-
ISIS இஸ்லாம் இல்லை
ISIS இஸ்லாம் இல்லை*******************ஐ.எஸ். தொடர்பாக சாதாரணமாக விவாதிக்கப்படாது, தவறான முறையில் பிரச்சாரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் செய்திகள் தான் இப்புத்தகத்தின் பேசுபொருளாக உள்ளது. இவ்விஷயம் தொடர்பாக இருபதிற்கும் அதிகமான புத்தகங்கள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பாலான புத்தகங்களும், ஐ.எஸ்ஸின் உருவாக்கத்திலும் அதனை வளர்த்து வதிலும் அமெரிக்காவின் ஈராக், ஆஃப்கான் ஆக்கிரமிப்பு களுக்கு உள்ள பங்கினைக் குறித்து மறைத்தும், குறைத்தும்தான் பேசுகின்றன. ‘சலஃபி ஜிஹாது’ ‘குளோபல் ஜிஹாது’ போன்ற வார்த்தைகளைப் போட்டு நிரப்பி ஒருவகையான திரையிட்டு உண்மைகளை மறைக்கிறார்கள்.அதனால், இப்புத்தகத்தின் உருவாக்கத்திற்கு அரபுலக மூலங்களைத்தான் முக்கியப்படுத்தியிருக்கின்றோம். ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள பக்கச்சார்பற்ற ஆய்வு களையும் கவனத்தில் கொண்டுள்ளோம்.#ISIS பற்றி சூடான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் இப்புத்தகம் வெளியாவது பெரும் மகிழ்வாகும்Author: K.M. Ashraf Keezhuparambu
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அகிம்சை இஸ்லாமியக் கண்ணோட்டம்
“அகிம்சை, அகிம்சை” என்று சொல்வதால் மட்டும் வன்முறை ஒழிந்துவிடாது. அன்பு பற்றி உரத்துப் பேசுவதாலும் அநீதிகள் அகன்று விடா. கொஞ்சம் விழிகளை அகலத் திறந்து பார்க்க வேண்டும். தம்மைச் சுற்றி என்னென்ன கொடுமைகள் நிகழ்கின்றன எனப் பார்த்து அவற்றைத் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அர்த்தமுள்ள நீதி
சமூக நீதி என்றால் என்ன?நவீன மேற்கத்திய அறிவியல் உலகம் கூட சமூக நீதியைப் பெறவில்லையே ஏன்?சமூக நீதி நிலைபெறாததற்குக் காரணங்கள் என்ன?வியக்கத்தக்க வகையில், இஸ்லாம் மட்டும் சமூக நீதி எனும் சிகரத்தை எட்டிப் பிடிப்பதில் மாபெரும் வெற்றி அடைந்துள்ளதே, எப்படி? எல்லாக் கேள்விகளுக்கும் விடை தருகிறது அர்த்தமுள்ள நீதி!Author: MOULANA WAHIDUDEEN KHAN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அழகிய அண்டை வீடு (மனித உறவுகள் – 1)
அண்டைவீட்டார் என்றால் யார்? அவர்களோடு நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்னென்ன? அவர்களோடு நாம் எப்படி யெல்லாம் நடந்து கொள்ளக்கூடாது? என பல்வேறு கேள்வி களுக்கு விடைகளையும் பன்மை சமூகமாக வாழும் நாம் நம் தேசத்தில் ஜாதி மதம் மொழிகளை எல்லாம் தாண்டி தன் அண்டை வீட்டார்களோடு ஒற்றுமையோடும் மனிதநேயத்துடன் எப்படி வாழ்வது என்பதையும் இந்நூல் பேசுகிறது.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அழிக்கும் ஆணவம் (உளத்தூய்மை- 2)
குடும்பத்தின் அமைதி குலைந்திருக்கிறதா? அங்கு ஆணவம் புகுந்து விட்டது என்று தெரிந்து கொள்ள முடியும். குடும்பம் மட்டுமல்ல சமூகத்திலும் குழப்பங்களும் சிக்கல்களும் உருவாகியிருக்கிறது என்றால் ஆணவம் தனது வேலையைச் செய்யத் தொடங்கி விட்டது என்றே அர்த்தம்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அறிவோம் ஹிஜாப்
ஹிஜாப் தனிப்பட்ட மனிதர்களின் நிலைப்பாட்டை தாண்டி ஒரு தேசப் பிரச்சினையாக உருவாவதைப் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் ஹிஜாப் பற்றிய விளக்கங்களையும் தெளிவுகளையும் நாட்டு மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. தவறான கருத்துக்களை அழித்து ஹிஜாப் பற்றிய உண்மை நிலையை மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் விதத்தில் “அறிவோம் ஹிஜாப்” என்ற இச்சிறு நூலை டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் எழுதியுள்ளார்கள்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இந்திய முஸ்லிம்கள் – சவால்கள் | சாத்தியங்கள் | செயல்திட்டங்கள்
மதவாதத்தை முறியடிப்பதற்காக நூலாசிரியர் முன்வைக்கின்ற யோசனைகள் உடனடியாக நடைமுறைப் -படுத்தப்பட வேண்டிய சத்தான யோசனைகள். மதச் சண்டைகளுக்குப் பெயர் பெற்ற அலீகர், மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாய் இருக்கின்ற கோழிக்கோடு ஆகிய இரண்டு நகரங்களின் சமூகச் சூழல்களை ஒப்பாய்வு செய்த சமூகவியல் வல்லுநரின் ஆய்வு முடிவுகளும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு நூலாசிரியர் முன்வைக்கின்ற வழிமுறைகளும் கவனத்தை ஈர்க்கின்றன.
முஸ்லிம்களையும் முஸ்லிம் தலைவர்களையும் விளித்து பத்து அம்சத் திட்டம் ஒன்றை நூலின் இறுதியில் தனி அத்தியாயமாகவே வழங்கியிருக்கின்றார் நூலாசிரியர். முத்து முத்தாகத் தரப்பட்டுள்ள இந்தப் பத்தும் செம்மையாகக் கடைப்பிடிக்கப்படுமேயானால் முஸ்லிம்களையும் நாட்டையும் பீடித்துள்ள நெருக்கடிகள் அனைத்தும் பஞ்சாய்ப் பறந்து போகும் என அறுதியிட்டுச் சொல்லலாம்.நூலாசிரியரான சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி நாடறிந்த அறிஞர். பன்னூல் ஆசிரியர். மாணவப் பருவத்திலிருந்தே இந்தியாவையும் இந்திய முஸ்லிம் சமூகத்தையும் நல்ல முறையில் அறிந்து தெளிந்தவர். பொறியியலில் படித்துத் தேர்ந்தாலும் மார்க்கத்திலும் தேர்ச்சியும் புலமையும் பெற்றவர். தொலைநோக்கும் விஷயஞானமும் மிக்கவர். உலகமயமாக்கலின் கோர விளைவுகளைத் துல்லியமாகக் கணித்து எச்சரித்த சிந்தனையாளர். இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் அகில இந்தியத் தலைவராகப் பணியாற்றியவர். தற்சமயம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவராக இருக்கின்றார்.
Author: SYED SADATHULLAH HUSSEINI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இந்திய முஸ்லிம்கள் இனி செய்ய வேண்டியது என்ன?
இன்று முஸ்லிம் உலகம் நெருக்கடியான, சோதனையான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கின்றது. உலக அளவில் அமெரிக்க, சியோனிச, ஏகாதிபத்தியவாதிகள், நமது நாட்டளவில் வலதுசாரிகள், வகுப்புவாதிகள், முஸ்லிம் வெறுப்பாளர்கள் ஆகியோரின் பன்முகத் தாக்குதல்களுக்கு முஸ்லிம்கள் ஆளாகின்றனர்.இத்தகைய சூழலில் உணர்ச்சிவசப்படாமலும், அச்சப்படாமலும், நம்பிக்கை இழக்காமலும், தோல்வி மனப்பான்மையில் துவளாமலும், இறைவனின் மீதும் இறை மார்க்கத்தின் மீதும் நம்பிக்கை கொண்டு விவேகத்தின் அடிப்படையில் ஷரீஅத்திற்கு உட்பட்ட முடிவுகளை எடுத்து முஸ்லிம் சமுதாயம் செயல்பட்டால் நிலைமைகள் மாறும்.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இமாம் ஹுஸைன் உயிரைக் கொடுத்தது எதற்காக?
இமாம் ஹுஸைன் அவர்களின் மீது பேரன்பும் மாசற்ற பற்றும் கொண்டிருக்கின்ற பெரும்பாலோருக்கு அவர் எந்த நோக்கத்திற்காக தன்னுடைய இன்னுயிரைத் துறப்பதற்கும் தயாரானார்? தன்னுடைய அன்பு மகனார்களையும் இழந்து விடுவதற்கு ஏன் துணிந்தார் என்பது பற்றிய உண்மைநிலை தெரிந்திருப்பதில்லை.
Author: Moulana Syed Abul A’la Moududi (Rah)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இறை நினைவு (திக்ர்) – أذكار
இந்நூலில், அன்றாடம் காலை, மாலை வேளைகளில் நாம் செய்ய வேண்டிய திக்ர்கள் மட்டும் தொகுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் திருக்குர்ஆனில் அல்லாஹ் பயன்படுத்தி உள்ள துஆக்களும் தொகுக்கப்பட்டுள்ளது.
இதனை நாம் தினசரி ஓதி வருவோம். இறை நினைவுடன் வாழ்வோம்.
Author: DR. J. MOHIDEEN (Ibnu Jamal)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இறைநம்பிக்கையின் அடிப்படை (முஸ்லிம் மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கான நூல்)
நவீனக் கல்வி வளர்ச்சிக்கு இஸ்லாம் எப்போதும் தடையாக இருந்ததில்லை. புத்துலகம் படைக்க இஸ்லாம், கல்வி அறிவு மிக அவசியம் என்பதை வலியுறுத்துகிறது. மேலும் இப்புத்தகம் நவீன கல்வி வளர்ச்சிக்கு தேவையான இறைநம்பிக்கையை வார்த்தெடுக்க உந்து சக்தியாக திகழ்கிறது.
Author: Moulana Syed
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாத்தின் தனித்தன்மைகள்
இஸ்லாம்….
· இது, முஸ்லிம்கள் பின்பற்றும் மதம்.
· அல்லாஹ் என்ற உருவமற்ற இறைவனை வணங்கும் மக்களின் மதம்.
· ஐவேளை இறைவனைத் தொழச் சொல்லும் மதம்..
· வருடத்தில் ஒரு மாதம் நோன்பிருக்கக் கட்டளையிடும் மதம்..
· மக்காவை நோக்கி, ஹஜ் என்ற புனிதப் பயணம் மேற்கொள்ளச் சொல்லும் மதம்.
இதைத் தாண்டி பொது மக்கள் மத்தியில் இஸ்லாத்தைப் பற்றிய புரிதலும் தெளிவும் குறைவாகவே உள்ளன. இறைவழிபாடும், விரதமும், புனிதப் பயணங்களும் அனைத்து சமயங்களுக்கும் பொதுவானவை. இந்நிலையில் இஸ்லாம் எவ்வகையில் தனித்துவமிக்கது என்பதை விளக்குவதே இந்நூலின் நோக்கமாகும். இதன் மூலம், இஸ்லாம் குறித்த விரிவான பார்வையும் கிடைக்க வாய்ப்புள்ளது.Author: Dr. J. Mohideen
Publisher: Islamic Foundation Trust -
இஸ்லாமும் அரசியலும்
சமுதாய வாழ்க்கையில் அமைதி நிலவ வேண்டும் என்றால் அங்கு அரசியல் இருக்க வேண்டும்.
அரசியல் ஒரு சாக்கடை என்று நினைத்து அதை விட்டு விலகுவது மிகப் பெரிய தவறாகும்.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாமும் கூட்டமைப்பும்
ஒற்றுமையின்மை மற்றும் உட் சிதைவுக்கு உதாரணமாக மாறிப்போன நவீன முஸ்லிம் சமுதாயத்தை ஒருங்கிணைத்து அவர்களை இஸ்லாமிய அடிப்படைகளில் மறுகட்டமைப்பு செய்வதுதான் இன்றைய மிக முக்கிய தேவையாகும்.
Author: Moulana Sadruddin Islahi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாமும் சமூக நீதியும்
19ஆம் நூற்றாண்டின் முதல் பாதியின் முடிவில், மேற்கத்திய நாடுகள் ஏற்கெனவே மதத்திலிருந்து விடைபெற்றுவிட்டன. அவர்களின் கருத்துப்படி, தெய்வீக வழிகாட்டுதலுக்கான தேவையிலிருந்து அவர்கள் தங்களை விடுவித்துக் கொள்வதற்காக இம்மத நீக்கத்தைச் செய்துகொண்டனர். இப்போது அவர்களுக்கு அறிவின் முக்கிய ஆதாரம் “இயந்திர பொருள்முதல்வாதம்” மட்டுமே ஆகும்.
இது டார்வின், மார்க்ஸ், ஃபிரைடு போன்றோரின் தத்துவங்களின் வெற்றியின் சகாப்தம். மனிதன் அஷ்ரஃப் உல் மக்லூகத் (படைப்புகளில் சிறந்தவன்) ஆக்கப் பட்டுள்ளான் என்பதையும், அவனது இருப்புக்கு ஒரு நோக்கம் இருக்கிறது என்பதையும் மக்கள் மனங்களில் இல்லாமல் ஆக்குவதையே இம்மூவரும் நோக்கமாகக் கொண்டிருந்தனர். இந்தப் பின்னணியில்தான், மௌலானா மௌதூதி இத்தகைய மேற்கத்திய தத்துவவாதிகளுக்கு தர்க்கரீதியாகத் தமது ஆய்வுகளின் வழியே அறைகூவல் விடுத்ததோடு, அவர்களின் கருத்துகளிலுள்ள ஆழமற்ற தன்மையையும் நிரூபித்துள்ளார்.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: Islamic Foundation Trust -
இஸ்லாம் வெற்றிபெற
* இஸ்லாம் வெற்றிபெற வேண்டும்.
* இஸ்லாம் வெற்றி பெற்றால் முஸ்லிம்கள் வெற்றி பெறுவர்.
* எது உண்மையான வெற்றி?
* வெற்றியை அடையும் வழிமுறைகள் என்ன என்பதை அலசும் நூல்.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
உத்தம ஸஹாபாக்கள் – மௌலானா மௌதூதி
உத்தம ஸஹாபாக்கள் அனைவரும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) வழியில் வாழ்ந்த புனிதர்கள் ஆவார்கள். அவர்கள் மீது அவதூறு பரப்புவது பெரும்பாவமாகும் எனவும், ஸஹாபாக்களை குறைகூறுவது பெருங்குற்றமாகும் என்றும் மௌலானா மௌதூதி அவர்கள் பல இடங்களில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளதை இந்நூல் சுட்டிக்காட்டுகின்றது.
Author: Asim Nomani
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
உறுதிமிக்க போராட்டத்தின் எழுபத்தைந்து ஆண்டுகள் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு ஆக்ககரமான, அமைதியான வழிமுறைகளின் மூலமாக, மக்களின் சிந்தனையில், கருத்துப்பரவலின் வாயிலாக மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் மனங்களை வென்றெடுப்பதன் மூலமாக தன்னுடைய நோக்கத்தை அடைவதற்கு கடந்த 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
கடந்த 75 ஆண்டுகளாக இந்திய முஸ்லிம்கள், மற்றும் முஸ்லிம் அல்லாத சமூகங்களில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆற்றிவரும் அரும் பணிகள், அதனால் ஏற்பட்ட நல்ல தாக்கங்கள் ஆகியவற்றை மிக அழகாக விவரிப்பதுடன், இன்றைய காலச் சூழலில் இனி செய்ய வேண்டியதையும் மிகத் தெளிவாக இப்புத்தகம் உணர்த்தியுள்ளது.
Author: SYED SADATHULLAH HUSSEINI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஒருபால் உறவு – ஆய்வும் ஆலோசனையும்
Dr. J. Mohideen, DR. K.V.S. HABEEB MOHAMMED - டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத், MOULAVI NOOH MAHLARI, V.S. MOHAMMED AMEENஅதிகாலை வருவதற்கு வெகுநேரமா இருக்கிறது? (ஒருபால் உறவின் விபரீதங்களை விவரித்து அது குறித்து எழும் வாதங்களை உடைத்தெறியும் நூல்)
ஒருபால் உறவில் ஈடுபட்ட ஊரை இறைவன் தலைகீழாகப் புரட்டினான். அவர்களை அழிப்பதற்காக இறைவன் நேரம் குறித்தான். அதிகாலை நேரம். அந்த அதிகாலை நேரம் வருவதற்கு வெகு நேரமா இருக்கிறது? என்ற அந்தக் கேள்வி நம்மை உலுக்குகிறது. ஒருபால் உறவில் ஈடுபட்டு வருபவர்கள் திருந்தி மீள்வ-தற்கு இறைவன் எழுப்பும் இந்த வினா ஒன்றே போதுமானது.
இது நமக்குத் தொடர்பில்லாத நூல். இதைப்படித்து என்னாவது? என்று கடந்துவிடாமல் நம் காலத்தில் நிலவும் பெரும் தீமையின் கோரத்தை உணர்வதற்காக நாம் ஒவ்வொரு-வரும் இந்த நூலை வாசிக்க வேண்டும். சமுதாயத்தைச் சீரழிக்கக் கிளம்பியுள்ள இந்த புற்று நோய்க் கட்டிகளை நாம் அகற்றுவதற்கான மருந்துதான் இந்த நூல். மனித இனத்தையே நாசப்படுத்தும் இந்தக் கொடும் அரக்கனுக்கு எதிராக நாம் ஏந்தும் ஆயுதம்தான் இந்த நூல். அந்த வகையில் ஒவ்வொரு-வரும் இந்த நூலை வாசிப்ப-துடன், மக்களுக்கு இத்தீமை குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும் வேண்டும்.Author: V.S. MOHAMMED AMEEN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஒழுக்கமே சுதந்திரம்
ஒழுக்கம் இல்லா சுதந்திரம்
நூல் இல்லா பட்டம் போன்றது.ஒழுக்கமே சுதந்திரம் என அனைவரும் உணர்ந்து
ஒழுக்கச் சீர்கேடுகளை ஒழித்து
ஒழுக்க மாண்புள்ள சமுதாயத்தை உருவாக்குவோம்
வாருங்கள் ஓர் அணியில் திரள்வோம்!Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹40