Showing all 7 results

  • அதிகாலை வருவதற்கு வெகுநேரமா இருக்கிறது?

    அதிகாலை வருவதற்கு வெகுநேரமா இருக்கிறது? (ஒருபால் உறவின் விபரீதங்களை விவரித்து அது குறித்து எழும் வாதங்களை உடைத்தெறியும் நூல்)

    ஒருபால் உறவில் ஈடுபட்ட ஊரை இறைவன் தலைகீழாகப் புரட்டினான். அவர்களை அழிப்பதற்காக இறைவன் நேரம் குறித்தான். அதிகாலை நேரம். அந்த அதிகாலை நேரம் வருவதற்கு வெகு நேரமா இருக்கிறது? என்ற அந்தக் கேள்வி நம்மை உலுக்குகிறது. ஒருபால் உறவில் ஈடுபட்டு வருபவர்கள் திருந்தி மீள்வ-தற்கு இறைவன் எழுப்பும் இந்த வினா ஒன்றே போதுமானது.
    இது நமக்குத் தொடர்பில்லாத நூல். இதைப்படித்து என்னாவது? என்று கடந்துவிடாமல் நம் காலத்தில் நிலவும் பெரும் தீமையின் கோரத்தை உணர்வதற்காக நாம் ஒவ்வொரு-வரும் இந்த நூலை வாசிக்க வேண்டும். சமுதாயத்தைச் சீரழிக்கக் கிளம்பியுள்ள இந்த புற்று நோய்க் கட்டிகளை நாம் அகற்றுவதற்கான மருந்துதான் இந்த நூல். மனித இனத்தையே நாசப்படுத்தும் இந்தக் கொடும் அரக்கனுக்கு எதிராக நாம் ஏந்தும் ஆயுதம்தான் இந்த நூல். அந்த வகையில் ஒவ்வொரு-வரும் இந்த நூலை வாசிப்ப-துடன், மக்களுக்கு இத்தீமை குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும் வேண்டும்.

    Author: V.S. MOHAMMED AMEEN
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    50
  • இவர்கள் பார்வையில் நபிகள் நாயகம் (ஸல்)

    தொல் திருமாவளவன், பேராசிரியர் அ.மார்க்ஸ்,
    கவிஞர் ஈரோடு தமிழன்பன், தமிழருவி மணியன்,
    பீட்டர் அல்போன்ஸ், லேனா தமிழ்வாணன், திருச்சி சிவா, சிலம்பொலி செல்லப்பன், கம்பம் செல்வேந்திரன் ஆகிய ஒன்பது ஆளுமைகள் நபி(ஸல்) அவர்களைக் குறித்து விரிவாகப் பேசியிருக்கின்றார்கள். ஒருவரின் கருத்தை ஒருவர் சொல்லவில்லை. ஒரேசெய்தி எங்குமே மீண்டும் மீண்டும் வரவில்லை. நபி(ஸல்) என்ற ஞானப் பெருங்கடலிலிருந்து எவ்வளவு செய்திகளையும் அள்ளிக்கொணரலாம் என்பதை இந்நூல் உணர்த்துகிறது. அள்ள அள்ள புதிதாய் சுரந்துபொங்கும் ஊற்றுப்போல செய்திகள் பெருகுகின்றன.

    இந்த ஆளுமைகள் அண்ணலாரைப் பார்த்த பார்வை பெருமானாரின் மீதான பெருமதிப்பை நம்முள் பெருக்கெடுக்கச் செய்கிறது. அண்ணல் நபி(ஸல்) அவர்களைச் சொல்லச் சொல்லச் சொல் இனிக்கும். கேட்கும் செவி குளிரும். இதயம் நனைய கண்கள் பனிக்கும்.

    இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொரு வாசகரின் மனதிலும் நபி(ஸல்) அவர்களைக் குறித்த மதிப்பீடு கோடி மடங்கு உயரும். பேரன்பு பெருக்கெடுக்கும். எண்ணி எண்ணி வியக்கத் தோன்றும்.

    ஏராளமான வாழ்வியல் உதாரணங்கள் அண்ணலாரின் வாழ்வு முழுவதும் கொட்டிக்கிடக்கிறது. அந்த வகையில் இது வாசிப்பதற்கான நூல் மட்டுமல்ல; வாழ்க்கைக்கான நூலும்கூட.

    Author: V.S. MOHAMMED AMEEN
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    80
  • இனிக்கும் இஸ்லாம்

    இஸ்லாம் என்பது ஓர் வாழ்வியல் கோட்பாடு. மிகப்பெரும் சித்தாந்தம். உலகை வழி நடத்தும் கொள்கை. அந்த அடிப்படையில் இஸ்லாத்தை அனைவரும் அணுக வேண்டும் என்பதற்காகத்தான் இஸ்லாமிய வாழ்வியல் நெறிமுறைகள் இந்த நூலில் எளிய கட்டுரைகளாக 50 தலைப்புகளில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

    Author: V.S. MOHAMMED AMEEN
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    140
  • ஃபலஸ்தீன வரலாறு போர்க்களத்தின் செய்திகள்

    ஃபலஸ்தீன் குறித்து தமிழில் வெளியான பல புத்தகங்களுடன் இந்த நூலை ஒப்பிடுகையில் கருப்பு வெள்ளையாக நேர் எதிராக இந்த நூல் இருப்பதைப் பார்க்கலாம். ஃபலஸ்தீன் வரலாறு குறித்த மிகச் சிறந்த புத்தகமாக இதைப் பார்க்கிறேன்.
    – மனுஷ்யபுத்திரன்

    Author: V.S. Mohammed Ameen
    Publisher: Islamic Foundation Trust

    170
  • பிறைநிலாக் காலம்

    நோன்பு மட்டுமல்லாது பாவமன்னிப்பு, பள்ளிவாசல், மறுமை நம்பிக்கை, இறைத்த்தூதர்கள் என இஸ்லாத்தின் பிற கோட்பாடுகளையும் இந்நூல் எடுத்தியம்புகிறது. அடிப்படையில் இது நோன்பைப் பற்றிச் சொல்லும் நூலாக இருப்பினும் இஸ்லாத்தைச் சுருக்கமாக அறிமுகப்படுத்தும் நூலாகவும் உள்ளது. இஸ்லாம் ஒரு மதமல்ல மார்க்கமே என்பதை எடுத்துச் சொல்கிறது. மறை வாசனை கலந்து இலக்கிய நயத்தோடு எழுதப்பட்ட நூல். 

    Author: V.S. Mohamed Ameen
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    60
  • ஷாஹீன்பாக் – குறுநாவல்

    “வெளிப்படையான மதப் பாகுபாட்டிற்கு சட்ட அங்கீகாரம் வழங்கக்கூடிய குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக
    நாடெங்கும் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடிய ஒரு போராட்ட வரலாற்றின் கதையை எதிர்காலத்திலிருந்து பின்னோக்கிப் பார்த்து விவரிக்கிற இந்நாவலை இஸ்லாமிய இலக்கியப் பரப்பில்
    வெளிவந்த ஒரு முக்கிய பங்களிப்பாகப் பார்க்கிறேன்.
    எதிர்வரும் தலைமுறை ஷாஹீன் போராட்டம் குறித்தும்
    அதன் வலிகள், தியாகங்கள் குறித்தும் அறிந்து கொள்ளும்படியான
    ஓர் ஆவணமாக வெளிப்பட்டிருக்கிறது.”
    – இயக்குநர் மீரா கதிரவன்
    Author: V.S. MOHAMMED AMEEN
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST
    80