|
لَاۤ اُقۡسِمُ بِيَوۡمِ الۡقِيٰمَةِۙ ﴿75:1﴾
وَلَاۤ اُقۡسِمُ بِالنَّفۡسِ اللَّوَّامَةِؕ ﴿75:2﴾
اَيَحۡسَبُ الۡاِنۡسَانُ اَلَّنۡ نَّجۡمَعَ عِظَامَهٗؕ
﴿75:3﴾
بَلٰى قٰدِرِيۡنَ عَلٰٓى اَنۡ نُّسَوِّىَ بَنَانَهٗ
﴿75:4﴾
بَلۡ يُرِيۡدُ الۡاِنۡسَانُ لِيَفۡجُرَ اَمَامَهٗۚ
﴿75:5﴾
يَسۡـئَـلُ اَيَّانَ يَوۡمُ الۡقِيٰمَةِؕ ﴿75:6﴾
فَاِذَا بَرِقَ الۡبَصَرُۙ ﴿75:7﴾
وَخَسَفَ الۡقَمَرُۙ ﴿75:8﴾
وَجُمِعَ الشَّمۡسُ وَالۡقَمَرُۙ ﴿75:9﴾
يَقُوۡلُ الۡاِنۡسَانُ يَوۡمَـئِذٍ اَيۡنَ الۡمَفَرُّ ۚ
﴿75:10﴾
كَلَّا لَا وَزَرَؕ ﴿75:11﴾
اِلٰى رَبِّكَ يَوۡمَـئِذِ اۨلۡمُسۡتَقَرُّ ؕ ﴿75:12﴾
يُنَبَّؤُا الۡاِنۡسَانُ يَوۡمَـئِذٍۢ بِمَا قَدَّمَ وَاَخَّرَؕ
﴿75:13﴾
بَلِ الۡاِنۡسَانُ عَلٰى نَفۡسِهٖ بَصِيۡرَةٌ ۙ ﴿75:14﴾
وَّلَوۡ اَلۡقٰى مَعَاذِيۡرَهٗؕ ﴿75:15﴾
لَا تُحَرِّكۡ بِهٖ لِسَانَكَ لِتَعۡجَلَ بِهٖؕ ﴿75:16﴾
اِنَّ عَلَيۡنَا جَمۡعَهٗ وَقُرۡاٰنَهٗۚ ۖ ﴿75:17﴾
فَاِذَا قَرَاۡنٰهُ فَاتَّبِعۡ قُرۡاٰنَهٗۚ ﴿75:18﴾
ثُمَّ اِنَّ عَلَيۡنَا بَيَانَهٗؕ ﴿75:19﴾
كَلَّا بَلۡ تُحِبُّوۡنَ الۡعَاجِلَةَ ۙ ﴿75:20﴾
وَتَذَرُوۡنَ الۡاٰخِرَةَ ؕ ﴿75:21﴾
وُجُوۡهٌ يَّوۡمَـئِذٍ نَّاضِرَةٌ ۙ ﴿75:22﴾
اِلٰى رَبِّهَا نَاظِرَةٌ ۚ ﴿75:23﴾
وَوُجُوۡهٌ يَّوۡمَـئِذٍۢ بَاسِرَةٌ ۙ ﴿75:24﴾
تَظُنُّ اَنۡ يُّفۡعَلَ بِهَا فَاقِرَةٌ ؕ ﴿75:25﴾
كَلَّاۤ اِذَا بَلَغَتِ التَّرَاقِىَۙ ﴿75:26﴾
وَقِيۡلَ مَنۡ رَاقٍۙ ﴿75:27﴾
وَّظَنَّ اَنَّهُ الۡفِرَاقُۙ ﴿75:28﴾
وَالۡتَفَّتِ السَّاقُ بِالسَّاقِۙ ﴿75:29﴾
اِلٰى رَبِّكَ يَوۡمَـئِذِ اۨلۡمَسَاقُؕ ﴿75:30﴾
75:1 இல்லை! நான் மறுமைநாளின் மீது சத்தியம் செய்கின்றேன்.
75:2 இல்லவே இல்லை; இடித்துரைக்கும் மனத்தின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.
75:3 அவனுடைய எலும்புகளை நம்மால் ஒன்றுதிரட்ட முடியாது என்று மனிதன் கருதிக் கொண்டிருக்கின்றானா?
75:4 ஏன் முடியாது? நாமோ அவனுடைய விரல்களின் நுனியைக்கூட மிகத் துல்லியமாக அமைப்பதற்கு ஆற்றல் பெற்றுள்ளோம்.
75:5 ஆனால், மனிதன் எதிர்காலத்திலும் தீமைகளைச் செய்துகொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்புகின்றான்.
75:6 “அந்த மறுமைநாள் எப்போது வரும்?” என்று அவன் கேட்கின்றான்.
75:7 பிறகு, பார்வை நிலைகுத்தி விடும்போது,
75:8 மேலும், சந்திரன் ஒளி குன்றிப் போகும்போது,
75:9 மேலும் சந்திரனும், சூரியனும் ஒன்றாக இணைக்கப்படும்போது;
75:10 அந்நாளில் இதே மனிதன் “நான் எங்கே சென்று ஓடி ஒளிவது?” என்று கேட்பான்.
75:11 ஒருபோதுமில்லை! அங்கு எந்தப் புகலிடமும் இருக்காது.
75:12 அந்த நாளில் உன் அதிபதியின் முன்பே சென்றடைய வேண்டியிருக்கும்.
75:13 அந்த நாளில் மனிதனுக்கு, அவனுடைய முந்தைய, பிந்தைய செயல்கள் அனைத்தும் எடுத்துக் காண்பிக்கப்படும்.
75:14 ஏன், மனிதன் தன்னைப் பற்றி நன்கு அறிந்தவனாக இருப்பான்;
75:15 அவன் எவ்வளவுதான் சாக்கு போக்குகளைக் கூறினாலும் சரியே!
75:16 (நபியே!) இந்த வஹியை* அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உமது நாவை அசைக்காதீர்!
75:17 அதை நினைவில் நிறுத்தச் செய்வதும், ஓதும்படிச் செய்வதும் நமது பொறுப்பாகும்;
75:18 ஆகையால் நாம் இதனை ஓதிக் காட்டும்போது அவ்வாறு ஓதிக்காட்டுவதை நீர் கவனத்துடன் கேட்டுக் கொண்டிருக்கவும்.
75:19 பின்னர், இதன் கருத்தை விளக்குவதும் நமது பொறுப்பே ஆகும்.
75:20 ஒருபோதுமில்லை. உண்மை யாதெனில், நீங்கள் உடனடியாகக் கிடைக்கக் கூடியதை (அதாவது இம்மையை) நேசிக்கின்றீர்கள்;
75:21 மறுமையை விட்டுவிடுகின்றீர்கள்.
75:22 அந் நாளில் சில முகங்கள் பொலிவுடன் விளங்கும்;
75:23 தம்முடைய அதிபதியைப் பார்த்த வண்ணமிருக்கும்.
75:24 வேறுசில முகங்கள் துயரமடைந்திருக்கும்.
75:25 மேலும், இடுப்பை முறிக்கும் அனுபவங்கள் அவற்றிற்கு ஏற்படப்போகின்றன என்று புரிந்து கொண்டிருக்கும்.
75:26 ஒருபோதுமில்லை! உயிர் தொண்டை வரை எட்டும்போது,
75:27 மேலும், “மந்திரித்து ஊதுபவர் எவரேனும் உண்டா?” என்று கேட்கப்படும்போது,
75:28 மேலும் இது உலகைவிட்டுப் பிரியும் நேரம் என்று மனிதன் புரிந்துகொள்ளும் போது,
75:29 கெண்டைக்கால், கெண்டைக்காலுடன் பின்னிப் பிணையும் போது,
75:30 அந்நாளில்தான் உன் அதிபதியின் பக்கம் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும்.
| |