|
اِقۡرَاۡ بِاسۡمِ رَبِّكَ الَّذِىۡ خَلَقَۚ ﴿96:1﴾
خَلَقَ الۡاِنۡسَانَ مِنۡ عَلَقٍۚ ﴿96:2﴾
اِقۡرَاۡ وَرَبُّكَ الۡاَكۡرَمُۙ ﴿96:3﴾
الَّذِىۡ عَلَّمَ بِالۡقَلَمِۙ ﴿96:4﴾
عَلَّمَ الۡاِنۡسَانَ مَا لَمۡ يَعۡلَمۡؕ ﴿96:5﴾
كَلَّاۤ اِنَّ الۡاِنۡسَانَ لَيَطۡغٰٓىۙ ﴿96:6﴾
اَنۡ رَّاٰهُ اسۡتَغۡنٰىؕ ﴿96:7﴾
اِنَّ اِلٰى رَبِّكَ الرُّجۡعٰىؕ ﴿96:8﴾
اَرَءَيۡتَ الَّذِىۡ يَنۡهٰىؕ ﴿96:9﴾
عَبۡدًا اِذَا صَلّٰىؕ ﴿96:10﴾
اَرَءَيۡتَ اِنۡ كَانَ عَلَى الۡهُدٰٓىۙ ﴿96:11﴾
اَوۡ اَمَرَ بِالتَّقۡوٰىۙ ﴿96:12﴾
اَرَءَيۡتَ اِنۡ كَذَّبَ وَتَوَلّٰىؕ ﴿96:13﴾
اَلَمۡ يَعۡلَمۡ بِاَنَّ اللّٰهَ يَرٰىؕ ﴿96:14﴾
كَلَّا لَـئِنۡ لَّمۡ يَنۡتَهِ ۙ لَنَسۡفَعًۢا بِالنَّاصِيَةِۙ
﴿96:15﴾
نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ ۚ ﴿96:16﴾
فَلۡيَدۡعُ نَادِيَهٗ ۙ ﴿96:17﴾
سَنَدۡعُ الزَّبَانِيَةَ ۙ ﴿96:18﴾
كَلَّا ؕ لَا تُطِعۡهُ وَاسۡجُدۡ وَاقۡتَرِبْ۩ ﴿96:19﴾
96:1 ஓதுவீராக! (நபியே!) படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு!
96:2 (உறைந்த) இரத்தக் கட்டியிலிருந்து மனிதனை அவன் படைத்தான்! ஓதுவீராக!
96:3 மேலும், உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில்,
96:4 அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்;
96:5 மனிதனுக்கு அவன் அறியாதிருந்தவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
96:6 அவ்வாறன்று! மனிதன் வரம்பு மீறி நடக்கின்றான்;
96:7 அவன் தன்னைத் தன்னிறைவுடையவன் என்று கருதிக் கொண்டதால்!
96:8 ஆனால், திரும்பிச் செல்வது திண்ணமாக, உம் இறைவனின் பக்கமே ஆகும்.
96:9 தடுப்பவனை நீர் பார்த்தீரா?
96:10 அடியார் ஒருவர் தொழுது கொண்டிருக்கையில் அவரைத் தடுப்பவனை நீர் பார்த்தீரா?
96:11 நீர் என்ன நினைக்கிறீர்? அவர் நேர்வழியில் நடந்தாலுமா?
96:12 அல்லது தூய்மையை மேற்கொள்ளும்படி ஏவினாலுமா?
96:13 (தடுக்கக்கூடிய இந்த மனிதன் சத்தியத்தைப்) பொய்யென்று தூற்றினால் மேலும், புறக்கணிக்கவும் செய்தால் (அவனைப் பற்றி) நீர் என்ன கருதுகின்றீர்?
96:14 அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்பது அவனுக்குத் தெரியாதா?
96:15 அவ்வாறன்று! அவன் (இந்த நடத்தையிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையெனில், திண்ணமாக, அவனது நெற்றி முடியைப் பிடித்து இழுப்போம்,
96:16 கடும் தவறிழைத்த பொய்யுரைத்த அந்த நெற்றியை!
96:17 அவன் தன் (ஆதரவாளர்களின்) கூட்டத்தை அழைத்துக் கொள்ளட்டும்;
96:18 தண்டனை தரும் வானவர்களை நாமும் அழைத்துக் கொள்வோம்.
96:19 ஒருபோதும் அவ்வாறில்லை! அவனுக்குக் கீழ்ப்படியாதீர். மேலும், சிரம் பணிவீராக! மேலும் (உம் இறைவனின்) நெருக்கத்தைப் பெறுவீராக!
| |