|
اِذَا السَّمَآءُ انْشَقَّتۡۙ ﴿84:1﴾
وَاَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡۙ ﴿84:2﴾
وَاِذَا الۡاَرۡضُ مُدَّتۡؕ ﴿84:3﴾
وَاَلۡقَتۡ مَا فِيۡهَا وَتَخَلَّتۡۙ ﴿84:4﴾
وَاَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡؕ ﴿84:5﴾
يٰۤاَيُّهَا الۡاِنۡسَانُ اِنَّكَ كَادِحٌ اِلٰى رَبِّكَ كَدۡحًا فَمُلٰقِيۡهِۚ
﴿84:6﴾
فَاَمَّا مَنۡ اُوۡتِىَ كِتٰبَهٗ بِيَمِيۡنِهٖۙ ﴿84:7﴾
فَسَوۡفَ يُحَاسَبُ حِسَابًا يَّسِيۡرًا ۙ ﴿84:8﴾
وَّيَنۡقَلِبُ اِلٰٓى اَهۡلِهٖ مَسۡرُوۡرًا ؕ ﴿84:9﴾
وَاَمَّا مَنۡ اُوۡتِىَ كِتٰبَهٗ وَرَآءَ ظَهۡرِهٖۙ
﴿84:10﴾
فَسَوۡفَ يَدۡعُوۡا ثُبُوۡرًا ۙ ﴿84:11﴾
وَّيَصۡلٰى سَعِيۡرًا ؕ ﴿84:12﴾
اِنَّهٗ كَانَ فِىۡۤ اَهۡلِهٖ مَسۡرُوۡرًا ؕ ﴿84:13﴾
اِنَّهٗ ظَنَّ اَنۡ لَّنۡ يَّحُوۡرَ ۛۚ ﴿84:14﴾
بَلٰٓى ۛۚ اِنَّ رَبَّهٗ كَانَ بِهٖ بَصِيۡرًا ؕ ﴿84:15﴾
فَلَاۤ اُقۡسِمُ بِالشَّفَقِۙ ﴿84:16﴾
وَالَّيۡلِ وَمَا وَسَقَۙ ﴿84:17﴾
وَالۡقَمَرِ اِذَا اتَّسَقَۙ ﴿84:18﴾
لَتَرۡكَبُنَّ طَبَقًا عَنۡ طَبَقٍؕ ﴿84:19﴾
فَمَا لَهُمۡ لَا يُؤۡمِنُوۡنَۙ ﴿84:20﴾
وَاِذَا قُرِئَ عَلَيۡهِمُ الۡقُرۡاٰنُ لَا يَسۡجُدُوۡنَ ؕ ۩
﴿84:21﴾
بَلِ الَّذِيۡنَ كَفَرُوۡا يُكَذِّبُوۡنَ ۖ ﴿84:22﴾
وَاللّٰهُ اَعۡلَمُ بِمَا يُوۡعُوۡنَ ۖ ﴿84:23﴾
فَبَشِّرۡهُمۡ بِعَذَابٍ اَلِيۡمٍۙ ﴿84:24﴾
اِلَّا الَّذِيۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمۡ اَجۡرٌ غَيۡرُ مَمۡنُوۡنٍ
﴿84:25﴾
84:1 வானம் பிளக்கின்றபோது
84:2 மேலும், அது தன்னுடைய அதிபதியின் கட்டளையை செயல்படுத்தும்போது, இது(தன் அதிபதியின் கட்டளைக்கு முழுமையாகப் பணிவது)தான் அதற்கு ஏற்றதாகும்.
84:3 மேலும், பூமி பரப்பப்பட்டு விடும்போது
84:4 இன்னும், அது தன்னுள் இருப்பவை அனைத்தையும் வெளியில் எறிந்துவிட்டு, ஏதுமற்றதாய் ஆகிவிடும்போது
84:5 மேலும், அது தன் அதிபதியின் கட்டளையைச் செயல்படுத்தும்போது, இது (தன் அதிபதியின் கட்டளைக்கு முழுமையாகப் பணிவது)தான் அதற்கு ஏற்றதாகும்.
84:6 “மனிதனே! நீ இடைவிடாமல் பாடுபட்டு உன் இறைவனின் பக்கம் சென்று கொண்டிருப்பவனாகவும் அவனை நீ சந்திக்கக்கூடியவனாகவும் இருக்கின்றாய்.
84:7 எவருடைய வினைப்பட்டியல் அவர் வலக்கையில் கொடுக்கப்படுமோ
84:8 அவரிடம் எளிதான கணக்கு வாங்கப்படும்.
84:9 மேலும், அவர் தம் குடும்பத்தாரை நோக்கி மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்வார்.
84:10 ஆனால், எவனுடைய வினைப்பட்டியல் அவன் முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுமோ
84:11 அவன் மரணத்தை அழைப்பான்.
84:12 பிறகு, கொழுந்து விட்டெரியும் நரகத்தில் போய் வீழ்வான்.
84:13 அவன் தன்னுடைய குடும்பத்தாரிடம் இன்பத்தில் மூழ்கியிருந்தான்.
84:14 (தன்னுடைய இறைவனின் பக்கம்) ஒருபோதும் திரும்பி வர வேண்டியதில்லை என்று அவன் கருதியிருந்தான்.
84:15 ஏன் திரும்பி வர வேண்டியதில்லை? அவனுடைய இறைவன் அவனுடைய இழிசெயல்களைப் பார்த்துக் கொண்டுதானே இருந்தான்!
84:16 அவ்வாறில்லை! அந்தி நேரத்துச் செவ்வானத்தின் மீதும்,
84:17 இரவின் மீதும், மேலும், அது ஒன்றுதிரட்டி வைத்துக் கொண்டிருப்பவற்றின் மீதும்
84:18 மேலும், முழுமையாய் மலர்ந்து விடும் சந்திரன் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.
84:19 திண்ணமாக, நீங்கள் படிப்படியாய் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குக் கடந்து செல்ல வேண்டியுள்ளது.
84:20 பிறகு, இம்மக்களுக்கு என்ன நேர்ந்தது? நம்பிக்கை கொள்ளாமல் இருக்கிறார்களே!
84:21 மேலும், இவர்களின் முன்னிலையில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், இவர்கள் ஸஜ்தா* செய்வதுமில்லையே!
84:22 மாறாக, இந்த நிராகரிப்பாளர்களோ பொய்யெனத் தூற்றுகின்றார்கள்.
84:23 உண்மையில், இவர்கள் (தம் வினைச்சுவடிகளில்) சேர்த்துக் கொண்டிருப்பவற்றை அல்லாஹ் நன்கறிகின்றான்.
84:24 எனவே, இவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனைக்கான “நற்செய்தியை” அறிவித்துவிடுவீராக!
84:25 ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாகவும் நற்செயல்கள் செய்தவர்களாகவும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு என்றென்றும் முடிவுறாத கூலி இருக்கிறது.
| |