|
الۤمّۤصۤ ﴿7:1﴾
كِتٰبٌ اُنۡزِلَ اِلَيۡكَ فَلَا يَكُنۡ فِىۡ صَدۡرِكَ حَرَجٌ مِّنۡهُ لِتُنۡذِرَ بِهٖ وَذِكۡرٰى لِلۡمُؤۡمِنِيۡنَ
﴿7:2﴾
اِتَّبِعُوۡا مَاۤ اُنۡزِلَ اِلَيۡكُمۡ مِّنۡ رَّبِّكُمۡ وَلَا تَتَّبِعُوۡا مِنۡ دُوۡنِهٖۤ اَوۡلِيَآءَ ؕ قَلِيۡلًا مَّا تَذَكَّرُوۡنَ
﴿7:3﴾
وَكَمۡ مِّنۡ قَرۡيَةٍ اَهۡلَـكۡنٰهَا فَجَآءَهَا بَاۡسُنَا بَيَاتًا اَوۡ هُمۡ قَآئِلُوۡنَ
﴿7:4﴾
فَمَا كَانَ دَعۡوٰٮهُمۡ اِذۡ جَآءَهُمۡ بَاۡسُنَاۤ اِلَّاۤ اَنۡ قَالُوۡۤا اِنَّا كُنَّا ظٰلِمِيۡنَ
﴿7:5﴾
فَلَنَسۡـئَـلَنَّ الَّذِيۡنَ اُرۡسِلَ اِلَيۡهِمۡ وَلَـنَسۡـئَـلَنَّ الۡمُرۡسَلِيۡنَ ۙ
﴿7:6﴾
فَلَنَقُصَّنَّ عَلَيۡهِمۡ بِعِلۡمٍ وَّمَا كُنَّا غَآئِبِيۡنَ
﴿7:7﴾
وَالۡوَزۡنُ يَوۡمَـئِذِ اۨلۡحَـقُّ ۚ فَمَنۡ ثَقُلَتۡ مَوَازِيۡنُهٗ فَاُولٰۤـئِكَ هُمُ الۡمُفۡلِحُوۡنَ
﴿7:8﴾
وَمَنۡ خَفَّتۡ مَوَازِيۡنُهٗ فَاُولٰۤـئِكَ الَّذِيۡنَ خَسِرُوۡۤا اَنۡفُسَهُمۡ بِمَا كَانُوۡا بِاٰيٰتِنَا يَظۡلِمُوۡنَ
﴿7:9﴾
وَلَقَدۡ مَكَّـنّٰكُمۡ فِى الۡاَرۡضِ وَجَعَلۡنَا لَـكُمۡ فِيۡهَا مَعَايِشَ ؕ قَلِيۡلًا مَّا تَشۡكُرُوۡنَ
﴿7:10﴾
7:1 அலிஃப், லாம், மீம், ஸாத்.
7:2 (நபியே!) இது உம்மீது இறக்கியருளப்பட்டிருக்கும் வேதமாகும். எனவே, இதனைப் பற்றி உமது உள்ளத்தில் எவ்விதத் தயக்கமும் ஏற்பட வேண்டாம். (சத்தியத்தை மறுப்போர்க்கு) இதன் மூலம் நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும். மேலும், இறைநம்பிக்கை கொண்டோர்க்கு இது ஓர் அறிவுரையாகத் திகழ வேண்டும் என்பதற்காகவே இது இறக்கி வைக்கப்பட்டது.
7:3 (மக்களே!) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கி வைக்கப்பட்டவற்றைப் பின்பற்றுங்கள்! மேலும், அவனை விடுத்து வேறு பாதுகாவலர்களைப் பின்பற்றாதீர்கள்! ஆனால் நீங்கள் மிகக் குறைவாகவே நல்லுரைகளை ஏற்கின்றீர்கள்.
7:4 எத்தனையோ ஊர்களை நாம் அழித்து விட்டிருக்கின்றோம். இரவு நேரத்தில் அல்லது நண்பகலில் அவர்கள் துயிலில் ஆழ்ந்திருந்தபோது திடீரென்று நம்முடைய வேதனை அவர்களைத் தாக்கியது.
7:5 அவ்வாறு நம்முடைய வேதனை அவர்களைத் தாக்கியபோது அவர்களால் எதையும் கூற இயலவில்லை; “உண்மையிலேயே நாங்கள் அக்கிரமக்காரர்களாகத்தான் இருந்தோம்” என்று கூக்குரலிட்டதைத் தவிர!
7:6 எனவே, எந்த மக்களிடம் தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ, அந்த மக்களிடம் திண்ணமாக நாம் விசாரணை நடத்துவோம். மேலும், தூதர்களிடமும் (தூதுத்துவக் கடமையை அவர்கள் எதுவரை நிறைவேற்றினார்கள்; மக்களிடமிருந்து என்ன பதில் கிடைத்தது என்பது பற்றி) நிச்சயம் விசாரிப்போம்.
7:7 பிறகு (நடந்த நிகழ்ச்சிகள்) அனைத்தையும் நாம் முழு அறிவுடன் அம்மக்களுக்கு எடுத்துச் சொல்வோம். நாம் எங்கும் மறைந்து போய்விடவில்லை.
7:8 மேலும் அந்நாளில் சத்தியம் மட்டுமே கனமுடையதாயிருக்கும். எவர்களுடைய நன்மைகளின் எடை கனமாக இருக்குமோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.
7:9 மேலும், எவர்களுடைய நன்மைகளின் எடை இலேசாக இருக்குமோ அவர்கள்தாம் தங்களைத் தாங்களே இழப்பிற்குள்ளாக்கிக் கொண்டவர்கள். காரணம், அவர்கள் நம்முடைய வசனங்களுடன் அக்கிரமமாக நடந்து கொண்டிருந்தார்கள்!
7:10 நாம், பூமியில் உங்களை அனைத்து அதிகாரங்களுடன் வாழச் செய்தோம். மேலும், அங்கே உங்களுக்கு வாழ்க்கைச் சாதனங்களையும் அமைத்துத் தந்தோம். ஆயினும், நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.
| |