|
وَالنّٰزِعٰتِ غَرۡقًا ۙ ﴿79:1﴾
وَّالنّٰشِطٰتِ نَشۡطًا ۙ ﴿79:2﴾
وَّالسّٰبِحٰتِ سَبۡحًا ۙ ﴿79:3﴾
فَالسّٰبِقٰتِ سَبۡقًا ۙ ﴿79:4﴾
فَالۡمُدَبِّرٰتِ اَمۡرًا ۘ ﴿79:5﴾
يَوۡمَ تَرۡجُفُ الرَّاجِفَةُ ۙ ﴿79:6﴾
تَتۡبَعُهَا الرَّادِفَةُ ؕ ﴿79:7﴾
قُلُوۡبٌ يَّوۡمَـئِذٍ وَّاجِفَةٌ ۙ ﴿79:8﴾
اَبۡصَارُهَا خَاشِعَةٌ ۘ ﴿79:9﴾
يَقُوۡلُوۡنَ ءَاِنَّا لَمَرۡدُوۡدُوۡنَ فِى الۡحَـافِرَةِ ؕ
﴿79:10﴾
ءَاِذَا كُنَّا عِظَامًا نَّخِرَةً ؕ ﴿79:11﴾
قَالُوۡا تِلۡكَ اِذًا كَرَّةٌ خَاسِرَةٌ ۘ ﴿79:12﴾
فَاِنَّمَا هِىَ زَجۡرَةٌ وَّاحِدَةٌ ۙ ﴿79:13﴾
فَاِذَا هُمۡ بِالسَّاهِرَةِ ؕ ﴿79:14﴾
هَلۡ اَتٰٮكَ حَدِيۡثُ مُوۡسٰىۘ ﴿79:15﴾
اِذۡ نَادٰٮهُ رَبُّهٗ بِالۡوَادِ الۡمُقَدَّسِ طُوًىۚ
﴿79:16﴾
اِذۡهَبۡ اِلٰى فِرۡعَوۡنَ اِنَّهٗ طَغٰى ۖ ﴿79:17﴾
فَقُلۡ هَلۡ لَّكَ اِلٰٓى اَنۡ تَزَكّٰى ۙ ﴿79:18﴾
وَاَهۡدِيَكَ اِلٰى رَبِّكَ فَتَخۡشٰىۚ ﴿79:19﴾
فَاَرٰٮهُ الۡاٰيَةَ الۡكُبۡرٰى ۖ ﴿79:20﴾
فَكَذَّبَ وَعَصٰى ۖ ﴿79:21﴾
ثُمَّ اَدۡبَرَ يَسۡعٰىۖ ﴿79:22﴾
فَحَشَرَ فَنَادٰىۖ ﴿79:23﴾
فَقَالَ اَنَا رَبُّكُمُ الۡاَعۡلٰى ۖ ﴿79:24﴾
فَاَخَذَهُ اللّٰهُ نَڪَالَ الۡاٰخِرَةِ وَالۡاُوۡلٰى ؕ
﴿79:25﴾
اِنَّ فِىۡ ذٰلِكَ لَعِبۡرَةً لِّمَنۡ يَّخۡشٰىؕ ﴿79:26﴾
79:1 ஆழ்ந்து பற்றியிழுக்கின்ற,
79:2 மேலும், மெதுவாக வெளிக்கொணர்கின்ற (வான)வர்கள்மீது சத்தியமாக!
79:3 மேலும், (பேரண்டத்தில்) அதிவேகமாக நீந்தித் திரிகின்ற
79:4 மேலும், (கட்டளைகளை நிறைவேற்றுவதில்) ஒருவருக்கொருவர் முந்துகின்றவர்கள் மீதும் சத்தியமாக!
79:5 பிறகு (இறைக்கட்டளைகளுக்கிணங்க) விவகாரங்களை முறைப்படி நிர்வகித்து வருகின்றவர்கள் மீதும் சத்தியமாக!
79:6 எந்த நாளில் பூகம்பத்தின் உலுக்கல் ஏற்படுமோ
79:7 அதன் பின்னர் இன்னொரு பூகம்பத்தின் உலுக்கல் ஏற்படுமோ
79:8 அந்த நாளில் சில இதயங்கள் பயந்து நடுநடுங்கிக் கொண்டிருக்கும்.
79:9 அவர்களின் பார்வைகள் அச்சத்தால் கீழே தாழ்ந்துவிட்டிருக்கும்.
79:10 இந்த மக்கள் கூறுகின்றார்கள்: “நாம் (இறந்த பிறகு) உண்மையில் பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டு வரப்படு வோமா,
79:11 இற்றுப்போன எலும்புகளாய் நாம் ஆனாலுமா?”
79:12 இவர்கள் மேலும் கூறலானார்கள்: “அப்பொழுது இது பேரிழப்புக்குரிய திரும்பலாகத்தான் இருக்கும்.”
79:13 உண்மையில், இது ஓர் உரத்த அதட்டலாகத்தான் இருக்கும்.
79:14 உடனே, இவர்கள் வெட்ட வெளியில் ஆஜராகி இருப்பார்கள்!
79:15 மூஸாவின் வரலாறு உமக்குக் கிடைத்ததா?
79:16 ‘துவா’ எனும் புனிதப் பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்துக் கூறினான்:
79:17 “ஃபிர்அவ்னிடம் செல்வீராக! திண்ணமாக, அவன் வரம்பு மீறிவிட்டான்.
79:18 எனவே, நீர் (அவனிடம்) கூறும்: நீ தூய்மை பெற விரும்புகின்றாயா?
79:19 மேலும், உன் இறைவனின் பக்கம் செல்லும் வழியினை நான் உனக்குக் காண்பிக்கட்டுமா? அதன் மூலம் (அவனைக் குறித்து) உனக்குள் அச்சம் ஏற்படும்!”
79:20 பிறகு, (மூஸா ஃபிர்அவ்னிடம் சென்று) அவனுக்குப் பெரும் சான்றினைக் காண்பித்தார்.
79:21 ஆனால், அவன் அதனைப் பொய் எனக் கூறினான். மேலும், அவன் ஏற்க மறுத்தான்.
79:22 பின்னர் சூழ்ச்சிகள் செய்திடத் திரும்பினான்.
79:23 மேலும், மக்களை ஒன்று திரட்டினான். அவர்களை அழைத்து,
79:24 “நான்தான் உங்களின் மாபெரும் இறைவன்” எனக் கூறினான்.
79:25 இறுதியில் அவனை மறுமை மற்றும் இம்மையின் வேதனையைக் கொண்டு அல்லாஹ் பிடித்தான்.
79:26 அஞ்சி வாழும் ஒவ்வொருவருக்கும் உண்மையில் இதில் பெரும் படிப்பினை இருக்கின்றது.
| |