|
وَالضُّحٰىۙ ﴿93:1﴾
وَالَّيۡلِ اِذَا سَجٰىۙ ﴿93:2﴾
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلٰىؕ ﴿93:3﴾
وَلَـلۡاٰخِرَةُ خَيۡرٌ لَّكَ مِنَ الۡاُوۡلٰىؕ ﴿93:4﴾
وَلَسَوۡفَ يُعۡطِيۡكَ رَبُّكَ فَتَرۡضٰىؕ ﴿93:5﴾
اَلَمۡ يَجِدۡكَ يَتِيۡمًا فَاٰوٰى ﴿93:6﴾
وَوَجَدَكَ ضَآ لًّا فَهَدٰى ﴿93:7﴾
وَوَجَدَكَ عَآئِلًا فَاَغۡنٰىؕ ﴿93:8﴾
فَاَمَّا الۡيَتِيۡمَ فَلَا تَقۡهَرۡؕ ﴿93:9﴾
وَاَمَّا السَّآئِلَ فَلَا تَنۡهَرۡؕ ﴿93:10﴾
وَاَمَّا بِنِعۡمَةِ رَبِّكَ فَحَدِّثۡ ﴿93:11﴾
93:1 ஒளிமிக்க பகலின் மீது சத்தியமாக!
93:2 மேலும், இரவின் மீதும் சத்தியமாக, அது அமைதியாக வந்தடையும் போது!
93:3 (நபியே!) உம் இறைவன் உம்மை ஒருபோதும் கைவிடவில்லை; கோபம் கொள்ளவும் இல்லை.
93:4 மேலும், திண்ணமாக, பிந்திய காலகட்டம் முந்திய காலகட்டத்தைவிட உமக்கு மிகவும் சிறந்ததாயிருக்கும்.
93:5 மேலும், விரைவில் உம் இறைவன் நீர் திருப்தியடைந்து விடுமளவு உமக்கு வழங்குவான்.
93:6 அவன் உம்மை அநாதையாய்க் காணவில்லையா? பிறகு, புகலிடம் தந்தான் அல்லவா?
93:7 மேலும், அவன் உம்மை வழியறியாதவராய்க் கண்டான்; பிறகு, நேர்வழி காண்பித்தான்.
93:8 மேலும், அவன் உம்மை ஏழையாய்க் கண்டான்; பிறகு செல்வராய் ஆக்கினான்.
93:9 ஆகவே, நீர் அநாதைகளுடன் கடுமையாய் நடந்து கொள்ளாதீர்.
93:10 மேலும், யாசகம் கேட்பவரை விரட்டாதீர்.
93:11 மேலும், உம் இறைவனின் அருட்கொடைபற்றி எடுத்துரைப்பீர்.
| |