-
அன்னை கதீஜா (ரலி)
அன்னை கதீஜா (ரலி)
முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவிஒருநாள் நபிகளார் (ஸல்) அவர்கள், அன்னை கதீஜா அவர்களின் சிறப்பைப் பற்றி குறிப்பிடும்போது, அவர் தம் விரலால் வானத்தையும் பூமியையும் சுட்டிக்காட்டி விட்டு கூறினார்கள்: “இறைத்தூதர் ஈஸா அவர்களின் தாய் மர்யம், வானங்களின் மிகச் சிறந்த பெண்மணி ஆவார். கதீஜா, பூமியில் உயிருடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் மிகச் சிறந்த பெண்மணி ஆவார்.
கதீஜாவின் வாழ்க்கை இறைநம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் குறிப்பாக, பெண்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும் ஊற்றுக்கண் ஆகும். இஸ்லாத்தின் மேன்மைக்காக ஒருவரால் எப்படி நேரத்தை, ஆற்றலை, செல்வத்தை, வாழ்வை அர்ப்பணிக்க முடியும் என்பதற்கு கதீஜா முன்மாதிரி எடுத்துக்காட்டு ஆவார். பொருள் செறிந்த, கொள்கைக்காக வாழ ஆர்வம் கொண்டுள்ள இறைநம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் கதீஜாவின் வாழ்வு எப்போதும் ஒரு நினைவூட்டலாக இருந்துகொண்டே இருக்கும்.
அன்னை கதீஜா (ரலி) அவர்களின் வாழ்வை குழந்தைகளின் மனதில் பதியும் வண்ணம் படங்களுடன் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நூலின் ஆங்கிலப் பதிப்பு ஷார்ஜா வழங்கும் “சிறுவர்கள் புத்தக விருது” பெற்ற நூல் என்பது குறிப்பிடத்தக்கது.
Author: Saniyasnain Khan
Publisher: ISLAMIC FOUNDATION TRUST