-
வட்டியை ஒழிப்போம்
வட்டி என்பது நீதிக்கும் மானுட உணர்வுக்கும் எதிரானது என்பதையும், வாழ்வின் நிம்மதியை அழிக்கக் கூடியது என்பதையும் குறைவான சொற்களில் நிறைவாக விளக்குகிறார் நூலாசிரியர். பொருளாதார நீதி நிலைகுலைந்து போனதற்குக் காரணமே வட்டி அடிப்படையிலான தற்கால வங்கிகள்தாம் என்று மேற்கத்திய பொருளியல் மேதைகள் கூறுவதையும் நூலாசிரியர் தக்க ஆதரங்களுடன் எடுத்துரைக்கிறார். வட்டியை ஒழிப்பதற்கான மாற்று ஏற்பாடாக லாப, நஷ்டத்தில் பங்கு வகிக்கும் வட்டியில்லா வங்கிமுறை பற்றிச் சுருக்கமாக இந்நூல் விளங்குகிறது நூலாசிரியர் டாக்டர் உமர் சாப்ரா பன்னாட்டளவில் புகழ்பெற்ற பொருளியல் அறிஞர் ஆவார். சர்வதேச அளவில் நடைபெற்ற இஸ்லாமியப் பொருளியல் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகள் சமர்பித்தவர்.
Author: DR. M. UMER CHAPRA
Publisher: ISLAMIC FOUNDATION TRUST