-
Modesty A Gift to Humanity – For Peace, Happiness and more…
The author further elaborates that modesty is not only limited to the method of a person to choose to dress, but also mirrors one’s behaviour, way of living, and in fact, overall conduct. Moreover, it is to be understood that being modest applies to both the genders.
Author: Safiya Syed
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அகிம்சை இஸ்லாமியக் கண்ணோட்டம்
“அகிம்சை, அகிம்சை” என்று சொல்வதால் மட்டும் வன்முறை ஒழிந்துவிடாது. அன்பு பற்றி உரத்துப் பேசுவதாலும் அநீதிகள் அகன்று விடா. கொஞ்சம் விழிகளை அகலத் திறந்து பார்க்க வேண்டும். தம்மைச் சுற்றி என்னென்ன கொடுமைகள் நிகழ்கின்றன எனப் பார்த்து அவற்றைத் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அண்ணலாரின் பலதார திருமணங்கள் – ஓர் அலசல்
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தார். எந்த வயதில் அப்பெண்களை மணந்தார்? எதற்காக மணந்தார்? அவற்றிற்கு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? அந்தப் பெண்கள் கண்ணியரா? வயது முதிர்ந்தவர்களா? விதவைகளா? என்பதை அறிய வேண்டும். அவர்கள் எந்தப் பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்த கேள்விகளுக்கு இந்த நூல் விடை தரும்.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அபூபக்கர் (ரலி)
தமிழ் கூறும் நல் உலகில் முதன்முறையாக ஆதாரப்பூர்வமான தகவல்களுடன் அபூபக்கர் (ரலி) குறித்த முழுமையான நூல்.
இப்படி ஒரு மனிதரா..? படிக்கப் படிக்க உற்சாகம்! பக்கத்துக்கு பக்கம் உத்வேகம்!
அபூபக்கர் (ரலி) குறித்து இனியொரு நூல் தமிழில் தேவையில்லை என்று சொல்லும் அளவுக்கு முழுமையான நூல்.
இந்த புத்தகத்தை ஒருமுறை வாசித்து பாருங்கள்.
நம் வாழ்க்கையை புரட்டிப் போடக்கூடிய பக்கங்கள் இதில் இருக்கின்றன.Author: Dr Ali Muhammad al-Sallabi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அமைதி அடைந்த ஆன்மா… (உளத்தூய்மை வழிகாட்டி)
நண்பனைப் போல் நடித்து ஏமாற்றுவது, குடும்பச் சூழ்நிலை, வளாகச் சூழ்நிலை, தீய நண்பர்களின் பழக்கம், சமூகச் சூழ்நிலைகள் என்பவை மூலம் ஷைத்தான் தனது காரியத்தில் வெற்றிபெற முயற்சிக்கின்றான். அதிலிருந்து நாம் விடுபடுவது எப்படி என்பதையும் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் இந்நூலில் எடுத்துரைத்துள்ளார்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அலங்கரிப்போம் ரமளானை
மறுமையில் நம்மை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல காரணமாக இருப்பவை எவை? இறை நெருக்கத்தைப் பெற்றுக் கொள்ளும் எண்ணத்துடன் இறையில்லத்தில் தங்கும் இஃதிகாஃபின் நன்மைகள் என்ன? பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் மாதமாக ரமளான் திகழ்வதால் கிடைக்கும் நேரத்தை வீணடிக்காமல் பயன்படுத்திக் கொள்வது எப்படி? என்பவைகளை சிறப்பாக நூலாசிரியர் மௌலவி நூஹ் மஹ்ழரி எடுத்து வைத்துள்ளார்.
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அல்குர்ஆன் கூறும் அழகிய சரிதைகள்
வாழும் தேசத்திற்கு என்ன பங்களிப்பைச் செய்திருக்கிறாய்? என்று ஒரு சரிதை உங்களிடம் கேட்கும். நாட்டில் நீதி தேவையா, வீட்டிலிருந்து துவங்கு என்று மற்றொரு சரிதை கூறும். மூன்றாவது சரிதையோ ஒழுக்க விழுமங்களைக் கடைப்பிடிக்கின்றாயா? என்று நம்மை உலுக்கிக் கேட்கும். நான்காவது நிகழ்வோ சூழல்களுக்கு அடிபணிந்து வீழ்ச்சியடையாதே என்று வீரவரலாறு கூறும்.
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அழகிய அண்டை வீடு (மனித உறவுகள் – 1)
அண்டைவீட்டார் என்றால் யார்? அவர்களோடு நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்னென்ன? அவர்களோடு நாம் எப்படி யெல்லாம் நடந்து கொள்ளக்கூடாது? என பல்வேறு கேள்வி களுக்கு விடைகளையும் பன்மை சமூகமாக வாழும் நாம் நம் தேசத்தில் ஜாதி மதம் மொழிகளை எல்லாம் தாண்டி தன் அண்டை வீட்டார்களோடு ஒற்றுமையோடும் மனிதநேயத்துடன் எப்படி வாழ்வது என்பதையும் இந்நூல் பேசுகிறது.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
இளைஞனே விழித்தெழு
இளைய சமுதாயத்தின் இதயத்தினை தட்டியெழுப்பி உறங்கிக் கிடக்கும் அவர்களது உணர்வுகளை விழித்தெழச் செய்யும் வண்ணம் மௌலானா மௌதூதி ஆற்றிய சொற்பொழிவுதான் இந்நூல்!
ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாமிய வரலாறு (அபீசினியா ஹிஜ்ரத் முதல் உஹத் வரை)
அபீசினியா ஹிஜ்ரத், விண்ணுலகப் பயணம், யத்ரிப்பை நோக்கி, மதீனாவில் இஸ்லாம், நபிகளாரின் ஹிஜ்ரத், மாநபியின் மதீனா வருகை, மதீனாவில் இஸ்லாமிய அரசு, உயர்ந்தெழுந்த மஸ்ஜிதுந் நபவி, சகோதரத்துவ உறவு ஒப்பந்தம், போர்களும் காரணங்களும், போர்களின் நோக்கமும் நபிகளாரின் வியூகமும், கிப்லா மாற்றம், வணிகக் குழு, பத்ரு களம், பத்ரு போரும் கைதிகளும், போருக்குப் பின், தடைகளைத் தாண்டிய பயணம், உஹத் போர், யுத்தம் தந்த படிப்பினைகள் என இஸ்லாமிய வரலாறு கடந்து வந்த பாதையை பல வழிகளில் நம் கண் முன்னால் படம்பிடித்துக் காட்டுகிறது இந்நூல்.
Author: Afzalul Ulama, Moulavi M.I. Muhammed Siddiq Umari, Madani M.A., M.Com.,
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாமும் அரசியலும்
சமுதாய வாழ்க்கையில் அமைதி நிலவ வேண்டும் என்றால் அங்கு அரசியல் இருக்க வேண்டும்.
அரசியல் ஒரு சாக்கடை என்று நினைத்து அதை விட்டு விலகுவது மிகப் பெரிய தவறாகும்.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
உலகமயமாக்கலும் முஸ்லிம் இளைஞர்களும்
Author: SYED SADATHULLAH HUSSEINI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
செல்வந்தர் நபிகள் நாயகம் (ஸல்)
மேலும், அவன் (இறைவன்) உம்மை (நபிகளாரை) ஏழையாய்க் கண்டான்; பிறகு செல்வராய் ஆக்கினான். (திருக்குர்ஆன் 93:8)
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
சேர சோழ பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் முஸ்லிம்கள்
தமிழகத்தில் இஸ்லாம் பரவிய வரலாறு குறித்தும் அது தொடர்பான சில செய்திகளையும் முன்னிலைப்படுத்தி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளாக தமிழக முஸ்லிம்கள் குறித்து எழுதப்பட்டுவரும் செய்திகள் ஆசிரியரின் முனைப்பில் சில கூடுதல் தகவல்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன.
Author: P. Sirajudeen
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருமணத்தில் அநீதி, அநாச்சாரம், விரயம்
திருமணம் என்பது இறைவன் செய்த ஏற்பாடாகும். இதனால்தான் பெருமானார் (ஸல்) அவர்கள், ‘‘திருமணம் எனது வழிமுறை. இதைப் புறக்கணிப்போர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்றார்கள். திருமணத்தை இஸ்லாம் ஒரு சடங்காக மட்டுமே பார்க்கவில்லை. அதை ஒரு வணக்கமாகவும், இறைநம்பிக்கையாகவும் வைத்து அழகு பார்க்கிறது.
இஸ்லாம் திருமணத்தை வெளிப்படையாகவும் எளிமையாகவும் நடத்த வேண்டும் என்று எடுத்துச் சொல்கின்றது.
‘செலவில் குறைந்த திருமணமே அபிவிருத்தியில் நிறைந்ததாக அமையும்’ என நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.
இவ்வளவு சிறப்புமிக்க திருமணத்தை இன்று முஸ்லிம்கள் இஸ்லாத்திற்கு மாற்றமான வழிகளில் நடத்தி தீமையின் பக்கம் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்தத் தீமையை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதுடன் அதற்குரிய தீர்வுகளையும் தர வேண்டுமென்ற நோக்கத்தில் நூலாசிரியர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் ‘திருமணத்தில் அநீதி, அநாச்சாரம், விரயம்’ என்ற தலைப்பில் இந்த நூலை எழுதியுள்ளார். -
நல்லாட்சி நாயகர் கலீஃபா உமர் (ரலி)
“வாளால் இஸ்லாம் பரப்பப்பட்டது என்ற தவறான கூற்றுக்குத் தக்க பதிலடியாக ஆசிரியரின் இந்த வரலாற்றுப் படப்பிடிப்பு அமைந்திருக்கிறது. வெற்றி கொள்ளப்பட்ட நாடுகள் முஸ்லிம் நாடுகளாக ஆகிவிட்டன என்ற ஒரு கற்பனையில் இவ்வளவு காலம் வரலாறு எழுதப்பட்டு வந்தது என்பதே உண்மை. இரு நூறு ஆண்டுகள் முஸ்லிம்கள் நடத்திய நல்லாட்சியைக் கண்டு சுவைத்து அனுபவித்து உள்ளத்தாலும் உயர்வாலும் அங்கீகரித்த பின்னரே அந்த நாட்டு மக்கள் தங்களை இஸ்லாமிய வாழ்வியலில் இணைந்து கொண்டனர் என்பதை இதுவரை யாரும் தெளிவுபடுத்தாத ஓர் உண்மை யாகும். நூலாசிரியருக்கு வரலாற்று அறிஞர் உலகம் பல பாராட்டுகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறது.”
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
நாகரிகத்தின் தந்தை உமர் (ரலி)
உமரே! நீர் சத்தியத்தை ஏற்றபோது
சர்தார் நபியின் வதனம் மலர்ந்தது.உமரே! எத்தனையோ முறை
உமது வாக்கே வஹியாக இறங்கின!உமரே! எத்தனையோ முறை
உமது கூற்றே உண்மையாக இருந்தது!உமரே! உமது வரலாறு எங்கள்முன் பிரகாசமாக இருக்கிறது.
இல்லையேல், கற்பனை கதாபாத்திரம் என்றே
உம்மை நாங்கள் கருதியிருப்போம்.Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
பதின்பருவ முஸ்லிம் வாலிபர்களுக்கான கையேடு ஆண்கள் பதிப்பு
பதின்பருவ முஸ்லிம் வாலிபர்களுக்கான கையேடு
ஆண்கள் பதிப்பு
இன்று பெற்றோர்களுக்கு இருந்து வரும் மிகப் பெரும் சவால் வளர்ந்து வரும் தங்கள் பதின்பருவப் பிள்ளைகள்தாம். ஆமாம்! நவீனயுகத்தின் விஞ்ஞான வளர்ச்சிகள் மிகப் பயங்கரமாக குடும்பங்களையும் சமுதாயங்களையும் எங்கேயோ இழுத்துக் கொண்டு செல்கின்றன. ஊடகங்கள் பதின்பருவத்தினரைத் தங்கள் ‘அக்டோபஸ்’ கைகளுக்குள் ஈர்த்துக்கொண்டு அவர்களுக்குத் தவறான பலவழிகளைக் காண்பித்துக் கொண்டிருக்கின்றன. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஒவ்வொரு வினாடியும் கண்காணிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.அநேக பள்ளிக்கூடங்கள் பதின்பருவத்தினருக்கான ‘பாலியல் கல்வியை’ வழங்குகிறது. ஆனாலும் அவை இறைநம்பிக்கை யாளர்களின் குழந்தை-களுக்கு ஏற்ற வகையில் சரிவர வடிவமைக்கப் படவில்லை.இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே நூலாசிரியர் கே. கபீருதீன் தம் மகனுக்கு உதவும் விதமாக இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். பதின்பருவத்தினர் முழுமையாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் பல்வேறு தலைப்புகளில் விளக்கியுள்ளார். மனிதனின் அடையாளத்தை அறிந்துகொள்வதில் இருந்து பதின்பருவத்திற்கும் வாலிப வயதிற்குமுள்ள வேறுபாடுகள், பதின்பருவத்தில் ஏற்படும் சவால்கள், தவறான பழக்க வழக்கங்கள், தற்காப்புக்கான நடைமுறைகள், ஆரோக்கியத்தையும் சுகாதாரத்தையும் கடைப்பிடிப்பது எப்படி என்று இஸ்லாமியப் பார்வையில் விளக்கியுள்ளார்.Author: Prof K. Kabir Uddin
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
பயணம் இனிதாக! (மனித உறவுகள் – 5)
வாழ்க்கையின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டுவதைப் போலவே பயணத்திற்கான ஒழுங்கையும், வழிகாட்டுதல் களையும் வகுத்துத் தந்துள்ளது இஸ்லாம்.
இஸ்லாம் வழங்கியுள்ள கோட்பாடுகளை பின்பற்றி பயணத்தை மேற்கொள்ளும் பொழுது பயணம் இனிதாக அமையும் என்பதில் ஐயமில்லை.
பயணம் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம் என்ன? உல்லாசப் பயணம் விரயமாகுமா? பயணத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் யாவை? பயணத்தின்போது வழிபாடுகளில் தரப்படும் சலுகைகள் என்னென்ன? என பல கேள்விகளை எழுப்பி அத்தனைக்கும் தனக்கே உரிய பாணியில் விடை களையும் கோர்வை செய்திருக்கிறார் பன்நூலாசிரியர் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது அவர்கள்.
பெண்களின் பயணம் குறித்து இஸ்லாத்தின் அறிவுரைகளை பதிவு செய்திருப்பது இந்நூலின் முத்தாய்ப்பான அம்சமாக அமைந்துள்ளது. -
பொது சிவில் சட்டம் ஏன் கூடாது?
குடிமக்களுக்கு மதச் சுதந்திரம் உண்டு அல்லது இல்லை என்பதை அரசு தெளிவாக அறிவித்துவிட்டால் முஸ்லிம்களுக்கும் பிரச்னை எளிதாகிவிடும். தமது உரிமைகளுக்காக அரசிடம் முறையிட்டுக் கொண்டிருப்பதில் தம் நேரத்தை வீணாக்குவதற்குப் பதிலாக, தமக்குத் தேவை இந்த அரசா அல்லது இஸ்லாமிய வாழ்க்கையா என்பதை அவர்கள் முடிவு செய்துகொள்வார்கள்.
– மௌலானா அபுல் கலாம் ஆஸாத்
(1922இல் ஆற்றிய உரையிலிருந்து)Author: G.M. Banathwala Ex M.P
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
பொருளீட்டல் இஸ்லாமிய அணுகல்
பொருளை ஈட்டுதல், பொருளைப் பங்கிடுதல், பொருளைப் பரிமாறிக் கொள்ளுதல், பொருளைச் செலவிடுதல் ஆகிய நான்கு தலைப்புகளில் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை அடக்கிவிடலாம்.
Author: H. ABDUR RAQEEB
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மனிதவள மேம்பாட்டின் முக்கியத்துவம்
இந்நூல் மனிதவளம் என்றால் என்ன? மனிதவளத்தை எப்படி மேம்படுத்த முடியும்? அதனுடைய அவசியமும் முக்கியத்துவமும் என்ன? என்பதைப் பற்றிச் சுருக்கமாக, அழகாக, நேர்த்தியாகப் பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது.
Authors: DR. K.V.S. HABEEB MOHAMMED & H. ABDUR RAQEEB
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
முன்மாதிரி முஸ்லிம் இளைஞன்
இளமை முதல் முதுமைவரை மனிதவாழ்வில் பலமும் பலவீனமும் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும். குழந்தைப் பருவம் பலவீனமானது. வாலிபத்தில் மனிதன் பலசாலியாக மாறுகின்றான். வயோதிகத்தில் மீண்டும் பலவீனமானவனாக மாறுகின்றான். வாழ்வில் இருமுறை பலவீனமானவனாக இருக்கும் மனிதன், தன்வாழ்வில் ஒரேயொரு முறைதான் பலசாலியாக இருக்கின்றான். அதுதான் அவனது இளமைப்பருவம், ஆகவேதான், இந்த இளமை கொண்டாடப்படுகிறது.
இளைஞர்களே! வாசிக்கும் பழக்கத்தை வார்த்தெடுங்கள். வாசிக்கும் இன்றைய இளம் தலைமுறைதான் நாளைய வழிகாட்டும் தலைமுறையாக மாறும் என்பதை மறந்து விடாதீர்கள். வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களால்தான் வாழ்க்கையில் முக்கிய முடிவெடுக்கும் சிந்தனைத் தெளிவு கொண்டவர்களாக இருக்க முடியும்.
ஒரு முன்மாதிரி முஸ்லிம் இளைஞன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த நூல் விரிவாகப் பேசுகிறது. இஸ்லாமிய வரலாற்றில் செயற்கரிய செயல்களைச் செய்தவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக இருந்தபோதுதான் அவற்றைச் செய்துள்ளனர் என்பது இந்த நூல் சொல்லித் தரும் முக்கியச் செய்தி.
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மெளலானா மெளதூதி பதில்கள் (பாகம் – 2)
இறைவேதம், இறைத்தூதர்கள், நபி முஹம்மத் (ஸல்), காதியானிகள், நபிமொழிகள், நபித்தோழர்கள், இறைநம்பிக்கை தொடர்பான 40 கேள்விகளுக்குரிய பதிலை இந்நூலில் மௌலானா அவர்கள் அழகாக கொடுத்துள்ளார்கள்.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மெளலானா மெளதூதி பதில்கள் (பாகம் – 3)
மார்க்கச் சட்டங்கள், இஸ்லாமும் பெண்களும், மருத்துவமும் இஸ்லாமும், இறை வணக்கம், பொருளாதாரம், இஸ்லாமிய இயக்கம் மற்றும் பொதுவான அதே சமயம் முக்கியமான 46 கேள்விகளுக்குரிய பதிலை இந்நூலில் மௌலானா அவர்கள் அழகாக கொடுத்துள்ளார்கள்.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மௌலவி நூஹ் மஹ்ழரி 3 + டாக்டர் யூசுஃப் அல்கர்ளாவி 1 (4 Books Package)
- செசெல்வந்தர் நபிகள் நாயகம் (ஸல்)
2. நாகரிகத்தின் தந்தை உமர் (ரலி)
3. அல்குர்ஆன் கூறும் அழகிய சரிதைகள்
4. அல்குர்ஆனை அணுகும் முறை
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹1150 - செசெல்வந்தர் நபிகள் நாயகம் (ஸல்)
-
வாசிக்கும் குழந்தைகளே நாளைய வரலாறு
இந்நூல் சிறந்த தலைமுறையை உருவாக்க விரும்பும் பெற்றோர்களுக்கான கையேடு.
Author: Prof. Dr. Abdul Karim Bakkar
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – நோக்கமும் வழிமுறையும்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – நோக்கமும் வழிமுறையும்’ எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த சிறிய நூல், இஸ்லாமிய மார்க்கத்தின் முன்னேற்றத்துக்காக இந்தியத் துணைக் கண்டத்தில் முறையாக இயங்கி வருகின்ற ‘ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்’-ன் இலக்குகள் செயல்பாடுகள், வழிமுறைகள் பற்றியும், இஸ்லாத்தைப் பற்றியும் மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ள தவறான கருத்துக்களை நீக்குவதற்கும் இதில் முயற்சி செய்யப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து இகாமத்துத் தீனின் வழியில் ஜமாஅத்தே இஸ்லாமியுடன் ஒத்துழைப்பு வழங்குமாறு முஸ்லிம்களிடம் வேண்டுகோள் வைப்பதுடன் ஜமாஅத்தே இஸ்லாமியின் செயல்முறை பண்புகளையும் உண்மையிலேயே புரிந்துகொள்ள முயற்சிக்கக் கூடியவர்களுக்கு இந்த சிறு நூல் பயனளிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் சர்வ வல்லமை கொண்ட அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தவாறு இந்நூலை பெரும்பான்மை சமுதாயத்திற்கு சமர்ப்பிக்கின்றோம்.Author: Moulana Abullais Islahi Nadvi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST
-
முன்மாதிரி முஸ்லிம் இளைஞன்
இளமை முதல் முதுமைவரை மனிதவாழ்வில் பலமும் பலவீனமும் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும். குழந்தைப் பருவம் பலவீனமானது. வாலிபத்தில் மனிதன் பலசாலியாக மாறுகின்றான். வயோதிகத்தில் மீண்டும் பலவீனமானவனாக மாறுகின்றான். வாழ்வில் இருமுறை பலவீனமானவனாக இருக்கும் மனிதன், தன்வாழ்வில் ஒரேயொரு முறைதான் பலசாலியாக இருக்கின்றான். அதுதான் அவனது இளமைப்பருவம், ஆகவேதான், இந்த இளமை கொண்டாடப்படுகிறது.
இளைஞர்களே! வாசிக்கும் பழக்கத்தை வார்த்தெடுங்கள். வாசிக்கும் இன்றைய இளம் தலைமுறைதான் நாளைய வழிகாட்டும் தலைமுறையாக மாறும் என்பதை மறந்து விடாதீர்கள். வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களால்தான் வாழ்க்கையில் முக்கிய முடிவெடுக்கும் சிந்தனைத் தெளிவு கொண்டவர்களாக இருக்க முடியும்.
ஒரு முன்மாதிரி முஸ்லிம் இளைஞன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த நூல் விரிவாகப் பேசுகிறது. இஸ்லாமிய வரலாற்றில் செயற்கரிய செயல்களைச் செய்தவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக இருந்தபோதுதான் அவற்றைச் செய்துள்ளனர் என்பது இந்த நூல் சொல்லித் தரும் முக்கியச் செய்தி.
Author:
Publisher: ISLAMIC FOUNDATION TRUST