|
اِنَّاۤ اَرۡسَلۡنَا نُوۡحًا اِلٰى قَوۡمِهٖۤ اَنۡ اَنۡذِرۡ قَوۡمَكَ مِنۡ قَبۡلِ اَنۡ يَّاۡتِيَهُمۡ عَذَابٌ اَلِيۡمٌ
﴿71:1﴾
قَالَ يٰقَوۡمِ اِنِّىۡ لَـكُمۡ نَذِيۡرٌ مُّبِيۡنٌۙ
﴿71:2﴾
اَنِ اعۡبُدُوا اللّٰهَ وَاتَّقُوۡهُ وَاَطِيۡعُوۡنِۙ
﴿71:3﴾
يَغۡفِرۡ لَـكُمۡ مِّنۡ ذُنُوۡبِكُمۡ وَيُؤَخِّرۡكُمۡ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّىؕ اِنَّ اَجَلَ اللّٰهِ اِذَا جَآءَ لَا يُؤَخَّرُۘ لَوۡ كُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ
﴿71:4﴾
قَالَ رَبِّ اِنِّىۡ دَعَوۡتُ قَوۡمِىۡ لَيۡلًا وَّنَهَارًا ۙ
﴿71:5﴾
فَلَمۡ يَزِدۡهُمۡ دُعَآءِىۡۤ اِلَّا فِرَارًا ﴿71:6﴾
وَاِنِّىۡ كُلَّمَا دَعَوۡتُهُمۡ لِتَغۡفِرَ لَهُمۡ جَعَلُوۡۤا اَصَابِعَهُمۡ فِىۡۤ اٰذَانِهِمۡ وَاسۡتَغۡشَوۡا ثِيَابَهُمۡ وَاَصَرُّوۡا وَاسۡتَكۡبَرُوا اسۡتِكۡبَارًا ۚ
﴿71:7﴾
ثُمَّ اِنِّىۡ دَعَوۡتُهُمۡ جِهَارًا ۙ ﴿71:8﴾
ثُمَّ اِنِّىۡۤ اَعۡلَـنۡتُ لَهُمۡ وَاَسۡرَرۡتُ لَهُمۡ اِسۡرَارًا ۙ
﴿71:9﴾
فَقُلۡتُ اسۡتَغۡفِرُوۡا رَبَّكُمۡؕ اِنَّهٗ كَانَ غَفَّارًا ۙ
﴿71:10﴾
يُّرۡسِلِ السَّمَآءَ عَلَيۡكُمۡ مِّدۡرَارًا ۙ ﴿71:11﴾
وَّيُمۡدِدۡكُمۡ بِاَمۡوَالٍ وَّبَنِيۡنَ وَيَجۡعَلۡ لَّـكُمۡ جَنّٰتٍ وَّيَجۡعَلۡ لَّـكُمۡ اَنۡهٰرًا ؕ
﴿71:12﴾
مَا لَـكُمۡ لَا تَرۡجُوۡنَ لِلّٰهِ وَقَارًا ۚ ﴿71:13﴾
وَقَدۡ خَلَقَكُمۡ اَطۡوَارًا ﴿71:14﴾
اَلَمۡ تَرَوۡا كَيۡفَ خَلَقَ اللّٰهُ سَبۡعَ سَمٰوٰتٍ طِبَاقًا ۙ
﴿71:15﴾
وَّجَعَلَ الۡقَمَرَ فِيۡهِنَّ نُوۡرًا ۙ وَّجَعَلَ الشَّمۡسَ سِرَاجًا
﴿71:16﴾
وَاللّٰهُ اَنۡۢبَتَكُمۡ مِّنَ الۡاَرۡضِ نَبَاتًا ۙ
﴿71:17﴾
ثُمَّ يُعِيۡدُكُمۡ فِيۡهَا وَيُخۡرِجُكُمۡ اِخۡرَاجًا
﴿71:18﴾
وَاللّٰهُ جَعَلَ لَـكُمُ الۡاَرۡضَ بِسَاطًا ۙ ﴿71:19﴾
لِّـتَسۡلُكُوۡا مِنۡهَا سُبُلًا فِجَاجًا ﴿71:20﴾
71:1 நாம் நூஹை இந்த ஏவுரையுடன் அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். உம்முடைய சமுதாயத்தை எச்சரிப்பீராக; துன்புறுத்தும் வேதனை அவர்களிடம் வருவதற்கு முன்பாக!
71:2 அவர் கூறினார்: “என் சமூகத்தினரே! நான் உங்களுக்குத் தெள்ளத் தெளிவாக எச்சரிக்கை செய்யக்கூடிய தூதர் ஆவேன்.
71:3 (நான் உங்களுக்கு இதனை உணர்த்துகின்றேன்:) அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள். அவனுக்கு அஞ்சுங்கள். மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்.
71:4 அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பான். மேலும், ஒரு நிர்ணயிக்கப்பட்ட காலம் வரையில் உங்களை விட்டு வைப்பான். திண்ணமாக அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்ட நேரம் வந்துவிட்டால் அது ஒத்தி வைக்கப்பட மாட்டாது. அந்தோ, இதை நீங்கள் அறிந்திருக்க வேண்டுமே!
71:5 அவர் பணிந்து கூறினார்: “என் அதிபதியே! நான் என் சமூகத்தினருக்கு இரவு பகலாக அழைப்பு விடுத்தேன்.
71:6 ஆனால், என்னுடைய அழைப்போ விரண்டோடுவதையே அவர்களிடம் அதிகப்படுத்தியது.
71:7 மேலும், நீ அவர்களை மன்னிக்க வேண்டும் என்பதற்காக நான் அவர்களை அழைத்த போதெல்லாம் அவர்கள் காதுகளில் விரல்களைத் திணித்துக் கொண்டார்கள். மேலும், தம் துணிகளால் முகத்தை மூடிக்கொண்டார்கள். மேலும், தம்முடைய தவறான நடத்தையில் பிடிவாதமாய் இருந்தார்கள். மிகவும் அகம்பாவம் கொண்டிருந்தார்கள்.
71:8 மீண்டும் நான் அவர்களை உரக்கக் கூவி அழைத்தேன்.
71:9 பின் நான் வெளிப்படையாகவும் அவர்களுக்கு எடுத்துரைத்தேன். அந்தரங்கமாகவும் விளக்கினேன்.
71:10 நான் கூறினேன்: “உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். ஐயமின்றி அவன் பெரிதும் மன்னிப்பவனாக இருக்கின்றான்.
71:11 அவன் உங்கள் மீது வானத்திலிருந்து நிறைய மழையைப் பொழியச் செய்வான்.
71:12 செல்வத்தையும் சந்ததிகளையும் உங்களுக்கு வழங்குவான். உங்களுக்காகத் தோட்டங்களை உருவாக்குவான். உங்களுக்காக ஆறுகளையும் ஓடச் செய்வான்.
71:13 உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? அல்லாஹ்வுக்கு மகத்துவமும் மாண்பும் ஏதேனும் இருக்கிறது என்ற உணர்வே உங்களிடம் இல்லையே!
71:14 உண்மையில் அவன் உங்களைப் பல நிலைகளாகப் படைத்திருக்கின்றான்.
71:15 அல்லாஹ் எவ்வாறு ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்துள்ளான் என்பதையும்,
71:16 அவற்றில் சந்திரனை ஒளியாகவும், சூரியனை விளக்காகவும் அமைத்துள்ளான் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா?
71:17 மேலும், அல்லாஹ் உங்களைப் பூமியிலிருந்து வியக்கத்தக்க விதத்தில் முளைக்கச் செய்தான்.
71:18 பின்னர், உங்களை இதே பூமிக்குத் திரும்பக் கொண்டு செல்வான். மேலும், அதிலிருந்து திடீரென உங்களை எழுப்பி நிறுத்துவான்.
71:19 மேலும், அல்லாஹ் பூமியை உங்களுக்காக விரிப்பாக அமைத்தான்;
71:20 நீங்கள் அதன் திறந்த பாதைகளில் நடந்து செல்ல வேண்டும் என்பதற்காக!
| |