-
முஸ்லிம் தனியார் சட்டம்
முஸ்லிம் தனியார் சட்டத்தின் நன்மை, அதன் முக்கியத் துவம், அதில் திருத்தங்கள் கொண்டு வருவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெளிவாக எடுத்துரைக்கும் நூல்!
Author: SHAMS PEERZADA
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
முஸ்லிம் பெண்களின் பிரச்னைகளும் தீர்வுகளும் – அத்தியா சித்தீகா
இஸ்லாமியக் குடும்ப அமைப்பு குறித்துப் பலவித குறைகள் அடிக்கடி எழுப்பப்பட்டு வந்துள்ளன. இன்றைக்கு முத்தலாக், பலதார மணம் ஹலாலா போன்றவற்றைக் குறிப்பிட்டு ஒட்டுமொத்த தேசத்திலும் ஊடகங்கள் மூலமாகத் தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன. இப்படி இஸ்லாமிய போதனைகள் மீது ஆட்சேபங்கள் கிளப்பப்படுவதற்கான முதற்காரணம் முஸ்லிம் சமூகம் சீர்குலைந்து கிடப்பதுதான். இறைவனால் அருளப்பட்ட போதனைகளைக் கைவிட்டதனால் தான் இன்று நெருக்கடியான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
இந்த உண்மைகளை உணர்த்தி, முஸ்லிம் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளை எடுத்துக்காட்டி, அவற்றுக்குரிய தீர்வுகளையும் கூறியுள்ளார் ஆசிரியர் அத்தியா சித்தீகா அவர்கள்.Author: ATHIYA SIDDIQUA
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம்
Author: KARAIKANDAM K. NEDUNCHEZHIAN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
முஹம்மத் (ஸல்) அவர்களின் நற்பண்புகள் – நன்னடத்தைகள் (பாகம் – 1)
நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் நிறைந்திருக்கும் நற்பண்புகளும் நன்னடத்தைகளும் புதிய கோணத்தில் வெளிக்கொணர வேண்டுமென்ற குறிக்கோளுடன் டாக்டர் ஆதில் ஸலாஹி அவர்கள் எழுதிய Muhammad His Character and Conduct” என்ற நூலின் தமிழாக்கம்தான் “முஹம்மத் (ஸல்) அவர்களின் நற்பண்புகள் – நன்னடத்தைகள்” என்ற இந்நூலின் முதல் பாகம்.
Author: Dr. Adil Salahi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
முஹம்மத் (ஸல்) அவர்களின் நற்பண்புகள் – நன்னடத்தைகள் (பாகம் – 2)
நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் நிறைந்திருக்கும் நற்பண்புகளும் நன்னடத்தைகளும் புதிய கோணத்தில் வெளிக்கொணர வேண்டுமென்ற குறிக்கோளுடன் டாக்டர் ஆதில் ஸலாஹி அவர்கள் எழுதிய “Muhammad His Character and Conduct” என்ற நூலின் தமிழாக்கம்தான் “முஹம்மத் (ஸல்) அவர்களின் நற்பண்புகள் – நன்னடத்தைகள்” (பாகம் – 2).
இதன் முதல் பாகம் ஜூலை 2019 வெளியிடப்பட்டது.
முஹம்மத் (ஸல்) அவர்களின் நற்பண்புகள் – நன்னடத்தைகள்
Author: Dr. Adil Salahi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
முஹம்மத் நபிகளார் (ஸல்) முகம் சிவந்த தருணங்கள்
எப்போதும் புன்முறுவல் பூத்த முகத்துடன் இருந்த, இருக்கச் சொன்ன நபி (ஸல்) அவர்கள் சில வேளைகளில் கோபத்தால் முகம் சிவந்தவர்களாகத் தமது தோழர்களைக் கண்டித்துச் சீர்படுத்தினார்கள். அதிலிருந்து நமக்குக் கிடைக்கும் படிப்பினைகள் என்ன என்பதை வரலாற்று நிகழ்வுகளோடு எடுத்துரைக்கிறது இந்நூல்.
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
முஹலாயர் ஆட்சியில் இந்தியா – பாபர் முதல் பஹதூர் ஷா (II) வரை
பொதுவாக முகலாய மன்னர்களின் வரலாறு எழுதப்படும்போது, ஔரங்கசீப்பிற்குப் பிறகு ஆட்சி செய்த அனைத்து மன்னர்கள் குறித்த செய்திகளும் இடம் பெறுவதில்லை. ஆனால் இந்த நூலில் 1707ஆம் ஆண்டு ஔரங்கசீப் மறைவிலிருந்து 1832ஆம் ஆண்டு இரண்டாம் பஹதூர்ஷா ஆட்சிப் பொறுப்பேற்கும் வரை ஆட்சிக் கட்டிலில் பெயரளவிற்கு இருந்து மறைந்துபோன 13 மன்னர்களைக் குறித்த அரசியல் செய்திகளையும் குறிப்பிடுவது சிறப்பாகும். வரலாறு படிக்கும் மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
Author: P. Sirajudeen
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மூன்றடுக்கு சோதனை (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 20)
அப்பாஸிய கலீஃபாக்கள் காலத்தில் அறிஞர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரிடம் அவரின் நண்பர் பற்றிக் கூற ஒருவர் வந்தார். வந்தவரிடம் நீங்கள் கூறும் அச்செய்தி உண்மை, நன்மை, பயன் போன்ற மூன்றுக்கு உட்பட்டதா? ஆம் என்றால் சொல்லுங்கள். இல்லை என்றால் ஏன் என்னிடம் சொல்ல வேண்டும் என்றார்…
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
மூஸா நபி வரலாறு
பிறந்த போதே திடுக்கிடும் சூழலைக் கடந்த மூஸா நபி அவர்கள் கொடுங்கோலன் ஃபிர்அவ்ன் இல்லத்தில் வளரும் சூழல், திருமணம், அவர்களுக்கு வழங்கப்பெற்ற தூதுத்துவம், அற்புதங்கள், மீண்டும் எகிப்து திரும்புதல், தூதுத்துவத்தை நாடாளும் மன்னரிடமும் மக்களிடமும் சேர்ப்பித்தல் ஆகியவற்றை வரிசையாக இந்த நூல் முன்வைக்கிறது. கொடுங்கோலன் ஃபிர்அவ்னின் அழிவைப் பற்றியும் இறுதியில் சத்தியம் வென்றதையும் தெளிவுபடுத்துகிறது. அநீதியை எதிர்த்து மூஸா நபி போராடி வென்றதை இந்த நூல் அருமையாக விவரிக்கிறது. மூஸா நபியின் துணிவு, வீரம், வேகம், விவேகம், சமூக நீதிக்கான போராட்டம், ஒடுக்கப்பட்டோருக்கு உதவிக்கரம் நீட்டுவது உள்ளிட்ட சிறப்புப்பண்புகளை இதில் காணலாம்.
Author: E.A. Fazlur Rahman Umari
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மூஸா நபியின் பிறப்பு (குர்ஆனிய கதைகள் – 6)
மூஸா நபியின் பிறப்பு – எகிப்து நாட்டு ஆட்சியாளன் கொடுங்கோலன் ஃபிர்அவ்னின் கொடூரத் தனம் – இறைவனின் மாபெரும் அற்புதம் – கொடுங்கோலன் ஃபிர்அவ்னை இறைவன் கடலில் மூழ்கடித்தது குறித்தும் திருக்குர்ஆனின் வழியாக சிறுவர்களுக்கு அழகான வண்ணப் படங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளது இந்நூல்.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
மெளலானா மெளதூதி பதில்கள் (பாகம் – 1)
கேள்வி பதில் என்பதைவிட பல்வேறு துறைகளின் ஆழமான இஸ்லாமிய சிந்தனைகளை தூண்டக்கூடிய அறிவுக் கருவூலமாக இந்நூல் அமைந்திருக்கிறது. கேள்விகளுக்கு பதில் கொடுப்பதோடு தன் பொறுப்பு நிறைவேறிவிட்டது என்று விட்டுவிடாமல் கேள்வி கேட்டவரின் நிலையை நன்கு புரிந்துகொண்டு அவருடைய தீராத சிக்கல்களை தீர்ப்பதற்கான முயற்சிகளையும் மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் செய்துள்ளார்.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மெளலானா மெளதூதி பதில்கள் (பாகம் – 2)
இறைவேதம், இறைத்தூதர்கள், நபி முஹம்மத் (ஸல்), காதியானிகள், நபிமொழிகள், நபித்தோழர்கள், இறைநம்பிக்கை தொடர்பான 40 கேள்விகளுக்குரிய பதிலை இந்நூலில் மௌலானா அவர்கள் அழகாக கொடுத்துள்ளார்கள்.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மெளலானா மெளதூதி பதில்கள் (பாகம் – 3)
மார்க்கச் சட்டங்கள், இஸ்லாமும் பெண்களும், மருத்துவமும் இஸ்லாமும், இறை வணக்கம், பொருளாதாரம், இஸ்லாமிய இயக்கம் மற்றும் பொதுவான அதே சமயம் முக்கியமான 46 கேள்விகளுக்குரிய பதிலை இந்நூலில் மௌலானா அவர்கள் அழகாக கொடுத்துள்ளார்கள்.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மௌனச் சிந்தனைகள் (Silent Thoughts)
வாழ்க்கை தந்த பாடங்களைத் தனது மௌன மனதின் அடிநாளத்திலிருந்து எடுத்து எழுதியிருக்கிறார். அவருடைய பெற்றோரின் வாழ்க்கை கற்றுத் தந்தவற்றையும் அதன் மூலம் தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டதையும் வாழ்க்கையை எந்த முறையில் எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் அவர் இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது நூலாசிரியர் உயிரோடு இல்லையென்றாலும் வாழ்கின்ற மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்து மறைந்திருக்கிறார். மாற்றுத் திறனாளியாக, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டவராக அதுவும் அபூர்வமான நோயால் Duchenne Muscular Dystrophy (DMD) பாதிக்கப்பட்டு மருத்துவர்களால் சில ஆண்டுகளே வாழ்வார் என்று அறிவிக்கப்பட்டு அதையும் மீறி இறைவன் கொடுத்த வாய்ப்பு வரை சுமார் 26 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்திருக்கிறார். படுக்கையில் படுத்த வண்ணம் தன்னிடமிருந்த வலிமையைப் பயன்படுத்தி ஒரு விரலால் ஐபோனில் தட்டச்சு செய்து புத்தகங்களைப் படைத்திருக்கிறார்; இர்பான் ஹாபிஸ் மூன்று புத்தகங்களை எழுதியிருக்கிறார். அவை :
1. Silent Struggle
2. Moments Of Merriment (Stories of children)
3. Silent Thoughts மௌனச் சிந்தனைகள் என்ற இப்புத்தகம்.Author: Irfan Hafiz
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
யானை ஆண்டு (குர்ஆனிய கதைகள் – 9)
எத்தியோப்பிய ஆளுநர் ஆப்ரஹா என்பவன் மக்காவில் உள்ள கஅபா ஆலயத்திற்கு அரபிகள் கொடுத்துவரும் முக்கியத்துவம் அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே கஅபாவை இடிக்க திட்டமிட்டு யானைப் படையுடன் மக்காவிற்கு வந்தான் – இறைவன் கஅபாவை காப்பாற்ற அபாஃபீல் என்ற சிறுசிறு பறவைகளை சிறுசிறு கற்கலைக் கொண்டு பெரும் யானைப் படையை அழித்தான் இது குறித்து திருக்குர்ஆனின் வழியாக சிறுவர்களுக்கு அழகான வண்ணப் படங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளது இந்நூல்.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
யாஸீன் (மூலம் • தமிழாக்கம் • விளக்கவுரை)
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
யூசுப் சகோதரர்கள்
இறைத்தூதரான யாகூப் நபியின் அன்பு மகன்தான் யூசுப் நபி. யூசுப் நபியின் வரலாற்றை ‘அழகிய வரலாறு’ எனக் குர்ஆனே குறிப்பிடுகிறது. ஆம், அந்த அளவுக்கு விறுவிறுப்பான நிகழ்வுகளும், படிப்பினையும் நிறைந்த ஓர் உன்னதமான வரலாற்றுக் காவியம் அது! இறைநம்பிக்கை, பொறுமை, துன்பங்களைச் சகித்துக்கொள்ளுதல், பெற்றோர் மீதான பாசம், சத்தியத்தைப் பிறருக்கு எடுத்துரைத்தல், தீமை செய்தவர்களுக்கும் நன்மையே செய்தல் போன்ற அத்தனை நற்பண்புகளுக்கும் ஓர் அழகிய எடுத்துக்காட்டுதான் யூசுப் நபி (அலை) அவர்கள்.
அவருடைய வரலாற்றைத் திருக்குர்ஆனின் 12ஆம் அத்தியாயம் சுவைபட விவரிக்கிறது. அந்த அத்தியாயத்தைத் தழுவியே இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
Author: ELMA RUTH HARDER
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
யூசும் நபியும் சகோதரர்களும் (குர்ஆனிய கதைகள் – 8)
நபி யாகூப் (அலை) அவர்களின் 12 மகன்களில் யூசும் நபியும் ஒருவர் – அவரின் மீது தந்தைக்கு இருந்த பேரன்பு மற்ற சகோதரர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தியது. பின்னர் நபி யூசுபை அவரின் சகோதரர்கள் சூழ்ச்சி செய்து கிணற்றில் வீச அவ்வழி வந்த பயணக் கூட்டம் அவரை எடுத்துச் சென்று சந்தையில் விற்க அவரை எகிப்து மன்னர் தத்தெடுத்து வளர்க்க பிற்காலத்தில் அவரும் இளவரசராக மாற இறுதியில் யூசுபின் மற்ற சகோதரர்களும் யாகூப் (அலை) அவர்களும் ஒன்று சேர்ந்ததைக் குறித்து திருக்குர்ஆனின் வழியாக சிறுவர்களுக்கு அழகான வண்ணப் படங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளது இந்நூல்.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
யூனுஸ் நபி (அலை) (குர்ஆனிய கதைகள் – 7)
யூனுஸ் நபி (அலை) அவர்களின் அழைப்புப் பணி – அவரின் சமுதாயத்தின் சிலை வழிபாடு – யூனுஸ் நபி (அலை) மனம் உடைந்து ஊரைவிட்டு புறப்படுதல் – இறைவன் யூனுஸ் நபி (அலை) அவர்களை மீன் வயிற்றில் சிக்கவைத்து படிப்பினையூட்டுதல் – யூனுஸ் நபியின் பிரார்த்தனை குறித்தும் திருக்குர்ஆனின் வழியாக சிறுவர்களுக்கு அழகான வண்ணப் படங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளது இந்நூல்.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -