-
அலங்கரிப்போம் ரமளானை
மறுமையில் நம்மை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல காரணமாக இருப்பவை எவை? இறை நெருக்கத்தைப் பெற்றுக் கொள்ளும் எண்ணத்துடன் இறையில்லத்தில் தங்கும் இஃதிகாஃபின் நன்மைகள் என்ன? பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் மாதமாக ரமளான் திகழ்வதால் கிடைக்கும் நேரத்தை வீணடிக்காமல் பயன்படுத்திக் கொள்வது எப்படி? என்பவைகளை சிறப்பாக நூலாசிரியர் மௌலவி நூஹ் மஹ்ழரி எடுத்து வைத்துள்ளார்.
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அல்குர்ஆன் கூறும் அழகிய சரிதைகள்
வாழும் தேசத்திற்கு என்ன பங்களிப்பைச் செய்திருக்கிறாய்? என்று ஒரு சரிதை உங்களிடம் கேட்கும். நாட்டில் நீதி தேவையா, வீட்டிலிருந்து துவங்கு என்று மற்றொரு சரிதை கூறும். மூன்றாவது சரிதையோ ஒழுக்க விழுமங்களைக் கடைப்பிடிக்கின்றாயா? என்று நம்மை உலுக்கிக் கேட்கும். நான்காவது நிகழ்வோ சூழல்களுக்கு அடிபணிந்து வீழ்ச்சியடையாதே என்று வீரவரலாறு கூறும்.
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
-
உங்களை நீங்களே மாற்றிக்கொள்ளாதவரை
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
உனது பெயரால் உயிர் வாழ்கிறோம்
இறைவனின் 99 திருநாமங்களில் சில பெயர்களை முன்-வைத்து இந்த நூல் பேசும் அழகு தனி. நூலாசிரியர் வரலாற்றின் அடியாழங்களுக்குச் சென்று அரிய வரலாற்று நிகழ்வுகளை ஆங்காங்கே நூல் முழுவதும் சொல்லிச் செல்கின்றார். புத்தம் புதிய வரலாற்று நிகழ்வுகளும் நமக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. சிறந்த பேச்சாற்றல் கொண்டியங்கும் நூலாசிரியரின் சொற்சித்திரமாகவே இந்த நூல் விரிந்துகொண்டு செல்கிறது. அது தடையற்ற வாசிப்பிற்கு துணைபுரிகிறது. உணராமல் செய்யும் ஓராயிரம் வழிபாடுகளைவிட உணர்ந்து செய்யும் சில நூறு வழிபாடுகள் சிறந்ததல்லவா? இறைவனின் பண்புகளை நாம் அறிந்து, புரிந்து, உணர்ந்து கொண்டால்தான் நமது வழிபாடுகள் உரம்பெறும். நமது வாழ்வு உயிர்பெறும். இறைவனைக் குறித்த அறிதலுக்கான முயற்சியாகத்தான் இந்த நூலை நாம் வெளியிடுகின்றோம்
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
கருத்துவேறுபாடுகள் அழிவா? அருளா?
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUS -
சிறுபான்மை முஸ்லிம்களுக்கான சட்டம்
ஷரீஅத்தின் – இஸ்லாமிய சட்டங்கள் அடிப்படைகள், கோட்பாடுகள் எக்காலத்திற்கும் அனைத்து மக்களுக்கும் பொதுவானவை, மாற்றத்திற்கு உள்ளாக்க முடியாதவை. அதே வேளை ஷரீஅத் ஒவ்வொரு மனிதனுடைய சூழ்நிலையையும் கவனத்தில் கொள்ளும். மார்க்கத்தைப் பின்பற்றுவதில் அவனுக்கு எந்தச் சிரமத்தையும் கொடுக்காது. தாங்க இயலாத சுமையை அவன்மீது சுமத்தாது.
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
செல்வந்தர் நபிகள் நாயகம் (ஸல்)
மேலும், அவன் (இறைவன்) உம்மை (நபிகளாரை) ஏழையாய்க் கண்டான்; பிறகு செல்வராய் ஆக்கினான். (திருக்குர்ஆன் 93:8)
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
நபித்தோழர்களின் பள்ளிக்கூடம்
நபித்தோழர்களின் வரலாற்றையும் சமகால வரலாற்றையும் ஒப்பிடும்போதுதான் நபித்தோழர்கள் எவ்வளவு உன்னத நிலையில் வாழ்ந்துள்ளனர் என்பதை இந்த நூல் நமக்குக் காட்சிப்படுத்துகிறது.
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
நாகரிகத்தின் தந்தை உமர் (ரலி)
உமரே! நீர் சத்தியத்தை ஏற்றபோது
சர்தார் நபியின் வதனம் மலர்ந்தது.உமரே! எத்தனையோ முறை
உமது வாக்கே வஹியாக இறங்கின!உமரே! எத்தனையோ முறை
உமது கூற்றே உண்மையாக இருந்தது!உமரே! உமது வரலாறு எங்கள்முன் பிரகாசமாக இருக்கிறது.
இல்லையேல், கற்பனை கதாபாத்திரம் என்றே
உம்மை நாங்கள் கருதியிருப்போம்.Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
நெஞ்சுக்கு நிம்மதி
இன்றைய அதிநவீன உலகம் அறிவியல் தொழில்-நுட்பத்தில் பெருமளவு முன்னேறி வருகிறது. விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் பல மனித வாழ்வில் பெரும் தாக்கத்தை-யும் மாறுதல்களையும் ஏற்படுத்தி வருகின்றன. தனிமனித வருமானம் அதிகரித்து வருகிறது. பணமும் வசதி வாய்ப்பு-களும் மனித வாழ்வை சொகுசானதாக ஆக்கியுள்ளன. ஆனால், இத்தனை வசதிகளையும் பெற்ற பிறகும்கூட மனிதன் ஏதோவொன்றைத் தொலைத்துவிட்டு நிற்கின்றான். அதைத் தேடித் தேடி அங்கும் இங்கும் திரிகின்றான். அவனது கால்கள் ஓய்ந்ததே தவிர அதனைக் கண்டெடுக்க முடிய-வில்லை. அது என்ன? அதுதான் மனஅமைதி. அமைதியான, மகிழ்ச்சியான குடும்ப வாழ்வு இன்று அரிதாகிக் கொண்டே வருகிறது. எத்தனை எத்தனை பிரச்னைகள் நாள்தோறும் வெடிக்கின்றன? அதற்கான தீர்வு எதுவும் இன்றி, மனஅமைதி இழந்து மனிதர்கள் தவித்து வருகின்றனர். பணத்தால் அதனைப் பெற முடியாது. விஞ்ஞானம் அதனைப் பெற்றுத் தராது. பிறகு எவ்வாறு அது சாத்திய-மாகும்? இதனைத்தான் நெஞ்சுக்கு நிம்மதி என்கிற இந்நூல் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. மனஅமைதியைத் தேடியலையும் உள்ளங்கள் இதனைக் கட்டாயம் வாசிக்க வேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் நூலகங்களிலும் அவசியம் இந்நூல் இடம்பெற வேண்டும் என்பது எங்களின் வேணவா.
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
முன்மாதிரி முஸ்லிம் இளைஞன்
இளமை முதல் முதுமைவரை மனிதவாழ்வில் பலமும் பலவீனமும் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும். குழந்தைப் பருவம் பலவீனமானது. வாலிபத்தில் மனிதன் பலசாலியாக மாறுகின்றான். வயோதிகத்தில் மீண்டும் பலவீனமானவனாக மாறுகின்றான். வாழ்வில் இருமுறை பலவீனமானவனாக இருக்கும் மனிதன், தன்வாழ்வில் ஒரேயொரு முறைதான் பலசாலியாக இருக்கின்றான். அதுதான் அவனது இளமைப்பருவம், ஆகவேதான், இந்த இளமை கொண்டாடப்படுகிறது.
இளைஞர்களே! வாசிக்கும் பழக்கத்தை வார்த்தெடுங்கள். வாசிக்கும் இன்றைய இளம் தலைமுறைதான் நாளைய வழிகாட்டும் தலைமுறையாக மாறும் என்பதை மறந்து விடாதீர்கள். வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களால்தான் வாழ்க்கையில் முக்கிய முடிவெடுக்கும் சிந்தனைத் தெளிவு கொண்டவர்களாக இருக்க முடியும்.
ஒரு முன்மாதிரி முஸ்லிம் இளைஞன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த நூல் விரிவாகப் பேசுகிறது. இஸ்லாமிய வரலாற்றில் செயற்கரிய செயல்களைச் செய்தவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக இருந்தபோதுதான் அவற்றைச் செய்துள்ளனர் என்பது இந்த நூல் சொல்லித் தரும் முக்கியச் செய்தி.
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
முஹம்மத் நபிகளார் (ஸல்) முகம் சிவந்த தருணங்கள்
எப்போதும் புன்முறுவல் பூத்த முகத்துடன் இருந்த, இருக்கச் சொன்ன நபி (ஸல்) அவர்கள் சில வேளைகளில் கோபத்தால் முகம் சிவந்தவர்களாகத் தமது தோழர்களைக் கண்டித்துச் சீர்படுத்தினார்கள். அதிலிருந்து நமக்குக் கிடைக்கும் படிப்பினைகள் என்ன என்பதை வரலாற்று நிகழ்வுகளோடு எடுத்துரைக்கிறது இந்நூல்.
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வரலாறு படைத்த பெண்கள் – மௌலவி நூஹ் மஹ்ழரி
இஸ்லாத்துடன் முஸ்லிம் பெண்களுக்கான தொடர்பு என்பது வெறும் புர்கா அணிவது மட்டுமே என்று அனேகமானவர்கள் கருதுகின்றனர். ஆயினும் உண்மையோ அதற்கு நேர்மாறாக உள்ளது. இஸ்லாம் என்பது உயர்ந்த விழுமியங்களாலும் சிறந்த சிந்தனைகளாலும் கட்டமைக்கப்பட்ட ஒரு மார்க்கம். அது சமூகத்தளத்தில் பெண்களுக்கென தனிப் பங்களிப்பை வழங்கியுள்ளது.
வேறெந்த மதமும் வழங்காத சகல உரிமைகளையும் இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கியுள்ளது. இஸ்லாத்தைக் குறித்து தரக்குறைவாக விமர்சிப்பதற்கும், அபாண்டங்களை அள்ளி வீசுவதற்கும் பெண்கள் குறித்த இந்த அறியாமையையே தங்களுக்கான ஆயுதமாக அவர்கள் பயன்படுத்துகின்றனர்.
இது பெண்களுக்கான நூல் மட்டுமல்ல, மாறாக ஆண்களுக்குமான நூலும் கூட. இஸ்லாமிய மார்க்கம் நமது தாயை, நமது சகோதரியை, நமது மகளை எவ்வளவு தூரம் கண்ணியப்படுத்தியுள்ளது என்பதை நாம் தெரிந்துகொண்டால்தானே அதனை பிறருக்கும் எடுத்துச் சொல்லமுடியும்.
அந்த அடிப்படையில் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகள் மற்றும் உயரிய தகுதி குறித்து வரலாறு படைத்த பெண்கள் எனும் இச்சிறிய நூல் பேசுகிறது.Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வாழ்க்கை – தொட்டுவிடும் தூரம்தான்!
காசேதான் கடவுளடா என்று வாழ்ந்தால்.. வசதியான வாழ்வு மட்டுமே லட்சியம் என்று மனம் போன போக்கில் வாழ்ந்தால்… நிம்மதி எங்கிருந்து கிடைக்கும்? ஒருநாளும் கிடைக்காது. இறை வழிகாட்டுதல் இல்லாமல் மனம் போன போக்கில் வாழ்ந்தால்; சாதாரண மனிதன் காட்டும் பாதைகள் எவ்வாறு பயன் தரும்..? பயம்தான் வரும்!
மனிதனின் பயத்தை போக்கி அவனை அழிவில்லா, அளவில்ல ஆனந்த வாழ்வின் பக்கம் வழிகட்டுகிறது இந்நூல்.
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வாழ்ந்து பார்ப்போம் வாருங்கள்
துப்பாக்கி, நஞ்சு, கயிறு, மண்ணெண்ணெய், ஆறு, கடல், மலை என்று தற்கொலை செய்து கொள்ள இத்தனை வழி முறைகள் இருக்கும்போது, வாழ்ந்து காட்டுவதற்கு ஏராளமான வழிமுறைகள் இருந்துதானே ஆகவேண்டும். வீழ்வதற்கே இத்தனை வழிகள் எனில் வாழ்வதற்கும் பல வழிகள் இருக்கத்தானே செய்யும். ஆயினும் என்ன.. அவற்றைக் கண்டடைதல் வேண்டும்…அதுதான் சிக்கல்.இந்தக் கண்டடைதலை அடையாளம் காட்டுவதுதான் இந்நூல்.Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வாழ்வும் வரலாறும்
வரலாற்றில் இருந்து பாடம் படித்த ஒரு சமூகத்தால் மட்டுமே தங்களது பண்பையும் உயர்வையும் பேணிப்பாதுகாக்க முடியும். துன்ப துயரங்களை எதிர்கொள்ள முடியும். வீழ்ச்சி காணும் சமூகத்தை வெற்றிகரமாக மீட்டெடுக்க முடியும்.வரலாறு ஒன்று மட்டுமே மனிதர்களை இழிவுகளிலிருந்து மீட்டு, முன்னேற்றப் பாதையை நோக்கி அழைத்துச் செல்லும் சக்திவாய்ந்த அம்சமாக இருக்கின்றது. முன்னேற்றத்தின் சி-கரங்களைத் தொட்ட சமூகங்கள் அனைத்தும் வரலாற்றின் பக்கங்களில் இருந்துதான் அதற்கான தூண்டுகோல்களைப் பெற்றன.இதோ இந்த நூலில் வரலாற்றின் பக்கங்களில் இருந்து ஒருசில நிகழ்வுகளை மட்டுமே தொட்டுக்காட்டுகின்றோம்Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வேடிக்கை மனிதர்களா நாம்? – மௌலவி நூஹ் மஹ்ழரி
எதற்காக நாம் படைக்கப்பட்டிருக்கின்றோம் எனும் உயரிய லட்சியத்தையும் நமது வரலாறு நமக்குக் கற்றுத் தரும் மேலான வாழ்க்கை முறைகளையும் மக்கள் மன்றத்தில் வைப்பதே இந்த நூலின் நோக்கம்.எல்லாமே நமக்கு இங்கு வேடிக்கைதான். காட்சிகளைப் பார்த்து கை கொட்டிச் சிரித்துக் காலத்தைக் கடத்துகின்றோம். வெறும் பார்வையாளர்களாக வாழ்ந்து யாருக்கும் தெரியாமல் ஒருநாள் இறந்து போகின்றோம். மக்கள் மனதில் இருந்து மறைந்து போகின்றோம். இதற்காகவா நம்மைப் படைத்தான் இறைவன்?யாரைப் பற்றியும் கவலைப்பட யாரிடமும் காலமும் இல்லை. கண்ணீர் சிந்த யாருக்கும் நேரமுமில்லை; மனமுமில்லை. மனிதனை இறைவன் எதற்காகப் படைத்தானோ அதற்கு எதிராக எந்திர கதியில் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதற்காகவா நம்மைப் படைத்தான் இறைவன்?சமூகத்தில் படர்ந்து கிடக்கும் தீமைகளையும் பொய்மைகளையும் நான் ஒருவன் தனியாக எப்படி எதிர்த்துப் போராடுவது என்ற தயக்கமே இன்றைய இளைய சமுதாயத்தின் தடைக்கல்லாக இருக்கிறது. முடியாது என நினைக்காதீர்கள்! சோம்பல் முறியுங்கள்! சூழல் மாற்றுங்கள்! ஒருபோதும் கலங்காதீர்கள், இறைவன் நம்மோடு இருக்கின்றான்.“நீங்கள் மனந்தளர்ந்து விடாதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள். நீங்கள் இறைநம்பிக்கையுடையோராயின், நீங்களே மேலோங்குவீர்கள்” (3:139)Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST
-
முன்மாதிரி முஸ்லிம் இளைஞன்
இளமை முதல் முதுமைவரை மனிதவாழ்வில் பலமும் பலவீனமும் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும். குழந்தைப் பருவம் பலவீனமானது. வாலிபத்தில் மனிதன் பலசாலியாக மாறுகின்றான். வயோதிகத்தில் மீண்டும் பலவீனமானவனாக மாறுகின்றான். வாழ்வில் இருமுறை பலவீனமானவனாக இருக்கும் மனிதன், தன்வாழ்வில் ஒரேயொரு முறைதான் பலசாலியாக இருக்கின்றான். அதுதான் அவனது இளமைப்பருவம், ஆகவேதான், இந்த இளமை கொண்டாடப்படுகிறது.
இளைஞர்களே! வாசிக்கும் பழக்கத்தை வார்த்தெடுங்கள். வாசிக்கும் இன்றைய இளம் தலைமுறைதான் நாளைய வழிகாட்டும் தலைமுறையாக மாறும் என்பதை மறந்து விடாதீர்கள். வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களால்தான் வாழ்க்கையில் முக்கிய முடிவெடுக்கும் சிந்தனைத் தெளிவு கொண்டவர்களாக இருக்க முடியும்.
ஒரு முன்மாதிரி முஸ்லிம் இளைஞன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த நூல் விரிவாகப் பேசுகிறது. இஸ்லாமிய வரலாற்றில் செயற்கரிய செயல்களைச் செய்தவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக இருந்தபோதுதான் அவற்றைச் செய்துள்ளனர் என்பது இந்த நூல் சொல்லித் தரும் முக்கியச் செய்தி.
Author:
Publisher: ISLAMIC FOUNDATION TRUST