اَلَمۡ نَشۡرَحۡ لَـكَ صَدۡرَكَۙ ﴿94:1﴾
وَوَضَعۡنَا عَنۡكَ وِزۡرَكَۙ ﴿94:2﴾
الَّذِىۡۤ اَنۡقَضَ ظَهۡرَكَۙ ﴿94:3﴾
وَرَفَعۡنَا لَـكَ ذِكۡرَكَؕ ﴿94:4﴾
فَاِنَّ مَعَ الۡعُسۡرِ يُسۡرًا ۙ ﴿94:5﴾
اِنَّ مَعَ الۡعُسۡرِ يُسۡرًا ؕ ﴿94:6﴾
فَاِذَا فَرَغۡتَ فَانۡصَبۡۙ ﴿94:7﴾
وَاِلٰى رَبِّكَ فَارۡغَب ﴿94:8﴾
94:1 (நபியே!) நாம் உம்முடைய இதயத்தை உமக்காக விரிவாக்கித் தரவில்லையா?
94:2 மேலும், உம்முடைய சுமையை உம்மைவிட்டு நாம் இறக்கிவைத்தோம்.
94:3 (அது) உம்முடைய முதுகை முறித்துக் கொண்டிருந்தது.
94:4 மேலும், உமக்காக உம் புகழினை உயர்த்தினோம்.
94:5 உண்மையில் சிரமத்துடன் இலகுவும் இருக்கின்றது.
94:6 திண்ணமாக, சிரமத்துடன் இலகுவும் இருக்கிறது.
94:7 எனவே, நீர் ஓய்வு பெறும்போது வணக்க வழிபாட்டின் கடும் உழைப்பில் முனைப்புடன் ஈடுபடுவீராக!
94:8 மேலும், உம் இறைவனின் பக்கமே ஆர்வம் கொள்வீராக!
|