|
عَبَسَ وَتَوَلّٰٓىۙ ﴿80:1﴾
اَنۡ جَآءَهُ الۡاَعۡمٰىؕ ﴿80:2﴾
وَمَا يُدۡرِيۡكَ لَعَلَّهٗ يَزَّكّٰٓىۙ ﴿80:3﴾
اَوۡ يَذَّكَّرُ فَتَنۡفَعَهُ الذِّكۡرٰىؕ ﴿80:4﴾
اَمَّا مَنِ اسۡتَغۡنٰىۙ ﴿80:5﴾
فَاَنۡتَ لَهٗ تَصَدّٰىؕ ﴿80:6﴾
وَمَا عَلَيۡكَ اَلَّا يَزَّكّٰٓىؕ ﴿80:7﴾
وَاَمَّا مَنۡ جَآءَكَ يَسۡعٰىۙ ﴿80:8﴾
وَهُوَ يَخۡشٰىۙ ﴿80:9﴾
فَاَنۡتَ عَنۡهُ تَلَهّٰىۚ ﴿80:10﴾
كَلَّاۤ اِنَّهَا تَذۡكِرَةٌ ۚ ﴿80:11﴾
فَمَنۡ شَآءَ ذَكَرَهٗۘ ﴿80:12﴾
فِىۡ صُحُفٍ مُّكَرَّمَةٍۙ ﴿80:13﴾
مَّرۡفُوۡعَةٍ مُّطَهَّرَةٍ ۭۙ ﴿80:14﴾
بِاَيۡدِىۡ سَفَرَةٍۙ ﴿80:15﴾
كِرَامٍۢ بَرَرَةٍؕ ﴿80:16﴾
قُتِلَ الۡاِنۡسَانُ مَاۤ اَكۡفَرَهٗؕ ﴿80:17﴾
مِنۡ اَىِّ شَىۡءٍ خَلَقَهٗؕ ﴿80:18﴾
مِنۡ نُّطۡفَةٍؕ خَلَقَهٗ فَقَدَّرَهٗ ۙ ﴿80:19﴾
ثُمَّ السَّبِيۡلَ يَسَّرَهٗۙ ﴿80:20﴾
ثُمَّ اَمَاتَهٗ فَاَقۡبَرَهٗۙ ﴿80:21﴾
ثُمَّ اِذَا شَآءَ اَنۡشَرَهٗؕ ﴿80:22﴾
كَلَّا لَـمَّا يَقۡضِ مَاۤ اَمَرَهٗؕ ﴿80:23﴾
فَلۡيَنۡظُرِ الۡاِنۡسَانُ اِلٰى طَعَامِهٖۤۙ ﴿80:24﴾
اَنَّا صَبَبۡنَا الۡمَآءَ صَبًّا ۙ ﴿80:25﴾
ثُمَّ شَقَقۡنَا الۡاَرۡضَ شَقًّا ۙ ﴿80:26﴾
فَاَنۡۢبَتۡنَا فِيۡهَا حَبًّا ۙ ﴿80:27﴾
وَّ عِنَبًا وَّقَضۡبًا ۙ ﴿80:28﴾
وَّزَيۡتُوۡنًا وَّنَخۡلًا ؕ ﴿80:29﴾
وَحَدَآئِقَ غُلۡبًا ۙ ﴿80:30﴾
وَّفَاكِهَةً وَّاَبًّا ۙ ﴿80:31﴾
مَّتَاعًا لَّـكُمۡ وَلِاَنۡعَامِكُمۡؕ ﴿80:32﴾
فَاِذَا جَآءَتِ الصَّآخَّةُ ﴿80:33﴾
يَوۡمَ يَفِرُّ الۡمَرۡءُ مِنۡ اَخِيۡهِۙ ﴿80:34﴾
وَاُمِّهٖ وَاَبِيۡهِۙ ﴿80:35﴾
وَصَاحِبَتِهٖ وَبَنِيۡهِؕ ﴿80:36﴾
لِكُلِّ امۡرِیءٍ مِّنۡهُمۡ يَوۡمَـئِذٍ شَاۡنٌ يُّغۡنِيۡهِؕ
﴿80:37﴾
وُجُوۡهٌ يَّوۡمَـئِذٍ مُّسۡفِرَةٌ ۙ ﴿80:38﴾
ضَاحِكَةٌ مُّسۡتَبۡشِرَةٌ ۚ ﴿80:39﴾
وَوُجُوۡهٌ يَّوۡمَـئِذٍ عَلَيۡهَا غَبَرَةٌ ۙ ﴿80:40﴾
تَرۡهَقُهَا قَتَرَةٌ ؕ ﴿80:41﴾
اُولٰٓـئِكَ هُمُ الۡكَفَرَةُ الۡفَجَرَةُ ﴿80:42﴾
80:1 முகம் சுளித்தார்; மேலும், புறக்கணித்தார்,
80:2 அந்தப் பார்வையிழந்தவர் அவரிடம் வந்ததற்காக!
80:3 அவர் சீர்திருந்தக்கூடும்
80:4 அல்லது அறிவுரைக்குச் செவி சாய்க்கக்கூடும்; அந்த அறிவுரை அவருக்குப் பயனளித்திருக்கும் என்பது பற்றி உமக்குத் தெரியுமா, என்ன?
80:5 எவன் அலட்சியம் செய்கின்றானோ
80:6 அவன் பக்கம் நீர் கவனம் செலுத்துகின்றீர்.
80:7 அவன் திருந்தாவிட்டால் அதற்கு நீர் பொறுப்பாளியா, என்ன?
80:8 மேலும், எவர் உம்மிடம் விரைந்து வருகின்றாரோ
80:9 (இறைவனை) அஞ்சியவராக
80:10 அவரைக் குறித்து நீர் பாராமுகமாக இருந்துவிடுகின்றீர்!
80:11 அவ்வாறன்று! நிச்சயமாக, இது ஓர் அறிவுரையாகும்.
80:12 எவர் விரும்புகின்றாரோஅவர் இதனை ஏற்றுக் கொள்ளட்டும்.
80:13 இது கண்ணியமிக்க,
80:14 உயர்வான, தூய்மையான ஏடுகளில் பொறிக்கப்பட்டு உள்ளது.
80:15 (அந்த ஏடுகள்) எழுத்தர்களின் கைகளில் உள்ளன.
80:16 (அந்த எழுத்தர்கள்) கண்ணியம் மிகுந்தவர்கள், நல்லவர்கள்.
80:17 மனிதன் மீது சாபம் உண்டாகட்டும்! அவன் சத்தியத்தை எத்துணைக் கடுமையாக மறுப்பவனாய் இருக்கின்றான்!
80:18 அல்லாஹ், அவனை எதிலிருந்து படைத்திருக்கின்றான்?
80:19 ஒரு துளி இந்திரியத்திலிருந்துதானே அல்லாஹ் அவனைப் படைத்தான்! பின்னர், அவனுடைய விதியை நிர்ணயித்தான்.
80:20 பிறகு, வாழ்வின் பாதையை அவனுக்கு எளிதாக்கினான்.
80:21 பிறகு, அவனை மரணமடையச் செய்தான்; மேலும், மண்ணறையில் கொண்டு சேர்த்தான்.
80:22 பிறகு, அவன் நாடும்போது அவனை மீண்டும் உயிர் பெற்றெழச் செய்வான்.
80:23 ஒருபோதுமில்லை! அல்லாஹ் அவன் மீது விதித்திருந்த கடமைகளை அவன் நிறைவேற்றவில்லை!
80:24 பிறகு, மனிதன் தனது உணவின் பக்கம் சற்று நோட்டமிடட்டும்.
80:25 நிச்சயமாக, நாம் நீரை நிறையப் பொழிந்தோம்.
80:26 பின்னர், வியக்கத்தக்க முறையில் பூமியைப் பிளந்தோம்.
80:27 பிறகு, அதில் தானியங்களையும்,
80:28 திராட்சைகளையும், காய்கறிகளையும்,
80:29 ஆலிவ் மற்றும் பேரீச்சை மரங்களையும்,
80:30 அடர்ந்த தோட்டங்களையும்,
80:31 விதவிதமான கனிகளையும் மற்றும் புற்பூண்டுகளையும் முளைக்கச் செய்தோம்,
80:32 உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும் வாழ்வதாராப் பொருட்களாகும் பொருட்டு!
80:33 இறுதியில், காதைச் செவிடாக்கும் அந்தப் பேரோசை முழங்கும்போது
80:34 அந்நாளில் மனிதன் விரண்டோடுவான் தன் சகோதரனை விட்டும்
80:35 தாயையும் தந்தையையும் விட்டும்
80:36 தன்னுடைய மனைவியையும் குழந்தைகளையும் விட்டும்.
80:37 அவர்களில் ஒவ்வொருவருக்கும் அந்நாளில் தன்னைத் தவிர வேறெவரைப் பற்றியும் கவனம் செலுத்தமுடியாத நிலை வந்தே தீரும்!
80:38 சில முகங்கள் அந்நாளில் பளிச்சிட்டுக் கொண்டிருக்கும்;
80:39 சிரித்துக் கொண்டும் மலர்ச்சியுடனும் இருக்கும்.
80:40 மேலும், அந்நாளில் வேறு சில முகங்களில் புழுதி படிந்திருக்கும்.
80:41 அவற்றில் இருளும் கருமையும் கப்பியிருக்கும்.
80:42 அவர்கள்தாம் நிராகரிப்பாளர்கள்; தீயவர்கள்.
| |