-
அகிம்சை இஸ்லாமியக் கண்ணோட்டம்
“அகிம்சை, அகிம்சை” என்று சொல்வதால் மட்டும் வன்முறை ஒழிந்துவிடாது. அன்பு பற்றி உரத்துப் பேசுவதாலும் அநீதிகள் அகன்று விடா. கொஞ்சம் விழிகளை அகலத் திறந்து பார்க்க வேண்டும். தம்மைச் சுற்றி என்னென்ன கொடுமைகள் நிகழ்கின்றன எனப் பார்த்து அவற்றைத் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அல்குர்ஆனை அணுகும் முறை
அல்குர்ஆனை அணுகும் முறை எனும் இந்நூல் நான்கு முக்கியப் பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஒன்று: குர்ஆனின் தனிப்பெரும் சிறப்புகளும் அதன் இலக்குகளும்.
இரண்டு: மனப்பாடம், ஓதுதல், செவியுறுதல் ஆகியவை மூலம் அல்குர்ஆனை அணுகும் முறை.
மூன்று: புரிதல், விளக்கவுரை ஆகியவை மூலம் அல்குர்ஆனை அணுகும் முறை. விளக்கவுரையில் முன்மாதிரியாக இருக்க வேண்டிய வழிமுறைகள், ஆபத்தான சறுக்கல்கள் மற்றும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியவை குறித்த வழிகாட்டல்கள், அறிவியல் விளக்கவுரையை ஆமோதிப்பவர்கள், மறுப்பவர்கள் ஆகியோருக்கு இடையே இருக்க வேண்டிய நிலைப்பாடு.
நான்கு: பின்பற்றுதல், செயல்படுத்துதல், தீர்ப்பளித்தல், அழைத்தல் ஆகியவை மூலம் அல்குர்ஆனை அணுகும் முறை.
Author: DR. YUSUF AL QARDHAWI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இதுதான் இஸ்லாம் பாகம் 1
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இதுதான் இஸ்லாம் பாகம் 1, 2
இஸ்லாத்தைக் குறித்து தெளிவான, முழுமையான கருத்துகளை எடுத்துக் கூறுகிறது.
இளைஞர்களுக்காக எழுதப்பட்டது. இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை பலரின் உள்ளங்களிலிருந்து களைந்தது; களைந்து வருகிறது.
ஒவ்வொருவரும் – படிக்க வேண்டிய, பாதுகாக்க வேண்டிய, பிறருக்கு அறிமுகப்படுத்த வேண்டிய, சிந்தனைக்குரிய -சிந்தைக்கினிய நூல் இது!
பிரெஞ்சு, ஆங்கிலம், அரபி உள்ளிட்ட நாற்பத்தைந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இமாம் ஹுஸைன் உயிரைக் கொடுத்தது எதற்காக?
இமாம் ஹுஸைன் அவர்களின் மீது பேரன்பும் மாசற்ற பற்றும் கொண்டிருக்கின்ற பெரும்பாலோருக்கு அவர் எந்த நோக்கத்திற்காக தன்னுடைய இன்னுயிரைத் துறப்பதற்கும் தயாரானார்? தன்னுடைய அன்பு மகனார்களையும் இழந்து விடுவதற்கு ஏன் துணிந்தார் என்பது பற்றிய உண்மைநிலை தெரிந்திருப்பதில்லை.
Author: Moulana Syed Abul A’la Moududi (Rah)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
இனிக்கும் இஸ்லாம்
இஸ்லாம் என்பது ஓர் வாழ்வியல் கோட்பாடு. மிகப்பெரும் சித்தாந்தம். உலகை வழி நடத்தும் கொள்கை. அந்த அடிப்படையில் இஸ்லாத்தை அனைவரும் அணுக வேண்டும் என்பதற்காகத்தான் இஸ்லாமிய வாழ்வியல் நெறிமுறைகள் இந்த நூலில் எளிய கட்டுரைகளாக 50 தலைப்புகளில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
Author: V.S. MOHAMMED AMEEN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாத்தில் உரிமைகள், கடமைகள்
மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் இறைநெறி இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகள் – மனிதர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றி சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கும் நூல்!
Author: MOULANA ABDUL HAFEEZ RAHMANI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாத்தில் மனித உரிமைகள்
மனித உரிமைகளின் அடிப்படைக் கருத்தோட்டம் என்ன, அதனை நிலைநாட்டும் வழிமுறைகள் என்ன என்பன போன்ற கேள்விகளுக்கு எளிமையான தர்க்கரீதியான பதில் அளிக்கும் நூல்!
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்
இஸ்லாத்தின் அனைத்து அம்சங்களையும் வழிகாட்டு தல்களையும் சுருக்கமாக விளக்கி வாழ்வின் ஒவ்வொரு துறை பற்றியும் இஸ்லாம் வழங்கும் போதனைகளைச் சரளமாகக் கூறும் நூல்!
Author: MOULANA ABDUL HAFEEZ RAHMANI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாமிய இன்பப் பயணம்
சத்தியத்தைத் தேடியும் அறிவைப் பெறுவதற்காகவும் பயணம் புறப்பட்ட நபித்தோழர்களில் முக்கியமானவரான ஸல்மான் ஃபார்ஸி (ரலி) மற்றும் இமாம் ஷாஃபி (ரஹ்) ஆகிய இருவரின் பயண வரலாறு அடங்கிய நூல்!
Author: MOUAHAMMED YUSUF ISLAHI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST9 -
இஸ்லாமிய கொள்கை விளக்கம்
ஏகத்துவம், தூதுத்துவம், மறுமை போன்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளை எளிய முறையில் அறிவுப்பூர்வமாக விளக்கும் நூல்!
Author: MOULANA ABDUL HAFEEZ RAHMANI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாமிய சட்ட விளக்கம்
தூய்மை, தொழுகை, ஜகாத், நோன்பு ஆகிய தலைப்புகளில் மஸாயில்கள் எனும் சட்ட விதிகள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன. செய்முறைப் பயிற்சி தரப்பட்டிருப்பது இதன் கூடுதல் சிறப்பு.
Author: MOULANA ABDUL HAFEEZ RAHMANI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
இஸ்லாமிய திருமணச் சட்டங்கள் (Islamic Marriage Law)
கணவன் – மனைவி உரிமைகள் கடமைகள் (இஸ்லாமிய குடும்பச் சட்டங்கள்) குறித்து மௌலானா அவர்களின் புகழ்பெற்ற Huqooquz Zoujain நூலின் மொழியாக்கம் தான் இந்நூல்.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாமிய வாழ்க்கை முறை
வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் இஸ்லாம் மனித சமுதாயத்திற்கு எவ்விதம் வழிகாட்டுகிறதுஎன்பதனை பல்வேறு தலைப்புகளில் விளக்கும் அற்புத நூல்!
ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாமியக் குடும்பம்
குடும்ப அமைப்புகள் மீது சிந்தனை ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் போர் தொடுக்கப்படுகிறது.
ஊடகம், தொலைக்காட்சி, வலைத்தளம், பத்திரிகை போன்றவை வாயிலாக தொடுக்கப்படும் இத்தகைய போர்களால் குடும்ப அமைப்பு கேள்விக்குறியாகிறது. சிலபோது முஸ்லிம்களும் இதற்குப் பலியாகின்றார்கள்.
ஓர் இஸ்லாமியக் குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து டாக்டர் யூஸுஃப் அல்கர்ளாவி எழுதியுள்ள இந்த நூல் இக்காலச் சூழலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Author: DR. YUSUF AL QARDHAWI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாமும் அரசியலும்
சமுதாய வாழ்க்கையில் அமைதி நிலவ வேண்டும் என்றால் அங்கு அரசியல் இருக்க வேண்டும்.
அரசியல் ஒரு சாக்கடை என்று நினைத்து அதை விட்டு விலகுவது மிகப் பெரிய தவறாகும்.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -