குர்ஆனின் முதன்மைச் சொல்லே (Key Word) தஸ்கியா-தான். தம்முடைய தஸ்கியா பற்றிய கவலையில்லாத எந்தவொரு மனிதராலும் குர்ஆனிய அடிப்படையில் வாழ்க்கையைக் கட்டமைக்கின்ற பணியை மேற்கொள்ளவே முடியாது. இன்னும் சொல்லப் போனால் வாழ்வின் முதன்மை நோக்கமே தஸ்கியாதான்.
‘மனத்தைத் தூய்மைப்படுத்திக் கொண்டவன் (தஸ்கியா செய்துகொண்டவன்) வெற்றி பெற்றுவிட்டான்’ என்றே குர்ஆன் உரத்து முழங்குகின்றது. தஸ்கியா என்பது கருத்துச் செறிவுமிக்க சொல். இதயத்தைத் தூய்மைப்படுத்துகின்ற தொடர் முயற்சியை உணர்த்துகின்ற அதே வேளையில் மனித ஆளுமையை மேம்படுத்துகின்ற இடைவிடாத போராட்டத்தை உணர்த்துகின்ற புரட்சிகரச் சொல்லாகவும் அது இருக்கின்றது.
‘அந்நாளில் செயல்கள் எடைபோடப்படுவது சத்தியம் ஆகும். எவர்களுடைய நன்மைகளின் எடை கனமாக இருக்குமோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள்’ (அத்தியாயம் 7 அல்அஃராஃப் 8) என்றும் குர்ஆன் அறிவிக்கின்றது. நம்மை நாமே தஸ்கியா செய்துகொள்வதில், நம்மை நாமே மேம்படுத்திக் கொள்வதில் தொடர் கவனம் செலுத்தினாலே-யொழிய நம்மால் நம்முடைய நன்மைகளின் எடையைக் கூட்டிக்கொள்ள முடியாது என்பது வெளிப்படை.
இயக்கத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள் மட்டுமின்றி, தஸ்கியாவை மேம்படுத்திக் கொண்டு இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற விரும்புகின்ற ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நன்னூல்தான் இது.
Author: Moulana Waliullah Sayeedi Falahi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST