|
وَالشَّمۡسِ وَضُحٰٮهَا ۙ ﴿91:1﴾
وَالۡقَمَرِ اِذَا تَلٰٮهَا ۙ ﴿91:2﴾
وَالنَّهَارِ اِذَا جَلّٰٮهَا ۙ ﴿91:3﴾
وَالَّيۡلِ اِذَا يَغۡشٰٮهَا ۙ ﴿91:4﴾
وَالسَّمَآءِ وَمَا بَنٰٮهَا ۙ ﴿91:5﴾
وَالۡاَرۡضِ وَمَا طَحٰٮهَا ۙ ﴿91:6﴾
وَنَفۡسٍ وَّمَا سَوّٰٮهَا ۙ ﴿91:7﴾
فَاَلۡهَمَهَا فُجُوۡرَهَا وَتَقۡوٰٮهَا ۙ ﴿91:8﴾
قَدۡ اَفۡلَحَ مَنۡ زَكّٰٮهَا ۙ ﴿91:9﴾
وَقَدۡ خَابَ مَنۡ دَسّٰٮهَا ؕ ﴿91:10﴾
كَذَّبَتۡ ثَمُوۡدُ بِطَغۡوٰٮهَآ ۙ ﴿91:11﴾
اِذِ انۡۢبَعَثَ اَشۡقٰٮهَا ۙ ﴿91:12﴾
فَقَالَ لَهُمۡ رَسُوۡلُ اللّٰهِ نَاقَةَ اللّٰهِ وَسُقۡيٰهَا ؕ
﴿91:13﴾
فَكَذَّبُوۡهُ فَعَقَرُوۡهَا ۙفَدَمۡدَمَ عَلَيۡهِمۡ رَبُّهُمۡ بِذَنۡۢبِهِمۡ فَسَوّٰٮهَا ۙ
﴿91:14﴾
وَلَا يَخَافُ عُقۡبٰهَا ﴿91:15﴾
91:1 சூரியன் மீதும் அதன் வெயிலின் மீதும் சத்தியமாக!
91:2 மேலும், சந்திரன் மீது சத்தியமாக, அது சூரியனைத் தொடர்ந்து வரும்போது!
91:3 மேலும், பகலின் மீது சத்தியமாக, அது சூரியனை வெளிப்படுத்திக் காட்டும்போது!
91:4 மேலும், இரவின் மீது சத்தியமாக, அது சூரியனை மூடி மறைத்துக் கொள்ளும்போது!
91:5 மேலும், வானத்தின் மீதும் அதை அமைத்தவன் மீதும் சத்தியமாக!
91:6 மேலும், பூமியின் மீதும் அதை விரித்தவன் மீதும் சத்தியமாக!
91:7 மேலும், மனித ஆன்மாவின் மீதும் அதனைச் செம்மைப்படுத்தி பின்னர்,
91:8 அதன் தீமையையும் தூய்மையையும் அதனுடைய உள்ளுணர்வில் வைத்தவன் மீதும் சத்தியமாக!
91:9 திண்ணமாக, வெற்றி பெற்றுவிட்டான் மனத்தைத் தூய்மைப்படுத்தியவன்;
91:10 மேலும், தோற்றுவிட்டான் அதனை நசுக்கியவன்!
91:11 ஸமூத் சமுதாயத்தார் தங்கள் வரம்பு மீறிய போக்கினால் பொய்யெனத் தூற்றினார்கள்.
91:12 அவர்களில் மிகவும் கேடுகெட்ட ஒருவன் எழுந்து வந்தபோது
91:13 அவர்களை நோக்கி அல்லாஹ்வின் தூதர் கூறினார்: “எச்சரிக்கை! அல்லாஹ்வின் ஒட்டகம் (அதன் மீது கை வைக்காதீர்கள்;) அது நீர் அருந்துவதைத் (தடுக்காதீர்கள்).”
91:14 ஆனால், அம்மக்கள் அவருடைய பேச்சைப் பொய்யெனத் தூற்றினார்கள். மேலும், ஒட்டகத்தைக் கொன்று விட்டார்கள். இறுதியில், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய பாவத்தின் விளைவாக கடுமையானதொரு ஆபத்தை இறக்கி, அனைவரையும் அழித்து, மண்ணோடு மண்ணாக்கி விட்டான்.
91:15 மேலும், (தனது இந்தச் செயலின்) எந்தவொரு தீயவிளைவு பற்றியும் அவனுக்கு அச்சம் இல்லை.
| |