-
அழைப்பாளர் கையேடு
அழைப்பின் வழியில் அலைக்கழியாத பயணம், இலங்கை நூலின் தமிழ் பதிப்பு
அழைப்பாளர் கையேடு
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்இஸ்லாமிய மக்கள் இன்று எவ்வளவு தூரம் பிறரால் அலைக்கழிக்கப்பட முடியுமோ அவ்வளவு தூரம் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள். காரணம், புரிந்து செயல்படுவதில் ஏற்பட்டுள்ள பாதிப்பே. இஸ்லாம் அல்லாஹ்வுடைய மார்க்கம்,
அல்லாஹ்வினால் பாதுகாக்கப்படும் மார்க்கம். அதனால், எவ்வளவுதான் அலைக்கழிக்கப்பட்டாலும் பயணம் பாதுகாப்பாகவே முடியும். என்றாலும் நம்மீதும் கடமைகள் இருக்கின்றன, அலைக்கழிக்கப்படுவதில் இருந்து தாக்குப் பிடிப்பதற்கு நாமும் முயற்சி செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம்.
அந்த முயற்சியை எடுத்துச் செல்பவர்களாக அழைப்பாளர்கள் விளங்குகிறார்கள். அவர்கள் சரியான முறையில் புரிந்து மக்களை அமைதியான பயணத்திற்கு இட்டுச் செல்ல வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அதற்கு உதவும் விதத்தில் இந்த ‘அழைப்பின் வழியில் அலைக்கழியாத பயணம்’ என்ற நூலை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். இந்த நூலை தமிழ் வாசகர்கள் மொழிநடைக்கு ஏற்றவாறு மாற்றம் செய்து ‘அழைப்பாளர் கையேடு’ எனும் தலைப்பில் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.Author: USTHAZ RASHEED HAJJUL AKBAR
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அழைப்பாளனுக்கு விடுமுறை இல்லை…!
பட்டம், பதவி, பணம், அரசு, அதிகாரம் என அற்பமான ஆதாயங்களை மையப்படுத்தியே கட்சிகளும் கழகங்களும் மன்றங்களும் அமைப்புகளும் இயங்கிக் கொண்டிருந்த சூழலில், சாதி, மதம், குடும்பம், கோத்திரம் போன்றவற்றின் குறுகிய நலன்களுக்காகவே அரசியல், சமூகச் செயல்பாடுகள் சூடுபிடித்திருந்த விறுவிறுப்பான நாள்களில், அவை அனைத்தையும் முற்றாக ஒதுக்கித் தள்ளிவிட்டு இறைவனின் உவப்பையும் மறுமையில் மகத்தான வெற்றியையும் பெறுவதை மட்டுமே ஒற்றை உந்துசக்தியாகக் கொண்டு இயங்க வாருங்கள் என்கிற வித்தியாசமான, புரட்சிகரமான, அதிரடியான அழைப்புடன் களமிறங்கிய போராளிகளைப் படம் பிடித்துக் காட்டுகின்ற நூல்தான் “அழைப்பாளனுக்கு விடுமுறை இல்லை…!”
Author: Moulana Naeem Siddiqui
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அழைப்பியல் சிந்தனைகள்
இந்நூல் புரட்சிகரமான நூல்! வாசகர்களின் உள்ளங்களில் மாற்றத்தை ஏற்படுத்துகின்ற திறன் படைத்த நூல்!.அழைப்புப்பணியின் முக்கியத்துவத்தையும் அழைப்பாளர்களிடம் இருக்க வேண்டிய பண்புகளையும் எடுத்துரைக்கின்ற நூல்!…எல்லாமே அன்றாட வாழ்வோடு தொடர்புடையவை! அண்ணல் நபிகளாரின் அழகிய முன்மாதிரியை நூல் முழுக்க இழைத்துக் கொடுத்திருக்கின்றார் ஆசிரியர்.Author: H. ABDUR RAQEEB
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
அழைப்புப் பணி ஏன்? எதற்கு?
அழைப்புப் பணி என்றால் ஏதோ மதப்பிரச்சாரம் செய்வது எனப் பலரும் கருதிக் கொண்டிருக்கின்றார்கள். இது தவறு. மதப்பிரச்சாரம் என்பது வேறு; அழைப்புப் பணி என்பது வேறு என்பதைத் தெளிவுபடுத்தும் நூல் இது!
Author: MOULANA M.A. JAMEEL AHMED & ABDULLAH ADIYAR
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அன்புள்ள அக்காவுக்கு
மனப்போராட்டங்களை, வாழ்வியலை, சுற்றுப்புறத்தை, அதிகாரத்தை, அந்தஸ்தை, அறஇயலை, உலகியலை கடிதங்கள் – பதில் கடிதங்களாக உலவ வைத்து அதன் விளைவாக ஓர் ஆக்கப்பூர்வ மாற்றத்தை நம் நெஞ்சிலும் – நடைமுறையிலும் நிலவச் செய்யும் கடித நூல்!
Author: MAAYIL KHAIRABADHI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இதயங்களை வெல்வோம்
நபிகளார் கொண்டு வந்த செய்தியை அவரது தோழர்களும், அதற்குப் பின்னர் வந்தவர்களும் தொடர்ந்து பல சிரமங்களைத் தாங்கியும், தடைகளைத் தாண்டியும் செய்து வந்தனர். இதன் காரணமாக இஸ்லாம் உலகெங்கும் பரவி உலக மக்களில் நான்கில் ஒரு பகுதியினரைத் தன் பால் கவர்ந்துகொண்டது.
நாள்கள் செல்லச் செல்ல அழைப்புப் பணி மீது முஸ்லிம்-களுக்கு இருந்த ஆர்வம் குறைந்து அழைப்புப் பணியின் அவசியத்தை மறந்தனர். சிலர், முஸ்லிம்கள் முஸ்லிம்களாக வாழ்ந்தால் போதும்; முதலில் அவர்களைத் திருத்துவதற்கே முன்னுரிமை தரவேண்டும் என்று சொல்லி அழைப்புப் பணியைப் புறந்தள்ளினர். இதன் விளைவாக இஸ்லாத்தின் வளர்ச்சி தடைபட்டது. இஸ்லாத்தைப் பற்றி தவறான செய்திகள் பரவி முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாம் மீதான வெறுப்பும் பகையும் வளர்ந்து மேலும் அவர்களுக்கு ஹிதாயத் & நேர்வழி கிடைக்காமலேயே போய்விட்டது.
இந்த நிலையில் அழைப்புப் பணி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் மீண்டும் முஸ்லிம்களில் சில தனிமனிதர்களிடமும், சில அமைப்பு களிடமும் உருவாகி உள்ளது. எனவே ஆர்வமுள்ள அழைப்பாளர் களுக்கு அழைப்புப் பணியின் தேவையை மட்டுமல்ல, அதன் முறைகளையும் சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இத்தேவையை உணர்ந்தே இந்த நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ஆர்வமில்லாதவர்களுக்கும் ஆர்வமூட்டும் வகையிலும், அழைப்புப் பணி தேவையில்லை என்று வாதிடுவோர்க்கு உரிய விளக்கம் அளிக்கும் வகையிலும் இந்நூல் அமைந்துள்ளது.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
இருளும் ஒளியும்
அஞ்ஞான சித்தாந்தங்களை ஏற்றுக் கொள்வதால் உருவாகும் நடைமுறைகளுக்கும் இறைநெறியான சத்திய இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதால் உருவாகும் நடைமுறைகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை தர்க்கரீதியாக விளக்கும் நூல்!
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இறை நினைவு (திக்ர்) – أذكار
இந்நூலில், அன்றாடம் காலை, மாலை வேளைகளில் நாம் செய்ய வேண்டிய திக்ர்கள் மட்டும் தொகுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் திருக்குர்ஆனில் அல்லாஹ் பயன்படுத்தி உள்ள துஆக்களும் தொகுக்கப்பட்டுள்ளது.
இதனை நாம் தினசரி ஓதி வருவோம். இறை நினைவுடன் வாழ்வோம்.
Author: DR. J. MOHIDEEN (Ibnu Jamal)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாமிய அழைப்புப் பணி
இஸ்லாமிய அழைப்புப் பணி எனும் இந்நூல் நான்கு தலைப்புகளில் விவாதிக்கப்பட்டுள்ளது.முதல் தலைப்பில் தூதுத்துவத்தின் செயல்பாடுகளைப் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. அதில் இறைத்தூதர்கள் இவ்வுலகில் வருகை தந்ததற்கான காரணங்களும் அவர்கள் செய்த பெரும் சமூகப் புரட்சிகளும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. அதில், இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஆற்றிய மாபெரும் செயல்பாடுகள் எத்தகு சீர்திருத்தங்களை ஏற்படுத்தினஎன்பது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.இரண்டாவது தலைப்பு நேரடியாக இஸ்லாமிய பரப்புரை தொடர்பான கருத்துக்களை விவாதிக்கிறது. அதில் முதலாவதாக அப்பணியின் சரியான அந்தஸ்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பிறகு இஸ்லாத்தைப் பின்பற்றுவதைப் பற்றி வலுவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பிறகு பரப்புரையின் செயல்திட்டம் அதன் அடிப்படை ஒழுக்கங்கள் அதன் வெற்றி தோல்விகள் குறித்த கருத்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. இறுதியில் இறை மார்க்கம் ஏன் யாரால் நிராகரிக்கப்படுகிறது, அம்மார்க்கத்தைப் பெற்றுக் கொள்வோர் யார் என்று எடுத்துரைக்கப்பட்டுள்ளது.மூன்றாவது தலைப்பில் மனிதனை அந்த அழைப்புப் பணிக்கு ஏற்றவாறு தயார் செய்யக்கூடிய அம்சங்கள் பற்றியும் அப்பணியாற்றுவோரிடம் அவசியம் இருக்க வேண்டிய சிறப்புப் பண்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.நான்காவது இறுதித் தலைப்பு அழைப்புப் பணி, அதனை நிர்வகிப்பது தொடர்பான தகவல்களைத் திரட்டித்தருகிறது. மேலும் இஸ்லாமிய கட்டமைப்பை வலுவாக்கக்கூடிய அம்சங்கள் பற்றியும் எவ்வகையில் அது மதிப்பானதாக அமையும் என்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.நூலாசிரியர் மெளலானா சையத் ஜலாலுத்தீன் உமரீ இந்நூலில் நுட்பமான கல்வி, ஆய்வு அடிப்படையில் பேசவில்லை மாறாக கருத்துக்களை மிக எளிமையாகவும் எளிய நடையிலும் முன் வைக்க முயன்றுள்ளார்.Author: MOULANA SYED JALALUDDIN UMARI
Publisher: -
இஸ்லாமிய அழைப்பும் செயல் முறையும்
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாமிய எதிர்ப்பலைகளை எதிர்கொள்வது எப்படி?
ஊடகங்களின் தேவை குறித்தும், இஜ்திஹாதின் (நவீன பிரச்னைகளுக்கு இஸ்லாமிய அடிப்படையிலான ஆய்வு) கதவைத் திறக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், சமுதாய ஒற்றுமை குறித்தும் டாக்டர் அவர்கள் முன்வைத்துள்ள கருத்துகள் மார்க்க அறிஞர்களின், முஸ்லிம் அமைப்புகள்-கட்சிகள்-இயக்கங்களின் சிந்தனைக்கும் விவாதத்துக்கும் உரியவை.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாம் ஒரு பார்வை
துக்ளக் இதழில் வெளிவந்து பல்லாயிரக்கணக்கானவர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற முக்கியமான தொடர் இப்போது நூல் வடிவில்!
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாம் சில நிமிடங்களில்
வாழ்க்கையில் இலட்சியம் என்பது படைத்தவனை வணங்கி வாழ்வதும் படைப்பினங்களுக்கு வழங்கி வாழ்வதும் ஆகும். இவை இரண்டும் இறைக்கட்டளைகளே!
இறைக்கட்டளைகளுக்காக வாழ்வதே, வாழ்வின் இலட்சியமாகும்.
இந்த உயர்ந்த இலட்சியத்தைக் கொண்ட இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்களைப் பற்றியும் ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணமாக உள்ளன. பெரும்பாலான செய்திகள் எதிர்மறையாகவே உள்ளன. எனவே உண்மையை அறியும் ஆர்வம் பலருக்கு எழுந்துள்ளது. பரபரப்பான இக்காலகட்டத்தில் குறைந்த நேரத்தில் செய்திகளை அறிய மக்கள் விரும்புகின்றனர். எனவே சுருக்கமாக ஆனால் அதே சமயத்தில் தெளிவாகவும், புரியும்படியும், ஆதாரப்பூர்வமாகவும் இருக்கவேண்டும் என்றும் விரும்புகின்றனர்.
இந்த விருப்பத்தின் அடிப்படையில் இஸ்லாத்தை எளிய முறையில், சுருக்கமாக, சிந்திக்கின்ற விதத்தில் நாடறிந்த நல்ல சிந்தனையாளர், டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் தொகுத்தளித்துள்ளார்கள்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாம் தாக்கப்படும் போது
இஸ்லாத்தின் மீது வசைமாரி பொழியப்படும் போது முஸ்லிம்களின் உயிர் – உடைமைகள் அழிக்கப்படும் போது நம்முடைய எதிர்வினை என்னவாக இருக்க வேண்டும் என்பதைக் கூறும் நூல்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
ஒழுக்கம் பேண ஒரே வழி
மார்க்கப் பேரறிஞர் சையித் அபுல் அஃலா மௌதூதி அவர்கள், இச்சிறு நூலில் ஒழுக்கச் சிதைவுக்குரிய காரணங்களைத் தத்துவரீதியாக முழுவதும் அலசி ஆராய்ந்து “ஒழுக்கம் பேண வழி எது?” என்பதைத் தமக்கே உரிய சிறந்த முறையில் விளக்குகிறார்கள்.
ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
Author: MOULANA SYED JALALUDDIN UMARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
கடவுள் உண்டு! கடவுள் ஒன்று!
நாத்திகர்களின் மனம் புண்படாமல், அதே சமயம் நாத்திகத்திற்கு ஓர் ‘அறுவை சிகிச்சை’ நடத்தியிருக்கிறார் நாடறிந்த நல்லிணக்கப் பேச்சாளர்- எழுத்தாளர் டாக்டர் கேவிஎஸ் ஹபீப் முஹம்மத் அவர்கள்.
நீங்கள் எந்த ஊர் நாத்திகர்? தமிழ்நாட்டு நாத்திகரா? இந்திய நாத்திகரா? சர்வதேச நாத்திகரா? நீங்கள் யாராக இருந்தாலும் சரி- உங்களுக்காகவே தன் அறிவுவாசல்களை அகலத் திறந்துவைத்து இரு கைகளையும் நீட்டி அழைக்கிறது இந்த நூல்.
நாத்திக நண்பர்கள் எழுப்பும் அனைத்துக் கேள்விகளுக்கும் அறிவார்ந்த முறையில் விடை அளிக்கிறது இந்த நூல்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST