|
اَلۡحَـآقَّةُ ۙ ﴿69:1﴾
مَا الۡحَـآقَّةُ ۚ ﴿69:2﴾
وَمَاۤ اَدۡرٰٮكَ مَا الۡحَـآقَّةُ ؕ ﴿69:3﴾
كَذَّبَتۡ ثَمُوۡدُ وَعَادٌۢ بِالۡقَارِعَةِ ﴿69:4﴾
فَاَمَّا ثَمُوۡدُ فَاُهۡلِكُوۡا بِالطَّاغِيَةِ ﴿69:5﴾
وَاَمَّا عَادٌ فَاُهۡلِكُوۡا بِرِيۡحٍ صَرۡصَرٍ عَاتِيَةٍۙ
﴿69:6﴾
سَخَّرَهَا عَلَيۡهِمۡ سَبۡعَ لَيَالٍ وَّثَمٰنِيَةَ اَيَّامٍۙ حُسُوۡمًا ۙ فَتَرَى الۡقَوۡمَ فِيۡهَا صَرۡعٰىۙ كَاَنَّهُمۡ اَعۡجَازُ نَخۡلٍ خَاوِيَةٍ ۚ
﴿69:7﴾
فَهَلۡ تَرٰى لَهُمۡ مِّنۡۢ بَاقِيَةٍ ﴿69:8﴾
وَجَآءَ فِرۡعَوۡنُ وَمَنۡ قَبۡلَهٗ وَالۡمُؤۡتَفِكٰتُ بِالۡخَـاطِئَةِۚ
﴿69:9﴾
فَعَصَوۡا رَسُوۡلَ رَبِّهِمۡ فَاَخَذَهُمۡ اَخۡذَةً رَّابِيَةً
﴿69:10﴾
اِنَّا لَمَّا طَغَا الۡمَآءُ حَمَلۡنٰكُمۡ فِى الۡجَارِيَةِ ۙ
﴿69:11﴾
لِنَجۡعَلَهَا لَـكُمۡ تَذۡكِرَةً وَّتَعِيَهَاۤ اُذُنٌ وَّاعِيَةٌ
﴿69:12﴾
فَاِذَا نُفِخَ فِى الصُّوۡرِ نَفۡخَةٌ وَّاحِدَةٌ ۙ
﴿69:13﴾
وَحُمِلَتِ الۡاَرۡضُ وَ الۡجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَّاحِدَةً ۙ
﴿69:14﴾
فَيَوۡمَـئِذٍ وَّقَعَتِ الۡوَاقِعَةُ ۙ ﴿69:15﴾
وَانْشَقَّتِ السَّمَآءُ فَهِىَ يَوۡمَـئِذٍ وَّاهِيَةٌ ۙ
﴿69:16﴾
وَّالۡمَلَكُ عَلٰٓى اَرۡجَآئِهَا ؕ وَيَحۡمِلُ عَرۡشَ رَبِّكَ فَوۡقَهُمۡ يَوۡمَـئِذٍ ثَمٰنِيَةٌ ؕ
﴿69:17﴾
يَوۡمَـئِذٍ تُعۡرَضُوۡنَ لَا تَخۡفٰى مِنۡكُمۡ خَافِيَةٌ
﴿69:18﴾
فَاَمَّا مَنۡ اُوۡتِىَ كِتٰبَهٗ بِيَمِيۡنِهٖۙ فَيَقُوۡلُ هَآؤُمُ اقۡرَءُوۡا كِتٰبِيَهۡۚ
﴿69:19﴾
اِنِّىۡ ظَنَنۡتُ اَنِّىۡ مُلٰقٍ حِسَابِيَهۡۚ ﴿69:20﴾
فَهُوَ فِىۡ عِيۡشَةٍ رَّاضِيَةٍۙ ﴿69:21﴾
فِىۡ جَنَّةٍ عَالِيَةٍۙ ﴿69:22﴾
قُطُوۡفُهَا دَانِيَةٌ ﴿69:23﴾
كُلُوۡا وَاشۡرَبُوۡا هَنِيۡٓـئًا ۢ بِمَاۤ اَسۡلَفۡتُمۡ فِى الۡاَيَّامِ الۡخَـالِيَةِ
﴿69:24﴾
وَاَمَّا مَنۡ اُوۡتِىَ كِتٰبَهٗ بِشِمَالِهٖ ۙ فَيَقُوۡلُ يٰلَيۡتَنِىۡ لَمۡ اُوۡتَ كِتٰبِيَهۡۚ
﴿69:25﴾
وَلَمۡ اَدۡرِ مَا حِسَابِيَهۡۚ ﴿69:26﴾
يٰلَيۡتَهَا كَانَتِ الۡقَاضِيَةَ ۚ ﴿69:27﴾
مَاۤ اَغۡنٰى عَنِّىۡ مَالِيَهۡۚ ﴿69:28﴾
هَلَكَ عَنِّىۡ سُلۡطٰنِيَهۡۚ ﴿69:29﴾
خُذُوۡهُ فَغُلُّوۡهُ ۙ ﴿69:30﴾
ثُمَّ الۡجَحِيۡمَ صَلُّوۡهُ ۙ ﴿69:31﴾
ثُمَّ فِىۡ سِلۡسِلَةٍ ذَرۡعُهَا سَبۡعُوۡنَ ذِرَاعًا فَاسۡلُكُوۡهُ ؕ
﴿69:32﴾
اِنَّهٗ كَانَ لَا يُؤۡمِنُ بِاللّٰهِ الۡعَظِيۡمِۙ
﴿69:33﴾
وَلَا يَحُضُّ عَلٰى طَعَامِ الۡمِسۡكِيۡنِؕ ﴿69:34﴾
فَلَيۡسَ لَـهُ الۡيَوۡمَ هٰهُنَا حَمِيۡمٌۙ ﴿69:35﴾
وَّلَا طَعَامٌ اِلَّا مِنۡ غِسۡلِيۡنٍۙ ﴿69:36﴾
لَّا يَاۡكُلُهٗۤ اِلَّا الۡخٰطِئُوْنَ ﴿69:37﴾
69:1 நிச்சயமாக நிகழ்ந்தே தீரவேண்டிய விஷயம்!
69:2 நிச்சயமாக நிகழ்ந்தே தீரவேண்டிய அந்த விஷயம் என்ன?
69:3 நிச்சயமாக நிகழ்ந்தே தீர வேண்டிய அந்த விஷயம் என்னவென்று உமக்குத் தெரியுமா?
69:4 ஸமூது மற்றும் ஆது சமூகத்தினர் திடீரென நிகழவிருக்கும் அந்த ஆபத்தைப் பொய்யென வாதிட்டனர்.
69:5 எனவே ஸமூது சமூகத்தினர் ஒரு கடுமையான விபத்தினால் அழிக்கப்பட்டார்கள்.
69:6 ஆது சமூகத்தினர் மிகப்பெரிய கடும் சூறாவளிக் காற்றினால் அழிக்கப்பட்டார்கள்.
69:7 அல்லாஹ் அந்தக் காற்றினை அவர்கள் மீது ஏழு இரவுகளும், எட்டு பகல்களும் தொடர்ந்து ஏவினான். (நீர் அங்கு இருந்திருந்தால்) இற்றுப்போன ஈச்சமரத் தண்டுகளைப் போன்று அவர்கள் அங்கு முகங்குப்புற வீழ்ந்து கிடந்ததைப் பார்த்திருப்பீர்!
69:8 இப்போது அவர்களில் எவரேனும் எஞ்சியிருப்பது உமக்குத் தெரிய வருகிறதா என்ன?
69:9 ஃபிர்அவ்னும் அவனுக்கு முன்பிருந்த மக்களும், தலை கீழாகப் புரட்டப்பட்ட ஊர் (வாசி)களும் இதே பெருந்தவறைச் செய்தனர்.
69:10 அவர்கள் அனைவரும் தங்களுடைய இறைத்தூதர்களின் பேச்சைக் கேட்கவில்லை. எனவே அவன் அவர்களை மிகக் கடுமையாகப் பிடித்தான்.
69:11 வெள்ளப் பிரளயம் எல்லை கடந்து போனபோது நாம் உங்களைக் கப்பலில் ஏற்றினோம்;
69:12 இச்சம்பவங்களை நாம் படிப்பினையூட்டும் ஒரு பாடமாக ஆக்க வேண்டும் என்பதற்காகவும், நினைவுகூரும் செவிகள் இதனை நினைவிலிருத்திப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும்தான்!
69:13 பிறகு ஒரே ஒரு தடவை எக்காளம் ஊதப்படும்போது
69:14 மேலும், பூமியையும் மலைகளையும் தூக்கி ஒரே அடியில் அவை நொறுங்கி, துகள்துகளாக ஆக்கப்படும்போது ;
69:15 அந்த நாளில் நிகழவேண்டியது நிகழ்ந்தே தீரும்!
69:16 மேலும் (அந்நாளில்) வானம் பிளக்கும், அதன் கட்டுக்கோப்பு குலைந்து போய்விடும்.
69:17 வானவர்கள் அதன் ஓரங்களில் இருப்பார்கள். மேலும், உம் இறைவனின் அர்ஷை* அன்று எட்டு வானவர்கள் தங்களின் மீது சுமந்துகொண்டிருப்பார்கள்.
69:18 அந்நாளில் நீங்கள் ஆஜர்படுத்தப்படுவீர்கள். உங்களுடைய எந்த இரகசியமும் அன்று மறைந்து இருக்காது.
69:19 அன்று தன் வலக்கையில் யாருக்குச் செயலேடு தரப்படு கிறதோ அவர் கூறுவார்: “இதோ, பாருங்கள்! படியுங்கள், என் வினைச் சுவடியை!
69:20 நிச்சயம் என்னுடைய கணக்கை நான் சந்திப்பேன் என்று நான் எண்ணியேயிருந்தேன்!”
69:21 அவர் மனத்திற்குகந்த வாழ்க்கையில் இருப்பார்,
69:22 உன்னதமான சுவனத்தில்;
69:23 அங்கு பழக்குலைகள் தாழ்ந்து தொங்கிக் கொண்டிருக்கும்.
69:24 (இத்தகையவர்களிடம்) கூறப்படும்: “சுவையாக உண்ணுங்கள்; பருகுங்கள்! கடந்து சென்ற நாட்களில் நீங்கள் ஆற்றிய நற்காரியங்களுக்குப் பகரமாக!”
69:25 மேலும், தன்னுடைய இடக்கையில் செயலேடு கொடுக்கப்படுபவர் கூறுவார்: “அந்தோ! என்னுடைய செயலேடு எனக்குத் தரப்படாமல் இருந்திருக்கக் கூடாதா?
69:26 என் கணக்கு என்னவென்று நான் அறியாமல் இருந்திருக்கக் கூடாதா?
69:27 அந்தோ! (உலகத்தில் வந்த) அந்த மரணமே இறுதியானதாய் இருந்திருக்கக் கூடாதா?
69:28 இன்று என்னுடைய செல்வம் எனக்கு எவ்விதப் பயனும் அளிக்கவில்லையே!
69:29 என்னுடைய அதிகாரம் அனைத்தும் முடிந்துபோய் விட்டதே!”
69:30 (ஆணை பிறக்கும்:) “பிடியுங்கள் இவனை! இவனுடைய கழுத்தில் விலங்கை மாட்டுங்கள்!
69:31 பின்னர் இவனை நரகத்தில் வீசி எறியுங்கள்!
69:32 பிறகு இவனை எழுபது முழம் நீளமுள்ள சங்கிலியால் பிணையுங்கள்.”
69:33 மேன்மையும் உயர்வும் மிக்கவனாகிய அல்லாஹ்வின் மீது இவன் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தான்.
69:34 ஏழை எளியோர்க்கு உணவு அளிக்கும்படி தூண்டாமலும் இருந்தான்.
69:35 எனவே, இன்று இங்கு அவன் மீது அனுதாபப்படும் எந்த நண்பனும் இல்லை.
69:36 சீழ்நீரைத் தவிர அவனுக்கு எந்த உணவும் இங்கு இல்லை;
69:37 தவறிழைத்தவர்களைத் தவிர வேறெவரும் அதனை அருந்துவதில்லை.
| |