|
يٰۤاَيُّهَا الۡمُدَّثِّرُۙ ﴿74:1﴾
قُمۡ فَاَنۡذِرۡۙ ﴿74:2﴾
وَرَبَّكَ فَكَبِّرۡۙ ﴿74:3﴾
وَثِيَابَكَ فَطَهِّرۡۙ ﴿74:4﴾
وَالرُّجۡزَ فَاهۡجُرۡۙ ﴿74:5﴾
وَلَا تَمۡنُنۡ تَسۡتَكۡثِرُۙ ﴿74:6﴾
وَ لِرَبِّكَ فَاصۡبِرۡؕ ﴿74:7﴾
فَاِذَا نُقِرَ فِى النَّاقُوۡرِۙ ﴿74:8﴾
فَذٰلِكَ يَوۡمَـئِذٍ يَّوۡمٌ عَسِيۡرٌۙ ﴿74:9﴾
عَلَى الۡكٰفِرِيۡنَ غَيۡرُ يَسِيۡرٍ ﴿74:10﴾
ذَرۡنِىۡ وَمَنۡ خَلَقۡتُ وَحِيۡدًا ۙ ﴿74:11﴾
وَّجَعَلۡتُ لَهٗ مَالًا مَّمۡدُوۡدًا ۙ ﴿74:12﴾
وَّبَنِيۡنَ شُهُوۡدًا ۙ ﴿74:13﴾
وَّمَهَّدتُّ لَهٗ تَمۡهِيۡدًا ۙ ﴿74:14﴾
ثُمَّ يَطۡمَعُ اَنۡ اَزِيۡدَ ۙ ﴿74:15﴾
كَلَّا ؕ اِنَّهٗ كَانَ لِاٰيٰتِنَا عَنِيۡدًا ؕ ﴿74:16﴾
سَاُرۡهِقُهٗ صَعُوۡدًا ؕ ﴿74:17﴾
اِنَّهٗ فَكَّرَ وَقَدَّرَۙ ﴿74:18﴾
فَقُتِلَ كَيۡفَ قَدَّرَۙ ﴿74:19﴾
ثُمَّ قُتِلَ كَيۡفَ قَدَّرَۙ ﴿74:20﴾
ثُمَّ نَظَرَۙ ﴿74:21﴾
ثُمَّ عَبَسَ وَبَسَرَۙ ﴿74:22﴾
ثُمَّ اَدۡبَرَ وَاسۡتَكۡبَرَۙ ﴿74:23﴾
فَقَالَ اِنۡ هٰذَاۤ اِلَّا سِحۡرٌ يُّؤۡثَرُۙ ﴿74:24﴾
اِنۡ هٰذَاۤ اِلَّا قَوۡلُ الۡبَشَرِؕ ﴿74:25﴾
سَاُصۡلِيۡهِ سَقَرَ ﴿74:26﴾
وَمَاۤ اَدۡرٰٮكَ مَا سَقَرُؕ ﴿74:27﴾
لَا تُبۡقِىۡ وَ لَا تَذَرُۚ ﴿74:28﴾
لَـوَّاحَةٌ لِّلۡبَشَرِۖۚ ﴿74:29﴾
عَلَيۡهَا تِسۡعَةَ عَشَرَؕ ﴿74:30﴾
وَمَا جَعَلۡنَاۤ اَصۡحٰبَ النَّارِ اِلَّا مَلٰٓـئِكَةً وَّمَا جَعَلۡنَا عِدَّتَهُمۡ اِلَّا فِتۡنَةً لِّلَّذِيۡنَ كَفَرُوۡا ۙ لِيَسۡتَيۡقِنَ الَّذِيۡنَ اُوۡتُوا الۡكِتٰبَ وَيَزۡدَادَ الَّذِيۡنَ اٰمَنُوۡۤا اِيۡمَانًا وَّلَا يَرۡتَابَ الَّذِيۡنَ اُوۡتُوا الۡكِتٰبَ وَالۡمُؤۡمِنُوۡنَۙ وَلِيَقُوۡلَ الَّذِيۡنَ فِىۡ قُلُوۡبِهِمۡ مَّرَضٌ وَّالۡكٰفِرُوۡنَ مَاذَاۤ اَرَادَ اللّٰهُ بِهٰذَا مَثَلًا ؕ كَذٰلِكَ يُضِلُّ اللّٰهُ مَنۡ يَّشَآءُ وَيَهۡدِىۡ مَنۡ يَّشَآءُ ؕ وَمَا يَعۡلَمُ جُنُوۡدَ رَبِّكَ اِلَّا هُوَ ؕ وَمَا هِىَ اِلَّا ذِكۡرٰى لِلۡبَشَرِ
﴿74:31﴾
74:1 போர்த்திக் கொண்டு படுத்திருப்பவரே!
74:2 எழுந்து எச்சரிக்கை செய்வீராக!
74:3 மேலும், உம் இறைவனின் மேன்மையைப் பிரகடனப்படுத்துவீராக!
74:4 மேலும், உம் ஆடைகளைத் தூய்மையாக்குவீராக!
74:5 அசுத்தத்திலிருந்து விலகியிருப்பீராக!
74:6 ஆதாயம் கருதி பிறருக்கு உதவி செய்யாதீர்;
74:7 உம் இறைவனுக்காகப் பொறுமையைக் கைக்கொள்வீராக!
74:8 எக்காளம் ஊதப்பட்டுவிட்டாலோ;
74:9 அந்த நாள் மிகக் கடுமையான நாளாய் இருக்கும்.
74:10 நிராகரிப்பாளர்களுக்கு இலேசானதாய் இராது.
74:11 நான் தன்னந்தனியாகப் படைத்திருக்கின்ற அந்த மனிதனை என்னிடம் விட்டுவிடுவீராக!
74:12 அவனுக்கு நான் அதிகமான செல்வத்தை வழங்கினேன்.
74:13 அவனுடனேயே இருக்கக்கூடிய புதல்வர்களையும் அளித்தேன்.
74:14 மேலும், அவனுக்குத் தலைமை தாங்கும் வழிவகையையும் வகுத்துக் கொடுத்தேன்.
74:15 இதன் பிறகு நான் அவனுக்கு இன்னும் அதிகமாக வழங்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகின்றான்.
74:16 ஒருபோதுமில்லை! அவன் நம்முடைய வசனங்களுடன் பகைமை கொண்டவனாக இருக்கின்றான்.
74:17 நான் அவனை அதிவிரைவில் வேதனையின்
74:18 சிகரத்திற்கு ஏறச் செய்வேன். அவன் சிந்தித்தான்; சில விஷயங்களைப் புனைந்துகூற முயன்றான்!
74:19 இறைவன் அவனை அழிக்கட்டும். அவன் எப்படிப்பட்ட விஷயங்களைப் புனைந்து கூற முற்பட்டுவிட்டான்.
74:20 ஆம்! இறைவன் அவனை அழிக்கட்டும். எப்படிப்பட்ட விஷயங்களைப் புனைந்துரைக்க அவன் முற்பட்டு விட்டான்!
74:21 பிறகு (மக்களைப்) பார்த்தான்;
74:22 பிறகு புருவத்தை நெரித்தான். பின்னர், முகத்தைச் சுளித்தான்;
74:23 பிறகு, திரும்பிச் சென்றான்; மேலும், தற்பெருமை கொண்டான்;
74:24 இறுதியில் கூறினான்: “இது ஒன்றுமில்லை; ஒரு சூனியம்தான்: முன்பிருந்தே சொல்லப்பட்டு வருவதுதான்!
74:25 இது ஒரு மனித வாக்கேதான்!”
74:26 அதிவிரைவில் நான் அவனை நரகத்தில் வீசி எறிவேன்.
74:27 மேலும், அந்த நரகம் என்னவென்று நீர் அறிவீரா, என்ன?
74:28 அது இருக்கவும் விடாது; விட்டும் வைக்காது!
74:29 அது சருமத்தைக் கரித்துவிடக்கூடியது.
74:30 பத்தொன்பது பேர் காவலர்களாய் அதற்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
74:31 நாம் வானவர்களையே இந்த நரகத்தின் காவலர்களாய் ஆக்கியுள்ளோம். அவர்களின் இந்த எண்ணிக்கையை நிராகரிப்பாளர்களுக்கு சோதனையாக ஆக்கியுள்ளோம். எதற்காகவெனில், வேதம் வழங்கப்பட்ட மக்களுக்கு உறுதி ஏற்படுவதற்காகவும் இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் நம்பிக்கை இன்னும் அதிகமாவதற்காகவும், மேலும், வேதம் வழங்கப்பட்டவர்களும் நம்பிக்கையாளர்களும் எவ்வித ஐயத்திற்கும் ஆளாகக்கூடாது என்பதற்காகவும், மேலும், நெஞ்சில் நோய் உள்ளவர்களும், நிராகரிப்பாளர்களும் “அல்லாஹ் இந்த விநோதமான சொல்லால் என்ன நாடுகின்றான்?” என்று கேட்பதற்காகவும்தான்! இவ்வாறு அல்லாஹ் தான் நாடுபவர்களை வழிகேட்டில் தள்ளிவிடுகின்றான். மேலும், தான் நாடுபவர்களுக்கு நேர்வழியை அளிக்கின்றான். மேலும், உம் இறைவனின் படைகளை அவனைத் தவிர வேறெவரும் அறிந்திட மாட்டார் நரகத்தைப் பற்றிய இந்த விவரம் எடுத்துரைக்கப்பட்டதன் நோக்கம், மக்களுக்கு இதன் மூலம் ஓர் அறிவுரை கிடைக்கட்டும் என்பதே அன்றி வேறில்லை.
| |