|
يٰۤاَيُّهَا النَّبِىُّ لِمَ تُحَرِّمُ مَاۤ اَحَلَّ اللّٰهُ لَـكَۚ تَبۡتَغِىۡ مَرۡضَاتَ اَزۡوَاجِكَؕ وَاللّٰهُ غَفُوۡرٌ رَّحِيۡمٌ
﴿66:1﴾
قَدۡ فَرَضَ اللّٰهُ لَـكُمۡ تَحِلَّةَ اَيۡمَانِكُمۡؕ وَاللّٰهُ مَوۡلٰٮكُمۡۚ وَهُوَ الۡعَلِيۡمُ الۡحَكِيۡمُ
﴿66:2﴾
وَاِذۡ اَسَرَّ النَّبِىُّ اِلٰى بَعۡضِ اَزۡوَاجِهٖ حَدِيۡثًاۚ فَلَمَّا نَـبَّاَتۡ بِهٖ وَاَظۡهَرَهُ اللّٰهُ عَلَيۡهِ عَرَّفَ بَعۡضَهٗ وَاَعۡرَضَ عَنۡۢ بَعۡضٍۚ فَلَمَّا نَـبَّاَهَا بِهٖ قَالَتۡ مَنۡ اَنۡۢبَاَكَ هٰذَاؕ قَالَ نَـبَّاَنِىَ الۡعَلِيۡمُ الۡخَبِیْرُ
﴿66:3﴾
اِنۡ تَتُوۡبَاۤ اِلَى اللّٰهِ فَقَدۡ صَغَتۡ قُلُوۡبُكُمَاۚ وَاِنۡ تَظٰهَرَا عَلَيۡهِ فَاِنَّ اللّٰهَ هُوَ مَوۡلٰٮهُ وَجِبۡرِيۡلُ وَصَالِحُ الۡمُؤۡمِنِيۡنَۚ وَالۡمَلٰٓـئِكَةُ بَعۡدَ ذٰلِكَ ظَهِيۡرٌ
﴿66:4﴾
عَسٰى رَبُّهٗۤ اِنۡ طَلَّقَكُنَّ اَنۡ يُّبۡدِلَهٗۤ اَزۡوَاجًا خَيۡرًا مِّنۡكُنَّ مُسۡلِمٰتٍ مُّؤۡمِنٰتٍ قٰنِتٰتٍ تٰٓـئِبٰتٍ عٰبِدٰتٍ سٰٓـئِحٰتٍ ثَيِّبٰتٍ وَّاَبۡكَارًا
﴿66:5﴾
يٰۤاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡا قُوۡۤا اَنۡفُسَكُمۡ وَاَهۡلِيۡكُمۡ نَارًا وَّقُوۡدُهَا النَّاسُ وَالۡحِجَارَةُ عَلَيۡهَا مَلٰٓـئِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعۡصُوۡنَ اللّٰهَ مَاۤ اَمَرَهُمۡ وَيَفۡعَلُوۡنَ مَا يُؤۡمَرُوۡنَ
﴿66:6﴾
يٰۤاَيُّهَا الَّذِيۡنَ كَفَرُوۡا لَا تَعۡتَذِرُوا الۡيَوۡمَؕ اِنَّمَا تُجۡزَوۡنَ مَا كُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ
﴿66:7﴾
66:1 நபியே! அல்லாஹ் உமக்கு ஆகுமாக்கிய பொருளை நீர் ஏன் விலக்கிக் கொள்கின்றீர்? நீர் உம் மனைவியரின் திருப்தியை விரும்புகின்றீர் (என்பதற்காகவா?) அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபைமிக்கவனாகவும் இருக்கின்றான்.
66:2 அல்லாஹ், நீங்கள் செய்யும் சத்தியங்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபடுவதற்கான வழியை உங்களுக்கு நிர்ணயித் துள்ளான். அல்லாஹ் உங்கள் பாதுகாவலன். மேலும், அவன் யாவும் அறிந்தவன்; நுண்ணறிவாளன்!
66:3 (மேலும், இந்த விவகாரமும் கவனிக்கத்தக்கதாகும்:) நபி தம்முடைய ஒரு மனைவியிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகச் சொல்லியிருந்தார். பிறகு, அந்த மனைவி அதனை (வேறொருவரிடம்) தெரிவிக்கவும் (அப்படி இரகசியம் வெளிப்பட்டதை) அல்லாஹ் நபியிடம் அறிவிக்கவும் செய்தபோது, அதில் சிலவற்றை அந்த மனைவியிடம் அவர் தெரியப்படுத்தினார். வேறு சிலவற்றைப் புறக்கணித்தார். பின்னர், (இரகசியம் வெளிப்பட்டது பற்றி) நபி தம் மனைவியிடம் தெரிவித்தபோது மனைவி கேட்டார், “தங்களுக்கு இதனைத் தெரிவித்தது யார்?” என்று! அதற்கு நபி பதிலளித்தார்: “அனைத்தையும் அறிந்தவனும் நன்கு தெரிந்தவனும்தான் எனக்கு அறிவித்தான்.”
66:4 நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோரி மீண்டால், (அது உங்களுக்கு சிறந்ததாகும்.) ஏனெனில், உங்களுடைய உள்ளங்கள் நேரிய வழியிலிருந்து பிறழ்ந்துவிட்டிருக்கின்றன. மேலும், இறைத்தூதருக்கு எதிராக நீங்கள் அணி சேர்ப்பீர்களானால் அறிந்து கொள்ளுங்கள்: திண்ணமாக, அல்லாஹ் அவருடைய பாதுகாவலனாக இருக்கின்றான். மேலும், அவனுக்கு அடுத்து ஜிப்ரீலும் சான்றோர்களான இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும், அனைத்து வானவர்களும் அவருக்கு உதவியாளர்களாக இருக்கின்றார்கள்.
66:5 நபி தம் மனைவியராகிய உங்கள் அனைவரையும் மணவிலக்கு செய்துவிடுவாராயின், உங்களுக்குப் பதிலாக உங்களை விடவும் சிறந்த மனைவியரை அல்லாஹ் அவருக்கு வழங்கிவிடலாம். அவர்கள் வாய்மையான முஸ்லிம்களாய், இறைநம்பிக்கையுடையோராய், கீழ்ப்படிபவர்களாய், பாவமன்னிப்புக் கோருபவர்களாய், அடிபணிந்து வணங்குபவர்களாய், நோன்பு நோற்பவர்களாய்த் திகழ்வார்கள்; அவர்கள் விதவைகளாயினும் கன்னிகளாயினும் சரியே!
66:6 இறைநம்பிக்கை கொண்டவர்களே! மனிதர்களும் கற்களும் எரிபொருள்களாகக்கூடிய அந்த நரக நெருப்பிலிருந்து உங்களையும் உங்கள் மனைவி மக்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் மீது, கடும் சீற்றமுடைய வானவர்கள் நியமிக்கப்பட்டிருப்பார்கள்.
66:7 அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு ஒருபோதும் மாறு செய்வதில்லை. அவர்களுக்கு எந்தக் கட்டளை இடப்பட்டாலும் அதனை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள். (அப்போது கூறப்படும்:) “நிராகரிப்பாளர்களே! நீங்கள் இன்று எந்தச் சாக்குப் போக்கும் சொல்லாதீர்கள். நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்ததற்கு ஏற்பவே உங்களுக்கு கூலி கொடுக்கப்படுகின்றது.”
| |