|
لَاۤ اُقۡسِمُ بِهٰذَا الۡبَلَدِۙ ﴿90:1﴾
وَاَنۡتَ حِلٌّ ۢ بِهٰذَا الۡبَلَدِۙ ﴿90:2﴾
وَوَالِدٍ وَّمَا وَلَدَ ۙ ﴿90:3﴾
لَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ فِىۡ كَبَدٍؕ ﴿90:4﴾
اَيَحۡسَبُ اَنۡ لَّنۡ يَّقۡدِرَ عَلَيۡهِ اَحَدٌ ۘ
﴿90:5﴾
يَقُوۡلُ اَهۡلَكۡتُ مَالًا لُّبَدًا ؕ ﴿90:6﴾
اَيَحۡسَبُ اَنۡ لَّمۡ يَرَهٗۤ اَحَدٌ ؕ ﴿90:7﴾
اَلَمۡ نَجۡعَلۡ لَّهٗ عَيۡنَيۡنِۙ ﴿90:8﴾
وَلِسَانًا وَّشَفَتَيۡنِۙ ﴿90:9﴾
وَهَدَيۡنٰهُ النَّجۡدَيۡنِۚ ﴿90:10﴾
فَلَا اقۡتَحَمَ الۡعَقَبَةَ ۖ ﴿90:11﴾
وَمَاۤ اَدۡرٰٮكَ مَا الۡعَقَبَةُ ؕ ﴿90:12﴾
فَكُّ رَقَبَةٍ ۙ ﴿90:13﴾
اَوۡ اِطۡعٰمٌ فِىۡ يَوۡمٍ ذِىۡ مَسۡغَبَةٍ ۙ ﴿90:14﴾
يَّتِيۡمًا ذَا مَقۡرَبَةٍ ۙ ﴿90:15﴾
اَوۡ مِسۡكِيۡنًا ذَا مَتۡرَبَةٍ ؕ ﴿90:16﴾
ثُمَّ كَانَ مِنَ الَّذِيۡنَ اٰمَنُوۡا وَتَوَاصَوۡا بِالصَّبۡرِ وَتَوَاصَوۡا بِالۡمَرۡحَمَةِ ؕ
﴿90:17﴾
اُولٰٓـئِكَ اَصۡحٰبُ الۡمَيۡمَنَةِ ؕ ﴿90:18﴾
وَالَّذِيۡنَ كَفَرُوۡا بِاٰيٰتِنَا هُمۡ اَصۡحٰبُ الۡمَشۡـئَـمَةِ ؕ
﴿90:19﴾
عَلَيۡهِمۡ نَارٌ مُّؤۡصَدَةٌ ﴿90:20﴾
90:1 இல்லை! இந்த (மக்கா) நகரின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்!
90:2 மேலும், நிலைமை என்னவெனில், (நபியே!) இந்நகரத்தில் நீர் ஆகுமாக்கப்பட்டுள்ளீர்!
90:3 மேலும் தந்தை (ஆதம்) மீதும் அவரிலிருந்து பிறந்த மக்கள் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.
90:4 திண்ணமாக, நாம் மனிதனைப் பெரும் கஷ்டத்தில் படைத்திருக்கின்றோம்.
90:5 ‘அவன் மீது யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது’ என்று அவன் நினைத்திருக்கின்றானா?
90:6 “ஏராளமான செல்வங்களை வாரி இறைத்துவிட்டேன்” என்று அவன் கூறுகின்றான்.
90:7 யாருமே அவனைப் பார்க்கவில்லை என்று அவன் கருதுகின்றானா?
90:8 அவனுக்கு நாம் இரு கண்களையும்
90:9 ஒரு நாவையும் இரு உதடுகளையும் அளிக்கவில்லையா?
90:10 மேலும், (நன்மை, தீமையின்) தெளிவான இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டிவிட்டோம். (இல்லையா?)
90:11 ஆயினும், அவன் கடினமான மலைப் பாதையைக் கடந்து செல்லத் துணியவில்லை.
90:12 கடினமான அந்த மலைப்பாதை எதுவென்று உமக்குத் தெரியுமா, என்ன?
90:13 (அதுதான்) ஒருவனை அடிமைத்தளையிலிருந்து விடுவிப்பது ஆகும்;
90:14 அல்லது பட்டினி நாளில் உணவளிப்பதும் ஆகும்.
90:15 உறவினரான அநாதைக்கோ
90:16 அல்லது வறுமையில் வாடும் ஏழைக்கோ (உணவளிப்பதும் ஆகும்!)
90:17 பின்னர் (அத்துடன்) எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, பொறுமையை மேற்கொள்ளவும் (மக்கள் மீது) இரக்கம் காட்டவும், ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுகின்றார்களோ, அவர்களில் ஒருவனாக அவன் இருக்கவேண்டும்.
90:18 இத்தகையோர்தாம் வலப்பக்கத்தார்.
90:19 மேலும், எவர்கள் நம்முடைய வசனங்களை ஏற்க மறுத்தார்களோ அவர்கள் இடப் பக்கத்தார்.
90:20 அவர்கள் மீது நெருப்பு படர்ந்திருக்கும்.
| |