அனுமதித்த(ஹலாலான)வற்றிலேயே அல்லாஹ்விற்கு மிகவும் வெறுப்புக்குரியது ‘தலாக்’ எனும் மணவிலக்குதான். மனிதன் பலவீனமானவன், விரைவில் கோபமடைபவன், கோபம் ஷைத்தானின் செயல். கோபத்தின் காரணமாக சிலசமயம் மனைவியோடு மிகவும் கடுமையாக நடந்துகொள்கிறான். இதன் உச்சகட்டமாக மனைவியை ‘தலாக்’ சொல்லிவிடுகின்றான். இன்னும் சிலரோ ஒரே மூச்சில் ‘தலாக், தலாக், தலாக்’ என்று மூன்று முறை – முத்தலாக் – சொல்லிவிடுகின்றார்கள். இதனால் பாதிக்கப்படுவது பெண்கள் தான் என்றால் பெண்களுக்கு வேறு வழியே இல்லையா? குலா என்ற பெயரில் பெண்களுக்கும் இந்த உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது. குலாவின் சட்டம் என்ன? தலாக் குறித்து இஸ்லாம் என்ன கூறுகிறது? இதன் வரம்புகள் என்ன? முத்தலாக் என்பது பெண்ணுக்குரிய சாபமா? மணவிலக்கின் சட்டம்தான் என்ன? மணவிலக்கு தொடர்பாக யூதர்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் அறியாமைக்கால மக்களின் கருத்து என்ன? இஸ்லாம் வழங்கும் தீர்வு என்ன? போன்ற கேள்விகணைகளுக்கு விடையளித்து மணவிலக்கின் சட்டத்தைத் தெளிவுபடுத்துவதே இந்நூலின் நோக்கம்.
About The Author
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | 2015 |
ISBN-13 | 978-81-232-0288-4 |
ISBN-10 | |
Language | Tamil |
Edition | 4 |
Binding | PB |
Number of Pages | 240 Pages |