Showing the single result

  • பதின்பருவ முஸ்லிம் பெண்களுக்கான கையேடு

    இன்று பெற்றோர்களுக்கு இருந்து வரும் மிகப் பெரும் சவால் வளர்ந்து வரும் தங்கள் பதின்பருவப் பிள்ளைகள்தாம். ஆமாம்! நவீனயுகத்தின் விஞ்ஞான வளர்ச்சிகள் மிகப் பயங்கரமாக குடும்பங்களையும் சமுதாயங்களையும் எங்கேயோ இழுத்துக் கொண்டு செல்கின்றன. ஊடகங்கள் பதின்பருவத்தினரைத் தங்கள் ’அக்டோபஸ்’ கைகளுக்குள் ஈர்த்துக்கொண்டு அவர்களுக்குத் தவறான பலவழிகளைக் காண்பித்துக் கொண்டிருக்கின்றன. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஒவ்வொரு வினாடியும் கண்காணிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

    அநேக பள்ளிக்கூடங்கள் பதின்பருவத்தினருக்கான ’பாலியல் கல்வியை’ வழங்குகிறது. ஆனாலும் அவை இறைநம்பிக்கை யாளர்களின் குழந்தை-களுக்கு ஏற்ற வகையில் சரிவர வடிவமைக்கப் படவில்லை.

    இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே நூலாசிரியர் கே. கபீருதீன் தம் மகளுக்கு உதவும் விதமாக இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். பதின்பருவத்தினர் முழுமையாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் பல்வேறு தலைப்புகளில் விளக்கியுள்ளார். மனிதனின் அடையாளத்தை அறிந்துகொள்வதில் இருந்து பதின்பருவத்திற்கும் வாலிப வயதிற்குமுள்ள வேறுபாடுகள், பதின்பருவத்தில் ஏற்படும் சவால்கள், தவறான பழக்க வழக்கங்கள், தற்காப்புக்கான நடைமுறைகள், ஆரோக்கியத்தையும் சுகாதாரத்தையும் கடைப்பிடிப்பது எப்படி என்று இஸ்லாமியப் பார்வையில் விளக்கியுள்ளார்.

    Author: Prof K. Kabir Uddin
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    80