|
وَالۡفَجۡرِۙ ﴿89:1﴾
وَلَيَالٍ عَشۡرٍۙ ﴿89:2﴾
وَّالشَّفۡعِ وَالۡوَتۡرِۙ ﴿89:3﴾
وَالَّيۡلِ اِذَا يَسۡرِۚ ﴿89:4﴾
هَلۡ فِىۡ ذٰلِكَ قَسَمٌ لِّذِىۡ حِجۡرٍؕ ﴿89:5﴾
اَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍۙ ﴿89:6﴾
اِرَمَ ذَاتِ الۡعِمَادِۙ ﴿89:7﴾
الَّتِىۡ لَمۡ يُخۡلَقۡ مِثۡلُهَا فِى الۡبِلَادِۙ
﴿89:8﴾
وَثَمُوۡدَ الَّذِيۡنَ جَابُوا الصَّخۡرَ بِالۡوَادِۙ
﴿89:9﴾
وَفِرۡعَوۡنَ ذِى الۡاَوۡتَادِۙ ﴿89:10﴾
الَّذِيۡنَ طَغَوۡا فِى الۡبِلَادِۙ ﴿89:11﴾
فَاَكۡثَرُوۡا فِيۡهَا الۡفَسَادَۙ ﴿89:12﴾
فَصَبَّ عَلَيۡهِمۡ رَبُّكَ سَوۡطَ عَذَابٍ ۙۚ ﴿89:13﴾
اِنَّ رَبَّكَ لَبِالۡمِرۡصَادِؕ ﴿89:14﴾
فَاَمَّا الۡاِنۡسَانُ اِذَا مَا ابۡتَلٰٮهُ رَبُّهٗ فَاَكۡرَمَهٗ وَنَعَّمَهٗ ۙ فَيَقُوۡلُ رَبِّىۡۤ اَكۡرَمَنِؕ
﴿89:15﴾
وَاَمَّاۤ اِذَا مَا ابۡتَلٰٮهُ فَقَدَرَ عَلَيۡهِ رِزۡقَهٗ ۙ فَيَقُوۡلُ رَبِّىۡۤ اَهَانَنِۚ
﴿89:16﴾
كَلَّا بَلۡ لَّا تُكۡرِمُوۡنَ الۡيَتِيۡمَۙ ﴿89:17﴾
وَلَا تَحٰٓضُّوۡنَ عَلٰى طَعَامِ الۡمِسۡكِيۡنِۙ ﴿89:18﴾
وَتَاۡكُلُوۡنَ التُّرَاثَ اَكۡلًا لَّـمًّا ۙ ﴿89:19﴾
وَّتُحِبُّوۡنَ الۡمَالَ حُبًّا جَمًّا ؕ ﴿89:20﴾
كَلَّاۤ اِذَا دُكَّتِ الۡاَرۡضُ دَكًّا دَكًّا ۙ ﴿89:21﴾
وَّجَآءَ رَبُّكَ وَالۡمَلَكُ صَفًّا صَفًّا ۚ ﴿89:22﴾
وَجِاىْٓءَ يَوۡمَـئِذٍۢ بِجَهَنَّمَ ۙ يَوۡمَـئِذٍ يَّتَذَكَّرُ الۡاِنۡسَانُ وَاَنّٰى لَـهُ الذِّكۡرٰىؕ
﴿89:23﴾
يَقُوۡلُ يٰلَيۡتَنِىۡ قَدَّمۡتُ لِحَـيَاتِىۚ ﴿89:24﴾
فَيَوۡمَـئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهٗۤ اَحَدٌ ۙ ﴿89:25﴾
وَّلَا يُوۡثِقُ وَثَاقَهٗۤ اَحَدٌ ؕ ﴿89:26﴾
يٰۤاَيَّتُهَا النَّفۡسُ الۡمُطۡمَـئِنَّةُ ۖ ﴿89:27﴾
ارۡجِعِىۡۤ اِلٰى رَبِّكِ رَاضِيَةً مَّرۡضِيَّةً ۚ
﴿89:28﴾
فَادۡخُلِىۡ فِىۡ عِبٰدِىۙ ﴿89:29﴾
وَادۡخُلِىۡ جَنَّتِى ﴿89:30﴾
89:1 வைகறைப் பொழுதின் மீது சத்தியமாக!
89:2 மேலும், பத்து இரவுகளின் மீதும்,
89:3 இரட்டை மற்றும் ஒற்றையின் மீதும்,
89:4 சென்று கொண்டிருக்கும் இரவின் மீதும் சத்தியமாக!
89:5 அறிவுள்ள ஒருவருக்கு இனியும் சத்தியம் தேவையா, என்ன?
89:6 ஆது கூட்டத்தாருடன் உம் இறைவன் எவ்வாறு நடந்து கொண்டான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?
89:7 (அவர்கள்) உயரமான தூண்களையுடைய இரம் எனும் நகரவாசிகள்;
89:8 அவர்களைப் போன்று எந்தச் சமுதாயமும் உலகநாடுகளில் படைக்கப்படவில்லை;
89:9 மேலும், பள்ளத்தாக்கில் பாறைகளைக் குடைந்த ஸமூத் சமுதாயத்தாருடனும்
89:10 மேலும், முளைகளையுடைய ஃபிர்அவ்னுடனும் (உம்முடைய இறைவன் எவ்வாறு நடந்துகொண்டான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?)
89:11 அந்த மக்களோ உலக நாடுகளில் வரம்புமீறிய செயல்களில் ஈடுபட்டிருந்தார்கள்;
89:12 அங்கு பெரும் குழப்பத்தை விளைவித்திருந்தார்கள்.
89:13 இறுதியில், அவர்கள் மீது உம் இறைவன் தண்டனையின் சாட்டைகளைப் பொழிந்தான்.
89:14 உண்மையில், உம் இறைவன் குறிவைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றான்.
89:15 ஆனால், மனிதனின் நிலை எப்படி இருக்கின்றதெனில், அவனுடைய இறைவன் அவனைச் சோதிக்க நாடினால் மேலும், அவனை கண்ணியப்படுத்தி, அருட்கொடைகளையும் வழங்கினால், “என்னுடைய இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான்” என்று கூறுகின்றான்.
89:16 மேலும், அவனைச் சோதிக்க நாடினால் மேலும், அவனுடைய வாழ்க்கை வசதிகளைக் குறைத்து விட்டால் “என் இறைவன் என்னை இழிவுபடுத்திவிட்டான்” என்று கூறுகின்றான்.
89:17 ஒருபோதும் இல்லை! ஆனால், அநாதையுடன் கண்ணியமாய் நீங்கள் நடந்து கொள்வதில்லை;
89:18 மேலும், வறியவர்க்கு உணவளிக்க ஒருவரையொருவர் தூண்டுவதுமில்லை!
89:19 மேலும், வாரிசுச் சொத்துக்களை முழுமையாக நீங்களே விழுங்கிவிடுகின்றீர்கள்.
89:20 மேலும், செல்வத்தின் மீது அளவு கடந்த மோகம் கொண்டுள்ளீர்கள்.
89:21 ஒருபோதுமில்லை! பூமி தூள் தூளாக அடித்து நொறுக்கப்படும்போது,
89:22 மேலும் வானவர்கள் அணி அணியாக நிற்கும் நிலையில் உம் இறைவன் வருகை தரும்போது,
89:23 மேலும், அந்நாளில் நரகம் கண்ணெதிரில் கொண்டு வரப்படும்போது அந்நாளில்தான் மனிதன் புரிந்து கொள்வான். அப்போது அவன் புரிந்துகொள்வது என்ன பயனை அளிக்கும்?
89:24 அவன் புலம்புவான்: ‘அய்யகோ! எனது இந்த வாழ்க்கைக்காக சில ஏற்பாடுகளை, நான் முன்னரே செய்திருக்கக்கூடாதா?
89:25 அந்நாளில் அல்லாஹ் தண்டிப்பதுபோல், தண்டிப்பவர் எவருமிலர்.
89:26 அவன் கட்டுவதுபோல் கட்டுபவரும் எவரும் இலர்.
89:27 (மற்றொரு புறத்தில் அறிவிக்கப்படும்:) ஓ! அமைதியடைந்த ஆன்மாவே!
89:28 செல் உன் இறைவனின் பக்கம்! (உன் நல்ல முடிவைக்கொண்டு) மகிழ்ந்த நிலையில்; (மேலும் உன் இறைவனின்) திருப்தியைப் பெற்ற நிலையில்!
89:29 இணைந்துவிடு, என்னுடைய (நல்) அடியார்களுடன்!
89:30 மேலும், புகுந்துவிடு, என்னுடைய சுவனத்தில்!”
| |