Showing all 15 results

 • அநாதைகள் விதவைகள் ? ஆதரவற்றவர்களை அரவணைப்போம்! (மனித உறவுகள் – 3)

  இன்றைய நவநாகரீமான உலகில் இவர்களின் உரிமைகளும் நீதியும் மறுக்கப்பட்டு தெருவோரங்களில் சுற்றித் திரிபவர்களாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்த சூழலில் நமது கடமை என்ன? நமது செயற்பாடுகள் எப்படியிருக்க வேண்டுமென்பதை மனதில் உரைக்கும் வண்ணம் நூலாசிரியர் டாக்டர். கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் ‘அநாதைகள் – விதவைகள், ஆதரவற்றவர்களை அரவணைப்போம்’ என்ற இந்த நூலை எழுதியுள்ளார்.

  Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
  Publisher: ISLAMIC FOUNDATION TRUST

  50
 • அழகிய அண்டை வீடு (மனித உறவுகள் – 1)

  அண்டைவீட்டார் என்றால் யார்? அவர்களோடு நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்னென்ன? அவர்களோடு நாம் எப்படி யெல்லாம் நடந்து கொள்ளக்கூடாது? என பல்வேறு கேள்வி களுக்கு விடைகளையும் பன்மை சமூகமாக வாழும் நாம் நம் தேசத்தில் ஜாதி மதம் மொழிகளை எல்லாம் தாண்டி தன் அண்டை வீட்டார்களோடு ஒற்றுமையோடும் மனிதநேயத்துடன் எப்படி வாழ்வது என்பதையும் இந்நூல் பேசுகிறது.

  Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
  Publisher: ISLAMIC FOUNDATION TRUST

  40
 • அறப்போர்

  அறப்போர்

  Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
  Publisher: ISLAMIC FOUNDATION TRUST

  45
 • அறிவோம் ஹிஜாப்

  ஹிஜாப் தனிப்பட்ட மனிதர்களின் நிலைப்பாட்டை தாண்டி ஒரு தேசப் பிரச்சினையாக உருவாவதைப் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் ஹிஜாப் பற்றிய விளக்கங்களையும் தெளிவுகளையும் நாட்டு மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. தவறான கருத்துக்களை அழித்து ஹிஜாப் பற்றிய உண்மை நிலையை மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் விதத்தில் “அறிவோம் ஹிஜாப்” என்ற இச்சிறு நூலை டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் எழுதியுள்ளார்கள்.

  Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
  Publisher: ISLAMIC FOUNDATION TRUST

  20
 • இமாம் ஹுஸைன் உயிரைக் கொடுத்தது எதற்காக?

  இமாம் ஹுஸைன் அவர்களின் மீது பேரன்பும் மாசற்ற பற்றும் கொண்டிருக்கின்ற பெரும்பாலோருக்கு அவர் எந்த நோக்கத்திற்காக தன்னுடைய இன்னுயிரைத் துறப்பதற்கும் தயாரானார்? தன்னுடைய அன்பு மகனார்களையும் இழந்து விடுவதற்கு ஏன் துணிந்தார் என்பது பற்றிய உண்மைநிலை தெரிந்திருப்பதில்லை.

  Author: Moulana Syed Abul A’la Moududi (Rah)
  Publisher: ISLAMIC FOUNDATION TRUST

  45
 • இஸ்லாத்தில் இல்லறம்

  மௌனங்கள் உடைபடும் காலம் இது. ஒரு காலம் இருந்தது. செக்ஸ் பற்றிப் பேசினாலே பாவம்; பாலியல் குறித்து விவாதிப்பதே வரம்பு மீறிய செயல் என்றெல்லாம் கருதப்பட்டு வந்தது. அதன் காரணமாக புதுமணத் தம்பதிகளுக்குக்கூட இஸ்லாம் கூறும் பாலியல் வழிகாட்டுதலை வழங்காமல், ‘கட்டுப்பாடு’ எனும் போர்வையில் பாலியல் அறியாமையைத்தான் வளர்த்து வந்தோம். இதனால் இளம் தலைமுறையினர் வழிமாறிச் செல்லத் தொடங்கினர். பாலியல் பற்றி முஸ்லிம் அறிஞர்களிடமோ பெரியவர்களிடமோ பேசினால் தப்பாக நினைப்பார்கள் என்பதால் அதுபற்றிய தங்களின் ஐயங்களுக்கு மார்க்கத்துக்கு வெளியே தீர்வுகளைத் தேடத் தொடங்கினார்கள். அதனால் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

  ஆனால் இப்போது காலம் மாறுகிறது. இது தகவல் தொழில்நுட்ப யுகம். ஒரு பொத்தானின் தட்டலில் பிரபஞ்சமே விரியும் காலம். பாலியல் எம்மாத்திரம்? ஆகவே இனியும் மௌனம் அழகன்று.  இளைஞர்களுக்கும் புதுமண இணைய-ருக்கும் கணவன்-மனைவியர்க்கும் இல்லற உறவு குறித்தும் பாலியல் விவகாரங்கள் குறித்தும் குர்ஆன்-ஹதீஸ் அடிப்படையில் வழிகாட்டுதலை வழங்க வேண்டியது காலத்தின் தேவையாகி விட்டது. இந்தத் தேவையை  நிறைவு செய்யும் விதத்தில்தான் ‘இஸ்லாத்தில் இல்லறம்’ எனும் இந்த இனிய நூலை வெளியிட்டுள்ளோம்.

  சமூகத்தின் மிகச் சிறிய, ஆனால் முக்கியமான உறுப்பு குடும்பம் ஆகும். திருமண உறவின் மூலமாகவே அது வடிவம் கொள்கிறது. பொருத்தமான இல்லறம்தான்  பக்குவமான தலைமுறைக்குத் தொட்டில் இடுகிறது. குடும்ப உறவுகள் சிதையுமேயானால் சமுதாய அமைப்பே நிலைதடுமாறிப் போய்விடும். ஆக்கபூர்வமான சமுதாய அமைப்புக்கு உறுதியான குடும்ப உறவுகள் தவிர்க்க முடியாதவை ஆகும்.

  சிறிய செயலைக்கூட அழகாகச் செய்ய வேண்டும் எனில் சில நியமங்களையும் வழிகளையும் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது. இல்வாழ்க்கை என்பது ஓர் அறம்; ஒரு கலை; பார்த்துப் பார்த்துச் செதுக்க வேண்டிய அழகியலின் வெளிப்பாடு; பண்புகள் மிளிர வேண்டிய பாசமலர்த் தோட்டம்; இல்லறத்தின் நோக்கம் வெறும் பாலியல் வேட்கை மட்டுமன்று; குறுகிய காலத்திற்கான ஏற்பாடுமன்று. மாறுபட்ட சூழ்நிலைகளில் வளர்ந்து வந்த இரண்டு இதயங்கள் ஆயுள் காலம் வரை கருத்தொருமித்து வாழ்வதற்குப் பெயர்தான் இல்லறம். வரும் தலைமுறைக்கு அடித்தளமாக இருப்பதுதான் இல்லறம்.  அறிவும் பயிற்சியும் அதற்கு மிகமிக இன்றியமையாதவை ஆகும். அதனால்தான் இத்துறை குறித்து இஸ்லாம் மிக ஆழமான, அழகான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

  இந்த நூலை மலையாளத்தில் எழுதியவர் புகழ்பெற்ற மார்க்க அறிஞரும் பன்னூலாசிரியருமான ஷேக் முஹம்மத் காரக்குன்னு ஆவார். கேரள இஸ்லாமிய இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான அவர் பன்முக ஆற்றல் கொண்டவர்.இஸ்லாமிய ஒளியில் இல்லறம் குறித்த இதுபோல் ஒரு நூல் அதற்கு முன்பு மலையாளத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய அந்த அரிய நூலை ஆர்வத்துடன் தமிழாக்கம் செய்திருப்பவர் கவிஞர் கே.எம்.முஹம்மத் அவர்கள். மூல நூலாசிரியர் அறிஞர் முஹம்மத் அவர்களுக்கும், மொழியாக்கம் செய்த கவிஞர் முஹம்மத் அவர்களுக்கும் எங்களின் நன்றிகள் உரித்தாகுக.

  இஸ்லாத்தில் இல்லறம் குறித்து இத்தனைத் தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு நூல் தமிழில் வெளிவருவது இதுதான் முதல்முறை. இல்லற வாழ்வின் எல்லாக் கிளைகளையும் இணைத்துத் தொகுத்து வகுத்து இதுபோல் ஒரே நூலில் சொல்லியிருப்பது அரிதினும் அரிதே. பாலியல் உறவு குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதுடன் இதர மதங்களின் கண்ணோட்டம் என்ன என்பதையும் ஆதார நூல்களின் அடிப்படையில் விளக்கிச் சொல்வது இந்த நூலின் தனிச் சிறப்பாகும். இல்லற வாழ்வில் இணைந்து இருப்பவர்களும் இணைய இருப்பவர்களும் கட்டாயம் இந்த நூலைப் படிக்க வேண்டும். இஸ்லாம் கூறும் இல்லற நெறி எத்துணை அழகானது என்பதை எண்ணி எண்ணி உணர்ந்து, அதற்கேற்ப தங்கள் இல்லற வாழ்வை அமைத்துக்கொண்டு இம்மை நலன்களையும் மறுமை வெற்றிகளையும் பெறுவோமாக!

  Author: SHAIKH MUHAMMAD KARAKUNNU
  Publisher: ISLAMIC FOUNDATION TRUST

  320
 • குடும்ப உறவுகளை குலைக்கலாமா? (மனித உறவுகள் – 2)

  உறவைப் பேணுவதின் அவசியத்தையும், என்ன காரணங்களால் குடும்ப உறவு சீர்குலைகிறது என்பதையும், குடும்ப உறவுகள் குலையாமல் பாதுகாத்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதையும், குர்ஆன் மற்றும் சுன்னா ஒளியில் மிக அற்புதமாகத் தொகுத்து தந்திருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள்.

  Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
  Publisher: ISLAMIC FOUNDATION TRUST

  40
 • குழந்தை வளர்ப்பு (பெற்றோருக்கான சிறந்த வழிகாட்டுதல்)

  ‘ஆழி சூழ் உலகு!’ என்பார்கள். ஆனால் இன்று ‘ஆபாச சூழ் உலகு’ என்றாகிவிட்டது.
  ஆக்டோபஸ் போல் ஆபாச வக்கிரங்கள் நாலா திசைகளிலும் எட்டுக் கைகளையும் நீட்டி இளம் உள்ளங்களைக் கபளீகரம் செய்து வருகின்றன.
  இத்தகைய நெருக்கடியான சூழலில் நம் பிள்ளைகளை எப்படிக் காப்பாற்றப் போகிறோம்? எந்தத் தீய வலையிலும் சிக்காமல் அவர்களை எப்படி வளர்க்கப் போகிறோம்?
  செய்வதறியாமல் பரிதவித்து நிற்கிறார்கள் பெற்றோர்! ஆபாச சுனாமியிலிருந்து பிள்ளைகளை எப்படிக் காப்பது? அவர்களை நல்லவர்களாய் எப்படி வளர்ப்பது? திகைத்துத் தடுமாறி நிற்கிறார்கள்.
  இதோ, தென்னகத்தின் மாபெரும் மார்க்க அறிஞர்களில் ஒருவரான ஷேக் முஹம்மத் காரக்குன்னு அவர்கள், அனைத்துப் பாதுகாப்பு வசதிகளுடனும் ஒழுக்கம் காக்கும் உன்னதப் ‘படகு’ ஒன்றை உருவாக்கித் தந்துள்ளார்கள். எத்தனை பெரிய ஆபாச சுனாமியையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உடையது இந்தப் ‘படகு.’
  கணினியும் கைப்பேசியுமாய் இருக்கும் பிள்ளைகளை, எப்படிப் பக்குவமாக வளர்த்து ஆளாக்குவது என்பதை மிக அழகாகச் சொல்லியுள்ளார்.

  Author: SHAIKH MUHAMMAD KARAKUNNU
  Publisher: ISLAMIC FOUNDATION TRUST

  130
 • சுவனம் நமது வீடுகளில்

  Author: MOULAVI NOOH MAHLARI
  Publisher: ISLAMIC FOUNDATION TRUST

  150
 • திருமணத்தில் அநீதி, அநாச்சாரம், விரயம்

  திருமணம் என்பது இறைவன் செய்த ஏற்பாடாகும். இதனால்தான் பெருமானார் (ஸல்) அவர்கள், ‘‘திருமணம் எனது வழிமுறை. இதைப் புறக்கணிப்போர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்றார்கள். திருமணத்தை இஸ்லாம் ஒரு சடங்காக மட்டுமே பார்க்கவில்லை. அதை ஒரு வணக்கமாகவும், இறைநம்பிக்கையாகவும் வைத்து அழகு பார்க்கிறது.
  இஸ்லாம் திருமணத்தை வெளிப்படையாகவும் எளிமையாகவும் நடத்த வேண்டும் என்று எடுத்துச் சொல்கின்றது.
  ‘செலவில் குறைந்த திருமணமே அபிவிருத்தியில் நிறைந்ததாக அமையும்’ என நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.
  இவ்வளவு சிறப்புமிக்க திருமணத்தை இன்று முஸ்லிம்கள் இஸ்லாத்திற்கு மாற்றமான வழிகளில் நடத்தி தீமையின் பக்கம் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்தத் தீமையை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதுடன் அதற்குரிய தீர்வுகளையும் தர வேண்டுமென்ற நோக்கத்தில் நூலாசிரியர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் ‘திருமணத்தில் அநீதி, அநாச்சாரம், விரயம்’ என்ற தலைப்பில் இந்த நூலை எழுதியுள்ளார்.

  35
 • திருமணம்

  நிகாஹ்’ என்பதன் பொருள், திருமணத்தின் சட்ட நிலை, மணவிலக்கு – தலாக்கின் ஒழுங்கு முறைகள் போன்ற பத்து தலைப்புகளில் திருமணம் பற்றி விரிவாக விளக்கும் நூல்!

  Author: MUHAMMED BIN SALIH – AL UTHAIMIN
  Publisher: ISLAMIC FOUNDATION TRUST

  22
 • விருந்தோம்பல் சிறக்க (மனித உறவுகள் – 4)

  விருந்து மருந்தாகிவிட்ட இக்காலகட்டத்தில் விருந்தினர்கள் சுமையாகப் பார்க்கப்படுகிற நவீன யுகத்தில் முறையான விருந்தோம்பலின் அவசியத்தை உணர்ந்து நிறைவான கருத்துக் களை தமிழ் உலகுக்கு தந்திருக்கிறார் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்.

  Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
  Publisher: ISLAMIC FOUNDATION TRUST

  40