|
وَالَّيۡلِ اِذَا يَغۡشٰىۙ ﴿92:1﴾
وَالنَّهَارِ اِذَا تَجَلّٰىۙ ﴿92:2﴾
وَمَا خَلَقَ الذَّكَرَ وَالۡاُنۡثٰٓىۙ ﴿92:3﴾
اِنَّ سَعۡيَكُمۡ لَشَتّٰىؕ ﴿92:4﴾
فَاَمَّا مَنۡ اَعۡطٰى وَاتَّقٰىۙ ﴿92:5﴾
وَصَدَّقَ بِالۡحُسۡنٰىۙ ﴿92:6﴾
فَسَنُيَسِّرُهٗ لِلۡيُسۡرٰىؕ ﴿92:7﴾
وَاَمَّا مَنۡۢ بَخِلَ وَاسۡتَغۡنٰىۙ ﴿92:8﴾
وَكَذَّبَ بِالۡحُسۡنٰىۙ ﴿92:9﴾
فَسَنُيَسِّرُهٗ لِلۡعُسۡرٰىؕ ﴿92:10﴾
وَمَا يُغۡنِىۡ عَنۡهُ مَالُهٗۤ اِذَا تَرَدّٰىؕ ﴿92:11﴾
اِنَّ عَلَيۡنَا لَـلۡهُدٰىۖ ﴿92:12﴾
وَاِنَّ لَـنَا لَـلۡاٰخِرَةَ وَالۡاُوۡلٰى ﴿92:13﴾
فَاَنۡذَرۡتُكُمۡ نَارًا تَلَظّٰىۚ ﴿92:14﴾
لَا يَصۡلٰٮهَاۤ اِلَّا الۡاَشۡقَىۙ ﴿92:15﴾
الَّذِىۡ كَذَّبَ وَتَوَلّٰىؕ ﴿92:16﴾
وَسَيُجَنَّبُهَا الۡاَتۡقَىۙ ﴿92:17﴾
الَّذِىۡ يُؤۡتِىۡ مَالَهٗ يَتَزَكّٰىۚ ﴿92:18﴾
وَمَا لِاَحَدٍ عِنۡدَهٗ مِنۡ نِّعۡمَةٍ تُجۡزٰٓىۙ ﴿92:19﴾
اِلَّا ابۡتِغَآءَ وَجۡهِ رَبِّهِ الۡاَعۡلٰىۚ ﴿92:20﴾
وَلَسَوۡفَ يَرۡضٰى ﴿92:21﴾
92:1 இரவின் மீது சத்தியமாக, அது மூடி மறைத்துக் கொள்ளும்போது!
92:2 பகலின் மீது சத்தியமாக, அது ஒளிரும் போது!
92:3 மேலும், ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக!
92:4 உண்மையில் உங்களுடைய முயற்சிகள் பலதரப்பட்டவையாக இருக்கின்றன.
92:5 எனவே, எவர் (இறைவழியில்) பொருளை வழங்கினாரோ மேலும் (இறைவனுக்கு மாறு செய்வதிலிருந்து) விலகியிருந்தாரோ
92:6 மேலும், நன்மையை உண்மையென ஏற்றுக்கொண்டாரோ,
92:7 அவருக்கு இலகுவான வழியில் செல்வதற்கு நாம் வகை செய்வோம்.
92:8 எவர் கஞ்சத்தனம் செய்கின்றாரோ மேலும் (தன் இறைவனைப்) பொருட்படுத்தாமல் நடந்தாரோ;
92:9 இன்னும் நன்மையைப் பொய்யென நிராகரித்தாரோ
92:10 அவருக்கு கடினமான வழியில் செல்வதற்கு நாம் வகை செய்வோம்.
92:11 அவனுடைய செல்வம் அவன் அழிந்து விடும்போது அவனுக்கு என்ன பயன் அளிக்கப்போகின்றது?
92:12 திண்ணமாக, வழிகாட்டுவது எமது பொறுப்பேயாகும்.
92:13 மேலும், உண்மையில் மறுமை மற்றும் இம்மை இரண்டும் நமக்கே உரியனவாகும்.
92:14 எனவே, கொழுந்துவிட்டெரியும் நெருப்பைக் குறித்து உங்களை நான் எச்சரிக்கை செய்துவிட்டேன்.
92:15 ஆனால், அதில் யாரும் எரிந்துபோக மாட்டார்கள், பெரும் துர்ப்பாக்கியவானைத் தவிர!
92:16 அவர்கள் பொய்யென மறுத்தார்கள், புறக்கணித்தார்கள்.
92:17 மேலும், அதனைவிட்டுத் தொலைவில் வைக்கப்படுவார், மிகுந்த இறையச்சம் உடையவர்.
92:18 அவரோ தூய நிலை அடையும் பொருட்டு தம் செல்வத்தை வழங்குகின்றார்
92:19 கைமாறு செய்யும் அளவுக்கு எவருக்கும் அவர் நன்றிக்கடன் படவில்லை.
92:20 ஆனாலும், அவர் உயர்வுமிக்க தம் இறைவனின் திருப்தியைப் பெறுவதற்காகவே இதைச் செய்கின்றார்.
92:21 மேலும், (அவரைக் குறித்து) அவசியம் அவன் திருப்தியடைவான்.
| |