-
உங்களை நீங்களே மாற்றிக்கொள்ளாதவரை
₹250Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
எதிர்காலம் நோக்கி
₹30மதம் பற்றி நிலவும் தவறான கருத்துகளைப் போக்கி, நாட்டின் பிரச்னைகளை ஆராய்ந்து இன்று நிலவும் நல்ல அம்சங்கள் மற்றும் அச்சுறுத்தும் போக்குகள் ஆகியவற்றை நுண்மையாக விமர்சிக்கும் நூல்!
Author: MOULANA ABUL LAIS ISLAHI NADVI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஒழுக்க மாளிகை
₹35படைப்பாளனின் அதிகாரத்தை ஏற்று அவனது ஆணை களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதால் மட்டுமே ஒழுக்கரீதியான சமுதாயத்தை அமைக்க முடியும் என்பதை விளக்கும் நூல்!
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
நீங்களும் பேச்சாளர் ஆகலாம் – பேச்சாளர் பயிற்சிக் கையேடு
₹75பட்டிமன்றப் பேச்சாளர்கள், உணர்ச்சிகளைத் தூண்டும் பேச்சாளர்கள், எழுச்சியை ஏற்படுத்தும் பேச்சாளர்கள், இலக்கியப் பேச்சாளர்கள், அரசியல் பேச்சாளர்கள் என பல தரப்பட்ட பேச்சாளர்களை நாம் களத்தில் காண்கிறோம். என்றாலும், இயக்கப் பேச்சாளர்கள் குறிப்பாக, இஸ்லாமிய இயக்கத்தின் பேச்சாளர்கள் எப்படி இருப்பார்கள்? அவர்களின் சிறப்பியல்புகள் என்ன? எந்தெந்த கோணங்களில் ஓர் இஸ்லாமிய இயக்கப் பேச்சாளர் வேறுபட்டு நிற்கிறார் என்பதை இந்நூல் மிகச் சிறப்பாக விளக்குகிறது.
இஸ்லாமிய இயக்கத்தில் வளர்ந்து வரும் இளம் பேச்சாளர்களுக்கும், பொதுமக்களுக்கு இஸ்லாமியத் திருநெறியின் செய்திகளைக் கொண்டு செல்லத் துடிக்கும் அழைப்பாளர்களுக்கும் இந்நூல் மிக உதவியாய் அமையும்.
Author: JAMAAT-E-ISLAMI HIND – CHENNAI METRO
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
நெஞ்சுக்கு நிம்மதி
₹240இன்றைய அதிநவீன உலகம் அறிவியல் தொழில்-நுட்பத்தில் பெருமளவு முன்னேறி வருகிறது. விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் பல மனித வாழ்வில் பெரும் தாக்கத்தை-யும் மாறுதல்களையும் ஏற்படுத்தி வருகின்றன. தனிமனித வருமானம் அதிகரித்து வருகிறது. பணமும் வசதி வாய்ப்பு-களும் மனித வாழ்வை சொகுசானதாக ஆக்கியுள்ளன. ஆனால், இத்தனை வசதிகளையும் பெற்ற பிறகும்கூட மனிதன் ஏதோவொன்றைத் தொலைத்துவிட்டு நிற்கின்றான். அதைத் தேடித் தேடி அங்கும் இங்கும் திரிகின்றான். அவனது கால்கள் ஓய்ந்ததே தவிர அதனைக் கண்டெடுக்க முடிய-வில்லை. அது என்ன? அதுதான் மனஅமைதி. அமைதியான, மகிழ்ச்சியான குடும்ப வாழ்வு இன்று அரிதாகிக் கொண்டே வருகிறது. எத்தனை எத்தனை பிரச்னைகள் நாள்தோறும் வெடிக்கின்றன? அதற்கான தீர்வு எதுவும் இன்றி, மனஅமைதி இழந்து மனிதர்கள் தவித்து வருகின்றனர். பணத்தால் அதனைப் பெற முடியாது. விஞ்ஞானம் அதனைப் பெற்றுத் தராது. பிறகு எவ்வாறு அது சாத்திய-மாகும்? இதனைத்தான் நெஞ்சுக்கு நிம்மதி என்கிற இந்நூல் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. மனஅமைதியைத் தேடியலையும் உள்ளங்கள் இதனைக் கட்டாயம் வாசிக்க வேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் நூலகங்களிலும் அவசியம் இந்நூல் இடம்பெற வேண்டும் என்பது எங்களின் வேணவா.
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மனிதனே உன் விலை என்ன?
₹45இறைத்தூதர்கள், இறையடியார்களின்வாழ்விலிருந்து நிகழ்ச்சிகளை உதாரணங்களாகக் காட்டிமனிதனுடைய உண்மையான மதிப்பை அவனுக்கு உணர்த்தும் நூல்!Author: SHIHAB
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வாழ்ந்து பார்ப்போம் வாருங்கள்
₹185துப்பாக்கி, நஞ்சு, கயிறு, மண்ணெண்ணெய், ஆறு, கடல், மலை என்று தற்கொலை செய்து கொள்ள இத்தனை வழி முறைகள் இருக்கும்போது, வாழ்ந்து காட்டுவதற்கு ஏராளமான வழிமுறைகள் இருந்துதானே ஆகவேண்டும். வீழ்வதற்கே இத்தனை வழிகள் எனில் வாழ்வதற்கும் பல வழிகள் இருக்கத்தானே செய்யும். ஆயினும் என்ன.. அவற்றைக் கண்டடைதல் வேண்டும்…அதுதான் சிக்கல்.இந்தக் கண்டடைதலை அடையாளம் காட்டுவதுதான் இந்நூல்.Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வாழ்வில் முன்னேற
₹45நமது அன்றாடச் செயல்பாடுகள், அலுவல்கள், உழைப்பு எல்லாம் வாழ்வின் முன்னேறும் இலக்கை நோக்கியதாகஇருக்கின்றனவா? நாம் இலக்கை எந்த அளவுக்கு நெருங்கியிருக்கிறோம்? அதிலிருந்து எந்த அளவுக்குப் பின்தங்கியிருக்கிறோம்? எனும் கேள்விகளை எழுப்பி விடையும் அளிக்கின்றது இந்நூல்.
Author: MUHAMMED BASHEER JUMA
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வேடிக்கை மனிதர்களா நாம்? – மௌலவி நூஹ் மஹ்ழரி
₹230எதற்காக நாம் படைக்கப்பட்டிருக்கின்றோம் எனும் உயரிய லட்சியத்தையும் நமது வரலாறு நமக்குக் கற்றுத் தரும் மேலான வாழ்க்கை முறைகளையும் மக்கள் மன்றத்தில் வைப்பதே இந்த நூலின் நோக்கம்.எல்லாமே நமக்கு இங்கு வேடிக்கைதான். காட்சிகளைப் பார்த்து கை கொட்டிச் சிரித்துக் காலத்தைக் கடத்துகின்றோம். வெறும் பார்வையாளர்களாக வாழ்ந்து யாருக்கும் தெரியாமல் ஒருநாள் இறந்து போகின்றோம். மக்கள் மனதில் இருந்து மறைந்து போகின்றோம். இதற்காகவா நம்மைப் படைத்தான் இறைவன்?யாரைப் பற்றியும் கவலைப்பட யாரிடமும் காலமும் இல்லை. கண்ணீர் சிந்த யாருக்கும் நேரமுமில்லை; மனமுமில்லை. மனிதனை இறைவன் எதற்காகப் படைத்தானோ அதற்கு எதிராக எந்திர கதியில் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதற்காகவா நம்மைப் படைத்தான் இறைவன்?சமூகத்தில் படர்ந்து கிடக்கும் தீமைகளையும் பொய்மைகளையும் நான் ஒருவன் தனியாக எப்படி எதிர்த்துப் போராடுவது என்ற தயக்கமே இன்றைய இளைய சமுதாயத்தின் தடைக்கல்லாக இருக்கிறது. முடியாது என நினைக்காதீர்கள்! சோம்பல் முறியுங்கள்! சூழல் மாற்றுங்கள்! ஒருபோதும் கலங்காதீர்கள், இறைவன் நம்மோடு இருக்கின்றான்.“நீங்கள் மனந்தளர்ந்து விடாதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள். நீங்கள் இறைநம்பிக்கையுடையோராயின், நீங்களே மேலோங்குவீர்கள்” (3:139)Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST










