத்தியாயம் 14: இப்ராஹீம்
நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட தூதுத்துவத்தை ஏற்க மறுத்துக் கொண்டிருந்த, மேலும் நபியவர்களின் அழைப்பை தோல்வியுறச் செய்வ-தற்காக எல்லா விதமான கடுமையான சூழ்ச்சிகளையும் மேற்கொண்டவர்களுக்கு, இதனால் நேர்படவிருக்கின்ற விளைவுகளைக் குறித்து இந்த அத்தியாயத்தில், விளக்கிக் கூறப்பட்டுள்ளன; எச்சரிக்கையும் செய்யப்படுகின்றன.Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயங்கள் 47-48 (முஹம்மத் – அல் ஃபத்ஹ்)
அத்தியாயம் ‘முஹம்மத்’, இறைநம்பிக்கையாளர்களைப் போருக்கு ஆயத்தப்படுத்துவதையும் இது தொடர்பான ஆரம்பக் கட்ட வழிகாட்டுதல்களை வழங்குவதையும் மையக் கருத்தாகக் கொண்டிருக்கிறது.
அல் ஃபத்ஹ் – அத்தியாயம் 48இன் முதல் வசனமே ‘(நபியே!) நாம் உமக்கு வெளிப்படையான வெற்றியை அளித்துவிட்டிருக்கின்றோம்’ என்ற வெற்றிக்கான நற்செய்தியுடன் தொடங்குகிறது. ஹுதைபிய்யா ஒப்பந்தமே வெற்றி என்கிற அறிவிப்பு மக்களிடம் வியப்பை உண்டாக்குகிறது. இந்த நிகழ்வின் பின்னணியில் இருக்கும் வரலாற்று நிகழ்ச்சியை மௌலானா மௌதூதி அவர்கள் முன்னுரையில் மிகத்தெளிவாக படம் பிடித்துக் காட்டியுள்ளார்கள்.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயங்கள் 66-68 (அத்தஹ்ரீம் – அல்முல்க் – அல்கலம்)
அத்தியாயம் அத்தஹ்ரீமில் நபிகளாரின் மனைவியரோடு தொடர்புடைய சில நிகழ்வுகளின் செய்திகளும், ஹலால், ஹராம் இரண்டும் அல்லாஹ்வின் கைகளில் உள்ளது என்றும், சமூகத்தில் நபியவர்களின் தகுதியைப் பற்றியும், நபிகளாரின் வாழ்வு ஆவணப்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கிறது என்பதையும், இஸ்லாம் என்றுமே ஒருதலைப்பட்சமாகச் செயல்படாது என்பதையும் விளக்குகின்ற அத்தியாயமாகத் திகழ்கிறது.
அத்தியாயம் அல்முல்க்கில் மிகவும் சுருக்கமாக இஸ்லாத்தின் வழிகாட்டுதல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஏனெனில், அவை தெரிவிக்கும் போதனைகள் மக்கள் மனங்களில் தெளிவாக இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக. மறுபுறம், அறியாமையில் வீழ்ந்து, வழிகேட்டில் மதியிழந்து காணப்படும் மக்களை மிகவும் ஆழமான முறையில், பாதிக்கும் வகையில், தாக்கம் ஏற்படுத்தும் முறையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களின் அறியாமை நீங்க வேண்டும், அவர்களை சிந்திக்கத் தூண்ட வேண்டும், அவர்களின் மனசாட்சியை விழிப்படையச் செய்ய வேண்டும் என்ற ரீதியில் இந்த அத்தியாயம் விளங்குகிறது.
அல்கலம் அத்தியாயத்தில் இஸ்லாத்தின் பகைவர்கள் எழுப்புகின்ற விமர்சனங்களுக்குப் பதில் கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு எச்சரிக்கையும் அறிவுரையும் கூறப்படுகின்றது. நபிகளாரை நிலைகுலையாமையுடனும் பொறுமையுடனும் இருக்க வேண்டுமென்று அறிவுரை கூறுகிறது.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயங்கள் 69-73 (அல்ஹாக்கா – அல்மஆரிஜ் – நூஹ் – அல்ஜின்னு – அல்முஸ்ஸம்மில்)
இந்த ஐந்து அத்தியாயங்களுக்கான விளக்கங்களை மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் மக்கள் புரிந்து
தெளிவுபெறும் விதத்தில் எழுதியுள்ளார்கள். இதன் மூலம் திருக்குர்ஆன் வசனங்களுக்கு சரியான புரிதலையும் தெளிவான வழிகாட்டுதல்களையும் உலக மக்களுக்குவழங்க வேண்டுமென்ற உயரிய நோக்கில் சமர்ப்பிக்கின்றோம். உலக மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும், சிந்தனைத் தெளிவையும் மறுமை வெற்றியையும் பெற வேண்டும்.Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 16 (அந்நஹ்ல்)
இவ்வத்தியாயத்தின் துவக்கம் முதல் இறுதிவரை அல்லாஹ்வின் ஏகத்துவத்தை நிரூபிப்பதற்கு ஏராளமான அறிவாதாரங்களை அந்நஹ்லின் வசனங்கள் எடுத்துரைக்கின்றன. நபித்துவம், திருக்குர்ஆனின் வாய்மை, மெய்யான மறுமை, மீண்டும் உயிர்ப்பித்தல், நியாயத்தீர்ப்பு ஆகியவற்றை மறுப்போர்க்கு எச்சரிக்கை எனப் பல்வேறு கருத்துக்களைக் குறிப்பிடும் வசனங்களுக்கு விளக்கங்கள் சி-றப்பாக அமைந்துள்ளன.
-
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 21 (அல் அன்பியா)
எச்சரிக்கையூட்டும் வசனங்களுடன் ஆரம்பமாகின்றது அத்தியாயம் அல்அன்பியா. தொடர்ந்து பெருமானார் (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தை உறுதிப்படுத்துகின்ற, நபிகளார் (ஸல்) அவர்கள் எடுத்துரைத்து வந்த தூதுத்துவம் மற்றும் மறுமை வாதங்களை விளக்குகின்ற வசனங்கள் அமைந்-துள்ளன. இவைகளின் விரிவுரைகளையும் இதில் காணலாம்.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 23 (அல் முஃமினூன்)
1. நபிகளாருக்கு எதிராகக் கிளப்பியிருக்கின்ற ஆட்சேபங்களும் ஐயங்களும் புதியவை அல்ல.
2. ஏகத்துவம், மறுமை ஆகியவை குறித்து தான் அனைத்து நபிமார்களும் எடுத்துரைத்தனர்.
3. இறைத்தூதர்களின் இந்த அழைப்பை ஏற்க மறுத்து, அவர்களை எதிர்ப்பதில் நிலைத்துநின்ற சமூகங்கள் இறுதியில் அழிந்தொழிந்து போயின.
4. இறைவனிடமிருந்து ஒரே மார்க்கம்தான் எல்லாக் காலங்களிலும் அருளப்பட்டு வந்துள்ளது.
-
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 24 (அந்நூர்)

* பாலியல் குற்றம் – தண்டனை
* அவதூறு – தண்டனை
* ஆண்கள் / பெண்கள் பார்வையைக் கட்டுப்படுத்துதல் – கற்பைக் காத்தல் – திருமணம்
* பிறர் இல்லத்திற்குள் நுழைய அனுமதி
* சமுதாய தீமைகளுக்கு தீர்வு
* கூட்டமைப்பின் ஒழுங்கும் கட்டுக்கோப்பும்
இன்னும் இதுபோன்றவற்றிற்கு விரிவான விளக்கங்கள் இந்நூலில்…
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 25 (அல்ஃபுர்கான்)
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 26 (அஷ்ஷுஅரா)
அன்பு நபிகளாரின் நினைவூட்டலையும், அழைப்புச் செய்தியையும் மக்கத்து குறைஷிகள் அடுத்தடுத்து விதவிதமான முறையில் மருத்தும், புறக்கணித்தும், எதிர்த்தும் வந்தார். தம்முடைய எதிர்ப்பை நியாயப்படுத்துகின்றன விதத்தில் வகைவகையான காரணங்களையும் சாக்குப் போக்குகளையும் எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களின் இந்த நடத்தைதான் அன்பு நபிகளாரின் இதயத்தைப் பிழிந்து கொண்டிருந்தது. நபிகளார் (ஸல்) அவர்கள் இந்த வேளையில் தம்மைத் தாமே உருகிக் கொண்டிருந்தார்கள். இத்தகைய நிலைகளில்தான் இந்த அத்தியாயம் அருளப்பட்டது.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 27 (அந்நம்ல்)
இந்த அத்தியாயத்தில் ஃபிர்அவ்ன், ஸமூத் சமூகத் தலைவர்கள், லூத் சமூகத்துக் கலகக்காரர்கள் இவர்களின் இறைமறுப்பு, மன இச்சைகளுக்கு அடிபணிந்து வாழ்ந்த நிலை, அதன்பிறகு ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எந்நேரமும் அல்லாஹ்வுக்கு முன் சிரம்பணிந்த நிலை, ஸபாஃ நாட்டு அரசியின் செல்வச் செழிப்பு, அதனால் ஏற்பட்ட ஆணவம், கர்வம், சத்தியம் தெளிவாகப் புலப்பட்டதும் செருக்கில்லாமல் அதனை ஏற்றுக்கொண்ட நிலை தொடர்பான வசனங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றுக்கான விளக்கங்கள் வாசகர்கள் முழுமையாக புரிந்து கொள்ளும்படி அமைந்துள்ளன.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 28 (அல்கஸஸ்)
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 29 (அல் அன்கபூத்)
அல் அன்கபூத் அத்தியாயம் இரண்டு பிரிவுகளைக் கொண்டதாக விளங்குகிறது.
முதற் பிரிவு : பொறுமை, தியாகம், பெற்றோருக்குக் கீழ்ப்படிதல், அல்லாஹ்வின் பாதையில் போரிடுதல், உண்மை நம்பிக்கையாளர்களுக்கு இடையூறு விளைவிப்போ-ருக்குக் கீழ்ப்படியாமல் அவர்களுடன் போராடுதல், நபிமார்களின் சரிதை ஆகியவை அத்தியாயத்தின் தொடக்க முதல் 41 வசனம் முடிய கூறப்பட்டுள்ளது.
இரண்டாவது பிரிவு : நிராகரிப்போருடனும் வேதம் வழங்கப்பட்டோருடனும் விவாதித்தல், நபித்துவத்தின் உண்மையை நிரூபித்தல் ஆகியவை வசனம் 42 முதல் அத்தியாயம் முடிவு வரை எடுத்துரைக்கப்பட்டுள்ளது.