Showing 1–20 of 35 results

  • அன்பு நண்பனுக்கு…!

    நட்புறவு கமழும் நடை, இதயத்தை வருடும் சிநேகமான விசாரிப்புகள், போகின்ற போக்கில் இயல்பாக வந்து உள்ளத்தைத் தைக்கின்ற கூர்மையான கேள்விகள், மனத்துக்குள் வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்ற எடுத்துக்காட்டுகள், ‘ஓ!’ போட வைக்கின்ற வரலாற்று நிகழ்வுகள், சிலிர்த்தெழச் செய்கின்ற அறிவுரைகள் என்று அமர்க்களப்படுத்தியிருக்கின்றார் ஆசிரியர். ஒரே மூச்சில், ஒரே அமர்வில் வாசித்து முடித்துவிடும்படி வாசகரைக் கட்டிப் போட்டுவிடுகின்ற நூல்தான் இந்நூல்.

    Author: Moulana Asad Geelani
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    50
  • இதுதான் இறைநெறி போராட்டம்

    அண்ணலார் (ஸல்) அவர்களின் நெருங்கிய தோழரான அபூபக்கர் (ரலி) அவர்களின் தியாக வாழ்வை விளக் கும் நூல்.

    Author: ABDUL WAHIDKHAN
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    30
  • இந்தியாவில் இஸ்லாமிய இயக்கம்

    இஸ்லாமிய இயக்கத்தைப்பற்றி அறிந்துகொள்ள தமிழில் போதிய நூல்கள் இல்லை. அக்குறையை நிறைவு செய்ய வந்திருக்கும் நூல் இது.
    நவீனகால இஸ்லாமிய இயக்கங்கள் தோன்றிய பின்னணியோடு தொடங்கும் நூல் ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தின் துவக்கம் வரை பேசுகிறது.
    Author: SHAIKH MUHAMMAD KARAKUNNU
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST
    70
  • இயக்கம் வெற்றி பெற

    இயக்கப்பணிகளில்   ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு ஊழியரும் இயக்கத்தின் வெற்றிக்காகத் தம்மை தயார் படுத்துவது குறித்து விளக்கும் நூல்! இயக்க ஊழியர்கள் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்!

    Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    85
  • இஸ்லாத்தின் அரசியல் கொள்கை

    இஸ்லாம் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் தன்னுள் கொண்ட (All – Comprehensive) சமநிலைமிக்க (Well Balanced) ஒரு வாழ்க்கைத் திட்டமாகும். அது மனித வாழ்வின் ஒவ்வொரு துறையும் வளர்ச்சியுறவும், முன்னேற்றமடையவும் ஆரோக்கியமான அளவுகோல்-களை, நெறிமுறைகளை வகுத்தளிக்கின்றது. எனவே இஸ்லாம் அரசமைப்புக்காக வழங்குகின்ற அடிப்படைகள், கொள்கைகள் என்னென்ன என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டுமல்லவா?

    இந்தக் கேள்விக்கான பதிலை மௌலானா மௌதூதி (ரஹ்) தம்முடைய இந்த உரையில் மிக எளிமை-யாகவும் அழகாகவும் தெளிவுபடுத்தியுள்ளார். இஸ்லாமிய அரசியல் கொள்கையின் அனைத்து அம்சங்களையும் தெளிவான சொற்களில் விளக்கி அதனை மனிதன் ஏற்றுச் செயல்படுத்து-வதற்கான அவசியத்தையும் எடுத்துரைத்துள்ளார்.
    அரசியல் பாடம் கற்கும் மாணவர்களுக்கும், மனித வாழ்வின் மிக முக்கியத் துறையான அரசியலில் இஸ்லாம் வழங்கும் வழிகாட்டுதல் என்ன எனத் தெரிந்துகொள்ள விரும்புவோருக்கும் இந்தச் சிறுநூல் பெரிதும் பயன்தரும்.

    Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    60
  • இஸ்லாமிய இயக்கத்தின் முன்னுரிமைகள்..!

    இன்றையக் காலத்தில் இஸ்லாமிய இயக்கத்தைப் பற்றிய சரியான புரிதலை விவரிப்பதுதான் இந்நூல்.

    பொலிட்டிகல் இஸ்லாம், சூஃபி இஸ்லாம் போன்ற கூப்பாடுகளின் பின்னால் இயங்குகின்ற நுண்ணரசியலை அம்பலப்படுத்துகிறது இந்நூல்.

    அழைப்புப் பணியில் அலட்சியத்தை முற்றாகத் துறந்தாக வேண்டிய அவசியத்தை அறிவுறுத்துகிறது இந்நூல்.

    புதிய காலகட்டத்துடன் இயைந்து போகின்ற திட்டமிடலின் குறிப்புகள் ஒவ்வொரு கோடி வைரங்களுக்குச் சமம்.

    Author: Dr. Qurshid Ahmed
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    40
  • இஸ்லாமிய இயக்கம்

    சிந்தனையைத் தூண்டும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்த நூலில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் என்ன, நாம் எத்தகைய வாழ்வு வாழவேண்டுமென இஸ்லாம் விரும்புகிறது. முஸ்லிம்களின் முக்கியப் பொறுப்புகள் யாவை, தீனை – மார்க்கத்தை நிலைநாட்டுவதன் கருத்து என்ன, தேவை என்ன போன்ற அடிப்படை செய்திகள் தக்க ஆதாரங்களுடன் அழுகுற எடுத்துரைக்கிறது.

    Author: MOULAVI R. ABDUR RAWOOF BAQAVI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    12
  • இஸ்லாமிய இயக்கம் ஏன்? எதற்கு?

    இஸ்லாமிய இயக்கம் என்றால் என்ன?
    அதன் நோக்கும், போக்கும் எவ்வாறு இருக்க வேண்டும்? அது அடைய வேண்டிய இலக்கு எது? அதற்கான பாதை எது?
    ‘சத்தியத்திற்குச் சான்று பகர்தல்’ என்றால் என்ன? அது எவ்வாறு கடமையாகிறது?
    அதில் அலட்சியமாக இருப்பதனால் ஏற்படும் விளைவு என்ன?
    இஸ்லாமிய இயக்கம் இன்றைக்கு ஏன் தேவைப்படுகிறது?
    -போன்ற பல அடிப்படைக் கேள்விகளுக்கு தமக்கே உரிய பாணியில் விளக்கம் தருகிறார், குர்ரம் முராத் அவர்கள்.

    Author: KHURRAM MURAD
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    40
  • இஸ்லாமிய மறுமலர்ச்சி

    இஸ்லாமிய மறுலர்ச்சி என்றால் என்ன?
    இஸ்லாமிய மறுமலர்ச்சியைத் தோற்றுவிப்பவர்களின் – அதாவது முஜத்தித்களின் வரைவிலக்கணம் என்ன?
    ஒருவரை ‘முழுமையான மறுமலர்ச்சியாளர்’ என்று எப்படி மதிப்பிடுவது?
    இஸ்லாமிய வரலாற்றில் இதுவரை தோன்றிய முஜத்தித்கள் யார் யார்? அவர்களுடைய சாதனைகள் என்ன?
    இமாம் மஹ்தி அவர்களின் தகுதிநிலையும் முன்னறிவிப்புகளும் வருகையும் எத்தன்மை வாய்ந்தவை?
    – இன்னும் இது போன்ற பல வினாக்களுக்கும் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த இஸ்லாமிய அறிஞர் மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) அவர்கள் இந்த நூலின் விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.
    Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST
    170
  • இஸ்லாமிய வாழ்வு – குத்பாப் பேருரைகள்

    மௌலானா மௌதூதி அவர்களின் குத்பாப் பேருரை நூல் சாதாரணப் புத்தகம் அல்ல!

    கல்வியறிவற்ற பாமர மக்களுக்குப் புரியும் வகையில் அவர்களின் அன்றாட வாழ்வில் பழக்கப்பட்ட விஷயங்-களைக் கொண்டே – அடிப்படையான உண்மைகளை எடுத்துரைக்கிறது.மௌலானா மௌதூதி அவர்களின் இதர நூல்களைவிட இந்தப் பேருரை மக்களிடம் இறையருளால் அதிக தாக்கங்களை ஏற்படுத்தி யிருக்கிறது. இது நிறைய இதயங்களைத் தட்டியெழுப்பி, பலருடைய வாழ்க்கைக்குப் புதிய வடிவம் கொடுத்தது. தம் விருப்பப்படி வாழாமல் வல்ல இறைவனுக்கே அடிபணிந்து வாழும் மனோநிலையை மக்களிடம் ஏற்படுத்தியது.

    அன்று தாருல் இஸ்லாத்தின் சின்னசிஞ்சிறு மஸ்ஜிதில் மௌலானா அவர்களுக்கு எதிரில் சாதாரண கிராம மக்கள்தாம் இருந்தார்கள். அம்மக்கள் அரசியலோ, வரலாறோ, தத்துவமோ அறிந்திருக்கவில்லை. அவர்களுக்குத் தெரிந்திருந்த விஷயங்கள்
    1. இறைநம்பிக்கை,2. இஸ்லாத்தின் அடிப்படைகளான 5 கடமைகள் மட்டும்தான். எனவேதான், இவ்விரு விஷயங்களை வைத்துக்கொண்டு எளிய மொழியில் அந்தக் கிராம மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் இந்த உரைகளை அமைத்தார் மௌலானா.
    பல ஆண்டுகள் உருண்டோடி விட்டபோதிலும் அவ்வுரை ஏற்படுத்திய புத்துணர்ச்சியை இன்னும் நம்மால் உணர முடிகிறது.

    Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    290
  • இஸ்லாமும் கூட்டமைப்பும்

    ஒற்றுமையின்மை மற்றும் உட் சிதைவுக்கு உதாரணமாக மாறிப்போன நவீன முஸ்லிம் சமுதாயத்தை ஒருங்கிணைத்து அவர்களை இஸ்லாமிய அடிப்படைகளில் மறுகட்டமைப்பு செய்வதுதான் இன்றைய மிக முக்கிய தேவையாகும்.

    Author: Moulana Sadruddin Islahi
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    200
  • உறுதிமிக்க போராட்டத்தின் எழுபத்தைந்து ஆண்டுகள் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்

    ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு ஆக்ககரமான, அமைதியான வழிமுறைகளின் மூலமாக, மக்களின் சிந்தனையில், கருத்துப்பரவலின் வாயிலாக மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் மனங்களை வென்றெடுப்பதன் மூலமாக தன்னுடைய நோக்கத்தை அடைவதற்கு கடந்த 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

    கடந்த 75 ஆண்டுகளாக இந்திய முஸ்லிம்கள், மற்றும் முஸ்லிம் அல்லாத சமூகங்களில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆற்றிவரும் அரும் பணிகள், அதனால் ஏற்பட்ட நல்ல தாக்கங்கள் ஆகியவற்றை மிக அழகாக விவரிப்பதுடன், இன்றைய காலச் சூழலில் இனி செய்ய வேண்டியதையும் மிகத் தெளிவாக இப்புத்தகம் உணர்த்தியுள்ளது.

    Author: SYED SADATHULLAH HUSSEINI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    50
  • குர்ஆனாக வாழ்வோம்

    “என் இறைவனிடமிருந்து எனக்கு அனுப்பப்படுகின்ற வஹியை மட்டுமே நான் பின்பற்றுகின்றேன். இது உங்கள் இறைவனால் வழங்கப்பட்ட தெளிவான சான்றாகும். மேலும், (இதனை) நம்புகின்ற சமுதாயத்தாருக்கு இது நேர்வழி காட்டக்கூடியதாகவும், ஓர் அருளாகவும் இருக்கின்றது.” (திருக்குர்ஆன் 7:203)

    Author: Moulana Sadruddin Islahi
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    40
  • சத்தியப் பேரொளி

    ‘இறைவன் ஒருவனே’ எனத் தொடங்கி அண்ணலாரின் வாழ்க்கை, இஸ்லாமியப் பண்பாடுகள் பற்றிக் கூறும் எளிமையான நூல். பர்தா, தலாக், பலதாரமணம் என பல்வேறு வகையான பொருள்களைப் பற்றியும் பேசி சத்தியப் பேரொளி எழுப்புகிறது.

    Author: IBRAHIM SAYEED
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    60
  • சமூகப் பாதுகாப்பு இந்தியச் சூழலில்…

    பெரும்பான்மை சமூகத்தில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்களின் கடமை என்ன? பன்மைச் சமூகத்துடன் இணைந்து வாழும் இந்திய முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பு என்ன? பிற சமூகங்களுடனான ஒத்துழைப்பில் கடைபிடிக்க வேண்டிய கொள்கைகள் யாவை? முஸ்லிம்களின் கலாச்சாரம், தனித்தன்மை, பாதுகாப்பிற்காக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன? போன்ற கேள்விகளுக்கு இஸ்லாமிய கொள்கைகளின் வெளிச்சத்தில், ஆய்வுக் கண்ணோட்டத்துடன் இந்நூல் பதிலளிக்கிறது.

    Authors: Dr. Abdus Salam Ahmed, Sheikh Muhammad Karakunnu
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    100
  • சுதந்திரச் சிந்தனைகள்

    சுதந்திரம் குறித்து மட்டுமல்ல – அடிமைத்தனம், பெண், போர் முறைகள், தமிழர் மரபு, இஸ்லாமிய மார்க்கம் என விரிவான – சுவையான தளங்களில் இயங்கி பல நல்ல கருத்துகள் பதிவுகளாக்கப்பட்டுள்ளன. இந்நூலில் உள்ள ஏழு கட்டுரைகளும் வானவில்லின் நிறங்களைப் போல தனித் தனி வண்ணமும், வனப்பும் கொண்டவைதாம்; எனினும், அந்த ஏழு படைப்புகளையும் ஒருங்கிணைப்பது பிரபஞ்சனின் இஸ்லாமிய அணுகுமுறை…!
    பிரபஞ்சன்

    Author: PRABANJAN
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    50