|
سَاَلَ سَآئِلٌ ۢ بِعَذَابٍ وَّاقِعٍۙ ﴿70:1﴾
لِّلۡكٰفِرِيۡنَ لَيۡسَ لَهٗ دَافِعٌ ۙ ﴿70:2﴾
مِّنَ اللّٰهِ ذِى الۡمَعَارِجِؕ ﴿70:3﴾
تَعۡرُجُ الۡمَلٰٓـئِكَةُ وَ الرُّوۡحُ اِلَيۡهِ فِىۡ يَوۡمٍ كَانَ مِقۡدَارُهٗ خَمۡسِيۡنَ اَلۡفَ سَنَةٍۚ
﴿70:4﴾
فَاصۡبِرۡ صَبۡرًا جَمِيۡلًا ﴿70:5﴾
اِنَّهُمۡ يَرَوۡنَهٗ بَعِيۡدًا ۙ ﴿70:6﴾
وَّنَرٰٮهُ قَرِيۡبًا ؕ ﴿70:7﴾
يَوۡمَ تَكُوۡنُ السَّمَآءُ كَالۡمُهۡلِۙ ﴿70:8﴾
وَتَكُوۡنُ الۡجِبَالُ كَالۡعِهۡنِۙ ﴿70:9﴾
وَلَا يَسۡـئَـلُ حَمِيۡمٌ حَمِيۡمًا ۖۚ ﴿70:10﴾
يُّبَصَّرُوۡنَهُمۡؕ يَوَدُّ الۡمُجۡرِمُ لَوۡ يَفۡتَدِىۡ مِنۡ عَذَابِ يَوۡمِـئِذٍۢ بِبَنِيۡهِۙ
﴿70:11﴾
وَ صَاحِبَتِهٖ وَاَخِيۡهِۙ ﴿70:12﴾
وَفَصِيۡلَتِهِ الَّتِىۡ تُـْٔوِيۡهِۙ ﴿70:13﴾
وَمَنۡ فِى الۡاَرۡضِ جَمِيۡعًا ۙ ثُمَّ يُنۡجِيۡهِۙ
﴿70:14﴾
كَلَّا ؕ اِنَّهَا لَظٰىۙ ﴿70:15﴾
نَزَّاعَةً لِّلشَّوٰى ۖۚ ﴿70:16﴾
تَدۡعُوۡا مَنۡ اَدۡبَرَ وَتَوَلّٰىۙ ﴿70:17﴾
وَجَمَعَ فَاَوۡعٰى ﴿70:18﴾
اِنَّ الۡاِنۡسَانَ خُلِقَ هَلُوۡعًا ۙ ﴿70:19﴾
اِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوۡعًا ۙ ﴿70:20﴾
وَاِذَا مَسَّهُ الۡخَيۡرُ مَنُوۡعًا ۙ ﴿70:21﴾
اِلَّا الۡمُصَلِّيۡنَۙ ﴿70:22﴾
الَّذِيۡنَ هُمۡ عَلٰى صَلَاتِهِمۡ دَآئِمُوۡنَۙ ﴿70:23﴾
وَالَّذِيۡنَ فِىۡۤ اَمۡوَالِهِمۡ حَقٌّ مَّعۡلُوۡمٌۙ
﴿70:24﴾
لِّلسَّآئِلِ وَالۡمَحۡرُوۡمِۙ ﴿70:25﴾
وَالَّذِيۡنَ يُصَدِّقُوۡنَ بِيَوۡمِ الدِّيۡنِۙ ﴿70:26﴾
وَالَّذِيۡنَ هُمۡ مِّنۡ عَذَابِ رَبِّهِمۡ مُّشۡفِقُوۡنَۚ
﴿70:27﴾
اِنَّ عَذَابَ رَبِّهِمۡ غَيۡرُ مَاۡمُوۡنٍ ﴿70:28﴾
وَالَّذِيۡنَ هُمۡ لِفُرُوۡجِهِمۡ حٰفِظُوۡنَۙ ﴿70:29﴾
اِلَّا عَلٰٓى اَزۡوَاجِهِمۡ اَوۡ مَا مَلَـكَتۡ اَيۡمَانُهُمۡ فَاِنَّهُمۡ غَيۡرُ مَلُوۡمِيۡنَۚ
﴿70:30﴾
فَمَنِ ابۡتَغٰى وَرَآءَ ذٰلِكَ فَاُولٰٓـئِكَ هُمُ الۡعٰدُوۡنَۚ
﴿70:31﴾
وَالَّذِيۡنَ هُمۡ لِاَمٰنٰتِهِمۡ وَعَهۡدِهِمۡ رٰعُوۡنَ ۙ
﴿70:32﴾
وَالَّذِيۡنَ هُمۡ بِشَهٰدٰتِهِمۡ قَآئِمُوۡنَ ۙ ﴿70:33﴾
وَالَّذِيۡنَ هُمۡ عَلٰى صَلَاتِهِمۡ يُحَافِظُوۡنَؕ
﴿70:34﴾
اُولٰٓـئِكَ فِىۡ جَنّٰتٍ مُّكۡرَمُوۡنَؕ ﴿70:35﴾
70:1 கேட்கக்கூடியவர் வேதனையைக் கேட்டிருக்கிறார். (அந்த வேதனை) நிச்சயம் நிகழக்கூடியதாகும்,
70:2 நிராகரிப்பாளர்களுக்கு! அதனைத் தடுத்து நிறுத்துபவர் எவரும் இல்லை.
70:3 ஏறிச்செல்லும் படிகளின் உரிமையாளனாகிய அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உள்ளதாகும்.
70:4 வானவர்களும் ரூஹும்* அவனிடம் அந்நாளில் ஏறிச் செல்கின்றனர். அந்நாளின் அளவு ஐம்பதாயிரம் ஆண்டுகளாகும்.
70:5 (நபியே!) பொறுமையை மேற்கொள்ளும்; அழகிய பொறுமையை!
70:6 இவர்கள் அதனை வெகு தொலைவில் இருப்பதாகக் கருதுகின்றார்கள்.
70:7 நாம் அது அருகில் இருப்பதைப் பார்க்கின்றோம்.
70:8 (அந்த வேதனை ஏற்படும்) அந்நாளில் வானம், உருகிய வெள்ளியைப் போன்றும்
70:9 மலைகள், கடையப்பட்ட வண்ணக் கம்பளியைப் போன்றும் ஆகிவிடும்.
70:10 மேலும், அன்று எந்த உற்ற நண்பனும் தன்னுடைய நண்பனைப் பற்றி விசாரிக்க மாட்டான்.
70:11 ஆனால், அவர்கள் ஒருவர் மற்றவருக்குக் காண்பிக்கப்படுவார்கள். குற்றவாளி அந்நாளின் வேதனையிலிருந்து தப்புவதற்காகத் தன் பிள்ளைகளையும்,
70:12 தன் மனைவியையும், சகோதரனையும்,
70:13 தனக்கு ஆதரவு அளித்துக் கொண்டிருந்த மிக நெருங்கிய குடும்பத்தையும்,
70:14 ஏன் பூமியிலுள்ள அனைவரையுமே ஈடாகக் கொடுத்துவிட வேண்டும் என்றும், இது அவனுக்கு ஈடேற்றம் அளித்திட வேண்டும் என்றும் விரும்புவான்.
70:15 ஒருபோதுமில்லை; அது சீறியெழுந்து எரியும் தீப்பிழம்பாகும்.
70:16 அது தோலையும் சதையையும் பொசுக்கிவிடும்.
70:17 எந்த மனிதன் சத்தியத்தைப் புறக்கணித்து, புறங்காட்டிச் சென்றானோ ;
70:18 மேலும் செல்வத்தைச் சேர்த்தானோ இன்னும் கஞ்சத்தனமாக தன்னிடம் தடுத்து வைத்தானோ அத்தகைய ஒவ்வொருவனையும் அது ‘வா வா’ என்று அழைக்கும்.
70:19 மனிதன் பதற்றக்காரனாகப் படைக்கப்பட்டிருக்கின்றான்.
70:20 ஒரு துன்பம் அவனுக்கு வந்தால், பொறுமையிழந்து போகின்றான்.
70:21 ஆனால் அவனுக்கு வசதி வாய்ப்புகள் ஏற்படும்போது கஞ்சத்தனம் செய்யத் தலைப்படுகின்றான்.
70:22 ஆயினும் தொழுகையாளிகள் (இத்தகைய தவறுகளில் இருந்து விடுபட்டிருக்கிறார்கள்).
70:23 அவர்களோ தொழுகையை நிரந்தரமாக நிறைவேற்றுகிறார்கள்.
70:24 அவர்களுடைய செல்வங்களில் நிர்ணயிக்கப்பட்ட உரிமை இருக்கிறது.
70:25 யாசிப்பவருக்கும், இல்லாதாருக்கும்;
70:26 அவர்கள் கூலி வழங்கும் நாளினை உண்மையென ஏற்றுக்கொள்கிறார்கள்.
70:27 மேலும், தங்களுடைய இறைவனின் வேதனைக்கு அஞ்சுகிறார்கள்.
70:28 ஏனெனில், அவர்களுடைய இறைவனின் வேதனை எவரும் அஞ்சாமல் இருக்கக்கூடியதல்ல.
70:29 அவர்கள் தங்கள் வெட்கத்தலங்களைப் பாதுகாக்கிறார்கள்;
70:30 அவர்களுடைய மனைவியரிடமோ அடிமைப் பெண்களிடமோ தவிர! அவ்வாறு அவர்களிடம் அவற்றைப் பாதுகாக்காமல் இருப்பதால் அவர்கள் பழிப்புக்குரியவர்கள் அல்லர்.
70:31 ஆயினும் அதற்கு மேலும் எவர்கள் விரும்புகின்றார்களோ அவர்கள்தாம் வரம்புமீறுகிறவர்கள் ஆவர்.
70:32 அவர்கள் தங்களிடம் உள்ள அமானிதப் பொருள்களைப் பாதுகாக்கிறார்கள். தாங்கள் செய்த ஒப்பந்தங்களைப் பேணி நடக்கவும் செய்கிறார்கள்.
70:33 மேலும் தங்களுடைய சாட்சியங்களில் நேர்மையாக நிலைத்திருக்கிறார்கள்.
70:34 மேலும் தங்களுடைய தொழுகைகளைப் பேணிக் காக்கிறார்கள்.
70:35 இத்தகையவர்கள்தாம் சுவனத் தோட்டங்களில் கண்ணியத்துடன் தங்கி வாழ்பவர்கள்.
| |