-
-
ஃபிக்ஹுஸ் ஸுன்னா – 10 (வணிகம், வட்டி, வாடகை, ஹவாலா, இரவல், வழியில் கண்டெடுத்த பொருள்கள்)
“எந்த மத்ஹபு குறித்தும் ஆதரவோ எதிர்ப்போ இல்லாமல், நபிவழியை அடிப்படையாகக் கொண்டு சட்ட விளக்கங்களைத் தருதல் எனும் மகத்தான சாதனையை ஃபிக்ஹுஸ் ஸுன்னா நூல் சாதித்துக் காட்டியிருக்கிறது” எனும் டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவியின் ஒரு வரி போதும், இந்த நூலின் சிறப்பைச் சொல்ல!ஃபிக்ஹுஸ் ஸுன்னா – தூய்மை, தொழுகை, ஜகாத் – நோன்பு – இஃதிகாஃப், ஜனாஸா, திக்ர், துஆ, பயணம், ஹஜ், உம்ரா, திருமணம், மணவிலக்கு, குற்றவியல் தண்டனைகள், ஜிஹாத் – சத்தியங்கள் – நேர்ச்சை என இதுவரை ஒன்பது தொகுதிகள் வெளிவந்தன.தற்பொழுது பத்தாம் தொகுதியில் வாழ்வாதாரத்தைத் தேடும் வணிகத்தைப் பற்றிய விரிவான தகவல்களும் வட்டி, வாடகை, ஹவாலா, இரவல், வழியில் கண்டெடுத்த பொருள்கள் என முக்கியமான தலைப்புகளில் முழுமையான விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன.Author: AS-SHAIKH SAYYID SABIQ
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஃபிக்ஹுஸ் ஸுன்னா – 11 (உணவின் சட்டங்கள், உள்ஹிய்யா (குர்பானி), அகீகா, காப்பீட்டு நிறுவனங்கள்)
ஃபிக்ஹுஸ் ஸுன்னா – 11ஆம் தொகுதியில்உணவின் சட்டங்கள், வேட்டை, உள்ஹிய்யா (குர்பானி), அகீகா, பிணையேற்றல், தோப்புக் குத்தகை (நீர் பாய்ச்சுதல்), சேவைக் கூலி, கூட்டுரிமை, காப்பீட்டு நிறுவனங்கள், சமாதானம், நீதி வழங்கல், குற்றச்சாட்டுகளும் ஆதாரங்களும், வாக்குமூலம், சாட்சியங்கள், சத்தியம், உறுதி செய்யப்பட்ட அதிகாரப்பூர்வமான ஆதாரங்கள், சிறை, நிர்ப்பந்தம் (கட்டாயப்படுத்துதல்) ஆகிய தலைப்புகளில் விரிவான சட்ட விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன.Author: AS-SHAIKH SAYYID SABIQ
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஃபிக்ஹுஸ் ஸுன்னா – 12 (ஆடை அணிகலன்கள், அறக்கொடை (வக்ஃப்), மரண சாசனம், பாகப்பிரிவினை)
ஃபிக்ஹுஸ் ஸுன்னா – 12ஆம் தொகுதியில்ஆடை அணிகலன்கள் பற்றிய தகவல்கள், உருவப்படங்களை பயன்படுத்துவது, விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது, வக்ஃப் (அறக்கொடை) செய்வது, அன்பளிப்பு அளிப்பது, ஆயுட்கால அன்பளிப்பு கொடுப்பது, குடும்பச் செலவு யாருக்கெல்லாம் செய்வது, பொருளாதாரத் தடை எப்பொழுது – யார்யார் மீது, மரண சாசனம், பாகப்பிரிவினை, வாரிசுரிமை பெறுவோர், காணாமல் போனவர் என முக்கியமான தலைப்புபகளில் முழுமையான விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன.Author: AS-SHAIKH SAYYID SABIQ
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஃபிக்ஹுஸ் ஸுன்னா – 3 (ஜகாத், நோன்பு, இஃதிகாஃப்)
Author: AS-SHAIKH SAYYID SABIQ
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஃபிக்ஹுஸ் ஸுன்னா – 4 (ஜனாஸா, திக்ர், துஆ, பயணம்)
Author: AS-SHAIKH SAYYID SABIQ
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஃபிக்ஹுஸ் ஸுன்னா 6 (திருமணம்)
Author: AS SHAIKHSAYYID SABIQ
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஃபிக்ஹுஸ் ஸுன்னா 7 (மணவிலக்கு, தலாக், குல்உ, இத்தா)
அனுமதித்த(ஹலாலான)வற்றிலேயே அல்லாஹ்விற்கு மிகவும் வெறுப்புக்குரியது ‘தலாக்’ எனும் மணவிலக்குதான். மனிதன் பலவீனமானவன், விரைவில் கோபமடைபவன், கோபம் ஷைத்தானின் செயல். கோபத்தின் காரணமாக சிலசமயம் மனைவியோடு மிகவும் கடுமையாக நடந்துகொள்கிறான். இதன் உச்சகட்டமாக மனைவியை ‘தலாக்’ சொல்லிவிடுகின்றான். இன்னும் சிலரோ ஒரே மூச்சில் ‘தலாக், தலாக், தலாக்’ என்று மூன்று முறை – முத்தலாக் – சொல்லிவிடுகின்றார்கள். இதனால் பாதிக்கப்படுவது பெண்கள் தான் என்றால் பெண்களுக்கு வேறு வழியே இல்லையா? குலா என்ற பெயரில் பெண்களுக்கும் இந்த உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது. குலாவின் சட்டம் என்ன? தலாக் குறித்து இஸ்லாம் என்ன கூறுகிறது? இதன் வரம்புகள் என்ன? முத்தலாக் என்பது பெண்ணுக்குரிய சாபமா? மணவிலக்கின் சட்டம்தான் என்ன? மணவிலக்கு தொடர்பாக யூதர்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் அறியாமைக்கால மக்களின் கருத்து என்ன? இஸ்லாம் வழங்கும் தீர்வு என்ன? போன்ற கேள்விகணைகளுக்கு விடையளித்து மணவிலக்கின் சட்டத்தைத் தெளிவுபடுத்துவதே இந்நூலின் நோக்கம்.
Author: AS SHAIKHSAYYID SABIQ
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
ஃபிக்ஹுஸ் ஸுன்னா பாகம் 5
இஸ்லாமியச் சட்டத் துறை என்றாலே அது மெத்தப்படித்த அறிஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் உரியது; எளியோருக்கும் இஸ்லாமியச் சட்டங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ எனும் ‘இரும்புச் சுவர்’ சூழல்தான் முஸ்லிம் சமூகத்தில் நிலவி வருகிறது. இதனால் ஏற்படும் விபரீதமான விளைவுகள் பற்றிச் சொல்லத் தொடங்கினால் ஏடு கொள்ளாது; எழுத்தாணி போதாது. பரபரப்பான ஒரு நகரிலுள்ள பெரிய பள்ளிவாசலில் தலைமை இமாமாகப் பல ஆண்டுகளாய்ப் பணியாற்றிவரும் மார்க்க அறிஞர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, ‘இன்றைய இளைஞர்கள்- திருமணமான இளைஞர்கள் உட்பட- குளிப்பு எப்போது கடமையாகிறது போன்ற அடிப்படை மார்க்கச் சட்டங்-களைக்கூட அறியாமல் இருக்கிறார்கள்; ஒப்பீட்டு அளவில் பதின்பருவப் பெண்பிள்ளைகள் பரவாயில்லை; பாட்டி, அம்மா, மூத்த சகோதரி என யாரேனும் ஒருவர் வளரிளம் பெண்களுக்கு சில அடிப்படை சுகாதாரங்கள் குறித்தச் சட்டங்களைச் சொல்லித் தந்துவிடுகிறார்கள். பையன்கள் நிலைமைதான் பரிதாபம்’ என்று வருத்தப்பட்டார். இந்த வருத்தத்துக்குக் காரணம் அடிப்படை மார்க்கச் சட்டங்களை நாம் பரவலாக்காததுதான். பெற்றோர்களுக்கே பல விஷயங்கள் தெரியாது எனும்போது, பிள்ளைகள் பற்றி என்ன சொல்ல? எந்த ஒரு சிறிய பிரச்னைக்கும் ‘போய் ஹஜ்ரத்துகிட்ட கேளு’ என்பதுதான் பதில். அந்தரங்க சுகாதாரச் சட்டங்கள் பற்றியெல்லாம் ஹஜ்ரத்திடம் எப்படிக் கேட்பது என்று கூச்சப்-பட்டுக் கொண்டு அது பற்றிய அறியாமையிலேயே காலம் கடத்துபவர்கள்தான் அதிகம். இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணவேண்டுமானால் எளிய பாமர மக்களிடம் இஸ்லாமியச் சட்டங்கள் சென்று சேர வேண்டும். அவர்களுக்குப் புரிகின்ற வகையில் சொல்லப்படவேண்டும். முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் சிந்தனைப்பிரிவுகள் குறித்தோ, ஒவ்வொரு சிந்தனைப் பிரிவின் சட்டவாக்கங்கள் பற்றிய வாதப் பிரதிவாதங்களோ இல்லாமல், அந்த எளிய வாசகனைக் கைப்-பிடித்து நேரடியாகக் குர்ஆனுக்கும் நபிவழிக்கும் அழைத்துச் சென்று ‘இதுதான் சட்டம், இதுதான் வழிமுறை’ என்று காண்பிக்-கின்ற வகையில் இஸ்லாமியச் சட்ட நூல்கள் வரவேண்டும். நமது சிற்றறிவுக்கு எட்டிய வகையில் வலைவீசித் தேடிப்பார்த்தும் அப்படி ஒரு நூல் இதுவரை தமிழில் இல்லை என்பது பெருங்குறையாகவே இருந்துவந்தது. அந்தக் குறையைப் போக்கும் வகையில் இதோ, இப்போது வெளிவந்துள்ளது ‘ஃபிக்ஹுஸ் ஸுன்னா’ எனும் அருமையான நூல். உலகப் புகழ்-பெற்ற இந்தச் சட்ட நூலின் முதல் தொகுதி அக்டோபர் 2014 இல் வெளியானது. இறையருளால் குறுகிய காலத்திற்-குள்ளேயே அதனுடைய இரண்டாம் தொகுதி உங்கள் கைகளில் தவழ்கிறது. இதில் தொழுகைகள் பற்றிய எல்லா விளக்கங்களும் விரிவாக இடம்பெற்றுள்ளன. ஃபர்ளு தொழுகை மட்டுமின்றி, சுன்னத் தொழுகைகள், நஃபில் தொழுகைகள், லுஹா தொழுகை, ஜும்ஆ தொழுகை, மழைத் தொழுகை, அச்ச நேரத் தொழுகை என எல்லாத் தொழுகைகள் பற்றிய விளக்கங்களும் உள்ளன. “எந்த மத்ஹபு குறித்தும் ஆதரவோ எதிர்ப்போ இல்லாமல், நபிவழியை அடிப்படையாகக் கொண்டு சட்ட விளக்கங்களைத் தருதல் எனும் மகத்தான சாதனையை ஃபிக்ஹுஸ் ஸுன்னா நூல் சாதித்துக் காட்டியிருக்கிறது” எனும் டாக்டர் யூசுபுல் கர்ளாவி அவர்களின் ஒரு வரி போதும், இந்த நூலின் சிறப்பைச் சொல்ல! இந்த பூமிப் பந்தில் தமிழ்பேசும் முஸ்லிம்கள்-குறிப்பாக இளைய தலைமுறையினர்- எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் இந்த நூல் சென்று சேர வேண்டும்; அவர்களின் அன்றாட வாழ்வுக்கு இது ஒரு குறிப்பு நூலாகப் பயன்பட-வேண்டும்; இந்த நூலில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளுக்கு ஏற்ப வாழ்ந்து, உடல் நலனையும் ஆன்ம நலனையும் பெற்றுப் பெருவாழ்வு வாழவேண்டும் என்பது எங்கள் வேணவா.Author: AS-SHAIKH SAYYID SABIQ
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஃபிக்ஹுஸ் ஸுன்னா: பாகம் – 8 (குற்றவியல் தண்டனைகள்) (இஸ்லாமிய சட்டக் கருவூலம்)
நாளுக்குநாள் நீதி மழுங்கடிக்கப்பட்டு வருகிறது. ஆளுக்கொரு நீதி. பணக்காரர்களுக்கு ஒரு நீதி, ஏழைகளுக்கு ஒரு நீதி. உயர் சாதியினருக்கு ஒரு நீதி, தாழ்ந்த சாதியினருக்கு ஒரு நீதி என்று உண்மைக்கும் நேர்மைக்கும் மாற்றமாக, பணத்திற்கும், உயர் சாதியினருக்கும் நீதி விலைபோய்க்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் நீதியின் அடிப்படையில் எந்தெந்தக் குற்றங்களுக்கு எந்தெந்த தண்டனைகளும் இழப்பீடுகளும் இஸ்லாமிய ஷரீஅத் வழங்குகிறது, மேலும், மது, போதைப்பொருள்கள், விபச்சாரம், ஒருபால் உறவு, விபச்சார அவதூறு, திருட்டுக் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை, பெருங்குற்றங்கள், கண்டனத்துக்குரிய குற்றங்கள் அவற்றுக்கு இஸ்லாமிய ஷரீஅத் வழங்கும் தண்டனைகள் போன்றவற்றை விரிவாக விளக்கும் சட்ட நூல்.
Author: AS SHAIKHSAYYID SABIQ
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஃபிக்ஹுஸ் ஸுன்னா: பாகம் – 9 (ஜிஹாத் / சத்தியங்கள் / நேர்ச்சை) (இஸ்லாமிய சட்டக் கருவூலம்)
ஃபிக்ஹுஸ் ஸுன்னா – பாகம் 9 ( இஸ்லாமிய சட்டக் கருவூலம் ) ஜிஹாத், சத்தியங்கள், நேர்ச்சை என்ற பகுதிகளை உள்ளடக்கியதாக விளங்குகிறது.
இந்த பாகம், சமாதானத்தை விரும்புகின்ற இஸ்லாம் அதற்குரிய வழிமுறைகள் என்ன என்று எடுத்துரைப்பதாகவும், மத சுதந்திரத்தில் என்னென்ன வழிமுறைகள் கடைபிடிக்க வேண்டுமென்பதையும், ஜிஹாத் அதன் செயற்பாடுகள் எப்படிப்பட்டவையாக இருக்குமென்பதையும், சத்தியத்தின் பொருள், நிபந்தனைகள், வகைகள் என்று அதனை விளக்குவதாகவும் மேலும், நேர்ச்சை, அதன் விளக்கங்களை அளிப்பதாகவும் அமைந்துள்ளது.Author: AS-SHAIKH SAYYID SABIQ
Publisher: ISLAMIC FOUNDATION TRUST