|
وَالسَّمَآءِ وَالطَّارِقِۙ ﴿86:1﴾
وَمَاۤ اَدۡرٰٮكَ مَا الطَّارِقُۙ ﴿86:2﴾
النَّجۡمُ الثَّاقِبُۙ ﴿86:3﴾
اِنۡ كُلُّ نَفۡسٍ لَّمَّا عَلَيۡهَا حَافِظٌؕ ﴿86:4﴾
فَلۡيَنۡظُرِ الۡاِنۡسَانُ مِمَّ خُلِقَؕ ﴿86:5﴾
خُلِقَ مِنۡ مَّآءٍ دَافِقٍۙ ﴿86:6﴾
يَّخۡرُجُ مِنۡۢ بَيۡنِ الصُّلۡبِ وَالتَّرَآئِبِؕ
﴿86:7﴾
اِنَّهٗ عَلٰى رَجۡعِهٖ لَقَادِرٌؕ ﴿86:8﴾
يَوۡمَ تُبۡلَى السَّرَآئِرُۙ ﴿86:9﴾
فَمَا لَهٗ مِنۡ قُوَّةٍ وَّلَا نَاصِرٍؕ ﴿86:10﴾
وَالسَّمَآءِ ذَاتِ الرَّجۡعِۙ ﴿86:11﴾
وَالۡاَرۡضِ ذَاتِ الصَّدۡعِۙ ﴿86:12﴾
اِنَّهٗ لَقَوۡلٌ فَصۡلٌۙ ﴿86:13﴾
وَّمَا هُوَ بِالۡهَزۡلِؕ ﴿86:14﴾
اِنَّهُمۡ يَكِيۡدُوۡنَ كَيۡدًا ۙ ﴿86:15﴾
وَّاَكِيۡدُ كَيۡدًا ۚۖ ﴿86:16﴾
فَمَهِّلِ الۡكٰفِرِيۡنَ اَمۡهِلۡهُمۡ رُوَيۡدًا ﴿86:17﴾
86:1 வானத்தின் மீது சத்தியமாக! மேலும், இரவில் தோன்றக்கூடியதன் மீதும் சத்தியமாக!
86:2 இரவில் தோன்றக்கூடியது எது என்று உமக்குத் தெரியுமா, என்ன?
86:3 அது ஓர் ஒளிரும் தாரகை.
86:4 பாதுகாப்பாளன் இல்லாத எந்த ஓர் உயிருமில்லை.
86:5 பிறகு, மனிதன் தான் எப்பொருளிலிருந்து படைக்கப்பட்டிருக்கின்றான் என்பதையாவது சற்று கவனித்துப் பார்க்கட்டுமே!
86:6 பீறிட்டுப் பாயும் நீரிலிருந்து படைக்கப்பட்டுள்ளான்!
86:7 அது, முதுகெலும்புக்கும், நெஞ்செலும்புக்கும் இடையிலிருந்து வெளியாகின்றது.
86:8 திண்ணமாக, அவன் (அந்தப் படைப்பாளன்) மீண்டும் அவனைப் படைப்பதற்கு ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான்.
86:9 எந்நாளில் மறைவான இரகசியங்கள் சோதனை இடப்படுமோ அந்நாளில்
86:10 மனிதனிடம் எந்த சுய வலிமையும் இராது; அவனுக்குத் துணை புரிபவர் எவரும் இருக்கமாட்டார்.
86:11 மழையைப் பொழிகின்ற வானத்தின் மீது சத்தியமாக!
86:12 மேலும் (தாவரங்கள் முளைக்கின்ற போது) பிளந்துவிடுகின்ற பூமியின் மீது சத்தியமாக!
86:13 திண்ணமாக, இது தீர்க்கமான சொல்லே
86:14 தவிர கேலியோ விளையாட்டோ அல்ல!
86:15 (மக்காவின் இறைநிராகரிப்பாளர்களான) இவர்கள் சில சூழ்ச்சிகள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
86:16 நானும் ஒரு சூழ்ச்சி செய்து கொண்டிருக்கின்றேன்.
86:17 எனவே (நபியே!) விட்டுவிடுவீராக, இந்நிராகரிப்பாளர்களை! சொற்ப காலம் (அவர்களுடைய நிலையிலே) அவர்களை விட்டுவிடுவீராக!
| |