|
بَرَآءَةٌ مِّنَ اللّٰهِ وَرَسُوۡلِهٖۤ اِلَى الَّذِيۡنَ عَاهَدتُّمۡ مِّنَ الۡمُشۡرِكِيۡنَ ؕ
﴿9:1﴾
فَسِيۡحُوۡا فِى الۡاَرۡضِ اَرۡبَعَةَ اَشۡهُرٍ وَّاعۡلَمُوۡۤا اَنَّكُمۡ غَيۡرُ مُعۡجِزِى اللّٰهِۙ وَاَنَّ اللّٰهَ مُخۡزِى الۡكٰفِرِيۡنَ
﴿9:2﴾
وَاَذَانٌ مِّنَ اللّٰهِ وَرَسُوۡلِهٖۤ اِلَى النَّاسِ يَوۡمَ الۡحَجِّ الۡاَكۡبَرِ اَنَّ اللّٰهَ بَرِىۡۤءٌ مِّنَ الۡمُشۡرِكِيۡنَ ۙ وَ رَسُوۡلُهٗ ؕ فَاِنۡ تُبۡتُمۡ فَهُوَ خَيۡرٌ لَّـكُمۡ ۚ وَاِنۡ تَوَلَّيۡتُمۡ فَاعۡلَمُوۡۤا اَنَّكُمۡ غَيۡرُ مُعۡجِزِى اللّٰهِ ؕ وَبَشِّرِ الَّذِيۡنَ كَفَرُوۡا بِعَذَابٍ اَ لِيۡمٍۙ
﴿9:3﴾
اِلَّا الَّذِيۡنَ عَاهَدتُّمۡ مِّنَ الۡمُشۡرِكِيۡنَ ثُمَّ لَمۡ يَنۡقُصُوۡكُمۡ شَيۡـئًـا وَّلَمۡ يُظَاهِرُوۡا عَلَيۡكُمۡ اَحَدًا فَاَتِمُّوۡۤا اِلَيۡهِمۡ عَهۡدَهُمۡ اِلٰى مُدَّتِهِمۡؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الۡمُتَّقِيۡنَ
﴿9:4﴾
فَاِذَا انْسَلَخَ الۡاَشۡهُرُ الۡحُـرُمُ فَاقۡتُلُوا الۡمُشۡرِكِيۡنَ حَيۡثُ وَجَدْتُّمُوۡهُمۡ وَخُذُوۡهُمۡ وَاحۡصُرُوۡهُمۡ وَاقۡعُدُوۡا لَهُمۡ كُلَّ مَرۡصَدٍ ۚ فَاِنۡ تَابُوۡا وَاَقَامُوا الصَّلٰوةَ وَ اٰتَوُا الزَّكٰوةَ فَخَلُّوۡا سَبِيۡلَهُمۡ ؕ اِنَّ اللّٰهَ غَفُوۡرٌ رَّحِيۡمٌ
﴿9:5﴾
وَاِنۡ اَحَدٌ مِّنَ الۡمُشۡرِكِيۡنَ اسۡتَجَارَكَ فَاَجِرۡهُ حَتّٰى يَسۡمَعَ كَلَامَ اللّٰهِ ثُمَّ اَبۡلِغۡهُ مَاۡمَنَهٗ ؕ ذٰ لِكَ بِاَنَّهُمۡ قَوۡمٌ لَّا يَعۡلَمُوۡنَ
﴿9:6﴾
كَيۡفَ يَكُوۡنُ لِلۡمُشۡرِكِيۡنَ عَهۡدٌ عِنۡدَ اللّٰهِ وَعِنۡدَ رَسُوۡلِهٖۤ اِلَّا الَّذِيۡنَ عَاهَدتُّمۡ عِنۡدَ الۡمَسۡجِدِ الۡحَـرَامِ ۚ فَمَا اسۡتَقَامُوۡا لَـكُمۡ فَاسۡتَقِيۡمُوۡا لَهُمۡ ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الۡمُتَّقِيۡنَ
﴿9:7﴾
كَيۡفَ وَاِنۡ يَّظۡهَرُوۡا عَلَيۡكُمۡ لَا يَرۡقُبُوۡا فِيۡكُمۡ اِلًّا وَّلَا ذِمَّةً ؕ يُرۡضُوۡنَـكُمۡ بِاَفۡوَاهِهِمۡ وَتَاۡبٰى قُلُوۡبُهُمۡۚ وَاَكۡثَرُهُمۡ فٰسِقُوۡنَۚ
﴿9:8﴾
اِشۡتَرَوۡا بِاٰيٰتِ اللّٰهِ ثَمَنًا قَلِيۡلًا فَصَدُّوۡا عَنۡ سَبِيۡلِهٖ ؕ اِنَّهُمۡ سَآءَ مَا كَانُوۡا يَعۡمَلُوۡنَ
﴿9:9﴾
لَا يَرۡقُبُوۡنَ فِىۡ مُؤۡمِنٍ اِلًّا وَّلَا ذِمَّةً ؕ وَاُولٰۤـئِكَ هُمُ الۡمُعۡتَدُوۡنَ
﴿9:10﴾
9:1 நீங்கள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள இணைவைப்பாளர்களுக்கு, அவர்களை விட்டு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர் என்று விடுக்கப்படும் அறிவிப்பாகும் இது.
9:2 எனவே, (இணை வைப்பாளரான) நீங்கள் நான்கு மாதங்களுக்கு பூமியில் நடமாடிக் கொள்ளுங்கள்; மேலும் திண்ணமாக நீங்கள் அல்லாஹ்வை தோல்வியுறச் செய்ய முடியாது என்பதையும், சத்தியத்தை நிராகரிப்பவர்களை நிச்சயம் அல்லாஹ் இழிவுபடுத்துவான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!
9:3 மேலும், மாபெரும் ஹஜ்ஜுடைய நாளில் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் சார்பில் எல்லா மக்களுக்கும் விடுக்கப்படும் பொது அறிவிப்பு என்னவெனில், இறைவனுக்கு இணைவைப்பவர்களை விட்டு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் திண்ணமாக விலகி விட்டார்கள். ஆகவே, நீங்கள் பாவமன்னிப்புத் தேடி மீளுவீர்களாயின் அது உங்களுக்கு நன்மை பயக்கும். நீங்கள் புறக்கணித்தால், அல்லாஹ்வை நீங்கள் தோல்வியுறச் செய்ய முடியாது என்பதை நன்கறிந்து கொள்ளுங்கள். மேலும், (நபியே!) கடுமையான வேதனை உண்டெனும் நற்செய்தியை இறைமறுப்பாளர்களுக்கு அறிவிப்பீராக!
9:4 ஆனால் இணைவைப்பாளர்களில் எவர்களுடன் உங்களுக்கு உடன்படிக்கை ஏற்பட்டு, பின்னர் அவர்கள் (தமது வாக்குறுதியை நிறைவேற்றுவதில்) உங்களிடம் எந்தக் குறைபாடும் செய்யாமலும், உங்களுக்கு எதிராக எவருக்கும் உதவாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு விதிவிலக்கு உண்டு. அத்தகையவர்களின் உடன்படிக்கையை உரிய தவணை வரை நிறைவாக்குங்கள்! ஏனெனில், திண்ணமாக அல்லாஹ் இறையச்சம் உடையோரையே நேசிக்கின்றான்.
9:5 எனவே, சங்கைக்குரிய மாதங்கள் கழிந்துவிட்டால், இறைவனுக்கு இணைவைப்போரை நீங்கள் எங்கு கண்டாலும் கொன்று விடுங்கள்! மேலும், அவர்களைச் சிறைப்பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள்! மேலும், எல்லா இடங்களிலிருந்தும் அவர்களைக் கண்காணியுங்கள். பிறகு, அவர்கள் பாவமன்னிப்புக் கோரி, தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தையும் கொடுத்தால் அவர்களை விட்டுவிடுங்கள்! திண்ணமாக, அல்லாஹ் அதிகம் மன்னிப்பவனாகவும் பெரிதும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்.
9:6 இணைவைப்பாளர்களில் எவரேனும் அடைக்கலம் கோரி உம்மிடம் (அல்லாஹ்வின் வேதத்தைச் செவியுறுவதற்காக) வந்தால், அப்பொழுது அல்லாஹ்வின் வேதத்தை அவர் செவியுறும் வரையில் அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பிறகு அவரை அவருடைய பாதுகாப்பிடத்தில் சேர்த்து விடுவீராக! இவ்வாறு ஏன் செய்ய வேண்டும் எனில், திண்ணமாக அவர்கள் அறியாத சமூகத்தினராய் இருக்கின்றனர்.
9:7 அல்லாஹ்விடத்திலும் அவனுடைய தூதரிடத்திலும் இந்த இணைவைப்பாளர்களின் உடன்படிக்கைக்கு என்ன முக்கியத்துவம் இருக்க முடியும்? ஆனால் மஸ்ஜிதுல் ஹராமுக்கு அருகில் யாருடன் நீங்கள் உடன்படிக்கை செய்திருந்தீர்களோ அவர்களுக்கு விதிவிலக்கு உண்டு. அவர்கள் உங்களோடு நேர்மையுடன் நடந்து கொள்ளும் வரை நீங்களும் அவர்களுடன் நேர்மையாய் நடந்துகொள்ளுங்கள்! ஏனென்றால், அல்லாஹ் இறையச்சமுள்ளவர்களை விரும்புகின்றான் .
9:8 (அவர்களைத் தவிர மற்ற இணைவைப்பாளர்களிடம்) எவ்வாறு உடன்படிக்கை வைத்துக்கொள்ள முடியும்? அவர்கள் (இப்படித்தான் நடந்து கொள்கின்றனர்.) உங்களை வெற்றிகொண்டு விட்டால் உங்கள் விஷயத்தில் எந்த உறவுமுறையையும் பார்ப்பதில்லை; மேலும் ஒப்பந்தத்தின் எந்தப் பொறுப்பையும் மதிப்பதில்லை. தங்களுடைய வாய்ப்பேச்சுகளால் உங்களைத் திருப்திப்படுத்த முயற்சி செய்கிறார்கள். ஆனால், அவர்களின் உள்ளங்கள் அவற்றை மறுக்கின்றன. மேலும், அவர்களில் பெரும்பாலோர் தீயவர்களாவர்.
9:9 அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்றார்கள். பின்னர் அல்லாஹ்வின் பாதையில் செல்லவிடாமல் (மக்களைத்) தடுத்தார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்கள் எத்துணைக் கெட்டவை!
9:10 இறைநம்பிக்கையாளனின் விஷயத்தில் எந்த உறவுமுறையையும் பார்ப்பதில்லை; ஒப்பந்தத்தின் எந்தப் பொறுப்பையும் அவர்கள் மதிப்பதில்லை. மேலும், இத்தகையவர்கள்தாம் எப்போதும் வரம்பு மீறுபவர்களாய் இருக்கின்றனர்.
| |