-
-
மனிதர்கள் (அல்லாஹ்வின் அற்புதங்கள்- 10)
மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம்…. (திருக்குர்ஆன் 49:13)
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
மனிதவள மேம்பாட்டின் முக்கியத்துவம்
இந்நூல் மனிதவளம் என்றால் என்ன? மனிதவளத்தை எப்படி மேம்படுத்த முடியும்? அதனுடைய அவசியமும் முக்கியத்துவமும் என்ன? என்பதைப் பற்றிச் சுருக்கமாக, அழகாக, நேர்த்தியாகப் பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது.
Authors: DR. K.V.S. HABEEB MOHAMMED & H. ABDUR RAQEEB
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மனிதனே உன் விலை என்ன?
இறைத்தூதர்கள், இறையடியார்களின்வாழ்விலிருந்து நிகழ்ச்சிகளை உதாரணங்களாகக் காட்டிமனிதனுடைய உண்மையான மதிப்பை அவனுக்கு உணர்த்தும் நூல்!Author: SHIHAB
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மன்னர்களுக்கு மாநபியின் மடல்கள்
Author: MOULAVI K.J. MASTHAN ALI BAQAVI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மாநபி மணிமொழிகள்
அண்ணலார் (ஸல்) அவர்களின் அருள்மொழிகள் அடங்கிய தொகுப்பு. நபிமொழித் தொகுப்புகள் பிறந்த வரலாறு, அவற்றைத் தொகுத்தோர் பட்டியல், அவற்றின் காலம் போன்ற பல தகவல்கள் அடங்கிய அற்புதத் தொகுப்பு.மௌலானா அப்துல் கஃபார் ரஹ்மானிAuthor: MOULANA ABDUL GAFFAR HASAN (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மாபெரும் இறைத்தூதரின் பிறப்பு (குர்ஆனிய கதைகள் – 1)
இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தையின் சிலை வழிபாடு
இப்ராஹீம் (அலை) அவர்களின் ஏகத்துவத் தேடல்
இறைவன், இப்ராஹீம் (அலை) அவர்களை நேர்வழியில் செலுத்தி, தன் தூதராக தேர்ந்தெடுத்தல்
பிறகு, தந்தையையும் உருவ வழிபாட்டின் மீது நம்பிக்கை கொண்டோரையும் அறிவார்ந்த முறையில் எதிர்த்தல்
இப்ராஹீம் (அலை) அவர்களை எதிர்கள் தீக்குண்டத்தில் போட்டு கொல்ல ஏற்பாடு செய்தல் – ஏக இறைவனாக அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களை அத்தீக்குண்டத்திலிருந்து காப்பாற்றுதல் போன்ற சுவையான திருக்குர்ஆன் கூறும் வரலாற்று சம்பவங்களை படங்களுடன் காட்சிப்படுத்தும் நூல்.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
மாலை அமர்வுகளிலே
பூமியின் சுழற்சி பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது? இன்றைய கல்வி அமைப்பு எப்படி இருக்கிறது? ஓர் இமாமைத்தான் பின்பற்ற வேண்டுமா? போன்ற கேள்விகளுக்கும் இதுபோன்ற ஏராளமான கேள்விகளுக்கும் மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் விடை யளிக்கிறார்கள்
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மாறி வரும் சமூகச் சூழலும் முஸ்லிம் இளைஞர்களும்
இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்துகின்ற காரணிகளாய், உண்மை நிலையை மறைக்கின்ற திரைகளாய் இருப்பவற்றை பட்டியலிட்டிருப்பதும் பிரிவுச் சுவர்களை அகற்றுவ தற்காக ஆசிரியர் அருமையான தீர்வுகளையும் படிப்படியாக மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்திட்டத்தையும் விவரித்திருப்பது இந்நூலின் சிறப்பு.
Author: SYED SADATHULLAH HUSSEINI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மாறியது நெஞ்சம் மாற்றியது குர்ஆன்
குர்ஆன் வெறுமனே தத்துவார்த்தமான நூல் கிடையாது. வாழ்ந்து பார்க்க வேண்டிய நடைமுறை நூல் ஆகும். இதன்படி வாரம்தோறும் ஒரு வசனத்தின் அடிப்படையில் வாழ முயல்வது என்கிற திட்டத்தின்படிச் செயல்படத் தொடங்கினார்கள். இவ்வாறாக வகுப்புக்கு வருபவர்கள் தங்களின் சொந்தப் பிரச்னை ஒன்றைச் சொல்ல, அவர்களுக்கு சுமைய்யா ரமளான் அவர்கள் பொருத்தமான வசனத்தைப் பரிந்துரைப்பார்.
பணி சிறியதுதான். ஆனால் விளைவோ மிகச் சிறப்பாக வெளிப்பட்டது. பெரும்பாலான பிரச்னைகள் தீர்க்கப்பட்டன. பல்வேறு இன்னல்கள் முடிவுக்கு வந்தன. மன அமைதி, நிம்மதி எனும் மிகப்பெரிய செல்வம் கிட்டியது. குடும்பச் சண்டைகள் குறைந்தன. பிரிந்த குடும்பங்கள் இணைந்தன. கோபதாபங்கள் நீங்கி மகிழ்ச்சி கிடைத்தது. கணவர்கள் தங்களது மனைவியரில் ஏற்பட்ட மாற்றங்களைப் பாராட்டியதுடன் அதனை மகிழ்ச்சிகரமான புரட்சி என்றும் வர்ணித்தனர்.
குர்ஆன்படி வாழ விரும்புகின்ற ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய இனிய நூல்தான் “மாறியது நெஞ்சம் மாற்றியது குர்ஆன்”.
Author: DR. SUMAIYA RAMALAN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
மீனவர் (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 11)
ஒரு வணிகர் ஒரு மீனவருக்கும் நேரம் – வசதி – ஓய்வு குறித்த ஆலோசனைகளை வழங்கினார். அதற்கு அந்த மீனவரோ நீங்கள் கூறியவற்றையெல்லாம் நான் அனுபவித்து வருகிறேனே என்றார். இவ்விருவர்களிடையே நடந்த உரையாடலே இந்நூல்.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
முதியவரும் கைப்பையும் (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 18)
ஈரான் நாட்டிலுள்ள குராஸான் நகரைச் சேர்ந்த ஒருவர் ஹஜ் காலத்தில் மக்காவில் தன் கைப்பையைத் தொலைத்துவிட்டார். அப்போது வயதான, ஏழையான இறைநம்பிக்கையாளர் வந்தார். கைப்பையை கண்டுபிடித்து தருபவருக்கு ஏதேனும் பரிசு தொகையை அறிவிக்கலாமே என்றார். அப்போது இவர்தான் எடுத்திருக்கக் கூடும் என்று குராஸானி சந்தேகித்து அவரைப் பின்தொடர்ந்தார். இறுதியில் அவர் தம் கைப்பையை எப்படி கண்டுபிடித்தார் என்பதே இந்நூல்.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
முத்துச்சரங்கள்
அல்லாஹ்வின் மீது அன்பு, தந்தை மீது அன்பு, மரியாதை, நன்னம்பிக்கை, வீரம், ஏழைகளுக்கு உதவுதல், தம் வேலையைத் தாமே செய்தல், நாணம், தியாகம் என பல்வேறு தலைப்புகளில் சின்னச் சின்ன சம்பவங்கள் – உண்மையில் நடந்த சரித்திர சம்பவங்கள் – தொகுக்கப் பட்டுள்ளன. குழந்தைகளின் உளவியலையும், அறிவுத் திறனையும் நன்கு புரிந்து வைத்திருக்கும் மௌலானா அஃப்ஸல் ஹுஸைன் இந்த வரலாற்று நிகழ்வுகளை விவரிக்கும் பாணியே சுகமான அனுபவமாகும். பெரிய அளவில், பெரிய எழுத்து களுடனும் படங்களுடனும் குழந்தைகள் விரும்பிப் படிக்கும் அளவுக்கு மிளிர்வது இந்நூலின் தனிச்சிறப்பு!
Author: MOULANA AFZAL HUSSAIN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
முன்மாதிரி நபித்தோழியர்கள்
குழந்தைகளுக்கு இஸ்லாமியப் பயிற்சி அளிப்பதிலாகட்டும் மார்க்கத்தைப் பரப்புவதிலாகட்டும் நபித்தோழியர்கள் தங்களுக்குத் தாங்களே ஈடு இணையற்றவர்களாகத் திகழ்ந்தார்கள். அதேபோல் அல்லாஹ்வின் மீதும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்மீதும் நேசம் கொள்வதன் வாயிலாக நாளை மறுமையில் நல்ல பலன் கிடைக்குமென்பதை உணர்ந்து அதன்படி வாழ்ந்து காட்டினார்கள்.
அன்று இஸ்லாத்திற்கு உயிரூட்டிய நபித்தோழியர்களின் வரலாறுகளை இன்று நாம் படிக்கும் பொழுது அவர்களைப் போன்று நாமும் நம் வாழ்வை மாற்ற வேண்டும் என்ற உணர்ச்சியையும் எழுச்சியையும் ஏற்படுத்துகிறது.
Author: Maayil Kairabathi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
முன்மாதிரி முஸ்லிம் இளைஞன்
இளமை முதல் முதுமைவரை மனிதவாழ்வில் பலமும் பலவீனமும் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும். குழந்தைப் பருவம் பலவீனமானது. வாலிபத்தில் மனிதன் பலசாலியாக மாறுகின்றான். வயோதிகத்தில் மீண்டும் பலவீனமானவனாக மாறுகின்றான். வாழ்வில் இருமுறை பலவீனமானவனாக இருக்கும் மனிதன், தன்வாழ்வில் ஒரேயொரு முறைதான் பலசாலியாக இருக்கின்றான். அதுதான் அவனது இளமைப்பருவம், ஆகவேதான், இந்த இளமை கொண்டாடப்படுகிறது.
இளைஞர்களே! வாசிக்கும் பழக்கத்தை வார்த்தெடுங்கள். வாசிக்கும் இன்றைய இளம் தலைமுறைதான் நாளைய வழிகாட்டும் தலைமுறையாக மாறும் என்பதை மறந்து விடாதீர்கள். வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களால்தான் வாழ்க்கையில் முக்கிய முடிவெடுக்கும் சிந்தனைத் தெளிவு கொண்டவர்களாக இருக்க முடியும்.
ஒரு முன்மாதிரி முஸ்லிம் இளைஞன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த நூல் விரிவாகப் பேசுகிறது. இஸ்லாமிய வரலாற்றில் செயற்கரிய செயல்களைச் செய்தவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக இருந்தபோதுதான் அவற்றைச் செய்துள்ளனர் என்பது இந்த நூல் சொல்லித் தரும் முக்கியச் செய்தி.
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
முன்மாதிரி வணிகர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி)
Author: YEMBAL THAJAMMUL MOHAMMAD
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
முஸ்லிமின் அடிப்படைக் கடமை
சிந்தையைக் கிளறும் இந்நூலில் இஸ்லாமிய சமுதாயத்தின் பிரச்னைகள், பொறுப்புகள், கடமைகள் ஆகிய அனைத்தும் தெள்ளத் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இன்று முஸ்லிம்கள் பல்வேறுபட்ட ஆபத்துகள், துன்பங்கள் ஆகியவற்றால் சூழப்பட்டிருப்பதற்கான ஒரே காரணம், அவர்கள் தங்களின் அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றும் விஷயத்தில் அலட்சியம் காண்பித்ததுதான் என்றும், தங்களின் இந்த நிலையை மாற்றிக் கொள்ளாத வரையில் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த இழிநிலை ஒருபோதும் மாறாது என்றும் மனதில் பதியும்படி நூலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.
ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
முஸ்லிம் தனியார் சட்டமும் முஸ்லிம்களின் பொறுப்புகளும் – டாக்டர் ரஜீயுல் இஸ்லாம் நத்வி
முஸ்லிம் தனியார் சட்டத்தின்மீது கவனத்தைச் செலுத்துவதும் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதும் முஸ்லிம்கள் இஸ்லாமியச் சட்டங்-களின்படி செயல்படுகின்ற உணர்வை, தெளிவை ஏற்படுத்துவதும், முஸ்லிம்களின் குடும்பச் சட்டங்கள் குர்ஆனியக் கட்டளைகளின் ஒரு பகுதி, நீதியும் நேர்மையும் செறிந்தவை என்பதை நாட்டின் இதர சகோதர சமுதாயங்-களைச் சேர்ந்த மக்களுக்குப் புரிய வைப்பதும் இந்நூலின் நோக்கமாகும்.
– டாக்டர் ரஜீயுல் இஸ்லாம் நத்வி
Author: DR. RAZIUL ISLAM NADWI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
முஸ்லிம் தனியார் சட்டம்
முஸ்லிம் தனியார் சட்டத்தின் நன்மை, அதன் முக்கியத் துவம், அதில் திருத்தங்கள் கொண்டு வருவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெளிவாக எடுத்துரைக்கும் நூல்!
Author: SHAMS PEERZADA
Publisher: ISLAMIC FOUNDATION TRUST
-
முன்மாதிரி முஸ்லிம் இளைஞன்
இளமை முதல் முதுமைவரை மனிதவாழ்வில் பலமும் பலவீனமும் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும். குழந்தைப் பருவம் பலவீனமானது. வாலிபத்தில் மனிதன் பலசாலியாக மாறுகின்றான். வயோதிகத்தில் மீண்டும் பலவீனமானவனாக மாறுகின்றான். வாழ்வில் இருமுறை பலவீனமானவனாக இருக்கும் மனிதன், தன்வாழ்வில் ஒரேயொரு முறைதான் பலசாலியாக இருக்கின்றான். அதுதான் அவனது இளமைப்பருவம், ஆகவேதான், இந்த இளமை கொண்டாடப்படுகிறது.
இளைஞர்களே! வாசிக்கும் பழக்கத்தை வார்த்தெடுங்கள். வாசிக்கும் இன்றைய இளம் தலைமுறைதான் நாளைய வழிகாட்டும் தலைமுறையாக மாறும் என்பதை மறந்து விடாதீர்கள். வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களால்தான் வாழ்க்கையில் முக்கிய முடிவெடுக்கும் சிந்தனைத் தெளிவு கொண்டவர்களாக இருக்க முடியும்.
ஒரு முன்மாதிரி முஸ்லிம் இளைஞன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த நூல் விரிவாகப் பேசுகிறது. இஸ்லாமிய வரலாற்றில் செயற்கரிய செயல்களைச் செய்தவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக இருந்தபோதுதான் அவற்றைச் செய்துள்ளனர் என்பது இந்த நூல் சொல்லித் தரும் முக்கியச் செய்தி.
Author:
Publisher: ISLAMIC FOUNDATION TRUST