|
قُلۡ اُوۡحِىَ اِلَىَّ اَنَّهُ اسۡتَمَعَ نَفَرٌ مِّنَ الۡجِنِّ فَقَالُوۡۤا اِنَّا سَمِعۡنَا قُرۡاٰنًاعَجَبًا ۙ
﴿72:1﴾
يَّهۡدِىۡۤ اِلَى الرُّشۡدِ فَاٰمَنَّا بِهٖ ؕ وَلَنۡ نُّشۡرِكَ بِرَبِّنَاۤ اَحَدًا ۙ
﴿72:2﴾
وَّاَنَّهٗ تَعٰلٰى جَدُّ رَبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَّلَا وَلَدًا ۙ
﴿72:3﴾
وَّ اَنَّهٗ كَانَ يَقُوۡلُ سَفِيۡهُنَا عَلَى اللّٰهِ شَطَطًا ۙ
﴿72:4﴾
وَّاَنَّا ظَنَنَّاۤ اَنۡ لَّنۡ تَقُوۡلَ الۡاِنۡسُ وَالۡجِنُّ عَلَى اللّٰهِ كَذِبًا ۙ
﴿72:5﴾
وَّاَنَّهٗ كَانَ رِجَالٌ مِّنَ الۡاِنۡسِ يَعُوۡذُوۡنَ بِرِجَالٍ مِّنَ الۡجِنِّ فَزَادُوۡهُمۡ رَهَقًا ۙ
﴿72:6﴾
وَّاَنَّهُمۡ ظَنُّوۡا كَمَا ظَنَنۡتُمۡ اَنۡ لَّنۡ يَّبۡعَثَ اللّٰهُ اَحَدًا ۙ
﴿72:7﴾
وَّاَنَّا لَمَسۡنَا السَّمَآءَ فَوَجَدۡنٰهَا مُلِئَتۡ حَرَسًا شَدِيۡدًا وَّشُهُبًا ۙ
﴿72:8﴾
وَّاَنَّا كُنَّا نَقۡعُدُ مِنۡهَا مَقَاعِدَ لِلسَّمۡعِ ؕ فَمَنۡ يَّسۡتَمِعِ الۡاٰنَ يَجِدۡ لَهٗ شِهَابًا رَّصَدًا ۙ
﴿72:9﴾
وَّاَنَّا لَا نَدۡرِىۡۤ اَشَرٌّ اُرِيۡدَ بِمَنۡ فِى الۡاَرۡضِ اَمۡ اَرَادَ بِهِمۡ رَبُّهُمۡ رَشَدًا ۙ
﴿72:10﴾
وَّاَنَّا مِنَّا الصّٰلِحُوۡنَ وَمِنَّا دُوۡنَ ذٰلِكَؕ كُنَّا طَرَآئِقَ قِدَدًا ۙ
﴿72:11﴾
وَّاَنَّا ظَنَنَّاۤ اَنۡ لَّنۡ نُّعۡجِزَ اللّٰهَ فِى الۡاَرۡضِ وَلَنۡ نُّعۡجِزَهٗ هَرَبًا ۙ
﴿72:12﴾
وَّاَنَّا لَمَّا سَمِعۡنَا الۡهُدٰٓى اٰمَنَّا بِهٖ ؕ فَمَنۡ يُّؤۡمِنۡۢ بِرَبِّهٖ فَلَا يَخَافُ بَخۡسًا وَّلَا رَهَقًا ۙ
﴿72:13﴾
وَّاَنَّا مِنَّا الۡمُسۡلِمُوۡنَ وَمِنَّا الۡقٰسِطُوۡنَؕ فَمَنۡ اَسۡلَمَ فَاُولٰٓـئِكَ تَحَرَّوۡا رَشَدًا
﴿72:14﴾
وَاَمَّا الۡقٰسِطُوۡنَ فَكَانُوۡا لِجَهَنَّمَ حَطَبًا ۙ
﴿72:15﴾
وَّاَنْ لَّوِ اسۡتَقَامُوۡا عَلَى الطَّرِيۡقَةِ لَاَسۡقَيۡنٰهُمۡ مَّآءً غَدَقًا ۙ
﴿72:16﴾
لِّنَفۡتِنَهُمۡ فِيۡهِ ؕ وَمَنۡ يُّعۡرِضۡ عَنۡ ذِكۡرِ رَبِّهٖ يَسۡلُكۡهُ عَذَابًا صَعَدًا ۙ
﴿72:17﴾
وَّاَنَّ الۡمَسٰجِدَ لِلّٰهِ فَلَا تَدۡعُوۡا مَعَ اللّٰهِ اَحَدًا ۙ
﴿72:18﴾
وَّاَنَّهٗ لَمَّا قَامَ عَبۡدُ اللّٰهِ يَدۡعُوۡهُ كَادُوۡا يَكُوۡنُوۡنَ عَلَيۡهِ لِبَدًا ؕ
﴿72:19﴾
72:1 (நபியே!) நீர் கூறும்: எனக்கு இவ்வாறு வஹி* அனுப்பப்பட்டிருக்கின்றது: ஜின்களில் ஒரு குழுவினர் கவனமாகக் கேட்டனர். பின்னர் (தம் சமூக மக்களிடம் சென்று) கூறினர்: “நாங்கள் மிகவும் அற்புதமானதொரு குர்ஆனைச் செவியுற்றோம்.
72:2 அது நேரிய பாதையின் பக்கம் வழிகாட்டுகின்றது. ஆகையால், நாங்கள் அதன் மீது நம்பிக்கை கொண்டோம். மேலும், நாங்கள் எங்களுடைய இறைவனுடன் எவரையும் இணையாக்கமாட்டோம்.
72:3 மேலும், எங்களுடைய இறைவனின் மாட்சிமை மிகவும் உயர்ந்தது; உன்னதமானது. அவன் எவரையும் மனைவியாகவோ, மகனாகவோ எடுத்துக்கொள்ளவில்லை.
72:4 மேலும், நம்மிலுள்ள அறிவிலிகள் அல்லாஹ்வைப் பற்றி உண்மைக்குப் புறம்பான பல விஷயங்களைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
72:5 மேலும், அல்லாஹ்வின் விஷயத்தில் பொய் சொல்ல முடியாது என்று நாங்கள் கருதியிருந்தோம்.
72:6 மேலும், மனிதர்களில் சிலர் சில ஜின்களிடம் பாதுகாவல் கோரக் கூடியவர்களாய் இருந்தனர். இவ்வாறு செய்து அவர்கள் ஜின்களின் ஆணவத்தை இன்னும் அதிகமாக்கிவிட்டார்கள்.
72:7 மேலும், மனிதர்களும் நீங்கள் நினைத்திருந்தது போன்றுதான் நினைத்திருந்தார்கள்;
72:8 அல்லாஹ் எவரையும் தூதராக அனுப்பமாட்டான் என்று! மேலும், நாங்கள் வானத்தைத் துளாவிப் பார்த்தோம்.
72:9 அது பலமான காவலர்களால் நிரப்பப்பட்டிருப்பதையும் எரி நட்சத்திரங்கள் பொழிந்து கொண்டிருப்பதையும் கண்டோம். மேலும், இதற்கு முன் ஒட்டுக் கேட்பதற்கு வானத்தில் அமர்விடங்கள் நமக்குக் கிடைத்துக் கொண்டிருந்தன. ஆனால், இப்போது யாரேனும் ஒட்டுக் கேட்க முயன்றால் ஓர் எரிநட்சத்திரம் அவருக்காகக் குறி வைத்துக் காத்திருப்பதைக் காண்கின்றார்.”
72:10 மேலும், (கூறினார்:) “பூமியிலுள்ளவர்களுக்கு ஏதேனும் தீமை நாடப்பட்டுள்ளதா அல்லது அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு நேர்வழி காட்ட விரும்புகின்றானா என்பதை நாம் அறியோம்.
72:11 மேலும், நம்மில் சில நல்லவர்களும் இருக்கின்றனர். அவ்வாறு அல்லாதோரும் இன்னும் சிலர் நம்மில் இருக்கின்றனர்.
72:12 நாம் பல வழிகளில் பிளவுண்டு கிடக்கின்றோம். மேலும், நம்மால் பூமியில் அல்லாஹ்வை வென்றிட முடியாது என்பதையும், எங்கேனும் ஓடிச் சென்று அவனைத் தோல்வியுறச் செய்திட முடியாது என்பதையும் நாங்கள் அறிந்திருந்தோம்.
72:13 மேலும், நேர்வழி காட்டும் அறிவுரையை நாங்கள் கேள்விப்பட்டபோது அதன் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டோம். இனி, எவரேனும் தன்னுடைய இறைவன் மீது நம்பிக்கை கொள்வாராயின் அவருக்கு இழப்பு அல்லது அநீதி பற்றி எந்த அச்சமும் இருக்காது.
72:14 மேலும், நம்மில் சிலர் முஸ்லிம்களாயும் (அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவர்களாயும்) வேறு சிலர் சத்தியத்திலிருந்து பிறழ்ந்தவர்களாயும் உள்ளனர். எவர்கள் இஸ்லாத்தை (இறைவனுக்குக் கீழ்ப்படியும் மார்க்கத்தை) தேர்ந்தெடுத்துக் கொண்டார்களோ அவர்கள் ஈடேற்றத்தின் பாதையை தேடிப் பெற்றுக் கொண்டனர்.
72:15 ஆனால், எவர்கள் சத்தியத்திலிருந்து விலகிக் கொண்டார்களோ, அவர்கள் நரகத்தின் எரிபொருள்களாய் ஆகிவிட்டார்கள்.”
72:16 மேலும், (நபியே! நீர் கூறும்: “இன்னும் எனக்கு வஹி அனுப்பப்பட்டிருப்பது என்னவெனில்) மக்கள் நேர்வழியில் நிலைகுலையாமல் இருந்திருந்தால் நாம் அவர்களுக்கு மழையை தாராளமாகப் பொழியச் செய்திருப்போம்.
72:17 இந்த அருட்கொடையின் மூலம் அவர்களைச் சோதிப்பதற்காக! மேலும், எவரேனும் தன்னுடைய இறைவனின் அறிவுரையைப் புறக்கணித்தால் அவரை அவருடைய இறைவன் கடுமையான வேதனையில் ஆழ்த்தி விடுவான்.
72:18 மேலும், மஸ்ஜித்கள் பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். எனவே, அங்கு அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் அழைக்காதீர்கள்”
72:19 அல்லாஹ்வின் அடியார் அவனை அழைப்பதற்காக எழுந்து நின்றபோது மக்கள் அவர் மீது பாய முனைந்துவிட்டார்கள்.
| |