-
இறை நினைவு (திக்ர்) – أذكار
இந்நூலில், அன்றாடம் காலை, மாலை வேளைகளில் நாம் செய்ய வேண்டிய திக்ர்கள் மட்டும் தொகுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் திருக்குர்ஆனில் அல்லாஹ் பயன்படுத்தி உள்ள துஆக்களும் தொகுக்கப்பட்டுள்ளது.
இதனை நாம் தினசரி ஓதி வருவோம். இறை நினைவுடன் வாழ்வோம்.
Author: DR. J. MOHIDEEN (Ibnu Jamal)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாத்தின் தனித்தன்மைகள்
இஸ்லாம்….
· இது, முஸ்லிம்கள் பின்பற்றும் மதம்.
· அல்லாஹ் என்ற உருவமற்ற இறைவனை வணங்கும் மக்களின் மதம்.
· ஐவேளை இறைவனைத் தொழச் சொல்லும் மதம்..
· வருடத்தில் ஒரு மாதம் நோன்பிருக்கக் கட்டளையிடும் மதம்..
· மக்காவை நோக்கி, ஹஜ் என்ற புனிதப் பயணம் மேற்கொள்ளச் சொல்லும் மதம்.
இதைத் தாண்டி பொது மக்கள் மத்தியில் இஸ்லாத்தைப் பற்றிய புரிதலும் தெளிவும் குறைவாகவே உள்ளன. இறைவழிபாடும், விரதமும், புனிதப் பயணங்களும் அனைத்து சமயங்களுக்கும் பொதுவானவை. இந்நிலையில் இஸ்லாம் எவ்வகையில் தனித்துவமிக்கது என்பதை விளக்குவதே இந்நூலின் நோக்கமாகும். இதன் மூலம், இஸ்லாம் குறித்த விரிவான பார்வையும் கிடைக்க வாய்ப்புள்ளது.Author: Dr. J. Mohideen
Publisher: Islamic Foundation Trust -
திருக்குர்ஆனியக் கலைகள்
திருக்குர்ஆனின் இலக்குகள் என்ன? வசனங்களுக்கிடையேயான தொடர்புகள் என்ன? அத்தியாயங்களின் ஆய்வுப் பொருள் என்ன? என பல முக்கிய விதிகளை எளிய முறையில் இந்நூல் விளக்குவது இந்நூலின் சிறப்பம்சம்.
திருக்குர்ஆனை கற்க விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய அரிய நூல் இது.
Author: DR. J. MOHIDEEN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஹஜ் – உம்ரா வழிகாட்டி கையேடு
ஹஜ், உம்ராவை நிறைவேற்றும் வழிமுறைகளை விரிவாக விளக்கும் நூற்கள் பல உள்ளது. ஆனால், ஹஜ்ஜின் போது ஓத வேண்டியவற்றை நினைவில் வைப்பது ஹாஜிகள் பலருக்கு கடினமாக உள்ளது. உதாரணமாக, ஸயீயின் தொடக்கத்தில் என்ன துஆ, திக்ர் ஓத வேண்டும்? கூட்ட நெரிசலில், பையில் உள்ள நூலை எடுத்து ஓதுவதும் சிரமமே.
வாழ்வில் ஒரு முறை செய்யும் கடமை என்பதால், சரியாக நிறைவேற்றவில்லையோ என்ற கவலை ஹாஜிகள் பலருக்கு உள்ளது.
இதனை நீக்கும் விதமாக, ஹஜ் உம்ராவின் சுருக்க கையேட்டினை தயாரித்து உள்ளோம். இதில் முக்கியமான வழிபாட்டு முறைகள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளது. இஹ்ராம் ஆடையில், கழுத்தில் தொங்கவிட்டவாறே இந்நூலை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Review:
https://youtube.com/shorts/U3R3S47TC9s?feature=share
Author: Dr. J. Mohideen
Publisher: ISLAMIC FOUNDATION TRUST