Showing all 7 results

  • இந்திய முஸ்லிம்கள் – சவால்கள் | சாத்தியங்கள் | செயல்திட்டங்கள்

    மதவாதத்தை முறியடிப்பதற்காக நூலாசிரியர் முன்வைக்கின்ற யோசனைகள் உடனடியாக நடைமுறைப் -படுத்தப்பட வேண்டிய சத்தான யோசனைகள். மதச் சண்டைகளுக்குப் பெயர் பெற்ற அலீகர், மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாய் இருக்கின்ற கோழிக்கோடு ஆகிய இரண்டு நகரங்களின் சமூகச் சூழல்களை ஒப்பாய்வு செய்த சமூகவியல் வல்லுநரின் ஆய்வு முடிவுகளும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு நூலாசிரியர் முன்வைக்கின்ற வழிமுறைகளும் கவனத்தை ஈர்க்கின்றன.
    முஸ்லிம்களையும் முஸ்லிம் தலைவர்களையும் விளித்து பத்து அம்சத் திட்டம் ஒன்றை நூலின் இறுதியில் தனி அத்தியாயமாகவே வழங்கியிருக்கின்றார் நூலாசிரியர். முத்து முத்தாகத் தரப்பட்டுள்ள இந்தப் பத்தும் செம்மையாகக் கடைப்பிடிக்கப்படுமேயானால் முஸ்லிம்களையும் நாட்டையும் பீடித்துள்ள நெருக்கடிகள் அனைத்தும் பஞ்சாய்ப் பறந்து போகும் என அறுதியிட்டுச் சொல்லலாம்.

    நூலாசிரியரான சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி நாடறிந்த அறிஞர். பன்னூல் ஆசிரியர். மாணவப் பருவத்திலிருந்தே இந்தியாவையும் இந்திய முஸ்லிம் சமூகத்தையும் நல்ல முறையில் அறிந்து தெளிந்தவர். பொறியியலில் படித்துத் தேர்ந்தாலும் மார்க்கத்திலும் தேர்ச்சியும் புலமையும் பெற்றவர். தொலைநோக்கும் விஷயஞானமும் மிக்கவர். உலகமயமாக்கலின் கோர விளைவுகளைத் துல்லியமாகக் கணித்து எச்சரித்த சிந்தனையாளர். இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் அகில இந்தியத் தலைவராகப் பணியாற்றியவர். தற்சமயம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவராக இருக்கின்றார்.

    Author: SYED SADATHULLAH HUSSEINI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    90
  • உறுதிமிக்க போராட்டத்தின் எழுபத்தைந்து ஆண்டுகள் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்

    ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு ஆக்ககரமான, அமைதியான வழிமுறைகளின் மூலமாக, மக்களின் சிந்தனையில், கருத்துப்பரவலின் வாயிலாக மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் மனங்களை வென்றெடுப்பதன் மூலமாக தன்னுடைய நோக்கத்தை அடைவதற்கு கடந்த 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

    கடந்த 75 ஆண்டுகளாக இந்திய முஸ்லிம்கள், மற்றும் முஸ்லிம் அல்லாத சமூகங்களில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆற்றிவரும் அரும் பணிகள், அதனால் ஏற்பட்ட நல்ல தாக்கங்கள் ஆகியவற்றை மிக அழகாக விவரிப்பதுடன், இன்றைய காலச் சூழலில் இனி செய்ய வேண்டியதையும் மிகத் தெளிவாக இப்புத்தகம் உணர்த்தியுள்ளது.

    Author: SYED SADATHULLAH HUSSEINI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    50
  • கொரோனா துயரமும் நாமும்

    இந்த நூல் மாறுபட்ட நூல். பிரச்னைகளைப் பேசுகின்ற, அலசுகின்ற அதே வேளையில் தீர்வையும் செயல்திட்டத்தையும் தருகின்ற நூல்.

    எந்த நோக்கங்களுடன் இறைவன் இந்தப் பேரிடரை ஏற்படுத்தியிருக்கின்றான் என்பது நமக்குத் தெரியாது. அவனுடைய நாட்டங்கள் என்ன? எந்த மனிதர்களை அவன் தண்டிக்க விரும்புகின்றான்? எந்த மனிதர்களை எச்சரிக்க நாடுகின்றான்? எந்த மனிதர்களை சோதிக்க விரும்புகின்றான் எதுவுமே நமக்குத் தெரியாது. ஆனாலும் ஒன்று. நாம் அனைவரும் இறைவனின் பக்கம் மீள வேண்டும். அவனிடம் பாவ மன்னிப்புக் கோர வேண்டும். பிழைகளைப் பொறுத்து அருளும்படி அவனிடம் மன்றாட வேண்டும். அத்தோடு நம்மை நாமே சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். ஆராயவேண்டும். தனிப்பட்ட வாழ்வையும் நடப்பையும் அன்றாட அலுவல்களையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். கூட்டு நடத்தையையும் ஆய்வு செய்ய வேண்டிய நேரமிது.

    இன்றைய சோதனைக்குரிய நாள்களில் சாமான்யர்கள் முதல் தலைவர்கள் வரை, பாமரர்கள் முதல் அறிஞர்கள் வரை, மாணவர்கள் முதல் குடும்பத் தலைவிகள் வரை அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் இது.

    Author: SYED SADATHULLAH HUSSEINI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    35
  • துல்கர்னைன் தரும் செய்தி..!

    குர்ஆன் கொண்டாடுகின்ற சாதனை மனிதர்களில் ஒருவர்தான் துல்கர்னைன்.

    துல்கர்னைனிடம் இருந்த சிறப்புகள்தாம் என்ன? காலத்தை வென்று நிற்கும் ஆளுமையாய் துல்கர்னைன் அவர்களை வார்த்தெடுத்த அந்த அழகு பரிமாணங்கள் தாம் என்ன?

    சாதனையாளராக அவரை மிளிரச் செய்த அந்த தனிப் பண்புகள்தாம் என்ன? அவற்றிலிருந்து நமக்குக் கிடைக்கின்ற பாடங்கள் தாம் என்ன ஆகியக் கேள்விகளுக்கான விடைதான் இந்த அழகிய நூல்.

    Author: SYED SADATHULLAH HUSSEINI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    30
  • பன்முக சமூகத்தில் முஸ்லிம்களின் பொறுப்புகள்

    பன்மைச் சமூகங்கள் பற்றிய விவாதம் இன்று நம் நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மும்முரமாக நடந்துவருகின்ற நிலையில் பன்மைச் சமூகத்தில் முஸ்லிம்கள் செய்ய வேண்டியதென்னவென்பது குறித்து நூலாசிரியர் பதிவு செய்துள்ள பரிந்துரைகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

    குறிப்பாக சமூகச் செயல்பாடுகளில் மும்முரமாகப் பங்கேற்பதன் (Social Engagement) மூலமாகத்தான் சிறப்பான முறையில் அழைப்புப் பணியாற்ற முடியும் என்கிற ஆணித்தர
    மான கருத்தும் ‘சமகால சமூக அவலங்களைக் களைவதற்காக யாதொரு முன்னெடுப்பும் செய்யாமல் அன்றாட வாழ்விலிருந்து தம்மைத் துண்டித்துக்கொண்டு வெறுமனே போதகராக தேங்கி நின்றுவிடக் கூடாது’ என்கிற அழகிய அறிவுறுத்தலும் அழைப்பாளர்கள் ஒவ்வொருவரும் எந்நேரமும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் மனத்தில் இருத்திக் கொள்ள வேண்டிய முத்தான கருத்துகளாகும்.
    முஸ்லிம்களின் அடிப்படைப் பிரச்னைகள் தீர்க்கப்படாத வரையில் பன்மைச் சமூகத்தில் இஸ்லாமிய தாக்கங்களை ஏற்படுத்துகின்ற எந்தவொரு செயல் உத்தியும் முழுமையடை-யாது என்கிற நூலாசிரியரின் கருத்து இன்றையக் காலத்தில் அதிகமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

    மொத்தத்தில் கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது என்பதற்கேற்ப பன்மைச் சமூகம் தொடர்பான அனைத்துப் பரிமாணங்களையும் அழகாக, நிறைவாக, நேர்த்தியாக சிந்தனையைத் தூண்டுகின்ற விதத்தில் தொகுத்துத் தந்திருக்கின்றார் நூலாசிரியர்.
    களத்தில் இருக்கின்ற அழைப்பாளர்கள் மட்டுமின்றி சமுதாயத் தலைவர்கள், ஆலிம்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், குடும்பத் தலைவிகள் என எல்லாத் தரப்பினரும் வாசிக்க வேண்டிய அழகிய நூல்தான் இந்நூல்.

    Author: SYED SADATHULLAH HUSSEINI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    50
  • மாறி வரும் சமூகச் சூழலும் முஸ்லிம் இளைஞர்களும்

    இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்துகின்ற காரணிகளாய், உண்மை நிலையை மறைக்கின்ற திரைகளாய் இருப்பவற்றை பட்டியலிட்டிருப்பதும் பிரிவுச் சுவர்களை அகற்றுவ தற்காக ஆசிரியர் அருமையான தீர்வுகளையும் படிப்படியாக மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்திட்டத்தையும் விவரித்திருப்பது இந்நூலின் சிறப்பு.

    Author: SYED SADATHULLAH HUSSEINI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    50