-
ISIS இஸ்லாம் இல்லை
ISIS இஸ்லாம் இல்லை*******************ஐ.எஸ். தொடர்பாக சாதாரணமாக விவாதிக்கப்படாது, தவறான முறையில் பிரச்சாரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் செய்திகள் தான் இப்புத்தகத்தின் பேசுபொருளாக உள்ளது. இவ்விஷயம் தொடர்பாக இருபதிற்கும் அதிகமான புத்தகங்கள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பாலான புத்தகங்களும், ஐ.எஸ்ஸின் உருவாக்கத்திலும் அதனை வளர்த்து வதிலும் அமெரிக்காவின் ஈராக், ஆஃப்கான் ஆக்கிரமிப்பு களுக்கு உள்ள பங்கினைக் குறித்து மறைத்தும், குறைத்தும்தான் பேசுகின்றன. ‘சலஃபி ஜிஹாது’ ‘குளோபல் ஜிஹாது’ போன்ற வார்த்தைகளைப் போட்டு நிரப்பி ஒருவகையான திரையிட்டு உண்மைகளை மறைக்கிறார்கள்.அதனால், இப்புத்தகத்தின் உருவாக்கத்திற்கு அரபுலக மூலங்களைத்தான் முக்கியப்படுத்தியிருக்கின்றோம். ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள பக்கச்சார்பற்ற ஆய்வு களையும் கவனத்தில் கொண்டுள்ளோம்.#ISIS பற்றி சூடான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் இப்புத்தகம் வெளியாவது பெரும் மகிழ்வாகும்Author: K.M. Ashraf Keezhuparambu
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ரஜப் தய்யிப் எர்டோகன்
நவீன உலகின் ஆற்றல்மிகு ஆட்சியாளர்களில் ஒருவர்தான் துருக்கி அதிபர் ரஜப் தய்யிப் எர்டோகன். முஸ்லிம் உலகில் அவரைப் போல் மனவலிமையும் ராஜதந்திரமும் செயலாற்றல் உணர்வும் நிறைந்த மற்றொரு ஆட்சியாளரைக் காண்பது அரிது. தமது பண்பாட்டைக் கைவிடாமலேயே பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சொந்தக் காலில் நிற்கும் வகையில் நவீன துருக்கியைச் செதுக்கியவர் என்பதுதான் எர்டோகனின் பெரும் சாதனை ஆகும். மதச்சார்பற்றத் தன்மை என்னும் பெயரில் அடக்கு முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, துருக்கி மண்ணில் அதனுடைய பண்பாட்டையும் பாரம்பர்யத்தையும் அத்தாதுர்க் குழிதோண்டிப் புதைத்த இடத்திலிருந்து மிகவும் சாதுர்ய மாகவும் அறிவுபூர்வமாகவும் செயல்பட்ட எர்டோகன், துருக்கியின் உஸ்மானிய, இஸ்லாமியப் பாரம்பர்யப் பெருமையை மீட்டெடுத்தார். ஆகவே துருக்கியின், எர்டோகனின் வரலாறும் செய்திகளும் அரசியல் மாணவர்களைப் பொறுத்தவரை பெரும் ஆர்வத்தைத் தூண்டும் விஷயங்கள் என்பதில் ஐயமில்லை.