وَالتِّيۡنِ وَالزَّيۡتُوۡنِۙ ﴿95:1﴾
وَطُوۡرِ سِيۡنِيۡنَۙ ﴿95:2﴾
وَهٰذَا الۡبَلَدِ الۡاَمِيۡنِۙ ﴿95:3﴾
لَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ فِىۡۤ اَحۡسَنِ تَقۡوِيۡمٍ
﴿95:4﴾
ثُمَّ رَدَدۡنٰهُ اَسۡفَلَ سَافِلِيۡنَۙ ﴿95:5﴾
اِلَّا الَّذِيۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمۡ اَجۡرٌ غَيۡرُ مَمۡنُوۡنٍؕ
﴿95:6﴾
فَمَا يُكَذِّبُكَ بَعۡدُ بِالدِّيۡنِ ﴿95:7﴾
اَلَيۡسَ اللّٰهُ بِاَحۡكَمِ الۡحٰكِمِيۡنَ ﴿95:8﴾
95:1 அத்தியின் மீதும் ஒலிவத்தின் மீதும் சத்தியமாக!
95:2 சினாய் மலையின் மீதும்
95:3 மேலும், அமைதியான இந்த (மக்கா) நகரத்தின் மீதும் சத்தியமாக!
95:4 திண்ணமாக, நாம் மனிதனை மிகச் சிறந்த அமைப்பில் படைத்தோம்.
95:5 பிறகு, நேர்மாறாக, தாழ்ந்தவர்களில் மிகவும் தாழ்ந்தவனாக அவனை ஆக்கினோம்.
95:6 ஆனால், இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்து கொண்டிருந்தவர்களைத் தவிர! அவர்களுக்கு முடிவில்லாத நற்கூலி இருக்கின்றது.
95:7 எனவே (நபியே!) இதன் பிறகும் நற்கூலிதண்டனை வழங்கப்படும் விஷயத்தில் உம்மை யாரால் பொய்யர் எனத் தூற்ற முடியும்?
95:8 அல்லாஹ் ஆட்சியாளர்கள் அனைவரிலும் மாபெரும் ஆட்சியாளன் இல்லையா?
|