-
ஜமாஅத் கடந்து வந்த பாதை – ஐந்தாம் தொகுதி
நம் நாடு விடுதலை பெறுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு நாட்டின் வெவ்வேறு இடங்களில் ஜமாஅத்தே இஸ்லாமி நடத்திய மாநாடுகளின் நிகழ்ச்சிப் பதிவுகளை விவரிக்கின்ற நூல்தான் இந்நூல்.விடுதலை வேட்கையும் மக்கள் போராட்டங்களும் உச்சக்கட்டத்தை அடைந்து விட்டிருக்க, அவற்றோடு அரசியல் ஆதாயங்களுக்காக இந்துக்கள் என்றும், முஸ்லிம்கள் என்றும் மக்களை பிளவுபடுத்தி அரங்கேற்றப்பட்டு வந்த வெறுப்பரசியலின் தீய நாக்குகள் ஒட்டுமொத்த தேசத்தையும் பொசுக்கிக் கொண்டிருந்த, தினம் தினம் கலவரம், நித்தம் நித்தம் கொலை, கொள்ளை, சூறையாடல் என மதவாத வெறுப்பும் நெருப்பும் பேயாட்டம் போட்டுக் கொண்டிருந்த கொந்தளிப்பான நாள்களில் இராஜஸ்தான், மதராஸ், பீகார் என வெவ்வேறு பகுதிகளில் நடந்த மாநாடுகள்தாம் அவை.இயக்கத் தலைவர்களின் எழுச்சியுரைகள், இயக்க ஊழியர்களின் பரிந்துரைகள், அன்றையக் காலத்துச் சூழலைப் படம்பிடித்துக் காட்டுகின்ற தகவல்கள், செயல் அறிக்கைகள் மீதான கருத்-துரைகள் என இந்த மாநாடுகள் பற்றிய விவரங்களை நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்திவிடுகின்றது இந்த நூல். -
ஜமாஅத் கடந்து வந்த பாதை – நான்காம் தொகுதி
எழுபத்திரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏப்ரல் மாதத்தில் நடந்த ஜமாஅத்தே இஸ்லாமி மாநாட்டின் நிகழ்ச்சித் தொகுப்பை விவரிக்கின்ற நூல்தான் இந்த நூல்.
விடுதலை வேட்கையும் மக்கள் போராட்டங்களும் உச்சக்கட்டத்தை அடைந்து விட்டிருக்க, ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கான நாள்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்த கொந்தளிப்பான நாள்களில் அலஹாபாதில் நடந்த மாநாடு.
இயக்கத்தின் அழைப்பும் செய்தியும் தொடக்கத்திலிருந்தே பெண்களையும் பெரும் அளவில் ஈர்த்தும் இயக்கியும் வந்துள்ளன என்பதற்கு இயக்கச் சகோதரி ஒருவரின் ஒரு மாத செயல் அறிக்கையே சான்று. எட்டு பக்கங்களில் நீள்கின்ற இந்த அறிக்கை தருகின்ற செய்திகள் ஏராளம், ஏராளம். மதச் சார்பற்றக் கல்வி கற்றவர்கள் இயக்கத்தை எப்படிப் பார்த்தார்கள், அவர்கள் மத்தியில் இருந்த ஐயங்களை இயக்கத் தலைவர்கள் எவ்வாறு தீர்த்தார்கள் என்பது பற்றிய விவரங்களை அப்படிப்பட்ட சகோதரர் ஒருவர் எழுதிய கடிதமும் அதற்கு ஜமாஅத் தலைவர் அளித்த பதில் கடிதமும் சுவையாக விவரிக்கின்றன.
ஜமாஅத்துடன் தம்மைப் பிணைத்துக்கொண்ட சகோதர, சகோதரிகள் அனைவரையும் இயக்கப் பணியில் ஈடுபடுத்திக்-கொள்கின்ற நோக்கத்துடன் ஒவ்வொருவரிடமும் இருக்கின்ற தனிப்பட்ட திறமைகள், ஆற்றல்கள், ஆர்வங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு துறைகளில் களம் இறக்குவதற்காக இலக்கியம், இதழியல், மொழிபெயர்ப்பியல், சட்டம், வரலாறு, தத்துவம், பொருளியல், அரசியல் என இருபத்தைந்து துறைகளுக்காகத் தனித்தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டன என்கிற செய்தி சிந்திக்க வைக்கின்றது.
மொத்தத்தில் இந்த நூல் அனைவரிடமும் இருக்க வேண்டிய வரலாற்று ஆவணமாக, வழிகாட்டுதல்களையும் அறவுரைகளையும் அள்ளித் தருகின்ற கருத்துப் பெட்டகமாக, ஊக்கமும் உற்சாகமும் அளிக்கின்ற சரித்திரக் குறிப்புகளைக் கொண்ட பதிவேடாக மிளிர்கின்றது.Author: T. AZEEZ LUTHFULLAH
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஜமாஅத் கடந்து வந்த பாதை 1
ஜமாஅத்தே இஸ்லாமி எப்பொழுது தொடங்கப்பட்டது?இயக்கத்தின் துவக்கக் கட்டத்தில் எத்தகையப் பிரச்னைகள் ஏற்பட்டன?அவை எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டன?துவக்கக் கால கூட்டங்களில் கலந்து கொண்ட புகழ் பெற்ற மார்க்க அறிஞர்கள் யார்? யார்?இந்தியத் துணைக் கண்டத்தின் மாபெரும் இஸ்லாமிய இயக்கமான ஜமாஅத்தே இஸ்லாமியின் வரலாறு கூறும் முதல் தொகுதி…!Author: G. ABDUR RAHIM
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஜமாஅத் கடந்து வந்த பாதை 2
ஏகத்துவம், தூதுத்துவம், மறுமை, அனைத்து மக்களும் ஒரே தாய் தந்தையின் வழித்தோன்றல்கள் எனும் உண்மைகளை மனிதன் மனமார ஏற்றுக் கொள்ள வேண்டும்.இந்தக் கொள்கைகளை ஏற்றுச் செயல்படுத்தும்படி மக்கள் அனைவரையும் அழைக்கவே ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கம் ஏற்படுத்தப்பட்டது.அதன் வரலாற்றின் இரண்டாம் தொகுதியே இந்நூல்Author: G. ABDUR RAHIM
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
ஜமாஅத்தே இஸ்லாமி சில சந்தேகங்களுக்கு பதில்கள்
ஜமாஅத்தே இஸ்லாமி 1941இல் சுதந்திர இந்தியாவிற்கு முன்பாக அமைக்கப்பட்டது.இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் இருந்தே அறியாமையின் வெளிப்பாடாக எதிர்க்கும் குழுவினரும் உருவானார்கள். அவர்களின் விருப்பு வெறுப்புக்கேற்றவாறு இவ்வியக்கத்தை விமர்சனம் செய்யத் தொடங்கினார்கள். மக்களுக்கிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதன் மூலம் ஒரு தவறான சித்திரத்தை உருவாக்க முயன்றார்கள். அதே சூழ்நிலை இன்றும் தொடர்கிறது. அன்று என்ன பதில்கள், மறுப்புகள், விளக்கங்கள் அளிக்கப்பட்டதோ அவைகளே இன்றும் பதில்களாக கொடுக்க வேண்டியதாக இருக்கிறது.
Author: MOULAVI MOHAMMED ISMAIL IMDHADHI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – ஒரு பார்வை
இந்தச் சிற்றேடு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் குறித்த விவரங்களைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கிறது.ஜமாஅத்தின் நோக்கம் – குறிக்கோள், செயல் திட்டங்கள், பணிகள் ஆகியவற்றைக் கூறி இச்சிறு நூல் நம்மை வியப்படையச் செய்கிறது.Author: K. JALALUDEEN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – நோக்கமும் வழிமுறையும்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – நோக்கமும் வழிமுறையும்’ எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த சிறிய நூல், இஸ்லாமிய மார்க்கத்தின் முன்னேற்றத்துக்காக இந்தியத் துணைக் கண்டத்தில் முறையாக இயங்கி வருகின்ற ‘ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்’-ன் இலக்குகள் செயல்பாடுகள், வழிமுறைகள் பற்றியும், இஸ்லாத்தைப் பற்றியும் மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ள தவறான கருத்துக்களை நீக்குவதற்கும் இதில் முயற்சி செய்யப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து இகாமத்துத் தீனின் வழியில் ஜமாஅத்தே இஸ்லாமியுடன் ஒத்துழைப்பு வழங்குமாறு முஸ்லிம்களிடம் வேண்டுகோள் வைப்பதுடன் ஜமாஅத்தே இஸ்லாமியின் செயல்முறை பண்புகளையும் உண்மையிலேயே புரிந்துகொள்ள முயற்சிக்கக் கூடியவர்களுக்கு இந்த சிறு நூல் பயனளிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் சர்வ வல்லமை கொண்ட அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தவாறு இந்நூலை பெரும்பான்மை சமுதாயத்திற்கு சமர்ப்பிக்கின்றோம்.Author: Moulana Abullais Islahi Nadvi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஜம்ஜமின் வரலாறு (குர்ஆனிய கதைகள் – 10)
நபி இப்ராஹீம் (அலை) – அவரது மனைவி ஹாஜிரா (அலை) மற்றும் குழந்தை இஸ்மாயீல் (அலை) இருவரையும் பாலைவனத்தில் தன்னந்தனியாக விட்டுச் சென்றார். இது இறைவனின் கட்டளை என்றார். பிறகு இஸ்மாயீல் (அலை) அவர்களுக்கு கடுமையான தாகம் ஏற்பட்டது. ஹாஜிரா (அலை) அவர்கள் ஏழு முறை மலைக் குன்றுகளில் ஏறி இறங்கினார். தண்ணீர் கிடைக்கவே இல்லை. இறுதியில் இறைவனின் அருட்கொடையாக இஸ்மாயீல் (அலை) அவர்களின் கால்கள் தட்டிய இடத்தில் நீரூற்றை உருவாகியது. அதுவே இன்றுவரை மக்களுக்கு தண்ணீர் வழங்கிக் கொண்டிருக்கிறது. இது குறித்து திருக்குர்ஆனின் வழியாக சிறுவர்களுக்கு அழகான வண்ணப் படங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளது இந்நூல்.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
ஜுமுஆ தொழுகை
* ஜுமுஆ தொழுகை * ஜுமுஆ தொழுகையின் மொழி * அண்ணலாரின் குத்பா * இஸ்லாத்தில் அரபு மொழிக்குரிய உண்மையான அந்தஸ்து * அரபியல்லாத மொழியில் குத்பா நிகழ்த்துவது கட்டாயமா?
குத்பாவின் மொழி தொடர்பாக எழுதப்பட்டுள்ள நூல்களில் அறிவுப்பூர்வமான ஒன்றாகத் இந்நூல் திகழ்கின்றது.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஷாஹீன்பாக் – குறுநாவல்
“வெளிப்படையான மதப் பாகுபாட்டிற்கு சட்ட அங்கீகாரம் வழங்கக்கூடிய குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராகநாடெங்கும் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடிய ஒரு போராட்ட வரலாற்றின் கதையை எதிர்காலத்திலிருந்து பின்னோக்கிப் பார்த்து விவரிக்கிற இந்நாவலை இஸ்லாமிய இலக்கியப் பரப்பில்வெளிவந்த ஒரு முக்கிய பங்களிப்பாகப் பார்க்கிறேன்.எதிர்வரும் தலைமுறை ஷாஹீன் போராட்டம் குறித்தும்அதன் வலிகள், தியாகங்கள் குறித்தும் அறிந்து கொள்ளும்படியானஓர் ஆவணமாக வெளிப்பட்டிருக்கிறது.”– இயக்குநர் மீரா கதிரவன்Author: V.S. MOHAMMED AMEEN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஷேக் அப்துல் காதிர் ஜீலானி
மாமேதை ஷேக் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் வாழ்வையும் பணிகளையும் ஆதாரப்பூர்வமாக விளக்கும் நூல்!
Author: MOULANA ABUL HASAN ALI NADVI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஹலால் ஹராம் – அனுமதிக்கப்பட்டவை விலக்கப்பட்டவை
டாக்டர் யூசுஃப் அல்கர்ளாவி அவர்களுடைய தலை சிறந்த படைப்புகளில் ஒன்றுதான் ஹலால் ஹராம் எனும் இந்நூல். எது ஹலால் எது ஹராம் என்பது குறித்து இந்த நூற்றாண்டில் வெளிவந்த மிகச் சிறந்த நூல்களில் ஒன்றாகும் இது.
தனிமனிதன், குடும்பம், சமூகம் போன்ற நிலைகளில் நாம் சந்திக்கும் ஒட்டுமொத்த பிரச்சினைகளில் எவையெல்லாம் அனுமதிக்கப்பட்டவை (ஹலால்) எவையெல்லாம் தடை செய்யப்பட்டவை (ஹராம்) என்பது குறித்து அல்குர்ஆன், ஹதீஸ் ஒளியில் இவ்வளவு விரிவாகவும் விளக்கமாகவும் மற்றொரு நூல் வெளிவந்துள்ளதா என்று தெரியவில்லை.
1994 ஆம் ஆண்டு வெளிவந்த அல்ஹலால் வல் ஹராம் என்ற அரபு நூலின் பதினைந்தாவது பதிப்பையே தமிழ் மொழிபெயர்ப்புக்கு நாம் உபயோகப்படுத்தியுள்ளோம்.
ஆங்கிலம், உர்து, டர்கிஷ் போன்ற மொழிகளிலும் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ‘பெஸ்ட் செல்லர்’ என்று அழைக்கப்படும் எப்போதும் அதிகமாக விற்பனையாகும் அரபி நூல்களில் இதுவும் ஒன்று.
Author: DR. YUSUF AL QARDHAWI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஹஜ் ஒரு விளக்கம்
ஹஜ் ஒரு விளக்கம்
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஹஜ் – உம்ரா வழிகாட்டி கையேடு
ஹஜ், உம்ராவை நிறைவேற்றும் வழிமுறைகளை விரிவாக விளக்கும் நூற்கள் பல உள்ளது. ஆனால், ஹஜ்ஜின் போது ஓத வேண்டியவற்றை நினைவில் வைப்பது ஹாஜிகள் பலருக்கு கடினமாக உள்ளது. உதாரணமாக, ஸயீயின் தொடக்கத்தில் என்ன துஆ, திக்ர் ஓத வேண்டும்? கூட்ட நெரிசலில், பையில் உள்ள நூலை எடுத்து ஓதுவதும் சிரமமே.
வாழ்வில் ஒரு முறை செய்யும் கடமை என்பதால், சரியாக நிறைவேற்றவில்லையோ என்ற கவலை ஹாஜிகள் பலருக்கு உள்ளது.
இதனை நீக்கும் விதமாக, ஹஜ் உம்ராவின் சுருக்க கையேட்டினை தயாரித்து உள்ளோம். இதில் முக்கியமான வழிபாட்டு முறைகள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளது. இஹ்ராம் ஆடையில், கழுத்தில் தொங்கவிட்டவாறே இந்நூலை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Review:
https://youtube.com/shorts/U3R3S47TC9s?feature=share
Author: Dr. J. Mohideen
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஹஜ் – உம்ரா வழிமுறைகள்
ஹஜ் – உம்ரா புனிதப் பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம்களுக்கு ஓர் அருமையான வழிகாட்டி நூல்! ஹஜ்ஜின் கிரியைகள், வழிமுறைகள், பிரார்த்தனைகள் அனைத்தையும் விளக்கும் உன்னத நூல்.
Author: DR. V. ABDUR RAHIM
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஹஜ் – உம்றா வழிகாட்டிகள்
ஹஜ் – உம்ரா புனிதப் பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம்களுக்கு ஓர் அருமையான வழிகாட்டி நூல்கள்! ஹஜ்ஜின் நோக்கங்கள், கிரியைகள், வழிமுறைகள், பிரார்த்தனைகள் என அனைத்தையும் விளக்கும் உன்னத நூல்கள்.
Author: Dr. V. Abdur Rahim + Moulana Syed Abul A’la Moududi (Rah)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹145 -
ஹஜ்ரத் உமரும் அடிமை அஸ்லமும் (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 13)
கலீஃபா உமர் (ரலி) அவர்களின் காலத்தில், ஓர் ஏழை பெண் வீட்டில் தம் குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்ததையும் அவள் சமைக்க உணவு இல்லாமல் வெறும் தண்ணீரை சூடாக்கிக் கொண்டிருந்ததையும் கண்டார். குழந்தைகள் பசியால் உறங்கிவிட்டனர். உமருக்கும் அந்தத் தாய்க்கும் இடையே நடைபெற்ற உரையாடலும் அதற்குப் பின் உமர் (ரலி) அவர்கள் அரசுக் கருவூலத்திலிருந்து தாமே சாக்குப் பையில் மாவையும் பேரீச்சம்பழங்களையும் தம் முதுகில் சுமந்து சென்றதையும் அவரின் அடிமை அஸ்லம் துடிதுடித்துப் போனதையும் அதற்கு பின் நடந்த சுவையான சம்பவங்களையும் பற்றி பேசும் நூல்.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
ஹிஜாப் – உள்ளும் புறமும்
கண்ணுக்கு இமை போல் பெண்ணுக்கு ஹிஜாப்.
பெண்கள் எந்தத் தொல்லைக்கும் ஆளாகக்கூடாது எனும் உயர்நோக்கத்துடன் இஸ்லாமியத் திருநெறி பெண்களுக்குப் பர்தாவைக் கடமையாக்கியுள்ளது. அதையொட்டிய அருமையான வழிகாட்டுதல்கள் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
ஹிஜாப் என்பது என்ன, உடையில் மட்டும்தான் ஹிஜாபா, அதன் சட்ட திட்டங்கள் என்ன, நபித்தோழியர்கள் ஹிஜாபுக்குத் தந்த முக்கியத்துவம் என்ன, முகத்திரை அவசியமா, நபிகளாரின் காலத்தில் பெண்கள் முகத்தை மறைத்தார்களா முதலிய பலவகையான வினாக்களுக்கு இந்தச் சிறுநூல் மிகத் தெளிவாக விடை அளிக்கிறது.
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST