|
هَلۡ اَتٰى عَلَى الۡاِنۡسَانِ حِيۡنٌ مِّنَ الدَّهۡرِ لَمۡ يَكُنۡ شَيۡـئًـا مَّذۡكُوۡرًا
﴿76:1﴾
اِنَّا خَلَقۡنَا الۡاِنۡسَانَ مِنۡ نُّطۡفَةٍ اَمۡشَاجٍۖ نَّبۡتَلِيۡهِ فَجَعَلۡنٰهُ سَمِيۡعًۢا بَصِيۡرًا
﴿76:2﴾
اِنَّا هَدَيۡنٰهُ السَّبِيۡلَ اِمَّا شَاكِرًا وَّاِمَّا كَفُوۡرًا
﴿76:3﴾
اِنَّاۤ اَعۡتَدۡنَا لِلۡكٰفِرِيۡنَ سَلٰسِلَا۟ وَاَغۡلٰلًا وَّسَعِيۡرًا
﴿76:4﴾
اِنَّ الۡاَبۡرَارَ يَشۡرَبُوۡنَ مِنۡ كَاۡسٍ كَانَ مِزَاجُهَا كَافُوۡرًاۚ
﴿76:5﴾
عَيۡنًا يَّشۡرَبُ بِهَا عِبَادُ اللّٰهِ يُفَجِّرُوۡنَهَا تَفۡجِيۡرًا
﴿76:6﴾
يُوۡفُوۡنَ بِالنَّذۡرِ وَيَخَافُوۡنَ يَوۡمًا كَانَ شَرُّهٗ مُسۡتَطِيۡرًا
﴿76:7﴾
وَيُطۡعِمُوۡنَ الطَّعَامَ عَلٰى حُبِّهٖ مِسۡكِيۡنًا وَّيَتِيۡمًا وَّاَسِيۡرًا
﴿76:8﴾
اِنَّمَا نُطۡعِمُكُمۡ لِـوَجۡهِ اللّٰهِ لَا نُرِيۡدُ مِنۡكُمۡ جَزَآءً وَّلَا شُكُوۡرًا
﴿76:9﴾
اِنَّا نَخَافُ مِنۡ رَّبِّنَا يَوۡمًا عَبُوۡسًا قَمۡطَرِيۡرًا
﴿76:10﴾
فَوَقٰٮهُمُ اللّٰهُ شَرَّ ذٰلِكَ الۡيَوۡمِ وَ لَقّٰٮهُمۡ نَضۡرَةً وَّسُرُوۡرًاۚ
﴿76:11﴾
وَجَزٰٮهُمۡ بِمَا صَبَرُوۡا جَنَّةً وَّحَرِيۡرًا ۙ
﴿76:12﴾
مُّتَّكِـئِـيۡنَ فِيۡهَا عَلَى الۡاَرَآئِكِۚ لَا يَرَوۡنَ فِيۡهَا شَمۡسًا وَّلَا زَمۡهَرِيۡرًاۚ
﴿76:13﴾
وَدَانِيَةً عَلَيۡهِمۡ ظِلٰلُهَا وَذُلِّلَتۡ قُطُوۡفُهَا تَذۡلِيۡلًا
﴿76:14﴾
وَيُطَافُ عَلَيۡهِمۡ بِاٰنِيَةٍ مِّنۡ فِضَّةٍ وَّاَكۡوَابٍ كَانَتۡ قَوَارِيۡرَا۟ ۙ
﴿76:15﴾
قَوَارِيۡرَا۟ مِنۡ فِضَّةٍ قَدَّرُوۡهَا تَقۡدِيۡرًا
﴿76:16﴾
وَيُسۡقَوۡنَ فِيۡهَا كَاۡسًا كَانَ مِزَاجُهَا زَنۡجَبِيۡلًا ۚ
﴿76:17﴾
عَيۡنًا فِيۡهَا تُسَمّٰى سَلۡسَبِيۡلًا ﴿76:18﴾
وَيَطُوۡفُ عَلَيۡهِمۡ وِلۡدَانٌ مُّخَلَّدُوۡنَۚ اِذَا رَاَيۡتَهُمۡ حَسِبۡتَهُمۡ لُـؤۡلُـؤًا مَّنۡثُوۡرًا
﴿76:19﴾
وَاِذَا رَاَيۡتَ ثَمَّ رَاَيۡتَ نَعِيۡمًا وَّمُلۡكًا كَبِيۡرًا
﴿76:20﴾
عٰلِيَهُمۡ ثِيَابُ سُنۡدُسٍ خُضۡرٌ وَّاِسۡتَبۡرَقٌ وَّحُلُّوۡۤا اَسَاوِرَ مِنۡ فِضَّةٍ ۚوَسَقٰٮهُمۡ رَبُّهُمۡ شَرَابًا طَهُوۡرًا
﴿76:21﴾
اِنَّ هٰذَا كَانَ لَـكُمۡ جَزَآءً وَّكَانَ سَعۡيُكُمۡ مَّشۡكُوۡرًا
﴿76:22﴾
76:1 மனிதன் மீது, அவன் குறிப்பிடத்தக்கதொரு பொருளாகவே இல்லாதிருந்த ஒரு நீண்ட காலகட்டம் செல்லவில்லையா?
76:2 நாம் மனிதனை கலக்கப்பட்ட ஓர் இந்திரியத் துளியிலிருந்து படைத்தோம்; நாம் அவனைச் சோதிக்க வேண்டும் என்பதற்காக! மேலும், இந் நோக்கத்திற்காக நாம் அவனைச் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.
76:3 நாம் அவனுக்கு வழிகாட்டினோம். இனி, அவன் நன்றியுள்ளவனாகவும் இருக்கலாம் அல்லது நன்றி கொன்றவனாகவும் இருக்கலாம்.
76:4 நன்றி கொல்பவர்களுக்குத் திண்ணமாக, நாம் சங்கிலிகளையும், விலங்குகளையும், கொழுந்துவிட்டெரியும் நெருப்பையும் தயார் செய்து வைத்திருக்கின்றோம்.
76:5 நன்மக்கள் (சுவனத்தில்) கிண்ணங்களிலிருந்து கற்பூரம் கலந்திருக்கும் மது அருந்துவார்கள்.
76:6 அது ஓடிக் கொண்டிருக்கும் ஊற்றின் நீராகும். இதன் நீரைக் கலந்தே அல்லாஹ்வின் அடியார்கள் மது அருந்துவார்கள். மேலும், தாம் விரும்பும் இடங்களுக்கு அதன் கிளைகளை எளிதாக ஏற்படுத்திக் கொள்வார்கள்.
76:7 இவர்கள் எத்தகையவர்கள் என்றால், (இந்த உலகத்தில்) நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொண்டும் அனைத்துத் திசைகளிலும் துன்பங்கள் பரவக்கூடிய அந்த (மறுமை) நாளினைக் குறித்து அஞ்சிக் கொண்டுமிருப்பார்கள்.
76:8 மேலும், அல்லாஹ்வின் மீதுள்ள அன்பினால் வறியவருக்கும், அநாதைக்கும், கைதிக்கும் உணவளிக்கின்றார்கள்.
76:9 (மேலும், அவர்களிடம் கூறுகின்றார்கள்:) “நாங்கள் அல்லாஹ்வுக்காகவே உங்களுக்கு உணவளிக்கின்றோம். நாங்கள் உங்களிடமிருந்து எந்தப் பிரதிபலனையும், நன்றியையும் எதிர்பார்க்கவில்லை.
76:10 நீண்ட, கடும் துன்பத்திற்குரிய ஒருநாளின் வேதனையைக் குறித்துதான் எங்கள் இறைவனிடம் நாங்கள் அஞ்சுகின்றோம்.”
76:11 எனவே, அல்லாஹ் அவர்களை அந்நாளின் தீங்கிலிருந்து காப்பாற்றிக் கொள்வான்; அவர்களுக்குப் பொலிவையும் மகிழ்வையும் அளிப்பான்.
76:12 மேலும், அவர்களின் பொறுமைக்குப் பகரமாக சுவனத்தையும் பட்டாடையையும் அவர்களுக்கு வழங்குவான்.
76:13 அங்கு அவர்கள் உயர்ந்த கட்டில்களில் தலையணைகள் வைத்து சாய்ந்திருப்பார்கள். வெயிலின் வெப்பமோ, கடும் குளிரோ அங்கு அவர்களைத் துன்புறுத்தாது.
76:14 சுவனத்தின் நிழல்கள் அவர்களின் மீது தாழ்ந்திருக்கும். மேலும், அதன் கனிகள் எப்போதும் (அவர்கள் விரும்பியபடி பறித்துக் கொள்ளும் அளவில்) அவர்களின் அருகில் இருக்கும்.
76:15 வெள்ளிப் பாத்திரங்களும் கண்ணாடிக் குவளைகளும் அவர்களுக்கு முன்னிலையில் சுற்றிச் சுற்றி வருமாறு செய்யப்பட்டிருக்கும்.
76:16 அந்தக் கண்ணாடிகளும் வெள்ளி வகையைச் சேர்ந்ததாக இருக்கும். அவற்றைச் (சுவனத்தின் ஊழியர்கள்) சரியான அளவில் நிரப்பியிருப்பார்கள்.
76:17 அந்தக் கிண்ணங்களில் இருந்து இஞ்சிச்சுவை கலந்திருக்கும் பானங்கள் அவர்களுக்கு அங்கு குடிப்பதற்கு வழங்கப்படும்.
76:18 அது சுவனத்தில் உள்ள ஒரு நீரூற்றாகும். அதன் பெயர் ‘ஸல்ஸபீல்.’
76:19 மாறாத இளமையுடைய சிறுவர்கள் அவர்களுக்(கு ஊழியம் புரிவதற்)காக சுற்றித் திரிந்து கொண்டேயிருப்பார்கள். நீர் அவர்களைப் பார்த்தால் தெளித்துக் கிடக்கும் முத்துக்கள் என்று எண்ணுவீர்.
76:20 அங்கு நீர் எந்தப் பக்கம் நோக்கினாலும் அருட்கொடைகள் நிறைந்திருப்பதையும், மாபெரும் பேரரசுக்கான அத்தனை சாதனங்களையும் காண்பீர்.
76:21 மென்மையான மற்றும் கனமான பச்சைநிறப் பட்டாடைகள் அவர்களின் மீதிருக்கும். மேலும், அவர்களுக்கு வெள்ளிக்காப்புகள் அணிவிக்கப்படும். அவர்களின் அதிபதி அவர்களுக்குத் தூய்மை மிக்க பானத்தைப் புகட்டுவான்.
76:22 திண்ணமாக, இதுதான் உங்களுக்குரிய கூலி. உங்களுடைய உழைப்பு மதிப்புக்குரியதாக ஆகிவிட்டிருக்கிறது.
| |