|
سَبِّحِ اسۡمَ رَبِّكَ الۡاَعۡلَىۙ ﴿87:1﴾
الَّذِىۡ خَلَقَ فَسَوّٰى ۙ ﴿87:2﴾
وَالَّذِىۡ قَدَّرَ فَهَدٰى ۙ ﴿87:3﴾
وَالَّذِىۡۤ اَخۡرَجَ الۡمَرۡعٰى ۙ ﴿87:4﴾
فَجَعَلَهٗ غُثَآءً اَحۡوٰىؕ ﴿87:5﴾
سَنُقۡرِئُكَ فَلَا تَنۡسٰٓىۙ ﴿87:6﴾
اِلَّا مَا شَآءَ اللّٰهُؕ اِنَّهٗ يَعۡلَمُ الۡجَهۡرَ وَمَا يَخۡفٰىؕ
﴿87:7﴾
وَنُيَسِّرُكَ لِلۡيُسۡرٰى ۖۚ ﴿87:8﴾
فَذَكِّرۡ اِنۡ نَّفَعَتِ الذِّكۡرٰىؕ ﴿87:9﴾
سَيَذَّكَّرُ مَنۡ يَّخۡشٰىۙ ﴿87:10﴾
وَيَتَجَنَّبُهَا الۡاَشۡقَىۙ ﴿87:11﴾
الَّذِىۡ يَصۡلَى النَّارَ الۡكُبۡرٰىۚ ﴿87:12﴾
ثُمَّ لَا يَمُوۡتُ فِيۡهَا وَلَا يَحۡيٰىؕ ﴿87:13﴾
قَدۡ اَفۡلَحَ مَنۡ تَزَكّٰىۙ ﴿87:14﴾
وَذَكَرَ اسۡمَ رَبِّهٖ فَصَلّٰى ؕ ﴿87:15﴾
بَلۡ تُؤۡثِرُوۡنَ الۡحَيٰوةَ الدُّنۡيَا ۖ ﴿87:16﴾
وَالۡاٰخِرَةُ خَيۡرٌ وَّ اَبۡقٰىؕ ﴿87:17﴾
اِنَّ هٰذَا لَفِى الصُّحُفِ الۡاُوۡلٰىۙ ﴿87:18﴾
صُحُفِ اِبۡرٰهِيۡمَ وَمُوۡسٰى ﴿87:19﴾
87:1 (நபியே!) உயர்வான உம் இறைவனுடைய திருப் பெயரைத் துதிப்பீராக!
87:2 அவன் எத்தகையவன் எனில், அவன்தான் படைத்தான்; பொருத்தமாகவும் அமைத்தான்;
87:3 மேலும் விதியை நிர்ணயித்தான்; பிறகு வழிகாட்டினான்.
87:4 மேலும், தாவரங்களை முளைக்கச் செய்தான்.
87:5 பின்னர், அவற்றைக் காய்ந்து கருகிய குப்பைக் கூளங்களாய் ஆக்கினான்.
87:6 (நபியே!) நாம் உம்மை ஓதிடச் செய்வோம். பிறகு நீர் மறக்க மாட்டீர்;
87:7 ஆனால், அல்லாஹ் நாடியதைத் தவிர! திண்ணமாக, அவன் வெளிப்படையாகவும், மறைவாகவும் இருக்கும் யாவற்றையும் அறிகின்றான்.
87:8 மேலும், இலகுவான பாதையை நாம் உமக்கு ஏற்படுத்தித் தருவோம்.
87:9 எனவே, அறிவுரை வழங்குவீராக, அறிவுரை பலனளிக்குமாயின்!
87:10 எவர் அஞ்சுகிறாரோ, அவர் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்.
87:11 ஆனால் துர்ப்பாக்கியவானோ அதனைத் தவிர்த்துக்கொள்வான்.
87:12 அவன் பெரும் நெருப்பில் நுழைவான்;
87:13 பிறகு அதில் மரணமடையவும் மாட்டான்; வாழவும் மாட்டான்!
87:14 நிச்சயமாக வெற்றி அடைந்து விட்டார், தூய்மையை மேற்கொண்டு
87:15 மேலும், தன் இறைவனின் பெயரை நினைவு கூர்ந்து தொழுகையை நிறைவேற்றியவர்.
87:16 ஆனால், நீங்கள் இம்மை வாழ்விற்கே முன்னுரிமை அளிக்கின்றீர்கள்.
87:17 உண்மையில், மறுமையே மிகவும் மேலானதாகவும், நிலைத்து நிற்கக்கூடியதாகவும் இருக்கின்றது.
87:18 நிச்சயமாக இதே விஷயம் முன்னர் அருளப்பட்ட வேதங்களிலும் சொல்லப்பட்டிருந்தது;
87:19 இப்ராஹீம், மூஸாவுடைய வேதங்களில்!
| |